பின்பற்றுபவர்கள்

சனி, 21 நவம்பர், 2020

அம்மி பறக்குது!!

நண்பர்களே,
 இடையில் சிறிது காலம் பதிவின் பக்கம் வராமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய வடிவிலான பதிவு தளம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்பதே பிரதான காரணம்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

இங்கிலாந்தில் இலவச திருமணம்!!

தாலிக்கு தங்கம் !விரலுக்கு மோதிரம்!!


நண்பர்களே,


உலகின் பல நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட பணியாளர்களை தற்போதுள்ள சூழலில் பாராட்டியம் கவரவித்தும் வருவது நாம் அறிந்ததே.

சனி, 5 செப்டம்பர், 2020

என் நண்பன் போல யாரு மச்சான்….

 உறவுகள் தொடர்கதை….
நண்பர்களே,

உலகில் பல நண்பர்கள், பள்ளி கல்லூரி தோழர்கள்,உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் வேலை இடத்து சக ஊழியர்கள் மற்றும் பல குழுக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்காகவும் தங்கள் உறவுகளை தொடர்வதற்காகவும் உறவுகளை   மேம்படுத்திக்கொள்வதற்கும்  தங்களுக்குள் பலவகையான தொடர்பு முறைமைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ஆத்தா..... நான் பாஸாயிட்டேன்!!!

சந்தைக்கு போவனும்….
நண்பர்களே,
தலைப்பையும் உப தலைப்பையும் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வரும் மயிலையும் சப்பாணியையும்  மறக்கமுடியுமா?

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

என்ன விலை அழகே?

பேரின்ப அதிர்ச்சி!!!??? 
நண்பர்களே,
கடந்த சில நாட்களுக்கு முன் மகாத்மா காந்தியின் கண்ணாடி பற்றிய பதிவு ஒன்றை எழுதி இருந்தேன் , மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள "கதவிற்கு முன்னாடி காத்திருந்த கண்ணாடி" வாசிக்கவும்.

புதன், 26 ஆகஸ்ட், 2020

"வாரு பத்து கூறு பத்து தக்காளி பத்து"

English version

நண்பர்களே,

சின்ன வயதில் அம்மாவுடன் காய்கறி அங்காடிக்கு சென்றபோது என் காதுகளில் ஒலித்த வாக்கியம்தான் இன்றைய பதிவின் தலைப்பு.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தேசிய கொடி ஏற்றும் தகுதி.

யாருக்கு?
நண்பர்களே,
தேசிய கொடி என்பது ஒவ்வொரு தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல அது அந்தந்த தேசத்தின் கவுரவம் மற்றும் உயிரினும் மேலான பொக்கிஷம்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ஒட்டும் உறவும்.!!

கொரோனா பழம்!!
நண்பர்களே,


உறவாக இருந்து வாழ்ந்துவரும்   இருவருக்கிடையில் சண்டையோ மன கசப்போ ஏற்பட்டால் அவர்கள் சொல்லிக்கொள்வது இனி நமக்குள் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதே.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

"இரவல் வாங்கவில்லையே"

 நண்பர்களே,


சுதந்தர தின வாழ்த்துக்கள்!!

Image result for picture of indian national flag

"பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது  ஈடு?

அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம்  அவனியில் கடையர்.

வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?

அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது 
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.

இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே 
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?

காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கெல்லாம்  கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.

பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி 
சரித்திரம்  சொல்லும் பலர்முகம் 

குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே  எல்லையில் 
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு 
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று 

வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி 
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.

Image result for image of indian flag

எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?"

வாழ்க பாரதம்!

ஜெய் ஹிந்த்.
நன்றி 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

கதவிற்கு முன்னாடி...

காத்திருந்த கண்ணாடி!!
நண்பர்களே,


சாதாரண ஆத்துமாக்கள் முதல் மகாத்மாக்கள் வரை உலகிலுள்ள மனிதர்களுள் குறைந்த பட்சம் 60% மக்கள் தூர / கிட்ட  பார்வைக்காக கண்ணாடி அணியும் கட்டாயத்தில் இருப்பாகாக, National Health Interview Survey, 2016  சொல்கிறது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஆக(ஸ்)ட்டும் பார்க்கலாம்.

