பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 23 ஜூன், 2020

அது வேற! இது வேர்ர்ர்ற!!

Brilliant!!
நண்பர்களே,


கலிகாலம் என்றழைக்கப்படும் இந்த அதிநவீன யுகத்தில் நாட்டில் உலவும் புதிய வார்த்தைகளின் வரவு எங்குபோய் முடியுமோ என்று அச்சத்துடன் எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றது.


மதிப்பிற்குரிய நம் ஐயா முனைவர்.ஜம்புலிங்கம் அவர்களோ, அல்லது மூத்தபதிவர்கள் திரு. துளசிதரன், திருமதி கீதா , மற்றும் எழுத்துலகில் பல தலைமுறையினரின் வரலாற்றை எடுத்தியம்பும் கரந்தை திரு ஜெயக்குமார் போன்றோரும் தங்கள் பள்ளி கல்லூரி நாட்களில் இது போன்ற வார்த்தைகளை கேட்டிருப்பார்களா என்பது சந்தேகத்திற்கிடமின்றி சந்தேகமே.

இந்த வரிசையில் எத்தனையோ சொற்களும் சொற்றொடர்களும்
இருந்தாலும் , இன்றைக்கு இப்பதிவின் பார்வை ஒரு குறிப்பிட்ட சொற்றொடரின்பால் கவர்ந்திழுக்கப்படுகிறது.

நம்ம ஊரில் பயன்படுத்தப்படும் இந்த ஆங்கிலமும் தமிழும் கலந்த வார்த்தை கோர்வை  நம்ம ஊரில் எந்த கருத்தை  பிரதி பலிக்கின்றதோ அதே கருத்திற்காக இங்கேயும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் ஆச்சரியம்.

ஒரு செயலோ , பொருளோ  அல்லது உணவோ நன்றாக இருப்பதை பாராட்டி   ஆங்கிலேயர்கள்  very good , great ,amazing ,fantastic , unbelievable, incredible, extraordinary, remarkable, outstanding, Exceptional ,Excellent ,Marvellous Superb , First rate , First-class , wonderful , splendid, nailed , போன்ற உயர்வு நவிற்சி வார்த்தைகளை  சொல்வதுண்டு.

இதில் brilliant என்ற வார்த்தையை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவது தெரியாமல், வந்த புதிதில் நான் செய்த வேலையை மேலாளர் பார்த்து,   மற்ற எல்லா(ஆங்கிலேய) ஊழியர்களின் மத்தியில்  என்னை  "brilliant" என்று சொன்னதை பாராட்டாக நினைத்து, கல்லூரியில் Best Student award வாங்கிய நாள் அன்று பெற்ற அதே மகிழ்ச்சியுடனும்   ஆனந்த கண்ணீரோடும் கடல் கடந்துவந்தும் நம் இந்திய திருநாட்டிற்கு புகழ் சேர்த்துவிட்டோம் என     பெருமைபட்டுக்கொண்டேன்.

பிறகு போகப்போக  இது ஒரு சம்பிரதாய வார்த்தையென்றும் இதற்கும் நாம் நினைக்கும் பொருளுக்கும் ஏதொரு சம்பந்தமும் இல்லை எனவும் இவர்கள் எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தையை  அனிச்சையாக சொல்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன் என்பது வேறு விஷயம்.
 
இப்படி உயர்வு நவிற்சிக்காக நம்ம ஊரில்,நல்லது,பாராட்டத்தக்கது,சிறப்பு… சிறந்தது, உயர்வு, இனிமை ,மேன்மை  போன்ற  சொற்களை பயன்படுத்துவார்கள். 

இப்படியாக இருந்த தமிழ் வார்த்தைகள் நாளடைவில்  மறைந்து, பாராட்டு வார்த்தைகளாக, " பின்னிட்டீங்க", "கொன்னுட்டீங்க", "கலக்கிட்டீங்க",மெர்சல்  என்பன வழக்கத்திற்கு வந்து புழங்க ஆரம்பித்து இப்போது ஆங்கிலமும் தமிழும் கலந்த புதியதொரு சொற்றொடர், நம் தமிழக  அவனியிலே பவனிவர  ஆரம்பித்திருக்கிறது.

கடந்த வாரம் இங்கே,(இங்கிலாந்தில்)தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஆங்கில பெண் சில வீட்டு உபயோக பொருட்களை அறிமுகம் செய்து வைக்கும்போது பயன்படுத்திய வார்த்தைகளை கேட்டு , இது அப்படியே நம்ம ஊருக்கு சொந்தமானதாக இருக்கின்றதே என நினைத்து அதிர்ந்தேன். இப்போ இங்கேயும் வந்துவிட்டதா? அல்லது இங்கிருந்து அங்கே சென்றதா?

சரி அந்த பெண் சொன்ன வார்த்தை என்ன? அது எப்படி நம்ம ஊரிலும் சொல்லப்படுகிறது?

இந்த பெண்ணாவது சாதாரணமாக எந்த மேலெழுத்தமும் இன்றி நுனி நாக்கில் சிரமமின்றி உச்சரித்த அந்த வார்த்தையினை நம்ம ஊர் மக்கள், ஆங்கிலமும் தமிழும் கலந்து நம்ம ஊர்   பாணியில் அதற்கொரு அழுத்தம் கொடுத்து , நாக்கின் நுனி தேயும்படி  உச்சரிக்கும் போது , அது வேர்ர்ர்ர்ற…..லெவல் .

சரி பதிவு முழுவதும் ஏதோ புதிய வார்த்தை நம்ம ஊரில் உலவுவதாக சொன்னீர்களே  அது என்ன வார்த்தைகள்  இன்னும் சொல்ல்ல்ல்... லவே இல்லையே?

அதான் சொன்னேனே,  "அது வேர்ர்ர்ர்ற…..லெவல்" என்று. 

அப்போ  அந்த பெண் சொன்ன ஆங்கில வார்த்தைகள் ?

அந்த பெண் ஒரு மினி பீட்ஸா எந்திரத்தின் சிறப்பை சொல்லும்போது , இதில் செய்யப்படும் பீட்ஸாவின் ருசி, " Different  Level" என்றார், இதன் அர்த்தமும் நம்ம ஊர் வார்த்தைகளின் அர்த்தமும் 100% ஒன்றாக இருந்தாலும் நாம சொல்லும்போது அது வேற லெவெல்தான்.

ஒருபதிவையேனும் வேற லெவலில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு  இந்த  வேர்ர்ர்ர்ற…..லெவல் கைகொடுத்தது, brilliant !!!!??

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.

37 கருத்துகள்:

  1. brilliant கோ, உங்கள் எழுத்து நடை வேற லெவல் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள். ஆமாம் இது எந்த ஊரு brilliant ?

      கோ.

      நீக்கு
    2. அச்சோ விசு சார். நான் நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்களே. நான் என்ன சொல்றது?சரி.அவர் எழுத்துநடையே different level.

      நீக்கு
    3. வருகைக்கு மிக்க நன்றி அபி. நீங்கள் சொல்ல நினைத்தது எப்படி விசு அவர்களுக்கு தெரிந்தது. கொஞ்சம் உஷாராக இருங்கள் - data protection அவசியம் . அவர் சொன்னதையே சொல்லாமல் வேறுவகையில் சொன்ன உங்கள் பின்னூட்டம் different லெவல் தான்.

      நீக்கு
  2. நல்ல அலசல் நண்பரே..
    அது போல எதற்கெடுத்தாலும் "சான்சே இல்லே" என்று சொல்கிறார்கள் என்னமோ நம்ம இவங்கள்ட்ட வில்லன் கேரக்டரை எனக்கு தாங்க என்று கேட்டது மாதிரி.

    பதிவு ப்ரிலியன்ட் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள். வில்லன் பாத்திரத்திற்கு உங்களைத்தவிர…. சான்ஸே இல்லை, ?

      கோ.

      நீக்கு
  3. சார்,

    வர வர நீங்கலும் வேற லெவல்ல யோசிச்சு பதிவு போடுரீங்க:)))


    பின்னிட்டீங்க", "கொன்னுட்டீங்க", "கலக்கிட்டீங்க",மெர்சல்///
    ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி, திருப்பதி மகேஷ் என்றாலே அவர் வேர்ர்ர்ற லெவல் என்று எல்லோருக்கும் தெரியும்.

      நீக்கு
  4. தலைமுறை இடைவெளி சார்.நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன்,
      சரியாக சொன்னீர்கள் இன்னும் வரப்போகிற தலைமுறையினர் என்னென்ன பதங்களை அறிமுகம் செய்வார்களோ?Exceptionally we have to go with the flow, தமிழில் இதை "ஊரோடு ஒத்துப்போ" என மொழி பெயர்க்கலாமோ? .வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நன்கு கவனித்து ரசனையாக எழுதியுள்ளீர்கள். குறிப்பிட்ட ஒரு சொல்லால் ஆன வாழ்த்தினை தொடர்ந்து பெற்ற அனுபவம் இல்லை.
    1980களில் பணியில் சேர்ந்த ஆரம்ப காலகட்டத்திலும் அதற்கு முன்பும் நான் பெற்ற ஒரு சிறு அனுபவம். நான் தட்டச்சு நிறுவனத்தில் தனியாகத் தட்டச்சிடும்போதோ, அலுவலகத்தில் நான் மட்டுமே தட்டச்சிடும்போதோ உள்ளே வரும் பல நண்பர்கள் (கணினி வருவதற்கு முன்பாக) rhythmtic touch என்றவுடனே நீங்களாகத்தான் இருக்கும் என நினைத்தேன், நீங்களேதான். எப்படி இவ்வாறாகத் தட்டச்சிட முடிகிறது என்பார்கள். எங்கள் தட்டச்சு ஆசிரியரும் அவ்வாறு கூறியதுண்டு. அந்நாளை நினைவுபடுத்தின இப்பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

      தங்களின் தட்டச்சுப்பாணியை மற்றவர்கள் பாராட்டியதாய் நினைவுபடுத்தும்வண்ணம் இந்த பதிவு உங்கள் ஞாபக பதிவினை touch செய்தது குறித்து மகிழ்சி. தங்களின் ஒவ்வொரு பதிவுமே எல்லோர் மனதிலும் "rhythmic" காக ரீங்காரம் இட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. தட்டெழுத்து மட்டுமல்லாது, புதினம் மற்றும் பதிவெழுத்துக்களிலும் , பின்னூட்டங்களிலும் ஒரு நேர்த்தியை கையாள்பராய் இருக்கின்றீர்கள்.

      "சொற்றொடர்" என்று நான் key boardல் தட்(டச்சு)டும்போதெல்லாம் உங்கள் ஞாபகம் வரும் , பிழை திருத்தம் செய்தீர்கள்.

      வருகைக்கும் தங்கள் அனுபவ - ஞாபக பகிர்விற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  6. எங்கள் வங்கி வட்டார மேலாளர் ஒருவர், தனக்கு கடன் வசூலிக்கும் துறை குறித்து தெரியாது என்பதை மறைக்க எதை எடுத்தாலும் "fantastic" என்பார்.
    இதுபோல வெவ்வேறு வார்த்தைகளை சூழ்நிலைக்கு ஏர்ப்ப வெவ்வேறு பொருள்களில் உபையோகிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த்,

      ஓ.... இந்த வார்த்தைகளில் இப்படி ஒரு அனுகூலம் இருக்கின்றதா? your regional manager is really brilliant. அதேபோல வெவ்வேறு வார்த்தைகளை சூழ்நிலைக்கேற்ப உபயோகிக்கும் உங்களின் சாதுர்யம் வேற லெவல் தான். கடன்தொகை வசூலிக்க முடியாதபோது எந்த வார்த்தையை சொல்லுவீர்கள், "சான்ஸே இல்லை" என்றா?

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
    2. சான்ஸ்சே இல்லை னு நாங்க இனி சொல்ல அவசியம் இல்லை. கஸ்டமரே கோர்ட் போயி ஸ்டே வாங்கிருவார். அந்த ஸ்டே காப்பியை எங்கள் மேல் அலுவலகத்திர்க்கு கொடுத்தா போதும்.

      நீக்கு
    3. அரவிந்த்,

      ஓ.... இந்த வார்த்தைகளில் இப்படி ஒரு அனுகூலம் இருக்கின்றதா? your manager is really brilliant.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
    4. அரவிந்த்,

      உங்கள் பதிலைபார்க்கும் உங்கள் கஸ்டமர்களுக்கு நீங்களே ஒரு மாதிரியை காட்டிவிட்டீர்கள், மீள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  7. உங்கள் பதிவும் வேற லெவல்! பாராட்டுகள். :)

    பதிலளிநீக்கு
  8. வெங்கட்,

    உங்கள் பதிவுகள் மட்டும் என்ன , அவைகள் உண்மையிலேயே வேர்ர்ர்ர்ற லெவெல் தான்.

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. பதிவை ரசித்தோம். கண்டிப்பாக எனக்கு நீங்கள் சொல்லியிருக்கும் கொன்னுட்டீங்க, பின்னிட்டீங்க எல்லாம் வருவதே இல்லை! தமிழ் சினிமாக்களில், சில காணொளிகளில் தான் வேர்ர்ர்ர லெவல் கேட்டிருக்கிறேன் ஒரு வேளை, தமிழ்நாட்டை விட்டு வந்து பல வருடங்கள் கேரளத்தில்வசிப்பதால் இருக்கலாம்.

    உங்களுக்குப் பதிவு எழுத உதவிய இந்த வேர்ர்ர்ர்ர லெவல் சொல்லிற்கு நன்றிகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய (திரு துளசி)நண்பர்களே,

      கொல்லுவது (கொன்னுட்டீங்க) சரி உங்களுக்கு வராது… ஒப்புக்கொள்கிறேன், ஆசிரியரான உங்களுக்கு பின்னுவது எப்படி வராமல் போனது. தமிழ் நாட்டு ஆசிரியர்கள் , குறிப்பாக நன் படித்த பாதிரிமார் பள்ளிவாசத்தில் பல முறை பின்னப்படுவதை பார்த்திருக்கிறேன்.

      பதிவின் நாயகமான சொல்லுக்கே நன்றிசொல்லும் உங்கள் பாங்கு , வேற லெவெல் தான்..

      நீக்கு
  10. எங்கள் பெயரைச் சொல்லியிருப்பது ஏனோ! ஜம்புலிங்கம் ஐயா, கரந்தையார் எல்லாரும் தகுதியானவர்கள் என்பது எங்கள் தாழ்மையான அபிப்ராயம்.

    துளசிதரன், கீதா

    எங்கள் பெயரை எல்லாம் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் லெவலோடு சேர்த்துச் சொன்னது கூச்சமாகிவிட்டது. அவர் வேர்ர்ர்ர்ர்ர லெவல்!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      ஏன் உங்கள் பெயர்களை சேர்க்கக்கூடாது? தாழ்மைதானே முதல்தகுதி. என்னைப்போன்ற எத்தனையோ பதிவர்களை புடம்போட்டு வெளிச்சம் சேர்த்து ஏழுகண்டங்களுக்கு அறிமுகம் செய்தும் தலை நிமிராமல் தாழ்த்துகின்ற உங்கள் தலைகளுக்கு என் தலை தாழ்ந்த நன்றிசொல்லும் தருணமே இது. முனைவர் ஜம்புலிங்கம் கட்டுமரத்தை சுமந்து செல்லும் ஒரு சாகரம் என்றால் நீங்கள் அந்த கட்டுமரங்களுக்கு வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்கங்கள் என்றால் அது மிகை அல்ல. கரந்தை திரு ஜெயக்குமார் ஒரு மௌன(குரு ) வழிகாட்டி. you all certainly deserve a special mention. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  11. கோ, பாருங்க நான் லேட்டா வந்தா இதுதான்...நான் சொல்ல நினைச்சத விசுவும், மகேஷும் சொல்லிட்டாங்க!!! அதே அதே!

    நான் நிறைய சொல்லுவேன் பாராட்ட....அடி பின்னி பெடலெடுத்துட்டீங்க!!!!! செம செம இதுவும்.... எங்க வீட்டு இளசுகளிடம் பேசி பேசி வந்துவிட்டது. ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய அம்மையீர் ,

      விசுவும் மகேஷும் முந்திக்கொண்டதாக விசும்புவது கேட்கிறது. நம்ம வீட்டு வால்கதவுதான் எந்நேரமும் திறந்திருக்கின்றதே. பரவாயில்லை நீங்கள் லேட்டாக வந்தாலும் பரவாயில்லை, நீங்கள் வருவதே எனது பாக்கியம்.

      பின்னி பெடல் எடுத்திட்டீர்கள் என நீங்கள் சொல்வது செம.(அடுத்தப்பதிவின் தலைப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்குமோ?)

      நீக்கு
  12. பணக்காரனாக ஐடியா கொடுக்குறேன்னு பணம் வசூலித்தேப் பணக்காரனா ஆனமாதிரி, வேற லெவல் பதிவுப்போட்டே வேற லெவலாகிட்டீங்க சார். உங்க சிந்தனையே வேற லெவல்தான். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அபி.

      வல்லவனுக்கு fullம் சாரி(கில்லர்ஜி ஞாபகம்) புல்லும் ….ஆயுதம் என்பார்களே அதுபோலதானோ என்னவோ? என்னை சொல்லவில்லை பொதுவாக சொல்கிறேன், நமக்கு இந்த பேரு புகழ் ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் , மாலை மருவாதி(!!) எல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது. ஏதோ நீங்க பெரியவங்க பாராட்டும்போது அதை வேண்டாம் என சொல்வது முறையல்ல எனவே ஏற்கிறேன் உங்கள் பாராட்டை.

      நீக்கு
  13. இது வேர்ர்ர்ர்ற லெவல் மட்டுமல்ல. அதுக்கும் மேல..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தில்,

      நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி . வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. கரந்தையார் அவர்களுக்கு
      நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
      நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி . வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  15. எனக்கும் இது வேர்ர்ர் லெவல்ன்னு தெரியுது அய்யா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வருகைக்கு மிக்க நன்றிகள் வலிப்போக்கரே.

      நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும்.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி நாகேந்திரபாரதி .நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  17. உண்மையிலேயே வேறலெவல்தான் சார். இப்போதெல்லாம் அதிகம் புழங்கும் ஆங்கில வார்த்தையாக AWESOME! ஆகிவிட்டது. சுவாரசியமாந பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபெர்ணாண்டோ , எங்கே ஆள காணோம்?, உங்கள் பின்னூட்டம் Awesome!!. வருகைக்கு மிக்க நன்றிகள்

      நீக்கு