பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கதவிற்கு முன்னாடி...

காத்திருந்த கண்ணாடி!!
நண்பர்களே,


சாதாரண ஆத்துமாக்கள் முதல் மகாத்மாக்கள் வரை உலகிலுள்ள மனிதர்களுள் குறைந்த பட்சம் 60% மக்கள் தூர / கிட்ட  பார்வைக்காக கண்ணாடி அணியும் கட்டாயத்தில் இருப்பாகாக, National Health Interview Survey, 2016  சொல்கிறது.

பழங்கால  மனிதர்கள், கீழடி காலத்து மனிதர்கள் கண்ணாடி அணிந்ததற்கான சான்றுகள் இருக்காது என்றே நினைகிறேன்.

அப்படியானால் அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை  எத்தகைய ஆரோக்கியமானதாக இருந்திருக்கவேண்டும்.

தற்போதுள்ள குறைபாடுகளுக்கு என்ன காரணம்? அதிக நேரம் புத்தகங்கள் படிப்பதா? அதிக நேரம் கைபேசி, கணனி, மற்றும்  மின்னனு  ஊடகங்களில் மூழ்கி  இருப்பதா ? குறைந்த வெளிச்சத்தில் கண்ணுக்கு மிக அருகில் புத்தகம், செய்தித்தாள் கணனி வைத்து படிப்பதா? அல்லது முறையான சமசீரான உணவும் உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பதா?

வசதி உள்ளவருக்கும்  வசதி இல்லாதவருக்கும்  இந்த கண்ணாடி அணியும் கட்டாயம் தவிர்க்கமுடியாததாகிறது.

அதே சமயத்தில்  இந்த கண்ணாடி என்பது ஒருவருடைய அடையாளமாகக்கூட முத்திரை குத்தப்பட்டு விடுகிறது.

உதாரணமாக , நாம் பார்த்த இயக்குனர்  பாலச்சந்தர், கலைஞர் கருணாநிதி, புரட்சி தலைவர் எம் ஜி ஆர் போன்றோரும் நாம் பார்க்காத,சுபாஷ் சந்திரபோஸ், சித்தரஞ்சன் தாஸ், மகாத்மா காந்தியையும் சொல்லலாம்.

இவர்களின் கண்ணாடி வடிவ அமைப்புகளை கொண்டே அவை யாருடையது என்று அடையாளப்படுத்தமுடியும்.

அவ்வகையில் மகாத்மாவின் வட்ட வடிவ கண்ணாடி உலக பிரசித்தம்.

அவர் எந்த வயதில் கண்ணாடி அணிய ஆரம்பித்தார் என்று  தெரியவில்லை என்றாலும் இளம் வயதிலேயே அணிய ஆரம்பித்திருக்கவேண்டும் என்பது சமீபத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு ஆதாரம் நமக்கு புலப்படுத்துகின்றது.

அதாவது, சர்.ராஜாராம் மோகன்ராய் போன்ற கல்விமான்கள் வாழ்ந்து  மறைந்த , இன்னும் சில ஞானிகளும் அறிஞர்களும்(??) வாழ்ந்துகொண்டிருக்கும் இங்கிலாந்தின் புகழ் பெற்ற நகரமாகிய பிரிஸ்டல் மாநகரின் ஒரு  ஏல நிறுவனத்தின் கதவிலிருந்த தபால் போடும் ஓட்டையின்(letterbox)  வெளியில் துருத்துக்கொண்டிருந்ததாம்  ஒரு காகித உறை. அதை எடுத்து பிரித்துப்பார்க்க அந்த நிறுவன ஊழியருக்கு ஓர் ஆச்சரியம். கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து வார இறுதி விடுமுறை முடிந்து திங்கள் காலை வரை தொலைந்துபோகாமல் அப்படியே துருத்திக்கொண்டிருந்தது  மற்றுமொரு ஆச்சரியம்.

அந்த உறைக்குள் ஓரு பழைய காலத்து தங்க முலாம் பூசப்பட்ட  மூக்கு கண்ணாடி அதனுடன் இருந்த தொலைபேசி எண்(??). 

