பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 ஜூன், 2020

மாறும் சரித்திரம்...அடிமைச்சுவடு!  
நண்பர்களே,


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் , நகரின் பிரதான கடை வீதியில் நடந்துகொண்டிருந்த என்னை நோக்கி ஒரு அழகிய இளம் பெண் வந்துகொண்டிருந்தாள்.

என்னை நோக்கி பாயும் தோட்டா போல வந்த அந்த பெண், "இந்த இடத்தில் தங்களை , இடை மறித்தமைக்கு மன்னிக்கவும்"  என சொன்னாள்.


பெண்களை பொறுத்தவரை நமக்குத்தான் பெரிய மனசு என "ஜொள்ளவும்" sorry... சொல்லவும் வேண்டுமோ?


பரவாயில்லை என்ன வேண்டும் உங்களுக்கு?நாட்டின் பிரதான செய்தித்தாளின் நிருபர் நான், நகரம்  தழுவி பரவலாக  ஒரு random ஒப்பீனியன் survey எடுக்கப்படுகிறது. அது சம்பந்தமாக உங்களின் கருத்தினை அறிந்துகொள்ள  உங்களிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்  உங்களுக்கு சம்பந்தமா?என கேட்ட வண்ணம் , அவரது ஐ டி யை காண்பித்தார்.நானும் சரி அதற்கென்ன , என்ன விவகாரம் என கேட்டேன்,உங்களுக்கு Edward Colston என்பவர் குறித்து தெரியுமா?

கேள்விப்பட்டிருக்கிறேன் அவரின் சிலையையும் பார்த்திருக்கின்றேன்.

நல்லது, அவரின் பெயரில் ஒரு கட்டிடம் இருக்கின்றதே பார்த்திருக்கின்றீர்களா?


ஆம் பார்த்திருக்கின்றேன் அதெற்கென்ன?


அந்த கட்டிடத்தின் பெயரை மாற்றவேண்டி பலர் கோரிக்கை வைத்திருகின்றனர் , அதைப்பற்றி  உங்களின் கருத் து என்ன?.


நண்பர்களே, நான் என் கருத்தாக என்ன கூறினேன் என்பதற்கு முன், சம்பந்த பட்டவர் யார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


1636 முதல் 1721வரை வாழ்ந்த இங்கிலாந்தை சார்ந்த ஒரு வணிகர்,  வள்ளல், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.


கொடை வள்ளல் என்றவுடன், நெற்றி வேர்வை  நிலத்தில் சிந்தி பாடுபட்டு சம்பாதித்த பணத்தின் சேமிப்பிலிருந்து வழங்கிய கொடையினால் ஏற்பட்ட அடை மொழி அல்ல இந்த கொடை (அடை)  மொழி.
அவர்  சந்தை பொருட்களை வாங்கி விற்ற வியாபாரி அல்ல.


ஆப்பிரிக்க கறுப்பினத்து மக்களை அடிமைகளாக சொற்ப பணம் கொடுத்து "வாங்கி" அவர்களை கப்பல் மூலம் கொண்டுவந்து அட்லாண்டிக் பிரதேசத்து நாடுகளில் கொத்தடிமைகளாக விற்று பணம் சம்பாதித்தவர்.


அந்த பணத்தில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மற்றும் சமூதாய கூடங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டிற்கான கட்டுமானங்களுக்கான நிதியை "தாராளமாக" வழங்கியதன் மூலம் அவர் வாழ்ந்த அந்த நகரமே சிறப்புடன் , மேம்பாட்டுடன்  இருந்ததாம்.


அந்த கொடைகளை  நினைவுகூர்ந்து அந்த "மா" மனிதனின் பெயரில் கட்டிடங்கள், சாலைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவை நிறுவப்பட்டனவாம்.


பின்னர் இத்தகு அடிமை வியாபாரம் செய்த இந்த மனிதனின் பெயரும் அவரது சிலையும் நகரின் எந்த இடத்திலும் இனி இருக்க கூடாது என்று கடந்த வாரம் போராட்டம் வெடித்ததின்  விளைவாக அவரது ஆளுயர வெண்கல சிலை போராட்டகாரர்களால், சிலை மேடையிலிருந்து கீழே தள்ளப்பட்டு பின்னர் அருகிலிருந்த ஆற்றில் வீசபட்டது.


