சந்தைக்கு போவனும்….
நண்பர்களே,
தலைப்பையும் உப தலைப்பையும் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வரும் மயிலையும் சப்பாணியையும் மறக்கமுடியுமா?
அதேபோலத்தான் இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் - யுகங்கள் போனாலும் 2020 எனும் இந்த ஆண்டை மறக்கமுடியாபடி பல வரலாற்று பதிவுகள் கால ஏட்டில் பதிந்துகொண்டே இருக்கின்றன.
அப்படி தற்போதுள்ள தொற்று நோயினால் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்கல் பல.
தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்த பல விடயங்கள் இப்போது தலை கீழாக மாறிபோவதையும் நாம் அறிந்திருக்கின்றோம்.
அவ்வகையில், கடந்த 45 ஆண்டுகளாக அரசு மற்றும் பல தனியார் வேலைக்கும் மேற்படிப்பிற்குமான அடிப்படை கல்வித்தகுதியாக திகழ்ந்துகொண்டிருக்கும் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்விற்காக கடந்த கல்வி ஆண்டு வரை நாமும் நமக்கு முன்னரும் நமக்கு பின்னரும் எத்தனை மாணவர்கள் எத்தனை சிரத்தை எடுத்து தயாரித்து வந்தோம்.
அத்தனை கடுமையாக உழைத்தும் பல மாணவர்கள் அந்த பரிட்சையில் தேர்ச்சி பெறாமலும் , சிலர் தவறான முடிவுகள் எடுத்தும் வேறு சிலர் மேற் படிப்பை தொடரமுடியாமல் பாதை மாறி போனதையும் அறிவோம்.
பரீட்சைக்கு தயாரித்த வினாக்கள் கேட்கப்படாமலோ, அல்லது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அந்த நேரத்தில் பதட்டத்தின் காரணமாக நினைவிற்கு வராமலும் , படபடப்பில் (பயத்தில்) வியர்த்து , தாகமெடுத்து, தண்ணீர் கேட்டு குடிக்கையில் அது பரீட்சை விடை தாளில் சிந்தி…
அதை துடைத்து , எஞ்சி இருக்கும் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் முந்தைய கேள்விக்கான விடையை சரியாக எழுதவில்லையே என்ற சிந்தனையிலேயே மற்ற எல்லா விடைகளையும் சொதப்பியும் ஒரு வழியாக அனைத்து பாடங்களின் தேர்வுகளையும் முடித்து விடுமுறை வேளையில் வெளிவரும் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள மாலை முரசு அலுவலக கேட் அருகே முட்டி மோதி நின்று ……...ஸ்ஸ்ஸப்ப்பா…
("மாலை முரசு - மனசெல்லாம் சொகுசு" நேரமிருந்தால் படித்து பார்க்கவும்)
மேற்சொன்ன அத்தனை டென்ஷன்களையும் தூக்கி தூர எறிந்துவிட்டு இன்றைய நாளின் கொரோனா புண்ணியத்தில்(??)….
தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களுக்கும் முந்தைய உள் தேர்வுகளின்(காலாண்டு, அரையாண்டு..) மதிப்பெண்களின் அடிப்படியில் மதிப்பீடு செய்து தேர்ச்சி அறிவித்திருக்கும் அரசின் உத்தரவால் மகிழும் மாணவர்களோடு சேர்ந்து நானும் மகிழ்கின்றேன்.
இதில் நன்மை அதிகமா, குறைபாடுகள் அதிகமா? மாணவர்களின் மன நிலையில் இருந்து பார்த்தால் நன்மையே அதிகம் என்பது என் கருத்து.

இதன் மூலம் , வரும் காலத்து மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி:
"பொதுதேர்வு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மாதாந்திர, காலாண்டு, மற்றும் அரை ஆண்டு தேர்வுகளில் அலட்சியம் காட்டாமலும் , ஆசிரியர்களிடத்தில் மிகுந்த மரியாதையடனும், நன் மதிப்பு பெற்றவர்களாகவும் , வருமுன் காப்போம் எனும் மன நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நல்ல முறையில் படித்து இடை தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களை பெற்று படிப்பில் கண்ணும் கருத்துமாக சிறந்து விளங்க வேண்டும்" என்பதே.
அப்படி இருந்தால்தான் எந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று போட்டிகள் நிறைந்த இந்த வேலை - தொழில் எனும் சந்தையில் மதிப்புமிக்க பிரஜைகளாக வளமுடன் வலம் வர முடியும்.
நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
பொதுதேர்வு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து மாதாந்திர, காலாண்டு, மற்றும் அரை ஆண்டு தேர்வுகளில் அலட்சியம் காட்டாமலும் , ஆசிரியர்களிடத்தில் மிகுந்த மரியாதையடனும், நன் மதிப்பு பெற்றவர்களாகவும் , வருமுன் காப்போம் எனும் மன நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நல்ல முறையில் படித்து இடை தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களை பெற்று படிப்பில் கண்ணும் கருத்துமாக சிறந்து விளங்க வேண்டும்" என்பதே.
பதிலளிநீக்குஉண்மை
சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குநல்லதொரு யோசனை...
பதிலளிநீக்குஉண்மை . நல்ல கருத்து
பதிலளிநீக்குஅனைத்துத் தேர்வுகளிலும் முழுக்கவனம் செலுத்துவதே நல்லது. ஒன்றுவிட்டால்கூட மற்றொன்று கைகொடுத்துவிடும். ஒன்றைவிட்டு அடுத்ததில் பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பது பெரும் தவறு.
பதிலளிநீக்குநல்ல செய்தி அணைவருக்கும் ஐய்யா.
பதிலளிநீக்குஎதையும் தள்ளிப் போடுவது ஆபத்தானது.