யாருக்கு?
நண்பர்களே,
தேசிய கொடி என்பது ஒவ்வொரு தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல அது அந்தந்த தேசத்தின் கவுரவம் மற்றும் உயிரினும் மேலான பொக்கிஷம்.
அதனால்தான் எந்த ஒரு தேசிய கொடியையும் வேறு தேசத்தார் மட்டுமல்ல அதே தேசத்தார் அவமரியாதைக்கு உட்படுத்தினால் அவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவர்.
அதனால்தான் எந்த ஒரு தேசிய கொடியையும் வேறு தேசத்தார் மட்டுமல்ல அதே தேசத்தார் அவமரியாதைக்கு உட்படுத்தினால் அவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவர்.
ஒரு தேசத்தின் கொடியை மற்றதேசத்தினர் அவமானப்படுத்தினால் அது சர்வதேச பிரச்சனைகளை ஏற்படுத்துவதையும் நாம் அறிவோம்.
இத்தகு மதிப்பும் மரியாதையையும் ,கெளரவத்தையும் கொண்டுள்ள தேச கொடியினை தேசத்தின் மீது மரியாதை உள்ள யார் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
தேசிய கொடியை ஏற்றிவைப்பதற்கு எந்த சிறப்பு தகுதியும் தேவை இல்லை. அவர்கள் தலைவர்களாகவோ, அதிகாரிகளாகவோ, பணம் படைத்தவர்களாகவோ,தியாகிகளாகவோ கூட இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாட்டுப்பற்றுமிக்க எந்த பாமர மனிதனும் தேசிய கொடியை ஏற்றலாம்.
நேற்றைய தினத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி தமிழ் நாட்டில் ஒரு இடத்தில் சுதந்தர சிறப்பு விழாவில் கொடி ஏற்றி இருக்கின்றார்.
இந்தியாவில் பிறந்த இவருக்கு இந்திய தேசிய கொடியை ஏற்றும் அதிகாரம் உரிமை உண்டு என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது, மகிழ்ச்சி அளிக்கின்றது.
அதே சமயத்தில் கொடி ஏற்ற அழைக்கப்படுபவர் இந்திய பிரஜையாகவே இருந்தாலும் எத்தனையோ தியாகிகளின் உயிர்தியாகத்தாலும் கடுமையான உழைப்பாலும் கிடைத்த இந்த சுதந்தர கொடியை - இத்தனை மகத்துவமுள்ள இந்த கொடியை ஏற்ற நமக்கு தகுதி போதுமா என்று நினைத்து அந்த அறிய சந்தர்ப்பத்தை நிராகரித்தவர்களும் உண்டு.
அவ்வரிசையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கின்ற சமயத்தில் என்னுடன் பயின்ற மாணவ நண்பன் தன்னுடைய குடியிருப்பு பகுதியில் கொண்டடப்படும் சுதந்தர திருநாள் கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றும்படி ஒருவரை அழைத்திருந்தார்.
அந்த ஒருவர், தேசிய கொடிடியை ஏற்றி வைக்குமளவிற்கு தமக்கு எந்த தகுதியும் இல்லை, இது பல தியாகிகளின் இன்னுயிர் தந்து பெறப்பட்ட சுதந்தர கொடி, அவகர்களின் காலை தொட்டு வணங்கும் தகுதிகூட இல்லாத தமக்கு அந்த கொடி கம்பத்தின் நிழலில்கூட நிற்க தகுதி இல்லை எனவே வேறு யாரையாவது அழைத்துக்கொள் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் அந்த நண்பரோ, " இல்லை இல்லை என்னை பொறுத்தவரை அந்த கொடியை ஏற்ற நீங்கள் தகுதி வாய்ந்தவர்தான், எங்கள் குடி இருப்பு பகுதிக்கு நீங்கள் பலமுறை வந்திருக்கின்றீர்கள், எங்கள் வீட்டில் உள்ளவர்களும் எனது குடியிருப்பு பெரியவர்களும் நண்பர்களும்கூட நீங்கள் வருவது மகிழ்ச்சி என்று சொல்லி இருக்கின்றனர் எனவே தாங்கள் கண்டிப்பாக வரவேண்டும்" என அன்பு கட்டளை இட்டிருக்கின்றார்.
எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்காததால், விழாவன்று அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று நடுங்கும் கரங்களால் மூவர்ண கொடி ஏற்றிவைத்து , சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களையும் அவர்களது பாடுகளையும் நினைவு படுத்தி பேசிவிட்டு, விழாவை முன்னிட்டு ஏற்கனவே நடைபெற்ற பல போட்டிகளில் வென்ற சிறுவர் சிறுமியருக்கு பரிசுகளை வழங்கிவிட்டு நண்பரிடமும் ஊர் மக்களிடமும் விடைபெற்று திரும்பினார் அந்த மனிதர்.
அன்று அவரது மூத்த சகோதரி- அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையும் அவரது பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி இருந்தது அவரது அம்மா மற்றும் குடும்பத்தினருக்கு பெருமையாக இருந்ததாக அறிந்து மகிழ்ந்தாராம்.
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
யார் அந்த சிறப்பு விருந்தினர்?
யாரிடமிருந்து சுதந்தரம் பெற்றோமோ அவர்களின் நாட்டிலேயே ஏறக்குறைய கால் நூற்றாண்டுகாலமாக காலூன்றி வாழ்ந்துகொண்டு இருந்தாலும் ,இன்றும் கூட தொலை காட்சி நிகழ்ச்சிகளின்போதும் செய்தி ஒளிபரப்பு செய்யும்போதும் தேசிய கீதம் ஒலிக்க கேட்டால், உள்ளான மரியாதையுடன் தேசிய கீதம் ஒலித்து முடியும் மட்டும் எழுந்து அசையாமல் அமைதியாக நிற்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்ட இந்த பதிவின் பதிவாளர்தாங்கோ.
எதனால் அந்த நண்பர் இவரை தேர்ந்தெடுத்திருப்பார், இன்றுவரை புரியவில்லை., உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்.
வாழ்க பாரதம்!!
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
தேசியக்கொடி ஏற்றிய தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குஅடுத்து கோட்டையில் ஏற்றுவதற்கும் வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே, கோட்டை கட்டும் வழக்கம் எனக்கில்லை என்பதால் அதில் கொடி ஏற்றும் எண்ணம் மட்டும் எப்படி பலிக்கும். ரொம்பத்தான் ….. லொள்ளு...ம்ம்ம்ம்
நீக்குயாரென்று நினைத்து வாசித்தால் அது நீங்கள்! வாழ்த்துகள் கோயில்பிள்ளை.
பதிலளிநீக்குதுளசிதரன்
இத்தனை மகத்துவமுள்ள இந்த கொடியை ஏற்ற நமக்கு தகுதி போதுமா என்று நினைத்து அந்த அறிய சந்தர்ப்பத்தை நிராகரித்தவர்களும் உண்டு.//
இது வாசித்து முடித்ததுமே கொஞ்சம் புரிந்தது இது கோ வாகத்தான் இருக்கும் என்று. கடைசியில் தெரிந்துவிட்டது.
உங்கள் எண்ணம் சரியானதுதான். இருந்தாலும் இது நம் நாட்டுக் கொடி! மறைந்த தலைவர்களை வரவழைக்க முடியுமா என்ன? அப்படிப் பார்த்தால் யாரெல்லாமோ ஏற்றுகிறார்கள் நீங்கள் ஏற்றியது சிறப்புதானே.
உங்களைப் பற்றி நன்கு அறிந்ததனால்தான் அவர் உங்களை அழைத்திருக்கிறார்.
வாழ்த்துகள் கோ
கீதா
என்னைப்பற்றி மிக துல்லியமாக அறிந்தவர் நீங்கள் என்பது தங்களின் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதி பலிக்கின்றது. தேசிய கொடி சாதாரணம் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்தால் தேசபக்தியும் சமமாக நிலைபெறும் மக்கள் மத்தியில் என்பதை உணர்த்துகிறது உங்கள் விரிவான பின்னூட்டம். வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.
நீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.
நீக்குகொடியேற்றம் பற்றிய உங்கள் சிந்தனை நன்று. உண்மை தான் - நமக்குத் தகுதி இருக்கிறதா என்பதை நிச்சயம் சிந்திக்க வேண்டும். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வெங்கட்.
நீக்குவாழ்த்துகள்... சிறிது அசந்து போனேன்...!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தனப்பால்.
நீக்குவாழ்த்துக்கள் ஐய்யா.
பதிலளிநீக்குதேசியக்கொடி ஒரு தேசத்தின் ஒற்றுமையின் சின்னம்.
அதை ஏற்றுபவர்களை விட தகுதி குறித்து சிந்தித்து விலகுபவர்கள் அதன்மீதான பெரும் மரியாதையும் நாட்டின் ஒற்றுமைக்கு பங்கேற்பவர்களும் ஆவர்.
எனினும் கொடியை ஏற்றுபவர்களும் இருந்துதான் ஆகவேண்டும். அவர்களால் தான் ஒற்றுமையை மற்ற நாடுகளுக்கு பட்டவர்த்தனமாக காட்ட முடியும்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அரவிந்த்.
நீக்குபெருமைக்குரிய நிகழ்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திரு ஸ்ரீராம்.
நீக்குஒரு குற்றவாளி பிணை பெறாமல் தேசிய கொடி ஏற்றுவது குற்றமா..? நண்பரே
பதிலளிநீக்கு