அதேபோல அவரது பெயரில் இருந்த வணிக வளாகத்தின் பெயரும், கச்சேரி மண்டபத்தின்??- (கான்செர்ட் ஹால்) தற்போது நீக்கப்பட்டு விட்டது.


அவரது பெயரால் நிறுவப்பட்ட  பள்ளிகூடத்தின் பெயரும் நீக்கப்படுமா வேறு என்ன பெயர் சூட்டப்படும் என்பது ஆறு வாரம் நடக்கப்போகும் பெற்றோர்- ஆசிரியர்- மாணவர்- கருத்தாலோசேனைக்கு பின் முடிவு செய்யப்படுமாம்.


எப்படியும் இந்த  பெயர் மாற்றப்படும் சந்தேகத்திற்கு இடமின்றி.


சரி, என்னிடம் அந்த பெண் நிருபர் 15 ஆண்டுகளுக்கு முன் கேட்ட openion சர்வே க்கான  என் கருத்து;


"எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் அவர்  அடிமைகளை விற்று சம்பாதித்த ஒரு தனவந்தர், அதன்மூலம் அவர் நகர அபிவிருத்திக்காக அளித்த நன்கொடையால்  பல நன்மைகள் இந்த நகரம் அடைந்திருக்கின்றது, அவரது பெயர் இந்த கட்டிடங்களுக்கு இருப்பது பழைய கருப்பு வரலாற்றை , நிற பேதைமையை, ஆண்டான் அடிமை முறையை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.


 அப்படி அடிமைகளாக இந்த நகரத்தில் விற்கப்ப ட்டோரின் வாரிசுகள் இந்த பெயரை பார்க்கும்போதெல்ல்லாம், கூனி குறுகிப்போகும் நிலை ஏற்படலாம்.


 எனினும் இது வரலாறு, பெயர் அழிக்கப்படுவதால் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது.


இந்த  பெயரை பார்க்கும்போது அடிமை விலங்கு தகர்த்தெறியப்பட்டு, கல்வி, வேலை பொருளாதாரம் போன்ற அனைத்து கூறுகளிலிலும் சிறந்து விளங்கும்  மாற்று நிற  மக்களும் இன்றைய சமூகமும்  பெருமிதத்துடன், ஏளன புன்னகையுடன் கடந்துசெல்ல வேண்டுமே தவிர  நகரத்தின் வரலாற்று பெயர்களை, சின்னங்களை மாற்றுவதால் எந்த பலனும் ஏற்படாது மேலாதிக்க மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் வரை.


எனவே என்னை பொறுத்தவரையில் இந்த பெயர் ஒரு இழிவான மனிதனின்  பெயராகவே இருந்துவிட்டு போகட்டுமே ".
நன்றி சொன்ன அந்த பெண் என் குரல் பதிவோடு என் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு இடம் பெயர்ந்தாள், அடுத்தநாள் பத்திரிகையில் என் புகைப்படத்துடன் கூடிய என் கருத்தும் வெளி வந்திருந்தது.
 நண்பர்களே, அன்றைய காலகட்டத்தில், அறியா(??!!) பருவத்தில்  , எதிர்பாராது எதிர்கொண்ட கேள்விக்கு மனதில் தோன்றிய என் கருத்தை இவ்வாறு சொல்லி இருந்தேன், இப்போதும் அது சரியா தவறா என தெரியவில்லை.


நாம் அறிந்தவண்ணம், உலக அதிசயங்களாக கொண்டாடப்பட்டு, எகிப்தின் பிரமீடுகளும் , ரோமாபுரியின்  கொலோசியமும் இன்னும் பிற பெருங்சுவறுகளும் யாரால் கட்டப்பட்டிருக்கும்? இவையும்கூட அடிமைச்சுவடுகள் என்றால்   அவற்றை என்ன செய்வது?


நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
  

12 கருத்துகள்:

 1. தங்களது கோணத்தின் பார்வை மாறுபட்டது மனதில் பட்ட வடு மாறவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே,

   வடு என்பது நிலையானது எப்போது மாறும் எப்படி மாறும்?

   பொறுத்திருந்து பாப்போம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வெங்கட்,

   வருகைக்கும் எனது அன்றைய கருத்தை ஆமோத்தித்தமைக்கும் மிக்க நன்றிகள், சுவடுகள்தானே வரலாற்றின் பின்புலம், பலம் எல்லாம்.

   நீக்கு
 3. பெயர் அழிக்கப்படுவதால் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது. நூற்றுக்கு நூறு உண்மை.
  பெயர் அழித்தால் அனைத்தும் அழிந்துவிடுவதாக நம்மவர்கள் பலர் நினைத்து பலவாறான செயல்களில் ஈடுபட்டுள்ளதை நாம் அதிகமாகப் பார்த்துள்ளோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   இந்த பதிவிற்கான பின்னூட்டத்தை தங்களிடமிருந்து (கண்டிப்பாக) எதிர்பார்த்தேன், ஒரு ஆராய்ச்சியாளராக, வரலாற்று சுவடுகளை மீட்டெடுக்கும் ஆர்வலராக , புதைந்திருக்கும் பண்டைய செய்திகளை புடம்போடுபவராக,பகுத்தாராய்ந்து புதினங்களை எழுதும் ஒரு பண்பட்ட எழுத்தாளராக, அனுப தெளிவு மிக்கவராக இருக்கும் தங்களிடமிருந்து, பெயர்மாற்றம், வெறும் பேருக்கான மாற்றமாகத்தான் இருக்குமே தவிர முழுமையான தேவையான மாற்றத்தை - உருவாக்கத்தை தராது, யாருக்கு புரிகிறது?என்ற தங்கள் கருத்து எனக்கு திருப்தி அளிக்கின்றது.

   நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. அப்போது மனதில் தோன்றிய கருத்தைச் சொன்னதில் தவறில்லையே...   விவாதமாக வைத்திருந்தால், பாதிக்கபப்ட்டவர்களும் பேசி இருந்தால் அவர்களது உனர்வுகளும் புரிந்து கொண்டு முடிவு எடுக்க முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   என்னோடு இன்னும் சிலரும் அந்த பெட்டியில் இடம் பெற்றிருந்தனர் அவர்களுது கருத்துக்களும் பிரசுரம் செய்யப்பட்டிருந்தன, அவர்களுள் பாதிக்கப்பட்டவர்களை சார்ந்தவர்களும் இருந்தனர். பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருந்தான. பெரும்பான்மையானவர்கள் சொன்னது பெயர்மாற்றி என்ன பிரயோஜனம்?

   நீக்கு
 5. தவறில்லை அதுவும் 15 வருடங்களுக்கு முன் அப்போதைய நிலையில் சொல்லியிருக்கும் பதில். மாறுபட்ட கோணத்தில்.

  இது நம்ம 23 ஆம் புலிகேசி படத்தில் வரும் ஃபேமஸ் வசனம் "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பது நினைவுக்கு வந்தது.

  இப்படி பெயர் மாற்றத்தால் வரலாறுகள் மாறப் போவதில்லைதான். பொதுவாகவே மக்களின் மனதில் நெகட்டிவ் எளிதில் பதிந்துவிடும் என்பதால் வரலாற்றுப் பெயர்கள் வைக்கப் படும் போது நல்ல நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் பெயர்கள், முன்னுதாரணமாக இருக்கும் நபர்களின் பெயர்கள் இருந்தால் நல்லது பல மக்களின் மனதிலும் படியும் இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய அம்மையீர்,

   200/300 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை / மக்களின் மன நிலையை யூகிப்பது கடினம் தான் எனினும் புலிகேசி முக்கியம் - "வரலாறு முக்கியம்"

   வருகைக்கும் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. அருமையான பதில் சார். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபிநயா

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்?

   நீக்கு