பின்பற்றுபவர்கள்

புதன், 10 ஜூன், 2020

டீ சாப்பிட(??)...



முள் கரண்டி!!
நண்பர்களே,

சாப்பிடுவது என்பது, திடமான உணவு பதார்த்தங்களை  கைகளாலோ, அல்லது கரண்டி, ஸ்பூன் , சாப்ஸ்டிக் போன்றவற்றாலோ எடுத்து உண்பது என்பது நாம் அறிந்ததே.


அதே சமயத்தில் திரவ நிலையில் இருக்கும் பதார்த்தங்களை   கைகளாலோ,கரண்டி, ஸ்பூனாலோ அல்லது குடுவை அல்லது தட்டு, குவளை, கோப்பை போன்றவற்றின் துணையுடன் உண்பதற்கு, அருந்துதல், பருகுதல், குடித்தல் என்று சொல்வதும் நாம் அறிந்தது.

சில சமயம்  திட உணவையும் திரவ உணவையும் கலந்து உட்கொண்டாலும்கூட அதை பெரும்பாலும் குடிப்பது, பருகுவது, அருந்துவது என்றே சொல்வது வழக்கம் .

உதாரணத்திற்கு,சாதத்தையும் தண்ணீரையும் கலந்து உட்கொள்வதை கூட கஞ்சி குடித்தல் என்றுதானே  சொல்வார்கள்.

அதே சாதத்தில் ரசம் அல்லது தாயிர்  அல்லது மோர் கலந்து உட்கொண்டால் அதை ரசம் சாதம் சாப்பிடுவது, தயிர் சாதம் சாப்பிடுவது அல்லது மோர் சாதம் சாப்பிடுவது என்று சொல்வார்கள். 

திடப்பொருளைவிட திரவப்பொருளின் விகிதம் அதிகமானால் அதை சாப்பிடுவது என்று சொல்வதைவிட குடிப்பது , அருந்துவது , பருகுவது என்றே பொதுவாக சொல்வார்கள், ஒரு சில கலவைகளை -  ரசம், மோர், தயிர் போன்றவை தவிர.

வெறும் திரவ பொருளை உட்கொள்வதை யாரும் சாப்பிடுவது என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால் நம்ம ஊரில் , டீ  சாப்பிடலாமா , காபி  சாப்பிடலாமா என்று பலர் சொல்வதை கேட்டிருப்போம், நாமேகூட சொல்லி இருப்போம்.

இப்படி சொல்லும் வழக்கம் / பழக்கம் எப்படி வந்தது என்று யோசிக்கும்போது , ஒரு உண்மை(??) புலப்பட்டது.

கோட்டு,  சூட்டு, பூட்டு (பூட்ஸ்)  கிராப்பு போன்றவற்றை வெள்ளையனிடமிருந்து காப்பி  அடித்தது போல் டீ  குடிப்பதை டீ 
சாப்பிடுவது என்று ஈ அடிச்சான் காப்பிபோல சொல்ல பழகிக்கொண்டோமோ என தோன்றியது.

அதாவது இங்கே, இரவு உணவு என்பதை  டீ என்றும் சொல்கிறார்கள்.
இவர்கள் கத்தி, முள்கரண்டி இல்லாமல் டீ  சாப்பிட மாட்டார்கள். 

டீ  என்றல் தேநீர் அல்ல டின்னர் என்று பொருள்.

வேலையில்  இருந்து மாலை வீடு திரும்பியவுடன், சாப்பிடும் அன்றைய நாளின் முக்கிய உணவைத்தான்   இங்கே டீ  என்று அழைக்கின்றனர்.

ஒருவேளை நம்ம ஊரில் இவர்கள் இருந்தபோது மாலை உணவு சாப்பிட்டதை டீ  சாப்பிடுவது என சொன்னதை கேட்டு நம்ம ஆட்களும் குடிக்கும் டீயை சாப்பிடும் டீயாக சொல்லி பழகிக்கொண்டனரோ?

அப்படித்தான் இருக்கும்.

இங்கே வந்த புதிதில், என்னையும் வெள்ளைக்கார நண்பரொருவர் டீ  சாப்பிட வீட்டிற்கு அழைத்திருந்தார், நானும் டீ  தானே குடிக்க அழைக்கிறார் என போனவனுக்கு ஆச்சரியம்; டீயை தவிர மற்ற உணவுப்பொருட்களே பிரதானமாக இடம்பெற்றிருந்தது அவரது டைனிங் மேசையில், சாடைமாடையாக , அரசால்(?) புரசலாக(??) கேட்டு தெரிந்துகொண்டேன் டீ  என்றால்  மாலை உணவென்று.

சரி எது எப்படியோ, டீ  சாப்பிடலாம் வாரீ(ங்)களா?

நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.





10 கருத்துகள்:

  1. திரவத்தை சாப்பிடலாமா? திடத்தை குடிக்கலாமா எல்லாம் இருக்கட்டும்.

    சோம பணம் மற்றும் சுரா பானத்தை "போடலாமா" என்று அழைக்கின்றார்கள்.. அதை பற்றி தங்கள் கருத்து?

    பதிலளிநீக்கு
    பதில்கள்



    1. நண்பரே,



      வரலாற்று ஆய்வுகளும் அகழ்வாராய்வுகளும் இன்னும் அறுதி இட்டு உறுதியாய் கூற இயலாத இரண்டு பானங்களில் இந்த சோம மற்றும் சுறா பானங்கள் அடங்கும்.



      சோமம் என்பது ஒருவகை தானியம் , அதாவது "ஓமம்" போன்றது.



      அதனோடு சுக்கு , மிளகு ஏலக்காய், திப்பிலி, கருஞ்சிரகம்,இந்துப்பு,கடுக்காய், ஜாதிக்காய், நெல்லிக்காய் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை சேர்த்து,, தயாரிக்கப்படும் ஒருவகை பானமே இந்த சோமபணம். சோம(பான)த்தை அருந்துபவர்கள் "ஷேமத்தை" பெறுவார்.



      சுறா பானம் என்பது, கடல் வாழ் மீனினத்தில் உருவத்தில் பெரிய மீன்.



      இதன் எலும்புகளில் தேங்கி இருக்கும் எண்ணெய் போன்ற வஸ்த்துவை கலந்து மா பலா வாழை , வெட்டிவேர், நன்னாரி விதை பட்டை இலவங்கம், ஏலக்காய் நிலவேம்பு,ஆகாச கருடன், சித்த ரத்து, ஆடுதொடா ..போன்ற மூலிகைகளை சேர்த்து தாயுமாறிக்கப்படும் ஒரு அரு மருந்து பானம்.

      உடலுக்கு நல்லது ஆயுள் விருத்திக்கும் வழிவகை செய்யும்.



      சோமபானம்- வெஜிடேரியன்



      சுறா பானம் - நான் வெஜிடேரியன்.(மீன் இருப்பதால்)



      இனி யாரவது இவ்வகை பானம் அருந்த அழைத்தால் மேற்சொன்ன மூலிகை பொருட்கள் கலந்திருப்பதை உறுதி செய்துகொண்டு போய் வாருங்கள்.

      எப்படி நம்ம கண்டுபிடிப்பு?

      நீக்கு
    2. அட பாவி ..

      கோ.. இந்த விஷயம் தெரியாம நான் சோமா பானம் சுறா பானம் எல்லாம் கெட்ட வார்த்தைன்னு யோசிச்சின்னு ...

      ஐயோ ஐயோ..

      நீக்கு
    3. நண்பா,
      இவையெல்லாம் தெய்வீக வார்த்தைகள், தேவாமிர்தங்கள் என்று யார் சொன்னாலும் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.(மூலிகை) உடம்புக்கு நல்லது??.

      நீக்கு
  2. High Tea என்று கூட சொல்வதுண்டு! அதிலும் இப்படித்தான் சாப்பிடவும் நிறைய இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      English High Tea என்பதுவும் நடைமுறையில் இருந்த / இருக்கின்ற பெயர்தான் பதிவில் குறிப்பிட இருந்தேன் நீட்சியின் காரணத்தால் தவிர்த்தேன், நீங்கள் குறிப்பிட்டது குறித்து மகிழ்சி, நன்றிகள்.

      நீக்கு
  3. "தம்பி, கொயில்சாருக்கு ரெண்டு வாழக்காபஜி ஒரு டீ." உண்மையிலேயே அர்ப்புதமான பதிவு. தகவல்களுக்கு நன்றிகள் சார். படிக்க சுவாரசியமாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபெர்னாண்டோ,

      வருகைக்கும் மற்றும் இரன்டு வாழைக்காய் பஜ்ஜிக்கும் நன்றிகள்.

      ஃபெர்னாண்டோ,

      வருகைக்கும் டீ மற்றும் இரன்டு வாழைக்காய் பஜ்ஜிக்கும் நன்றிகள்.

      டீ கடை சைட் பிசினஸ் என்று சொல்லவே இல்ல?

      நீக்கு
  4. எப்படி இப்படி எல்லாம்.....
    யோசிக்குரீங்க சார்?

    ரசித்தேன் - பதிவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      ஏதோ நம்மால முடிஞ்சது.

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு