பின்பற்றுபவர்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2020

பின்னூட்டமும் - மறுமொழியும்.

மீண்டும் ஒருமுறை! நண்பர்களே ,சமீபத்தில் என்னுடைய பழைய பதிவுகளை மீண்டும் படித்துக்கொண்டிருக்கையில் அதில் ஒரு பதிவும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களுக்கான எனது மறு  மொழியையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.அந்த பதிவை குறித்து நமது நண்பர் ஒருவர் கொடுத்த  பின்னூட்டமும் அந்த பின்னூட்டத்திற்கான எனது நன்றியும் மறுமொழியையும்   மீண்டும் வாசிக்கும்போது அவரது வெளிப்படையான கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவரது பின்னூட்டத்தையும்  எனது மறுமொழியையும் இங்கே மறுபடியும் பதிவேற்றி உங்கள் பார்வைக்கு தருகிறேன்.


பின்னூட்டம்:

கவிதை மிகவும் அருமை நண்பரே... வாழ்த்துகள். கொடுத்த வார்த்தைகளை வைத்து கவிதை எழுதவது என்பது சிரமமான செயலே நண்பருக்காக எழுதி... அவரின் மானத்தையும் காப்பாற்றி விட்டீர்கள்.

நண்பரே வைரமுத்துவின் கவிதைகளுக்கு நான் அடிமை என்றுகூட சொல்லிக்கொள்வேன் ஆனால் இவணெல்லாம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏய்க்கிறான்.

குறிப்பு: இவனுக்கும், எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகறாரோ தனிப்பட்ட விரோதமோ இதுவரை கிடையாது.

ஒரு கல்லூரி விழா நிகழ்ச்சிக்காக மாணவர்கள் அழைத்தமைக்கு கடைசி தருணத்தில் நிபந்தனை வைத்து கழுத்தை அறுத்தவன்.
 
அதன் இணைப்பு தங்களுக்கு கண்டிப்பாக அனுப்புகிறேன் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதெல்லாம் வதந்தி என்று சொல்லி விடாதீர்கள்.

தமிழன் இல்லாதவனை தமிழன் என்று புகழ்ந்து பாட்டு எழுதும் இவன் தமிழனா என்பதே எமது கேள்வி.

குறிப்பு: இன்றும் நான் வைரமுத்துவின் கவிகளுக்கு அடிமையே.... அவனுக்கு அல்ல…

உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உண்மையான உங்கள் ----------(யார் இவர்??)
மறுமொழி :

நண்பர் ----------க்கு,

பதிவினை படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

உங்களின் ஆதங்கத்தை படித்தேன்.

சினிமா கவிஞரின் படைப்புகள் அந்தந்த சினிமாவின் கதைகளை சார்ந்தது, ஒரு ஆண் கவிஞர் பெண் பாடுவதாக ஒரு பாடல் எழுதினால் அவன் பொய் சொல்வதாக அர்த்தமாகாது, தன்னை பெண்ணாக உருவகபடுத்தி அந்த கதையில் வரும் பெண்ணின் மனநிலைமையை கற்பனை செய்து அந்த கதையின் சூழலுக்கேற்ப பாடல் எழுதி அவர்கள் பணம் சம்பாதிப்பவர்கள்.

தமிழன் அல்லாதவரை தமிழன் என்று எழுத மாட்டேன் என சொல்வதற்கு வைரமுத்து என்ன பாரதியா?

சினிமாவில் பணம் பண்ணும் நோக்கம் கொண்ட எவரும் உண்மைகளை, எதார்த்தங்களை எட்டாத தூரத்தில் வைத்துவிட்டுதான் தங்களின் அறிவையும் ஆற்றலையும் அடுத்தவரின் கற்பனைக்கு ஏற்றாற்போல் வளைத்துகொள்கின்றார்கள்.

எனக்கும் வைரமுத்துவிற்கும் எந்த உறவோ பகையோ இல்லையென்றாலும், எவரையும் அவன் இவன் என்ற ஏகவசனத்தில் - ஒற்றை சொல்லில் சொல்லாமலிருப்பது நமக்கு கௌரவம் என கருதுகின்றேன்.

நீங்களும் அவர் இவர் என சொல்லியிருந்தால்…..

"இன்னா செய்தாரை ஒருத்தல்; அவர் நாண
நன்னயம் செய்துவிடில்"

எனும் வள்ளுவ பெருந்தகையின் தெள்ளிய வரிகளோடு நாம் வாழ்வதாக இருக்குமே.

அறிவுரை அல்ல ஒரு ஆலோசனைதான்.

மேலும் எந்த ஒருவரின் படைப்பையும் ஆராதிக்கலாம் ஆனால் அடிமைகளாவதும் தவிர்க்கப்படவேண்டும் என்பது எனது கருத்து.

மேலும் உள்ளதை உள்ளபடி எழுத நினைக்கும் உங்களின் நேர்மையை பெரிதும் பாராட்டுகின்றேன்.

அதே சமயத்தில் "இடக்கறடக்கல்" எனும் பண்பையும் துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.

என்னோடு நட்புடன் பகிர்ந்துகொண்டது சரிதான் இது உங்கள் மற்ற பதிவுகளில் , மேடைபேச்சுகளில் வெளிபடாமல் பார்த்துகொள்ளுங்கள். இதுவும் ஆலோசனைதான் அறிஉரை அல்ல.

உங்கள் கோபம் ஞாயமானதுதான் நான் நம்புகின்றேன், சாட்சி தேடி நேரம் வீணடிக்காமல் பதிவுகள் நோக்கி உங்கள் பாதம் பயணிக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

நட்புடன் …..
கோ
 

பின்னூட்டம் கொடுத்தவர் யார் என்பதை அறிந்துகொள்ள உதவும் அந்த பதிவு :


 "அவள் யாரோ"  2014 டிசம்பர் மாதம் எழுதியது


உங்களின் கருத்து என்ன என்பதை அறிய ஆவலாய் இருக்கின்றேன் .
 நன்றி. 


மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.

12 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான பின்னூட்டம்! சிறப்பான மறுமொழி! பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சுரேஷ்.

   நீக்கு
 2. சுவாரஸ்யமான பின்னூட்டம்! சிறப்பான மறுமொழி! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சுரேஷ்.

   நீக்கு
 3. முந்தைய பதிவுக்குச் சென்று படித்து வந்தேன். நல்ல கவிதை.

  கொடுத்த வார்த்தைகளை வைத்து கவிதை! நன்றாக இருந்தது நீங்கள் எழுதிய கவிதை! வைரமுத்து பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன் பதிவையும் சேர்த்து வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

   நீக்கு
 4. எழுத்தை நேசி
  எழுத்தாளனை அல்ல, என்று எங்கோ படித்ததாக நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்

   அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. எனும் கூற்றை நினைவுபடுத்துகிறது தங்களின் பின்னூட்டம்.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு கரந்தையாரே.

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்

   நீக்கு
 6. காழ்ப்புணர்வுள்ள பின்னூட்டம், அதற்கு சரியான பதிலடி. எங்கும் நாகரிகம் தேவை.பொதுவாக விழாவுக்கு அழைப்பவர்கள் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர் கேட்பதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் மறுக்க அவருக்கு முழு உரிமையுண்டு.

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் திரு ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு