கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
சனி, 21 நவம்பர், 2020
அம்மி பறக்குது!!
நண்பர்களே,
இடையில் சிறிது காலம் பதிவின் பக்கம் வராமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கும் புதிய வடிவிலான பதிவு தளம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்பதே பிரதான காரணம். எனினும் இந்த புதிய மாற்றங்களை புரிந்துகொண்ட பதிவுகள் எழுத முயற்சிக்கின்றேன்.
குழந்தை பருவத்திலிருந்து தமது முதுமை பருவம் வரை பாதுகாப்பான சூழலிலும் , பாதுகாப்பான போஷாக்கான உணவுகளையம் சுத்தமான குடிநீர் , சத்தான காய் கனிகள் போதாதற்கு மேலை நாட்டு தயாரிப்பு சத்து நிறைந்த கூடுதல் உணவுகள் , பாதுகாப்பான உறைவிடம் முறையான மருத்துவ பரிசோதனைகள் என்று தம்மையும் தமது குடும்பத்தையும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் ஒருபகுதி.
அவர்களுக்கு சிறிய தலைவலி காச்சல் ஜலதோஷம் என்றால்கூட பதறிப்போய் மருத்துவரை அழைப்பதும் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று காட்டுவதுமாக இருப்பார்கள், கை கால்களில் சிறிய சிராய்ப்பு என்றாலும் கூட பதறிவிடுவார்கள.
இவர்களுக்கெல்லாம் எந்த வியாதியும் வராது ; அப்படியே வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எரிந்து விடும் அளவிற்கு வசதியும் சுகாதாரமும் சத்தான உணவும் அவர்களுக்கு சாத்தியம்.
இப்படிதான் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் இருந்தது.
ஆனால் தற்போது அங்கெங்கிணாதபடி உலகெங்கிலும் விரவி பரவி இருக்கும் கொடிய கிருமியின் வரவிற்கு பிறகு ஏழை பணக்காரன் , ஆரோக்கியம் மிகுந்தவன் ஆரோக்கியம் இல்லாதவன் படித்தவன் படிக்காதவன் , உயர் பதவியில் இருப்பவன் வேலையே இல்லாமல் இருப்பவன் போன்று எந்த வேறுபாடும் இல்லாமல் யாரையும் தாக்கி அழிக்கும் இந்த கொடூர கிருமியால் உலக மக்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம்.
அம்மியும் உரலும் ஆட்டம் காணும் இந்த சூழலில் காய்ந்த ஆலமர சருகுகள் எம்மாத்திரம்?
இனியும்கூட ஆபத்தை உணராமல் , பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்போமேயானால் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என அறிந்து செயல்படுவது நல்லது.
இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிகூட கடந்த ஓரிரு மாதங்கள் /வாரங்களில் கிருமியின் தாக்குதலும் வீரியமும் குறைந்துகொண்டிருந்த சூழலில் கடந்த வாரம் முதல் அதன் வீரியமும் தொற்றும் வேகம் எடுத்திருப்பது வேதனை அளிக்கின்றது. அப்படி மருத்துவ வசதியும் சுகாதார வசதியும் அபரிமிதமாக இருக்கும் நாடுகளிலேயே இப்படி என்றால் சுகாதாரமும் பாதுகாப்பு வசதியும் குறைவாக உள்ள நாட்டு மக்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்து நடந்து கொள்வது அனைவருக்கும் நல்லது.
கடந்த இரண்டு மாதங்களில் திடகாத்திரமும் ஆரோக்கியமுமாக இருந்த எனது மூன்று நண்பர்களை இந்த கொடூரன் கொண்டுசென்றுவிட்டான் என நினைத்து வேதனையுடன் இந்த பதிவினை முடிக்கின்றேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
இங்கிலாந்தில் இலவச திருமணம்!!
தாலிக்கு தங்கம் !விரலுக்கு மோதிரம்!!
நண்பர்களே,
உலகின் பல நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட பணியாளர்களை தற்போதுள்ள சூழலில் பாராட்டியம் கவரவித்தும் வருவது நாம் அறிந்ததே.
சனி, 5 செப்டம்பர், 2020
என் நண்பன் போல யாரு மச்சான்….
உறவுகள் தொடர்கதை….
நண்பர்களே,
உலகில் பல நண்பர்கள், பள்ளி கல்லூரி தோழர்கள்,உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள் வேலை இடத்து சக ஊழியர்கள் மற்றும் பல குழுக்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்திற்காகவும் தங்கள் உறவுகளை தொடர்வதற்காகவும் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் தங்களுக்குள் பலவகையான தொடர்பு முறைமைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020
ஆத்தா..... நான் பாஸாயிட்டேன்!!!
சந்தைக்கு போவனும்….
நண்பர்களே,
தலைப்பையும் உப தலைப்பையும் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வரும் மயிலையும் சப்பாணியையும் மறக்கமுடியுமா?
வியாழன், 27 ஆகஸ்ட், 2020
என்ன விலை அழகே?
பேரின்ப அதிர்ச்சி!!!???
நண்பர்களே,
கடந்த சில நாட்களுக்கு முன் மகாத்மா காந்தியின் கண்ணாடி பற்றிய பதிவு ஒன்றை எழுதி இருந்தேன் , மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள "கதவிற்கு முன்னாடி காத்திருந்த கண்ணாடி" வாசிக்கவும்.
புதன், 26 ஆகஸ்ட், 2020
"வாரு பத்து கூறு பத்து தக்காளி பத்து"
English version
நண்பர்களே,
சின்ன வயதில் அம்மாவுடன் காய்கறி அங்காடிக்கு சென்றபோது என் காதுகளில் ஒலித்த வாக்கியம்தான் இன்றைய பதிவின் தலைப்பு.
திங்கள், 17 ஆகஸ்ட், 2020
தேசிய கொடி ஏற்றும் தகுதி.
யாருக்கு?
நண்பர்களே,
தேசிய கொடி என்பது ஒவ்வொரு தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல அது அந்தந்த தேசத்தின் கவுரவம் மற்றும் உயிரினும் மேலான பொக்கிஷம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)