பின்பற்றுபவர்கள்

சனி, 27 ஜூன், 2020

தம்பிக்கு!!! - 3

அண்ணன்!!! 
தொடர்கிறது ..


முந்தைய பாகத்தை வாசிக்க… தம்பிக்கு!! -2


அவர் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த அந்த சமயத்தில் என் நண்பர்கள், என் பெற்றோர் அனைவரிடமும் ஆசிரியர் சொன்ன விவரங்களை சொல்லி என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன்.

இரண்டுவார விடுமுறை முடிந்து கல்லூரி மீண்டும் துவங்கியது.  முதல்நாள் அன்று என் வகுப்பிற்குக்கூட போகாமல் நேராக தமிழ்த்துறைக்கு சென்றேன் ஆனால் அவரை காணவில்லை.
வாகனம் நிறுத்துமிடம் சென்று அவரது வாகனம் இருக்கின்றதா என பார்த்தேன், வாகனமுமில்லை.

மீண்டும் தமிழ்த்துறைக்கு சென்று முனைவர் செல்லையா (துவக்கத்தில் என்னை கவியரங்கில் பங்குபெற செய்தாரே அவர்) அவர்களை பார்த்து வணங்கிவிட்டு, மெதுவாக கேட்டேன் ஐயாவை காணவில்லையே?


இரண்டு நாட்கள் கழித்து வருவதாக தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தாக சொன்னார்.


ஆவல் மிகுதியும் சோக மிகுதியுமாக  என் வகுப்பிற்கு சென்றேன்.


மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அவரை சந்தித்தேன்.


தங்கள் துறையை சார்ந்த ஆசிரியர்கள் எழுதிய இரண்டு நூல்களை எனக்கு தந்து படிக்க சொன்னார்.


அவை: பேராசிரியர் தாவீது அதிசய நாதன் எழுதிய திருகுமார சதகம், மற்றும் பேராசிரியர் பழனி அவர்கள் எழுதிய புள்ளி ராஜா.


புள்ளி ராஜா என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம் , புள்ளி வைத்து எழுதும் மெய்யெழுத்துக்களின்  சிறப்புப்பற்றிய படைப்பு அது.


மேற்கொண்டு ஏதும் பேசாமல் புத்தகங்களுடன் வந்துவிட்டேன்.


இப்படியாக அவ்வப்போது அவர் என்னிடம் இலக்கணங்கள் பற்றியும், வேறு சில புத்தகங்களையும் குறித்து பேசி வந்தார்.


இவை எல்லாமே எனக்கான பயிற்சியும் என்னை தயார் படுத்தும் காலமும் என்பதாக உணர்ந்தேன்.


ஏதேதோ காரணங்களால் புத்தக வேலை தொடங்கப்படவே இல்லை.


இப்படியே பல மாதங்கள் பல வருடங்கள் என உருண்டோடி போனதாலும் எனது கல்வி , தேர்வுகள் என்ற நெருக்கடியாலும்  அந்த புத்தக கனவை நான் மறந்தே போனேன்.


ஆனால் அவர்மட்டும் எப்போது பார்த்தாலும் எனக்கு சில புத்தகங்களை பரிசாக கொடுப்பதும் பிறகு அந்த புத்தகங்களை படித்தேனா என் கருத்து என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார்.


மேற்கொண்டு இரண்டாண்டுகள் முதுகலை முடித்து ஒரு பெரிய மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில்  பணியில் அமர்ந்தேன்.


ஒருநாள் மாலை வேலை முடித்து வெளியில் வரும்போது மருத்துவமனை வரவேற்பறையில் இவர் அமர்ந்திருந்ததை பார்த்து அவரிடம் சென்று வணங்கி  நலம் விசாரித்தேன்.


அவரும் என்னை வாழ்த்தி நலம் விசாரித்தபடி சொன்னார், என் மனைவியும் இங்குதான் பணிபுரிகிறார்கள், பார்த்ததில்லையா?


(மொத்தமாக சுமார்  பத்தாயிரம் ஊழியர்கள், அவர்களுள் மருத்துவர்கள் மட்டும் 1800 பேர்கள் , செவிலியர்கள் 2900 பேர்கள் இவர்களுள் நான் மருத்துவரான அவரது மனைவியை பார்ப்பது மிகவும் அபூர்வம்)


சரி என்று என்னை மருத்துவமனை  சிற்றுண்டி சாலைக்கு  அழைத்து சென்று தேநீர் வாங்கி கொடுத்தார் என்னை பணம் செலுத்த அனுமதிக்கவில்லை.


பிறகு என்ன? , திருமணம்தானே ? திருமணம் செய்யும்போது, அத்தை மகள், அக்காள் மகள், மாமன் மகள் , கிட்டத்து சொந்தம்  தூரத்து சொந்தம் என்று பெண் எடுக்காதே.


முடிந்தவரை  மலையாள  பெண்ணையோ, அல்லது ஆந்திரத்து பெண்ணையோஅல்லது வடநாட்டு பெண்ணையோ  மணந்துகொள். நமது உறவுகள் சாதி,  மதம் இனம் மொழி கடந்து விரிந்து பரவட்டும் .


குறைந்தது  மூன்று குழந்தைகளேனும் வீட்டில் இருக்கவேண்டும் . இதே வேலை நிரந்தரமென்று நிறுத்திக்கொள்ளாதே, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைத்தால் விட்டுவிடாதே.


திருமணத்திற்கு முன் உனக்கென சொந்தமாக ஒரு வீடு இருக்கவேண்டும்.


எந்த சூழலிலும் அப்பா அம்மாவை கைவிடக்கூடாது.


எந்த நாட்டுக்கு போனாலும் தேசப்பற்று  அவசியம், தாய் மொழியில்தான் பேசவேண்டும் என்றில்லை, அதே சமயத்தில் எந்த மொழியையும் தாழ்வாக நினைக்கக்கூடாது.


வீண் செலவுகள் கூடாது போன்ற அறிவுரைகளை கூறிவிட்டு என் மனைவி வேலை முடிந்து வரும் நேரம் அவர்களை அழைத்து செல்லவே இங்கே வந்தேன், மீண்டும் சந்திப்போம், take care என்று கூறி என் கைகளை குலுக்கிவிட்டு விடைபெற்று சென்றார்.


இப்படியாக சில சந்தர்ப்பங்களில் அவரை என்னுடைய பணி இடத்தில் சந்திப்பதுண்டு. ஓராண்டுக்கு பிறகு நான் வேறு நிறுவனத்திற்கு  சென்றுவிட்டேன் அதனால் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாமலே போனது.


சந்திரன் தோன்றும் வளரும் தேயும் மறையும் மீண்டும் தோன்றும் வளரும்… ஆனால்.. அவரை கடைசியாக சந்தித்த  ஆறு மாதங்கள் கழித்து   அவர் மறைந்துவிட்ட செய்தி கேட்டு அதிர்ந்துபோனேன்.


வாழ்க்கையில் நான் சந்தித்த சில வித்தியாசமான மனிதர்களுள் இவரை கண்டிப்பாக சொல்லலாம்.


புத்தகத்திற்காக மட்டுமல்ல உண்மையிலேயே அவர் எனக்கு ஒரு அண்ணனாகத்தான் இருந்தார், இந்த தம்பியும்  அவரை அப்படித்தான் சுவீகரித்திருந்தேன்.


பின்னாளில் பேராசிரியர் முனைவர் செல்லையா அவர்களின்  முன்னிலையில் அதே கல்லூரி விழா மண்டபத்தில் நடைபெற்ற எனது "நினைவலைகள்" கவிதை தொகுப்பு  நூல் வெளியீட்டு விழாவின் ஏற்புரையில் இவரை நான் நன்றியோடுமட்டுமல்ல கண்ணீரோடும் நினைவு கூர்ந்தேன்.


இந்த சந்தர்ப்பத்தில் அவர் இங்கு இல்லையே என வருத்தப்பட்டன்.
விழா முடிந்து மண்டபம் விட்டு வெளிவரும்போது இரவு எட்டை  கடந்து இருந்தது.


அந்த இரவு நேரத்திலும் பட்டபகல்போல எங்கும் வெளிச்சமாக இருந்தது.
வானத்தை நோக்கி பார்க்கிறேன்,  மேகமற்ற தெளிந்த வானம் அதில்  முழு சந்திரன் முகமலர்ந்து குளிர்சியாய் காய்ந்துக்கொண்டிருந்தது, அதன் ஒளி என் நெஞ்சில் இதமாய் பாய்ந்துகொண்டிருந்தது, அதை கண்ட என் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமும் கரைபுரண்டோடியது.


மானசீகமாக இந்த மாணவ தம்பியை  அந்த பேராசிரியர்  வானிலிருந்து வாழ்த்துவதாக எண்ணி உள்ளம் குளிர்ந்தேன். .


கரணம் அவர் பெயர்(ரும்) பேராசிரியர் முனைவர்  சந்திரன்.


மீண்டும் தோன்றுவாரா என் வானில் என்றேனும்?




நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ


 

28 கருத்துகள்:

  1. சாற்,

    எப்படியும் உங்கலுக்கு இருந்த ஆற்வ கோலாரில் டங்க் சிலிப் ஆர்வத்தில் புத்தகம் எழுதி இருப்பீர்கள் என்னி வாசித்து வந்தேன்.

    பேராசிரியர் முனைவர் சந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.




    ***

    2015 ஜூலை மாதம்தான் நினைக்கிரேன்.
    வேலூர் ஊரிஸ் கல்லூரியில்
    விசு சாரோட விசுவாசமின் சகவாசம் புத்தக வெளியிட்டின்போது எப்படியோ
    நீங்கள் எப்போதோ ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டதை கேள்வி பட்டேன் அதன் பெயர்தான் தெரியாமல் இருந்தேன்.
    அது நினைவலைகள்" கவிதை தொகுப்பு என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.

    amazon kindle ல கவிதை தொகுப்பை பப்லிஷ் செய்தால்

    எட்டுத்திக்கிலும் இருக்கும் உங்கள் வாசகர்கள் வாசிக்கலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ் ,

      ஆர்வக்கோளாறு, டங் ஸ்லிப் …...ம்ம்ம்…

      அடுத்து எட்டுத்திக்கும்… தம்பி ….இந்த (amazon kindle) கிண்டல் எல்லாம் நம்ம கிட்ட வேணாம் … புரிஞ்சதா?

      ஆமாம் மகேஷ் , பேராசிரியர் முனைவர் சந்திரன் மறைவு எனக்கு பேரிழப்பு/ பேரதிர்ச்சி .

      வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      நீக்கு
  2. முடிவு சுபமின்றி போனது மனதை வருத்தி விட்டது. அவரது ஆசிகள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே . சுகமாய் - சுபமாய் முடிந்திருக்கவேண்டியது இப்படி சோகமாய் முடிந்தது துரதிஷ்டம். அவரின் ஆசிகள் தொடரும் என்பதில் ஐயமில்லை.

      வருகைக்கு மிக்க நன்றிகள்

      நீக்கு
  3. பதில்கள்
    1. நவீன்,

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. இப்படிப்பட்ட மேலான ஆசிரியர்கள் அதிகம் இருக்கிறார்கள்
    பேராசிரியர் முனைவர் சந்திரன் மனதில் வைத்துப் போற்றுவதற்கும், வாழ்த்துவதற்கும் உரியவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு,

      ஆமாம், இவர் மனதில் வைத்து போற்றத்தக்கவரே.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. அந்த பேராசிரியர் உங்களுள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
    உங்கள் வழிகாட்டுதல் மூலம் பலருள் அவரை தொடர்ந்து வாழச் செய்யலாம் நமக்கு பின்னும்.
    அது தான் ஒவ்வொரு விழாவிலும் நாம் காணும் விளக்கு ஏற்றும் சம்பிரதாயத்தின் அர்த்தம். அவர் போந்ற வழிகாட்டிகள் அணைவருக்கும் அமைவதில்லை.
    தங்களின் நூல்கள் கிண்டிலில் உள்ளதா ஐய்யா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்,

      ஆம் அவரும் அவரைக்குறித்த சிந்தனையும் என்னுள் இருக்கும் என்றும். விழாக்களில் குத்துவிளக்கேற்றுவதன் நோக்கத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள். கிண்டிலில் ஏதும் இல்லை.

      அவரின் அறிவுரைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவித்தால் இன்னும் மகிழ்வேன்..

      வருகைக்கு மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  6. நெகிழவைத்த பதிவு. வாழ்த்துக்கள் சார். இதற்கு முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தங்களை நெகிழவைத்ததாக உணர்கிறேன். வருகைக்கும் மற்ற பதிவுகளை வாசிக்கப்போவதாக வாக்களித்தமைக்கும் மிக்க நன்றி அபிநயா.

      நீக்கு
  7. நல்லதொரு பகிர்வு. உங்கள் அண்ணன் சந்திரன் உங்களை மேலுலகிலிருந்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்.

    தொடரந்து சந்திப்போம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வெங்கட்,

      அப்படிப்பட்டவர்களின் ஆசிதான் எனக்கு எழுதும் ஆவலையும் அளிக்கின்றது என நம்புகிறேன் , ஆசிரியர் அண்ணனின் ஆசீர்வாதம் தொடரும் என நம்புகிறேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள், சந்திப்போம்.

      நீக்கு
  8. புள்ளி ராஜா என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம் ,//

    இது சிரிக்க வைத்தாலும் உங்கள் பதிவு இறுதியில் மனதைக் கனக்க வைத்த ஒன்று. அவர் என்றும் உங்கள் மனதில் நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். விண்ணிலிருந்தும் உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார் கோ.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஆமாம் கனத்துதான் போகிறது நம் இதயங்கள். என்றென்று நிலவாய் என் மனதில் ஒளிர்ந்துகொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்த பதிவையும் உங்கள் அத்தனைபேர்களின் பின்னூட்ட கருத்துக்களையும் அவருக்கு அர்ப்பனமாய் சமர்ப்பிக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  9. இவ்வாறாக அறிவுரைகள், அறவுரைகள் கூறுவோர் கிடைப்பது மிகவும் அரிதே. பல நிலைகளில், குறிப்பாக நான் தடம் மாறுகின்ற நிலை எழும்போது, சில முக்கிய நண்பர்கள் என்னை இவ்வாறாகப் பக்குவப்படுத்தியுள்ளனர். அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஐயா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்,

      வாழ்க்கையில் அறிவுரை கூறி அறவழி நடத்திச்செல்லும் ஆன்றோர்கள் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே வருவது வருத்தம் அளிக்கின்றது. தாங்கள் தடம்மாற இருந்த சமயங்களில் தங்களை நல்வழிப்படுத்திய நண்பர்களை நன்றியோடு நினைவுகூற இந்த பதிவு ஒரு தூண்டுதலாக இருந்தது எனக்கு மகிழ்ச்சியே.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  10. வழிகாட்டியின் நினைவலைகள் அருமை.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் கவிஞர்.நாகேந்திர பாரதி.

      நீக்கு
  11. 1. ஒரு மாணவனாக அவர்களின் சிக்கல் குறித்து எழுத திட்டமிட்ட நூல் ஏன் னின்றது என புரியவில்லை.
    2. நூல்களை கொடுத்து அறிவை விரிவு செய்ய சொன்னது, வேரு தேச பெண்ணை மணந்து உரவை பெருக்குதல், நாடு கடந்து வேலை செய்து அணுபவத்தை பெருக்குதல் என சொல்வது சிறந்த வழிகாட்டல்.
    அது உங்கள் பல் நோக்கு சிந்தனையை வளர்க்க அக்கரையுடன் சிறந்த ஒரு வழிகாட்டலை செய்துள்ளார்.
    3. இவற்றை செய்துகொண்டே பெற்றோரை கைவிடாதே என சொல்வது எவ்வளவு சாத்தியம் என புரியவில்லை ஐய்யா.
    இப்படி எனக்கும் சிலவற்றின் முழு அர்த்தம் விளங்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன்,

      முதலாவதாக என் வேண்டுகோளுக்கிணங்க தங்கள் கருத்துக்களோடு மீண்டும் வருகைதந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் நேரிடையான , நியாயமான பின்னூட்டம் உண்மையிலேயே உளமார பாராட்ட தக்கது.

      நூல் வெளிவராததற்கான காரணம் இன்றுவரை எனக்கும் தெரியாது.

      நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்……

      திரைகடலோடியும் திரவியம் தேடு எனும் மூதுரையின் அடிப்படையில் சொன்ன கருத்தாக இருக்கலாம் வெளி நாடு செல்ல வாய்ப்பு வந்தால் பயன்படுத்தும்படி அறிவுரை கூறியது.

      ஏற்றம் கொடுத்த ஏணியையும் ., அறியாமை, வறுமை எனும் காட்டாற்றை கடக்க உதவிய தோணியையும் மறவாதே என்பதுபோல், ஆல மரத்தின் விழுத்தணைத்தும் வளர்ந்து பலம் பெற்றபின் அடி மரத்தை தாங்குவதுபோல் நம்மை ஆளாக்கி கரை சேர்த்த பெற்றோரை போற்றி கனம் பண்ண வேண்டும், நமக்கென்று மனைவி பிள்ளைகள் குடும்பம் என ஏற்பட்டபிறகும் யாரால் நாம் எனும் நன்றிமறவா குணம் வேண்டும்.

      சுமைகளை ஏந்திக்கொண்டு சுகங்களை நமக்கு தந்த முன்னறி தெய்வங்களை மகிழ்சியுடனும் சந்தோஷத்துடனும் வைத்து பாதுகாக்க வேண்டும் எனும் சிந்தையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் அப்படி சொல்லி இருப்பார் என நினைக்கின்றேன். வெளி நாடு சென்றுவிடுவதாலேயே பெற்றோரை நாம் கைவிட்டுவிடுவதாக நினைப்பது சரி அல்ல என்பது என் கருத்து.

      நன்றி நவீன் மீண்டும் சந்திப்போம்.

      நீக்கு
    2. சார்,

      அது நவீன் கிடையாது அரவிந்த்.

      இருவரும் எனது நண்பர்கள்.

      நீக்கு

    3. நவீன், please accept my apology for having incorrectly addressed my reply to.

      Thanks Mahesh for notifying my mistake. All your friends are stars. what about you?...."super star"

      நீக்கு
    4. ஐய்யோ சார்

      மீண்டும் பெயர் குழப்பம்....

      பதிவுக்கு comment செய்தது அரவிந்த்...

      நீங்கள் பதில் comment எழுதும்போது அரவிந்த் என எழுதுவதர்க்கு பதிலாக
      நவீன் என குரிப்பிட்டிருந்தீர்கள்

      அதர்க்குதான் நான் மேலே

      அது நவீன் கிடையாது அரவிந்த்.
      இருவரும் எனது நண்பர்கள் என சொல்லி இருந்தேன்...


      இன்றைக்கு வெளியிட்ட
      வடை! - விடை!! - கண்ணதாசன்??
      பதிவில் அரவிந்த் வந்து comment செய்திருக்கார்.
      அதர்க்கு பதில் எழுதியதில்
      அரவிந்த் பதிலாக அங்கும் நவீன் என எழுதி இருந்தீர்கள்...


      ஸ்ஸ்ஸப்ப்ப்பாஆஆ

      நா சொன்னது புரிஞ்சுதானு தெரியல...

      சப்பாத்தியும் சிக்கன் குழம்பும் கண்ண சொக்க வைக்குது...

      தூங்க போரேன் சார்
      குட் நைட்:)

      நீக்கு
    5. நவீன் உம் அரவிந்த் உம் அதிக எடையுள்ள உருவம் ஒத்த நகல் நன்பர்களே. எனவே என்ன பெயர் உபையோகித்தாலும் பரவாயில்லை ஐய்யா.

      நீக்கு
  12. அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JCM, வருகைக்கு மிக்க நன்றிகள். பதிவுகளை வாசிக்க துவங்கியது மகிழ்ச்சி அளிக்கின்றது.Hope you like and enjoy.

      நீக்கு