பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

என்ன விலை அழகே?

பேரின்ப அதிர்ச்சி!!!??? 
நண்பர்களே,
கடந்த சில நாட்களுக்கு முன் மகாத்மா காந்தியின் கண்ணாடி பற்றிய பதிவு ஒன்றை எழுதி இருந்தேன் , மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள "கதவிற்கு முன்னாடி காத்திருந்த கண்ணாடி" வாசிக்கவும்.

அரிதான பொக்கிஷமாக கிடைக்கப்பெற்ற அந்த கண்ணாடி ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி ஏலாம் விடப்படப்போவதாகவும் அந்த கண்ணாடி சுமார் 15 லட்சம் ரூபாய்  வரை விலைபோகக்கூடும் என எதிர்பார்ப்பதாக அந்த ஏல நிறுவன மேலாளர் அனுமானித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த நாளும் வந்தது.  நிறுவனத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து ஏலம் கேட்பவர்கள் கூடி இருந்தனர். அந்த உன்னத பொருள் ஏல மேடைக்கு வந்ததும் அரங்கத்தின் திரை சீலைகூட அசையாமல் நின்றது, எங்கும்  ஒரே நிசப்தம்.

சிறப்பான,பிரத்தியேகமான கை உறை அணிந்த  சிப்பந்தி அந்த கண்ணாடியை மிக மிக மரியாதையுடனும் பவ்வியமுடனும் கையில்  ஏந்தி வந்திருந்த பெருந்திரளான மக்கள் பார்க்கும்படி மேடையில் நின்று காட்ட, ஏலம்  விடுபவர் அதன் சிறப்புகளை புல்லரிக்கும் உணர்வு பூர்வமாக எடுத்தியம்பியபின் ஏலத்தை ஆரம்பித்தார்.

"விற்பனைக்கு உகந்ததென்றால் விற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் தூக்கி எறிந்துவிடுங்கள்" எனும்  குறிப்புடன் ஏல  நிறுவனத்தின் கதவிலிருந்த தபால் ஓட்டையில் துருத்திக்கொண்டிருந்த அந்த கண்ணாடியின் ஏலம் மள மளவென்று  உ யர்ந்துகொண்டே சென்று , 15 லட்சம் பெருந்தொகையினை அனுமானித்திருந்த நிலையில் , கற்பனைக்கும் எட்டாத - இதுவரை  தங்கள் ஏல நிறுவனத்தின்  வரலாற்றிலும் கண்டிராத வகையில் அந்த   கண்ணாடியை போட்டிபோட்டுக்கொண்டு ஏலம்  கேட்டனர் வந்திருந்த தனவான்கள்.

குறுகிய நேரத்தில் கடைசியாக  "ஒரு தரம்…. இரண்டு தரம்…. மூன்றுதரம்" என சொல்லி  ஏலத்தை முடித்தபோது அந்த கண்ணாடியின் மதிப்பு அனுமானித்த  தொகையைவிட 17.333  மடங்கு அதிகம் என்பது அனைவருக்கும் பிரமிப்பூட்டிய பேரின்ப அதிர்ச்சி.

அதன் விற்பனை தொகை £260,000.00 பிரிட்டிஷ் பவுண்டுகள்,  $340,000.00 அமெரிக்க டாலர்களுக்கும், 2,60,00,000.00 இந்திய ரூபாய்க்கும் சமமான தொகை.

அது யாருடைய கண்ணாடி … தெரியம்ல......

பேர  கேட்டாலே  ச்சும்மா அதிரும்ல..???

காந்தி(யின் கண்ணாடி பற்றிய) கணக்கு எல்லோருக்கும் தவறாகிப்போனது.

காந்தினா சும்மாவா? 

(ஏலம் எடுத்தவர் குறித்த தகவல்கள் ரகசியம்).

இது குறித்து தங்கள் கருத்தை அறிய மிகவும் ஆவல்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.

3 கருத்துகள்:

  1. காந்திஜி பயன்படுத்திய கண்ணாடி விலை மதிப்பற்ற பொருள் தான். இப்படி சிலர் உபயோகித்த பொருட்கள் ஏலம் விடப்படுவது இங்கேயும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. காந்தின்னா சும்மாவா சார்.
    புரட்சிக் காலத்தில் அஹிம்சையை வலியுறுத்திய மாமனிதர் ஆயிற்றே!
    ஒரு வேளை ஏலம் எடுத்தது தாங்களோ?

    பதிலளிநீக்கு