இன்னும் எத்தனை காலம்தான்..?
நண்பர்களே,


இன்னும் முடிவிற்கு வராத பல விடயங்கள் இந்த உலகில் இருக்கின்றன.
அவற்றுள், பஞ்சம், பசி, பிணி வறுமை, வேலையில்லா திண்டாட்டங்கள்,லஞ்சம் , ஊழல் போன்றவை அடங்கும்.

புதன், 12 ஆகஸ்ட், 2020

பின்னூட்டமும் - மறுமொழியும்.

மீண்டும் ஒருமுறை! நண்பர்களே ,சமீபத்தில் என்னுடைய பழைய பதிவுகளை மீண்டும் படித்துக்கொண்டிருக்கையில் அதில் ஒரு பதிவும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களுக்கான எனது மறு  மொழியையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.


திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அப்படி என்னத்த கேட்டுபுட்டேன்??

முழிப்பு!- சிரிப்பு!!.

பத்தாம் வகுப்பு தாண்டும்வரை அரைக்கால் சட்டைதான் எனக்கு.
பள்ளி கூடத்தில்கூட பத்தாம் வகுப்புவரையிலுள்ள மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைதான் சீருடை.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வேறு என்ன வேண்டும்?

வீடே அலுவலகம்!!
நண்பர்களே,
கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக, இந்த உயிர்க்கொல்லியின் கோரா பிடியில் சிக்கிக்கொள்ளாமலும் , அதனால்  ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

யாழ் இனிது!

இரவும் பகலும்.
நண்பர்களே,

குழலிசையும் யாழிசையும் இனிதுதான் என்றாலும் தொடர்ந்து கேட்கும்போது சில வேளைகளில் சலிப்பை ஏற்படுத்தக்கூடும்; அளவிற்கு மிஞ்சிய  அமிழ்தம்  போல.

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஊருக்குள்ளே பாலை நிலங்கள்!!

ரத்தக்கண்ணீர்.
நண்பர்களே,
பழந்தமிழக வாழ்வியலில்  நிலங்களின் தன்மைகள், அவற்றின் பயன்பாடுகள் அவற்றின் பூகோள அமைப்புகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு  , குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல்  பாலை என ஐந்து   வகைகளாக பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் நமது பெரியவர்கள்.

வெள்ளி, 31 ஜூலை, 2020

கண்கலங்கிய நெப்போலியன்!!

வரலாற்று உண்மை!!


நண்பர்களே,


எத்தனைதான், மாவீரனாக இருந்தாலும் , மனவலிமை பொருந்திய படைத்தலைவனாககூட  இருந்தாலும், நாட்டின் உயர்ந்த நிலையில் , அதிகார பலம் பொருந்தி இருந்தாலும் , உலகம் போற்றும் ஒப்பற்ற மக்கள்  தலைவனாக  இருந்தாலும், உலக ஞானம்  அனைத்தையும் கற்று தேர்ந்த
ஞானியாக இருந்தாலும்,பாகுபாடற்று அனைத்து மனிதருக்கும், அனைத்து
உயிருக்கும்  , வேதனை, வலி, வருத்தம்,இழப்பு,துக்கம், சந்தோஷம் என தமது  உணர்வுகளின் வெளிப்பாடாக தன்னையும் அறியாமல், கட்டுப்படுத்த முடியாமால்  கண்கள் உகுக்கும்  கண்ணீர் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

வியாழன், 30 ஜூலை, 2020

கூட்டத்திலே கோயில்புறா!!

ரீங்காரம்.
நண்பர்களே,

ஒவ்வொரு புதன் கிழமையும்  நிறுவனத்தின் எங்கள் கிளை அலுவலர்கள் மத்தியில் காலை 11.00 மணிக்கு  ஒரு மீட்டிங்  நடக்கும்  . இதில் முதன்மை தலைமை அலுவலர் முதல் அனைத்து மேலாளர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

செவ்வாய், 28 ஜூலை, 2020

"ஹனியும் சனியும்!!"

டார்லிங்! டார்லிங்!!டார்லிங்!!!
நண்பர்களே,

ஒவ்வொரு ஆண்டு அல்லது ஒவ்வொரு இரண்டாண்டுகள் அல்லது ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கொருமுறை  சில  குறிப்பிட்ட விஷயத்தின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை(updated version ) கற்று அதன் மீதான நமது அறிவை கட்டாயம் (mandatory)  பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எமது வேலை நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டம்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

"சரக்கு" Vs. சாக்லட்!!

சந்தோஷம்  - சங்கோஜம்.
நண்பர்களே,


அவசரமான, அசௌகரியமான  சில நாட்களில் வீட்டில் சமைத்து எடுத்த செல்ல முடியாமல் போகும் மத்திய உணவுக்குப்பதிலாக அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தேவையானதை வாங்கி உண்பது வழக்கம்.


வியாழன், 23 ஜூலை, 2020

எலக்ட்ரிக் ஷாக்!!!

மறைந்திருந்து தாக்கும்  மர்மம்.
நண்பர்களே,

மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற வல்லுநர்களையே நியமித்து பழுதுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் செய்து  விபரீதமானால் …. யாருக்கு நாட்டம்?


புதன், 22 ஜூலை, 2020

கந்துவட்டி கரையான்.

சிற்றின்பம் ??!!
நண்பர்களே,

நம் கண் முன்னே பலமுறை காட்சி  அளிக்கும் பல பொருட்களின் மீது நம் கவனம் திரும்பாது.

திங்கள், 20 ஜூலை, 2020

ஞான ஒளி!!

நான் யார்?? 
நண்பர்களே,

யாரும் தவறாக நினைக்கவேண்டாம் , இது என் அறிவீனத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் எனினும் என் மனதில் தோன்றிய இந்த ஐயத்தை  தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே உங்களை போன்ற அனுபவமிக்க நண்பர்களிடத்தில் என் ஐயத்தை வெளிப்படுத்துகிறேன்..

ஞாயிறு, 19 ஜூலை, 2020

முதல் விமான பயணம் -2

மெல்போர்ன் வரை 
நண்பர்களே,

பயணம் தொடர்கிறது..

முதலில் இருந்து வாசிக்க...முதல் விமான பயணம்.

சனி, 18 ஜூலை, 2020

முதல் விமான பயணம்.

வலது கால்.
நண்பர்களே,

நம்மில் பலர் முன்பொரு காலத்திலும் நம் வீட்டு வயதான  பெரியவர்கள் இந்த காலத்திலும் கூட ஆதங்கமாக நினைப்பதும் சொல்ல கேட்பதுமான விருப்பம்: எப்படியாவது ஒரே ஒருமுறையேனும் விமானத்தில் பயணிக்கவேண்டும் என்பது.

வெள்ளி, 17 ஜூலை, 2020

அப்பா - மகன்!!

 ஆலமரம் !!
நண்பர்களே,

மிருகங்களிடமும் பறவைகளிடமும் இறுதிவரை தொடர்ந்து இருக்குமா என்றால்  பெரும்பாலும் இல்லை என்று சொல்லதக்க குடும்ப உறவுகள் மனிதனிடம் மட்டுமே  மேலோங்கி இருக்கின்றன என்று கண்டிப்பாக சொல்லலாம்.

புதன், 15 ஜூலை, 2020

பாகுபலி!!

பிரமாண்ட தயாரிப்பு!! 
நண்பர்களே,

தலைப்பை கண்டதும் நமக்குள் ஒரு பிரமாண்ட  திரை சீலை விலகுவதும் அதனூடாய் பல கற்பனைக்கு எட்டாத காட்சிகள் விரிவதும் அதனை கண்டு நம் கண்கள் அகல விரிந்து மனம் குதூகலிப்பதும் உள்ளமெல்லாம் பரவசம் பற்றிக்கொள்வதும் வாஸ்தவமே.

செவ்வாய், 14 ஜூலை, 2020

முக கவசமும் சீட்பெல்ட்டும்.

நாகரீக வெளிப்பாடு!!


நண்பர்களே,
முக கவசம் என்பது  இன்று நேற்று  அல்ல, காலாகாலமாக மக்களுள் சிலர் அணிந்துக்கொண்டுதான் இருக்கின்றனர், எனினும் அதன் அவசியம், முக்கியத்துவம் இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக நிலைபெற்று விட்டது.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கோவின் பாகிஸ்தான் பயணம்.

எல்லை(இல்லா)சோதனை??
நண்பர்களே,

இதுவரை  ஆசியா, ஐரோப்பா,அமெரிக்க,ஆப்ரிக்கா போன்ற நான்கு கண்டங்களிலுள்ள பல தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன் என்பதை என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.

சனி, 11 ஜூலை, 2020

கொங்குதேற் வாழ்க்கை...

கண்டது மொழிமோ! 
நண்பர்களே,

"கோ"மானின் மனதில் ஒரு திடீர் குழப்பம்.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

மை நேம் இஸ் பில்லா!!


வினோத விலாசங்கள்.
நண்பர்களே,

மனிதனாய் பிறந்த நம் ஒவ்வொருவரையும் அடையாள படுத்துவதற்கென்று அங்க அடையாளங்கள், மச்சங்கள்,தழும்புகள் , கண்களின்  நிறம், உருவ அமைப்பு போன்று  பல்வேறு  விடயங்கள்  உள்ளன.    அவற்றுள் பிரதானமாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது அவரவர்களின் பெயர்களே.

சனி, 4 ஜூலை, 2020

காக்கிகளின் கனிவு!!!??

இனிமை!! 
நண்பர்களே,


தலைப்பை பார்த்தவுடன் , உடனே உங்கள் சிந்தையில் காட்சிப்படமாக ஓடியது என்ன? என்று கேட்டால் நீங்கள் என்னத்த சொல்லுவீங்களோ?
சரி அதற்குமுன்னால் என் எண்ணத்தை சொல்லிவிடுகிறேன்.

வியாழன், 2 ஜூலை, 2020

பே(போ)ச்சு வார்த்தை!!!???

குப்பைக்கா ?
நண்பர்களே,
எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தகராறில் /வன்முறையில்/போராட்டத்தில்  ஈடு படக்கூடாது என்று பொதுவாக சிலர் சொல்லுவது நமக்கு தெரிந்திருக்கும்.

புதன், 1 ஜூலை, 2020

மிருதம்!.

மனிதம்?
நண்பர்களே,
மனுஷனா பொறந்தா வெட்கம் மானம் சூடு சுரணை இருக்கணும்னு சொல்லுங்க.
அப்படினா அவை மிருகத்திற்கு இல்லை என்றுதானே பொருள்.

செவ்வாய், 30 ஜூன், 2020

இடம்! பொருள்!! ஏலம்!!!

ஒருதரம்…ரெண்ண்டுதரம்...மூணுதரம்.
நண்பர்களே,


மக்கள் தாங்கள்  பயன்படுத்தி பழசாகிபோனாலோ, அல்லது தேவை இல்லை என்றாகிப்போனாலோ, அல்லது உபயோகத்திற்கு தகுதி  இல்லாமல் போனாலோ சில வீட்டு உபயோகப்பொருட்களை, ஓவியங்களை , கலைப்பொருட்களை, இசை கருவிகளை  பல சமயங்களில் விலையின்றி

திங்கள், 29 ஜூன், 2020

இணைப்பு - இலவசம்!!

"கொசுறு".
நண்பர்களே,
இணைப்பு என்றவுடன், குடி நீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு,தொலைபேசி இணைப்பு தொலைக்காட்சி இணைப்பு என்பனநினைவிற்கு வரும்.

ஞாயிறு, 28 ஜூன், 2020

வடை! - விடை!! - கண்ணதாசன்??

அ … ஆ … உ .. ஊ ….  ஆஹா…
நண்பர்களே,

மளிகை சாமான் மற்றும் பதார்த்தங்கள்  வாங்க கடைக்குபோகுமுன் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்கவேண்டும் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி கொண்டுபோவோம். 

சனி, 27 ஜூன், 2020

தம்பிக்கு!!! - 3

அண்ணன்!!! 
தொடர்கிறது ..


முந்தைய பாகத்தை வாசிக்க… தம்பிக்கு!! -2


அவர் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த அந்த சமயத்தில் என் நண்பர்கள், என் பெற்றோர் அனைவரிடமும் ஆசிரியர் சொன்ன விவரங்களை சொல்லி என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன்.

வியாழன், 25 ஜூன், 2020

தம்பிக்கு!! - 2

 என்ன ஆனது.? 
தொடர்கிறது.
முதல் பாகம் வாசிக்க  தம்பிக்கு.


தூய்மையான (நாகரீக) உடை, cufflink இணைத்த முழு கை  சட்டை , முழுநீள கால்சசட்டை , tuck செய்யப்பட்டு இடைகச்சை(belt)  கட்டிக்கொண்டு,பாலிஷ் செய்யப்பட்ட shoes அணிந்துகொண்டு, cooling  glasses  அணிந்து, நன்கு துடைத்து பளபளக்கும்  தன்னுடைய Hero Honda வில் ஒரு ஹீரோ போல வருவார். தினமுமிந்த தோற்றப்பொலிவில் துளியும் குறைந்திருக்காது.

செவ்வாய், 23 ஜூன், 2020

அது வேற! இது வேர்ர்ர்ற!!

Brilliant!!
நண்பர்களே,


கலிகாலம் என்றழைக்கப்படும் இந்த அதிநவீன யுகத்தில் நாட்டில் உலவும் புதிய வார்த்தைகளின் வரவு எங்குபோய் முடியுமோ என்று அச்சத்துடன் எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றது.

வியாழன், 18 ஜூன், 2020

தம்பிக்கு!.

எந்த ஊரு?
நண்பர்களே,
நாம் யார் எப்படிப்பட்டவர், எங்கிருக்கிறோம், படிப்பு, தொழில்  குடும்பம் என எதுவும் நம் ஒருவருக்கொருவர் தெரியாவிட்டாலும்  ஒரே நேர்கோட்டில் நம் எல்லோரையும் இணைப்பது தமிழ், தமிழ் மட்டுமே.

செவ்வாய், 16 ஜூன், 2020

ஆதங்க கண்ணீர்...

மூன்று மடங்கு!!.
நண்பர்களே,

இரண்டு வாரங்களுக்குமுன், இந்திய காய்கறிகள் விற்கும் கடைக்கு சென்று சில தேவையான காய்களை  தேர்வு செய்து பணம் செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.

திங்கள், 15 ஜூன், 2020

மாறும் சரித்திரம்...அடிமைச்சுவடு!  
நண்பர்களே,


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் , நகரின் பிரதான கடை வீதியில் நடந்துகொண்டிருந்த என்னை நோக்கி ஒரு அழகிய இளம் பெண் வந்துகொண்டிருந்தாள்.

சனி, 13 ஜூன், 2020

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்!!!

யாருக்காக  கொடுத்தான்??!!
நண்பர்களே,
 
நம்  தேவைக்கு போக மீதமிருப்பது அடுத்தவருக்குரியது    எனும் உயரிய வாசகம் எங்கேயோ கேட்ட குரலாக என் காதுகளில் எப்போதும் ஒலிப்பதுண்டு.

வியாழன், 11 ஜூன், 2020

ஆதியும் அந்தமும் ...

சரணம்!..சரணம்!!...சரணம்!!!….

நண்பர்களே,

தொடக்கம் என்ற ஒன்று இருக்கும் அனைத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. உலக வாழ்வியல் நியதியும் தத்துவமும் அதுதான்.

புதன், 10 ஜூன், 2020

டீ சாப்பிட(??)...முள் கரண்டி!!
நண்பர்களே,

சாப்பிடுவது என்பது, திடமான உணவு பதார்த்தங்களை  கைகளாலோ, அல்லது கரண்டி, ஸ்பூன் , சாப்ஸ்டிக் போன்றவற்றாலோ எடுத்து உண்பது என்பது நாம் அறிந்ததே.

வெள்ளி, 5 ஜூன், 2020

முன்மொழிந்"தேன்"!. வழிமொழிக !!.
நண்பர்களே,

ஆதாம் ஏவாள் காலம்தொட்டு மனித சமூகம் தங்கள் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள பரிபாஷைகள் அல்லது பரிவர்த்தனைக்கான ஏதோ ஒரு மொழியை கொண்டிருந்திருக்க வேண்டும்.

சனி, 30 மே, 2020

இனியும் இனிமை!!தனிமையிலும்...
நண்பர்களே,

சமீபத்தில் ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்,மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்ததை நாமறிவோம்.

திங்கள், 25 மே, 2020

பாவம் குருமா!!

சொரணை வருமா ?
நண்பர்களே,
சில வாரங்களுக்கு முன் சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தன்று மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து  கை தட்டினார்கள், மருத்துவ முன்னணி வீரர்களையும்  , துப்புரவு பணியாளர்களையும் மற்றும் காவல் கள அதிகாரிகளையும்   கௌரவிக்கும் பொருட்டு.

சனி, 23 மே, 2020

ஆராய்வோம்!


அனுபவிப்போம்.!!
நண்பர்களே ,

நம் நாட்டில் மட்டுமல்லாது ஏனைய வெளி நாடுகளிலும் பழமொழிகள் பிரபலம்.

செவ்வாய், 19 மே, 2020

என்று பணியும் இந்த….

புரளியின் மோகம்?
நண்பர்களே,


வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த காலங்களில்கூட இத்தகு ஊரடங்கும் வீட்டுக்குள் முடக்கமும் இருந்ததில்லை என அந்த காலத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கீ(த்)தா க்களும்  பல தாத்தாக்களும் சொல்ல கேட்டிருப்போம்.

திங்கள், 18 மே, 2020

பூவாகி... காயாகி - 4

என் வீட்டுத்தோட்டத்தில்….

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க..பூவாகி... காயாகி - 3

அடுத்த நாள் காலை   தொலைபேசி மனிஷா கொய்ராலா குரலில் சிரித்துகொண்டே  மணி அடித்தது. (ஏன் .. .. இப்படி இருக்கக்கூடாதா?)

ஞாயிறு, 17 மே, 2020

பூவாகி... காயாகி - 3

நீ வேரு!  நான் வேறு!! 

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க…பூவாகி... காயாகி-2

பல நாட்களின் சிந்தனைக்கு பின் மனதை திடப்படுத்திக்கொண்டு தோட்ட வேலை செய்யும் ஒருவரை வரவழைத்து ஆலோசனை நடத்தி .... நாள் குறித்தாயிற்று.

வெள்ளி, 15 மே, 2020

பூவாகி... காயாகி - 2

 கனியெல்லாம் ஹனியானால்..
நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க... பூவாகி… காயாகி-1

இதற்கிடையில் பனிரெண்டு நாட்கள் வெளி நாட்டு சுற்றுப்பயணம்  முடிந்து திரும்பிதும் முதலில் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மர தரிசனம்.

வியாழன், 14 மே, 2020

பூவாகி... காயாகி - 1


பூவெல்லாம் காயானால்...
நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க பூவாகி... காயாகி

எந்த ஒரு செய்தியையும் நேரடியாக சொல்லாமல்  , சில உவமைகள் (parables) மூலம் சொல்லி புரியவைப்பது என்பது ஒருவகை.

புதன், 13 மே, 2020

பூவாகி... காயாகி..


மரத்த வச்சவன்…..!!
நண்பர்களே ,

ஒரு திராட்ச்சை தோட்டத்தின் மத்தியில் சில கனி மரங்கள்    இருந்தன. 

அவற்றுள் சில அத்திமரங்களும் இருந்தன ;அவற்றை  பராமரிக்க நம்பிக்கையும் நேர்மையான  ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.

ஞாயிறு, 10 மே, 2020

ஒரே சொல்! - ஒரே பொருள்!!

ரெண்டு ரெண்டா தெரியுது…

நண்பர்களே,

ஒரே சொல்லாக இருந்தாலும்  அவை இடம் பொருள் ஏவல் என்பதற்கேற்ப பல பொருட்களை- (அர்த்தங்களை)  கொடுக்கும் பல வார்த்தைகள் தமிழில் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

சனி, 9 மே, 2020

வீட்டு வேலை - 3

 மிகை நாடி மிக்கக்கொளல் !! 
நண்பர்களே,


வேலை தொடர்கிறது…


முந்தய பதிவை வாசிக்க  வீட்டுவேலை -2

செயல் அலுவலர் சொன்ன அந்த செய்தி:
இப்போதிருக்கும் சூழ் நிலையில் புதிய கணக்காளர் நியமனம் நடக்க  கொஞ்சம் கால தாமதம் ஆகும் எனவே ……

வியாழன், 7 மே, 2020

வீட்டு வேலை -2

நண்பர்களே,


வேலை தொடர்கிறது…


முந்தய பதிவை வாசிக்க  வீட்டுவேலை


நல்லதொரு வேலை , கை  நிறையா(!!) சம்பளம் , என் பேச்சை கேட்டு ஏவல் புரியவும்  சிலர்.

 நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.என் குழுவில் ஒரு அலுவலக மேலாளர், தட்டெழுத்தாளர்,ரசாயன நிபுணர் கணக்கு பதிவாளர் , காசாளர்  அலுவலக உதவியாளர் , பத்து பனிரெண்டு பேக்டரி ஊழியர்கள்  ஒரு வாகன ஓட்டுநர் இருந்தனர்.

என் பணி:- அரசாங்கத்திற்கும் , கிராம மேம்பாட்டு பயனாளிகளுக்கும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளுக்கும் இடையில் இருந்து கிராம மக்கள்  படித்த மற்றும் படிப்பற்ற மக்களின்  தகுதிக்கும் , திறமைக்கும் ,   அனுபவத்திற்குமேற்ற  கடனுதவுகளை பெற்றுத்தருவதும் அவற்றை எப்படி பயன் படுத்துவது, மானிய தொகை போக கடனை எப்படி திருப்பி செலுத்துவது , அவர்களின் வாழ்வாதாரத்தை இருக்கும் வசதிகளை கொண்டு எப்படி அமைத்துக்கொள்வது போன்று வழி காட்டுதல். இத்தனைபேர் என் சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்தாலும் , " நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா" என்பதற்கேற்ப ;தமிழ் சினிமாவில், லுங்கி கட்டிக்கொண்டு, முகத்திலே மரு   வச்சிக்கிட்டு நம்பியார் , "டேய்  கபாலி"  அப்(ப)டி கூப்பிட்டவுடனே , கையை கட்டிக்கொண்டு "சொல்லுங்க எஜமான்னு" போய்  நிக்கிற கபாலிபோல அல்லாமல் , அலுவலக  மற்றும் தொழில் தர்மத்திற்கும், கல்வித்தகுதி , பதவிக்கு தகுந்த பக்குவத்துடன் நடத்தும் செயல் அலுவலர் கண்ணியவான்  ஒருவரும் இருந்தார்-(டாக்டர். செபாஸ்டின்) 

நாட்களும்  சென்றுகொண்டிருக்க ஒரு நாள் காலை செயல் அலுவரின் அறைக்கு அழைக்கப்பட்டேன்.

 சம்பிரதாய நலம் விசாரிப்பு, முகஸ்துதிக்குபின்  "கணக்கு பதிவாளரிடம் இருந்து ஒரு தொலை  பேசி செய்தி, " வங்கி தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடை பெற்ற நேர்முக தேர்விலும் தேர்வு  பெற்றதினால் , நம்ம (திருப்பதி மகேஷ் போல) தூர மாநிலத்தில் ட்ரைனிங் செல்ல ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இனி பணிக்கு வர மாட்டார்.

எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இத்தனை துரிதமாக நிகழும் என்று நினைக்கவில்லை என்றார். வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன எனக்கு இந்த எல்லா செய்திகளும்  எதிர்பாராதவைதான்.

பிறகு நிதானமாக அவர் சொன்னது எனக்கு இன்னும் ஒரு எதிர்பாராத செய்தி.

அது என்ன செய்தி?

அதற்குள் என்ன அவசரம் ?

நாளை சொல்கிறேன்.

அதுவரை.

நன்றி,

மீண்டும்  ச(சி )ந்திப்போம். 

கோ

செவ்வாய், 5 மே, 2020

வீட்டுவேலை

பத்து  - பாத்திரம் 

நண்பர்களே,

ஆரம்ப பாட சாலையில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே,ஆசிரியரான என் தந்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததிந்த வீட்டுவேலை எனப்படும் ஹோம்  ஒர்க்.

தொட்டில் பிள்ளை!?

பாத பூஜை!!

நண்பர்களே,

மருத்துவர்  செவிலியர்  மருத்துவ பணியாளர்கள் , காவல் துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்கள்  அத்தனை போரையும் கௌரவிக்கும் பொருட்டு உணவு பொருட்கள் வழங்குதல் மலர் மாலைகள் சூட்டுதல்  , பாத பூஜைகள் செய்தல் இன்னும் பல படிகள் உயரே சென்று ராணுவ  விமானத்தில் இருந்து பூச்சொரிதல் போன்று பலவகைகளில் ஆராதனை செய்யப்படும் போற்றுதலுக்குரிய நற்செயல்கள்  பாராட்டுக்குரியவை.

ஞாயிறு, 3 மே, 2020

தடை நீங்கும் - தள்ளி நிற்போம்!


விடை தோன்றும் -விழித்திருப்போம் !!


நண்பர்களே,
 பேரிரைச்சலோடு பெருகி ஓடும் காட்டாற்று வெள்ளத்திற்கு தடை  போட முடியுமா?
கட்டவிழ்ந்து சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளி காற்றைசுற்றி  வேலி கட்ட  முடியுமா?
அலையாடும் கடல் தன்  நிலை மாறி பொங்கி பிரவாகமாக உருவெடுத்து சுனாமி என்ற பெயரோடு ஊரை சூறையாடும் களேபரத்தை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க முடியுமா?