பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

வேறு என்ன வேண்டும்?

வீடே அலுவலகம்!!
நண்பர்களே,
கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக, இந்த உயிர்க்கொல்லியின் கோரா பிடியில் சிக்கிக்கொள்ளாமலும் , அதனால்  ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.


அவ்வகைகளுள் ஒன்று, வாய்ப்பிருக்கும் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது.

இதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியருக்கு சில வசதிகளை செய்து கொடுத்திருப்பதை அறிவோம்.

அவ்வகையில் , மடி கணினி, எங்கிருந்தும் வேலை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் இணைப்பு, ஊழியர் சந்திப்பு வசதிகள் … இன்னும் பிற வசதிவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கின்றன.

அதேபோல, காலாகாலமாக அலுவலகம் சென்று செய்துவந்த வேலைகளை அவரவர் வீட்டிலிருந்தே செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால், எல்லோரது வீட்டிலும் அதற்கான  வசதியும் இடமும் உரிய மனைத்துணை பொருட்களும்(furniture)  , எழுத்து பொருள்களும்(stationery) இருக்க வாய்ப்பில்லை.

அதேபோல அலுவலகத்தில் இரண்டு மானிடர்களை வைத்து  வேலை செய்தவர்களுக்கு ஒரே ஒரு மடி கணினியை மட்டும் வைத்துக்கொண்டு வேலை செய்வது சிலருக்கு சாத்தியம் இல்லை, அதிலும் குறிப்பாக பெரிய spread sheet வைத்து வேலை செய்பவர்களுக்கு சிறிய screen கொண்ட மடிக்கணினி போதுமானதாக இருக்காது.

அதேபோல, அவரவர் தங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான, மேசை நாற்காலிகள் , printer  போன்றவை இருக்க வாய்ப்பில்லை. எங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் இதேபோன்ற வசதி இன்மையும் இருந்தது.

இந்த சூழ்நிலையை  மனதில் கொண்டு, எங்கள் நிறுவனம் தங்கள் ஊழியர் அனைவருக்கும் , மடி கணினியை தவிர கூடுதலாக பெரிய screen கொண்ட புதிய மானிடர்களையும் தேவைப்படுபவருக்கு புதிய mouse , மற்றும் mousepad, எழுத்து பொருட்களான , பேனாக்கள், பேப்பர்கள்,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றையும் தடை இன்றி வழங்கி வருகின்றனர்.

மேற்சொன்ன பொருட்களை  அலுவகம் சென்று குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

தம்முடைய  தனிப்பட்ட ப்ரிண்டரை பயன்படுத்துவதால் அதற்கான ink ஐ ஆன் லைனில் ஆர்டர் செய்து வீட்டு விலாசத்திற்கு அனுப்பி வைக்கின்றது.

இதைத்தவிர  வேலைக்கு தேவைப்படும் மற்ற  பொருட்களான மேசை, நாற்காலி, foot stool  போன்றவற்றையும் வாங்கிக்கொள்ள ரூபாய் 10,000.00 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

இப்படி வாங்கப்படும் பொருட்களின் ரசீதை அனுப்பி அந்த பணத்தை சமபளத்தோடு சேர்த்து வரி இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வீட்டு இடத்தின் அமைப்பிற்கேற்ப அவரவர் தங்களுக்கு வேண்டிய நாற்காலிகள்,மேசைகள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இதில் மேசைகள் , நாற்காலிகள்,foot ஸ்டூல் மட்டுமின்றி, lumbar support cushions போன்றவையும் அடங்கும்.

இந்த வசதிகள் தவிர வீட்டிலிருந்து வேலை செய்பவருக்கு ஒரு வாரத்திற்கு இவ்வளவு என்று , மின்சாரம், heating போன்றவற்றிக்கும் வரியில்லா வருவாய்  இங்கு வகை செய்யப்பட்டிருக்கின்றது.

இதனால் தனிப்பட்ட வகையில், போக்குவரத்து , பார்க்கிங் , பெட்ரோல் போன்றவையும், பயண நேரமும்   தவிர்க்கப்படுவதும் ஒரு கூடுதல் அனுகூலம்.

இதற்குமேல் வேறு என்ன (வசதிகள்)  வேண்டும்  வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு? 

இதுபோன்று மற்ற நிறுவனங்களிலும்  மற்ற நாடுகளிலும் செய்துகொடுக்கப்படும் வசதிகள் பற்றி   தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வீட்டிலிருந்து வேலை செய்வது எல்லாவகையிலும் அனுகூலம் என்றும் சொல்ல  முடியாதுதான் - every coin has two sides. 

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ  

16 கருத்துகள்:

 1. என் மனைவியின் கம்பெனியில் அவளுக்கு இரண்டு மானிடர்களையும் கீ போர்ட் மற்றும் மெளஸ்களையும் அனுப்பி வைத்தனர் அவ்வளவுதான்.

  நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கொரோனாவது கிரானாவது ஒழுங்காக வேலைக்கு வாங்கடா என்று சொல்லி முககவசம் கையுறை கொடுத்து தினமும் வேலைக்கு வாடான்னு சொல்லிட்டாங்க காபி மிஷினை தூக்கி குப்பையில் போட்டுடாங்க பாவி பசங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது, காப்பி மிஷனை குப்பையில் போட்டது குறித்து நினைக்கும்போது. குறைந்த பட்சம் மனைவின் நிறுவனத்திலிருந்து வந்த பொருள்கள் குறித்து மகிழுங்கள். ஆமாம் அது என்ன கிரானா? இங்க வர கொஞ்சம் நாள் ஆகுமோ? கையுறையையும் முக கவசத்தையும் ஞாபகமாக கொண்டு செல்லுங்கள்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 2. hi sir

  கடைசியாக ப்லாக் பக்கம் வந்து பல நாட்கள் ஆகிரது.
  நலம் தானே?
  இடை பட்ட சமயத்தில் நிறைய பதிவுகள்எழுதி இருக்குரீங்க.
  நேறம் இருக்கும்போது ஒவ்வொன்றாக வாசிக்கனும்.

  ***

  தம்பிக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு புது hp லேப்டாப் அவன் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து
  அனுப்பி இருந்தனர். அதன் விலையை பார்த்து ஆச்சர்ய பட்டு போனோம்.

  வேலை என்னவோ அவனுக்கு அலுவலகத்தில் இருந்திருந்தால் ஒரு நாலைக்கு எட்டு மணி நேரம்தான்.
  அதுவே தர்ப்போது வீட்டில் இருந்து செய்யும் போது...!!!
  பரவாலை அங்கு நிருவனங்கள் நிறைய முன் எடுப்புகலை எடுத்திருப்பதை வாசிக்கும்போது

  சந்தோஷமா இருக்கு.
  அது மாதிரி இங்கும் நிருவனங்கள் முன்னுக்கு வந்தால்...


  நல்லா இருக்கும்.
  எவ்வல்வு நேரம்தான்
  லேப்டாப்பில் கட்டிலில் உட்கார்ந்து வேலை பார்ப்பது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ், நான் இங்கே நல்ல சுகம்தான்.

   தனிமனித நலமும் பொது சமூக நலனும் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படவேண்டும் என்ற பொது சிந்தனையின் வெளிப்பாடுதான் இதுபோன்ற சலுகைகள். வீட்டில் இருந்து வேலை செய்தால் கூட 7.5 மணி நேரமே நாங்கள் வேலை செய்தால் போதும். எத்தனை நேரம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் ஆனால் எல்லோரும் காலை 8 முதல் 4 வரிதான் அதிகபட்சம் வேலை செய்கின்றனர்.

   நீண்ட இடைவேளைக்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 3. பல வசதிகள், வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது உண்மை. இருப்பினும் சமூக அணுகுமுறை, பழக்கவழக்கம் என்பதானது ஒருஇடைவெளியை உண்டாக்கிவிடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா. ஆமாம் இதுவும் ஒருவகையில் தனிமை படுத்துதலே.

   நீக்கு
 4. இதுவல்லவோ நிறுவனம்...!

  உயிர்க்கொல்லி காணாமல் போய்விட்டாலும், இதேபோல் தொடரும் என்றே தோன்றுகிறது... (!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்குள்ள சக ஊழியர்கள் எதிர்பார்ப்பதும் பிறகும் வீட்டிலிருந்தே வேலைசெய்வதையே.

   வருகைக்கு மிக்க நன்றி தனபால்.

   நீக்கு
 5. என் மகனும் வீட்டிலிருந்து வேலை செய்கிறான்.  மடிக்கணினி தவிர வேறொன்றுமே தரவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்..

   மடி கணினி, மானிடர், கீ போர்டு, மௌஸ் தவிர மற்ற அனைத்தும் அவரவருக்கே சொந்தம் நாங்களே வைத்துகொள்ளல்லாம் , சூழ்நிலை சகஜமான பிறகும் என்பது கூடுதல் தகவல்.

   நீக்கு
 6. இந்தியாவிலும் இப்படி வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  இரண்டு தம்பிகள் கோவையில் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்.

  BOSCH நிறுவனத்தில் கணினி கொடுத்துள்ளார்கள் டேபிள் வீட்டிலிருந்ததுதான்.

  நானும் அலைபேசியில் கேட்டேன் அதற்கு நீதான் விசாவை கேன்ஷல் செய்து தேவகோட்டை போய் விட்டாயே... என்றார்கள்.
  அபுதாபி அலுவலகத்திலிருந்து...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபுதாபி அலுவலகம் தங்களின் கோரிக்கை மனுவை நிராகரித்திருக்க கூடாதுதான். "கில்லவனுக்கு புல்லும் ஆயுதம்" தானே.

   வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 7. இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, எங்கள் நிறுவனம் தங்கள் ஊழியர் அனைவருக்கும் , மடி கணினியை தவிர கூடுதலாக பெரிய screen கொண்ட புதிய மானிடர்களையும் தேவைப்படுபவருக்கு புதிய mouse , மற்றும் mousepad, எழுத்து பொருட்களான , பேனாக்கள், பேப்பர்கள்,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றையும் தடை இன்றி வழங்கி வருகின்றனர்.//

  பராவாயில்லையே என்று வியப்புதான்

  இங்கெல்லாம் அப்படி எல்லா அலுவலகங்களிலும் இருப்பது போன்று தெரியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊழியர்களின் நலனில் அக்கறை மட்டுமின்றி இந்த ஊழியர்களின் சேவைகள் பொதுமக்களின் நலன் சார்ந்து அவர்களின் ஆரோக்கிய வாழ்வு சார்ந்து இருப்பதனால் அந்த சேவை தொய்வின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்கூட இப்பேற்பட்ட வசதிகள் செய்துக்கொடுப்பதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே

   நீக்கு
 8. அட என்னவெல்லாம் செஞ்சு தராங்க. பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்தானே நிறுவனம் நன்றாக இயங்க முடியும். நல்ல விஷயம்.

  இங்கெல்லாம் அப்படித் தருவதில்லை. கல்லூரியில் கூட வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று சொன்னார்களே தவிர வீட்டில் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்று ஒன்றுமே கேட்கவில்லை.

  கம்பெனிகள் சில தவிர எந்த வசதியும் கொடுக்கவில்லை என்றே கேள்விப்பட்டேன். சிலர் லாப்டாப் மட்டும் கொடுத்துவிட்டு வேறு எதுவும் தரைல்லை.

  ஒரு வேளை பெரிய நிறுவங்கங்கள் செய்யுமோ என்னவோ.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் வீட்டில் இல்லாதபோது ஆன் லைன் வகுப்புகள் நடப்பது வருத்தமே.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள். அன்பிற்கினிய நண்பர்களே.

   நீக்கு