தொடர்பு கொண்டு விசாரித்ததில், இது மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி , பரம்பரை  பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வைத்து காத்துவந்தது. இதை எங்கள் உறவினர்  ஒருமுறை காந்தி அவர்களை தென் ஆப்பிரிக்காவில் 1920 ஆம் ஆண்டு சந்தித்தபோது நினைவு பரிசாக காந்தி அவர்களால் கொடுக்கப்பட்டது என்ற தகவல் அறிந்து தம் வாழ் நாளில் இதுபோன்ற ஒரு ஒப்பற்ற , சிறப்புவாய்ந்த எந்த பொருளையும் இதுவரை எங்கள் நிறுவன வரலாற்றில்  கண்டதில்லை என்று பூரிப்படைந்தாராம் அந்த  ஏல நிறுவன மேலாளார்.
Image result for Gandhi's Spectacles found in a letter Box



உலக புகழ்பெற்ற மகாத்மா காந்தி அவர்கள் ஆரம்ப காலத்தில் அணிந்த முதல் மூக்கு கண்ணாடி இப்போது தமது கரத்தில் ஏந்தி இருக்கும் அந்த தருணத்தை என்றுமே மறக்கமுடியாது என்று புளங்காகிதத்தோடு சொன்னாராம் அந்த ஏல நிறுவன மேலாளார்.



கிடைத்த தகவல்களை வரலாற்று குறிப்புகளோடும்  வருடங்களோடும்  ஒப்புமை படுத்தி பார்த்தபோது அனைத்தும் உண்மை என 100% புலப்பட்டதை அடுத்து இந்த கண்ணாடி வருகிற 21 ஆம் தேதி ஏலம்  விடப்படப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

குறைந்த பட்சம்  15 லட்சம் ரூபாய்  வரை ஏலம் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.


இந்திய சுதந்தரத்திற்காக வெள்ளையரை  எதிர்த்து போராடி  தம்மையே தியாகம் செய்த மகாத்மா காந்தி அணிந்திருந்த  மூக்கு கண்ணாடி 100 ஆண்டுகள் கழித்து அதே வெள்ளையர் நாட்டில் பெரும் பொக்கிஷமாக- பெருமையாக கருதப்படுவது நமக்கும் பெருமையே.


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் என்றாலே சுதந்தர தினத்துடன்  நமக்கு மகாத்மா காந்தியும்  நினைவிற்கு வருவார் , இந்த ஆகஸ்டில் அவரது இந்த கண்ணாடியும் நம் கவனத்திற்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த பதிவு அந்த கண்ணாடிக்கு சமர்ப்பணம்.


நன்றி.
அனைவருக்கு சுதந்தர தின நல்  வாழ்த்துக்கள்!!!.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்

      நீக்கு
  2. காந்தியின் கண்ணாடி புதிய ஆச்சரியமான தகவல். எல்லோருக்கும் ஒரு வயது வரும் போது வாசிப்பதற்கு வேண்டியேனும் கண்ணாடி அணிய வேண்டி உள்ளதே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரியே, இப்போது கண்ணாடி அணிவதற்கென்று ஒரு வயது இல்லாமல்போய் சிறு குழந்தைகள் கூட அணியவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரியதுதான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  3. 😎 பழங்கால மனிதர்கள், கீழடி காலத்து மனிதர்கள் கண்ணாடி அணிந்ததற்கான சான்றுகள் இருக்காது என்றே நினைகிறேன்.//

    அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம் ஆனால் அப்போது அவர்கள் கண் தெரியவில்லை என்று இருந்திருக்கலாம் கண்ணாடி எல்லாம் அப்போது இல்லாததால். அது போல மாலைக்கண் வியாதி அப்போது அதிகம் இருந்தது இப்போது அது அதிகம் இல்லையே. அப்போது பெயர் தெரியாமல் போன வியாதிகள் குறைபாடுகள் இருந்திருக்கும். அதன் பிறகு தொழில்நுட்பம் வளர வளர இப்போது பெயர் தெரியாத வியாதிகளும் வெளியில் தெரிகிறது.

    காந்தியின் கண்ணாடி ஏலமா!? அட! வியப்பாக இருக்கிறது. இப்போது அதை ஏன் அவர்கள் கொண்டு பெட்டியில் போட்டார்களோ? அரிய பொருள் பொக்கிஷம் என்பதால் அவர்களே வைத்திருக்கலாமே என்றும் தோன்றுகிறது.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரியே எனினும் இப்போதுள்ளதுபோன்ற கண்ணாடிகளை அவர்கள் அணிந்திருந்தால் அது ஆச்சரியமே.

      அரிய பொருளை அவர்கள் ஏன் பெட்டியில் போட்டனர் என கேட்க்கும் அந்த பதிவின் தொடர்ச்சியாக வரப்போகும் பதிவில் சொல்லப்போகும் விஷயம் அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய கீதா madam.

      நீக்கு