பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

புதிய முயற்சி!

 திருவினையாக்குங்கள். 

 நண்பர்களே,

விதைவிட்டு வெளி வந்த முளைபோல இந்த வலைதளத்தில் சில ஆண்டுகளாக அவ்வப்போது இளந்தளிராய் , சிறு இலையாய் எழுதிவந்த என் எழுத்துக்களுக்கு உலகெங்கிலும் இருந்து பேராதரவும் பெரும் வரவேற்பும் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்திவரும் உங்கள் அத்தனைப்  பேருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் பேருவகையுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

செடியை நீரூற்றி வளர்ப்பதுபோல உங்களின் அன்பான - அக்கறையான - தொய்வில்லா  வாசிப்பின்  மூலம் என்னை உற்சாகப்படுத்தி வளர்த்து வருகின்றீர்கள்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த பரிமாணத்தில் என் எழுத்துக்களை உங்களிடம் சேர்க்கவேண்டும் என்ற பேராவலின்  தூண்டுதலால் , எனது சில கவிதைகளை ஒரு சிறு புத்தகமாக தொகுத்து , "லண்டனிலிருந்து தமிழ்க்கவிதைகள்" எனும் தலைப்பில் , அமேசான் கிண்டலில் பதிவேற்றம் செய்திருக்கின்றேன்.

koilpillaiyin.blogspot .com எனும்  வலைதளத்தில் வெளிவரும் எனது பதிவுகளை வாஞ்சையோடு வாசித்து பேராதரவும்  பெரும் ஊக்கமும் கொடுத்துவரும் நீங்கள்   இந்த புதிய தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த படைப்பிற்கும் நல்லாதாராவும் ஊக்கமும் அளிப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்த தளத்தில் புத்தகத்தை வாசிக்க  வேண்டுமாயின் கீழே உள்ள லிங்க் மூலம் வாசிக்கலாம். 

எனினும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள step by step வழிகாட்டுதலை பின்பற்றியும்  இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

மேலும் இலகுவாக இந்த வழிமுறைகளை  நண்பர்கள், தெரிந்தவர்கள், ஏற்கனவே இதுபோன்ற தளங்களில் வாசித்து அனுபவம் வாய்ந்த  யாருடைய உதவியையும் பெற்று இந்த தளத்திற்கு வந்து வாசிக்கலாம்.

 📖 How to Buy & Read லண்டனிலிருந்து தமிழ்க்கவிதைகள் (Tamil Edition)

👉 Worldwide link to the book: https://mybook.to/9V8Pd


  1. Go to the link above

    • It will open your local Amazon store automatically.

  2. Or search manually

    • Copy & paste this title into Amazon search:
      லண்டனிலிருந்து தமிழ்க்கவிதைகள் (Tamil Edition)

    • Look for the cover with Big Ben on it.

  3. Buy the Kindle Edition

    • Click the book → select Kindle Edition → press Buy now.

  4. Download the Kindle App

    • On your phone/tablet:

      • iPhone/iPad → App Store → search “Kindle”.

      • Android → Google Play → search “Kindle”.

    • Download & install.

  5. Sign in with your Amazon account

    • Open Kindle app → log in using the same Amazon account you bought the book with.

  6. Sync and Read

    • In the Kindle app, go to Library → pull down to refresh.

    • Tap the book cover → it will download → start reading (works offline too).

இதன் விலையாக  குறிப்பிட்டுள்ள சிறியத்தொகையை யாரும் பெரியதாக நினைக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்.

உங்களின் பேராதரவே எனது  இன்னும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு பாதை அமைத்துக்கொடுக்கும் என நம்புகின்றேன்.

படித்துவிட்டு தங்கள் கருத்தை தெரிவியுங்கள் ஆவலோடு காத்திருக்கின்றேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக