பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜூலை, 2020

எலக்ட்ரிக் ஷாக்!!!

மறைந்திருந்து தாக்கும்  மர்மம்.
நண்பர்களே,

மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற வல்லுநர்களையே நியமித்து பழுதுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் செய்து  விபரீதமானால் …. யாருக்கு நாட்டம்?



கடந்த  திங்கள் அன்று  இரவு எட்டு மணிக்கு  எனது வீட்டின் தரை  தளத்திலுள்ள விளக்குகள் மினுக் மினுக் என்று எரிந்து  மூர்ச்சையாகி  பின்னர் தமது மூச்சை நிறுத்திக்கொண்டன.




அதே சமயத்தில் socketகள்  எல்லாம் ஒழுங்காக வேலை செய்தன, அதன் மூலம்  டேபிள் விளக்குகள், பெடஸ்டல் விளக்குகள் எல்லாம் வேலை செய்துகொண்டு இருந்ததாலும் முதல் தளத்தில் எல்லா விளக்குகளும் வேலை செய்ததாலும் பெரிய பாதிப்பு இல்லை.



எனினும்   மின்சாரம் சப்பளை செய்யும் நிறுவனத்திற்கு அவசரம் என்ற தகவல் சொன்னேன்.

இரவு ஒன்பது மணிக்கு வந்த electrician   இரவு பதினோரு மணிவரை வேலை செய்து வெளியில் இருந்து வரும் மின்சாரம் சரியாக வீட்டு இணைப்புகளுக்கு செல்கின்றனவா என ஆராய்ந்து , அவர்களின் சப்ளையில் எந்த பழுதும் இல்லை,மேற்கொண்டு வீட்டு ஒயரிங்கில் ஏதேனும் பழுது இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.

நீங்கள் உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு கேட்டு பாருங்கள்  இல்லை என்றால் ஒரு தனியார் எலெக்ட்ரிசியனை அழைத்து சரி செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார்.
 
அன்றிரவே காப்பீட்டு நிறுவனத்திற்கு தொடர்புகொண்டு விவரித்தேன், அடுத்த நாள் காலை  எட்டு மணிக்கு  ஒரு எலெக்ரிசினை அனுப்புகிறோம் என்று சொன்னார்கள். காப்பீட்டு  கழகத்திற்கும் சில எலக்ட்ரிகல் நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்கள் இருக்கும்.

அதன்படி வந்த electrician சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மெயின் போர்டில் இருந்த சுவிட்ச் பாக்சை பிரித்து இணைப்புகளை சரி பார்த்து சரி செய்துவிட்டு எல்லா விளக்குகளையும் போட்டு காண்பித்தார்.

மகிழ்சி வெளிச்சம் என் முகத்திலும் அகத்திலும்.

ஆனால் அந்த வெள்ளம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

அன்று இரவு சுமார் ஏழு மணி அளவில் வேதாளம் முருங்கை  மரம் ஏறியது.

மீண்டும் அதே மினுக் மினுக், அதே மூர்ச்சை.

திரும்பவும் காப்பீட்டு நிறுவனத்திற்கு தொடர்புகொண்டபோது அடுத்தநாள் வேரோரு elecrician வந்து, நேற்று வந்தவர் செய்த அதே பரிசோதனைகளை செய்துவிட்டு , எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் ஏனோ இந்த பிரச்சனை தொடர்கிறது.

சரி உங்கள் ஜங்க்ஷன்  பாக்ஸ் எங்கே இருக்கின்றது?

அப்படீன்னா?

வீட்டிற்கு உள்ள வரும் மின்சாரத்தை , தரை தள  விளக்குகள் தரைதள socketகள் , மேல் தள விளக்குகள் மேல்தள socketகள், தோட்டத்து விளக்குகள் , ஷெட் டிலிருக்கும் விளக்குகள்  , socketகள்,  வீட்டு முகப்பு விளக்குகள்...போன்றவற்றுக்கு பிரித்து அனுப்பும் ஒயர்களை இணைக்கும் ஒரு பெட்டி  என்றார்.

அதெங்கே இருக்கிறது எனக்கு தெரியாது, நீங்கள் கண்டுபிடிக்க முடியாதா?

அவை வெளியில் இருந்தால் கண்டுபிடித்துவிடலாம், ஆனால் அது வேறு எங்கேயோ மறைந்திருக்கிறது. ஒருவேளை உங்கள் மேல்தளத்தின் நடை பகுதியின் கீழ் இருக்கும் மர  பலகைக்கு  கீழே இருக்க கூடும்.

சரி அங்கே பாருங்கள்.

உங்கள் காப்பீடு அதற்கு போதுமானதாக இல்லை. வேண்டுமென்றால் எங்கள் நிறுவனத்தின் மூலம் செய்து தரமுடியும் அதற்கு நீங்கள் பணம் செலுத்தவேண்டும்.

 அப்படி என்ன வேலை அது?

முதலாவது மேல் தளத்தின் நடை பாதையில் இருக்கும் கார்பெட்டை எடுக்க வேண்டும் பிறகு அதனடியில் உள்ள அண்டர்லேவை பிரித்தெடுக்க வேண்டும். பின் அதன் அடியில் உள்ள   மர  பலகைகளை பிரித்தெடுக்கவேண்டும், அங்கே  ஜங்க்ஷன் பாக்ஸ் இருக்கின்றதா என பார்க்க வேண்டும் , அப்படி அங்கே இருந்தால் அதின் இணைப்புகள் சரியாய் இருக்கின்றனவா என பார்க்க வேண்டும். பழுதிருந்தால் அதை நீக்கி மீண்டும், பழையபடி மர  பலகைகள்,அண்டர்லே,கார்பெட்  போன்றவற்றை  ஒழுங்கு செய்து  தருவோம் என்றார்.

நாளைக்கு எங்கள் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஒரு quotation வரும் அதை பார்த்துவிட்டு தேவையானால் சொல்லுங்கள் என்றார்.

எம்புட்டு?

அவர் உடனே அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசிவிட்டு 

வரியோடு  சேர்த்து ஒரு தொகை சொன்னார்.

 சரி , நீங்கள் சொல்வதற்கு உடன் படுகிறேன், உடனே செய்ய முடியுமா? 

இல்லை அடுத்தவாரம் வியாழன் அன்றுதான் வரமுடியும் , ஏற்கனவே ஒப்புகொண்ட வேலைகள் இருக்கின்றனவே.

சரி நமக்கு வேறு விளக்குகள் இருப்பதால் ஒன்றும் அவசரமில்லை பரவாயில்லை உங்கள் திட்டப்படி வாருங்கள் என கூறி அவரை வழி அனுப்பினேன்.

ஆனால் அவரது நிறுவனத்தில் இருந்து இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு சொன்னது இன்றே  சுமார்  மதியம் பனிரெண்டு மணிக்கு   நேற்று வந்த என்ஜினியரே  வருவார் என்று.

அதன்படி வந்தவர், மீண்டும் எல்லா சுவிட்ச் களையும்  ceiling விளக்குகளை கழற்றி சரி பார்த்துவிட்டு , மேல் தளம் சென்று தரை விரிப்புகளை களைந்து அதனடியில் இருந்த பலகைகளை கவனத்தோடு கழற்றிவிட்டு அதனடியில் இருந்த தண்ணீர் குழாய்கள், gas குழாய்கள், மின்சார ஒயர்களை நிதானமாக ஒவொன்றாக மிக மிக நிதானத்தோடும் கவனத்தோடும் ஆராய்ந்து பார்த்தவர், என்னை மேலே வரும்படி அழைத்தார்.

அங்கே  மூடியுடன் இருந்த ஒரு வட்ட வடிவிலான ஒரு பிலாஸ்டிக் பெட்டியை காண்பித்து இது தான் ஜங்க்ஷன் பெட்டி  , இதுபோல இன்னும் சில ஆங்காங்கே இருக்கின்றன என்று சொல்லி அவற்றையும் காண்பித்தார்.

பின்னர் ஓவொரு பாக்ஸ்சாக பிரித்து அதிலுள்ள ஒயர்களின் இணைப்பு சரியாக இருக்கின்றனவா என சோதித்துக்கொண்டே வரும்போது ஒரு ஜங்க்ஷன் பாக்சில் இருந்த ஒரு ஒயர் கொஞ்சம் இளகி இருந்ததையும் அதிலிருந்து ஒயர்கள் உரசி  எழுப்பும் கரகர சத்தைத்தையும் என்னிடம் விளக்கி சொன்னார்.

ஒருவேளை இதுதான் பிரச்னைக்கு காரணமா இருக்கும் என கூறி அந்த ஒயர்கள் நேர்த்தியாக இணைத்து முறுக்கிவிட்டு, மீண்டும் தரை தளத்திலுள்ள அனைத்து விளக்குகளும் சரியாக வேலை செய்கின்றனவா  என உறுதி செய்த பின்னர் மீண்டும் அந்த மர பலகைகளை நேர்த்தியாக அடுக்கி ஆணிகள் கொண்டு ஸ்திரப்படுத்திவிட்டு அதன் மீது ஏற்கனவே இருந்ததுபோல அண்டெர்லேவையும் கார்பெட்டையும் இட்டு வேலையை முடித்தார்.

மறைந்திருந்து தாக்கிய மர்மம் விலகியது.

மொத்தமாக அவர் இன்று செய்த வேலை நேரம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவே.

பின்னர் அவரது நிறுவனத்தை தொடர்புகொண்டு அவர்கள் ஏற்கனவே சொன்ன பணத்தை  தொலைபேசி வாயிலாக விவரங்கள் சொல்லி செலுத்திவிட்டு, அவரிடம்  தேநீர்  தயாரிக்கிறேன் அருந்திவிட்டு செல்லுங்கள்  என சொல்ல, இன்னும் மூன்று இடங்களில் வேலை  இருக்கின்றது ,வேண்டாம்  தண்ணீர் மட்டும் கொடுங்கள் என அவர் கொண்டுவந்த பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு சென்றுவிட்டார்.

இன்று எங்கள் வீடு முழுவதும் விளக்குகள்.

ஆமாம் அந்த ஒருமணிநேர  வேலைக்கு கொடுத்த  தொகை எவ்வளவு? 

அதை  கேட்டால் ஷாக் அடிக்கும் பரவாயில்லையா?

எதிர்பாராத இந்த வேலைக்கு செலுத்தப்பட்ட தொகை…..

நம்ம ஊர் கணக்குப்படி  25,000.00 ரூபாய்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்
 
கோ.
 

10 கருத்துகள்:

  1. சின்ன பிரச்சனை தான் என்றாலும் அதை நேராக்குவது தான் சரி. பணம் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும்! அதிலும் நம் ஊர் பணத்தில் கணக்குப் பார்த்தால் அதிகமாகவே தோன்றும் இல்லையா.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      நீங்கள் சொல்வதுபோல்,சின்ன பிரச்சனைதான் என்று நினைத்து விட்டுவிட்டால் அவை பெரிய ஆபத்தாகக்கூட முடியும்.

      எங்கள் வீட்டில் ஏற்பட்ட அந்த லூஸ்??!! இணைப்பு , மின் கசிவை ஏற்படுத்தி அங்கே ஒருவேளை தூசு சேர்ந்திருந்தால் அது பெரிய தீ விபத்தாக கூட மாற வாய்ப்புள்ளதாக அந்த எலெக்ட்ரிசியன் சொன்னபோதுதான் அதன் விபரீதம் விளங்கியது.

      ஆரம்ப காலத்தில் மனசுக்குள்ளேயே கால்குலேட்டரை வைத்திருப்பேன் நம்ம ஊர் பணத்திற்கு எவ்வளவு என்று தெரிந்துகொள்ள,, இப்போது வெளி நாடுகளில் வாழ ஆரம்பித்து 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த சின்ன வேலைக்கு அந்த 25,000.00 கொஞ்சம் பெரிதாகவே படுகிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட். Have a good weekend!!

      நீக்கு
  2. விலையைப் பார்த்தால் உண்மையாகவே ஷாக்தான் அடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அபிநயா, இங்கே எலெக்ட்ரிசியன் ,ப்ளம்பர் ,மேஸ்திரி (கொத்தனார்),தச்சுவேலை, தோட்ட வேலை, பெயின்டிங் , தொலைபேசி இணைப்பு, டீ வி இணைப்பு , மற்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வேலை செய்பவர்களின் ஒரு மணி நேர கூலி என்பது மாத கணக்கில் சம்பாதிக்கும் மற்றவர்களின் தின வருமானத்தைவிட பல மடங்கு அதிகம்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஷாக் தான் , வருகைக்கு மிக்க நன்றி கரந்தையாரே.

      நீக்கு
  4. நீங்கள் கட்டிய இன்ஷூரன்ஸ் தொகை தவிர இதுவும் கூட என்றால் நிச்சயமாக ஷாக் தான்.இன்ஷூரன்ஸ் தொகை இவற்றைக் cover செய்யாதா ? எந்த ஊர்அது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே( ராணியின் தர்பார் நடக்கும் நாட்டில் ) இன்சூரன்ஸ் என்பது நாம் எடுக்குவரை அவர்களின் வாய்கள் வாழைப்பழங்கள் , திருப்பி claim பண்ணும்போது அவர்களின் கைகள் கருணை கிழங்குகள். அதிலும் அந்த கொரோனா வைரஸ் சைவில் ஒரு பங்கே பெரியதாக இருக்கும் எழுத்துகளிலுள்ள சட்ட திட்டங்களை அப்போதுதான் அவர்கள் சுட்டி காட்டி, உங்கள் காப்பீட்டில் இந்த வேலை சேராது அந்த வேலை சேராது என்று ஞாயம் கற்பிப்பார்கள்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா.

      நீக்கு
  5. 25000 ரூபாயா? ஷாக் தான். ஆனால் நேர்த்தியாகச் செய்திருப்பார்கள் அங்கு.

    துளசிதரன்

    கோ! மறைந்திருந்து தாக்கிய பிரச்சனை!! எப்படியோ நல்லவிதமாக முடிந்தது அது இருக்கும் இடம் கூடக் கண்டுபிடிக்க முடிந்தது...இப்ப மறைந்திருந்து கொண்டு தாக்கு தாக்கு என்று தாக்கும் இந்த மாயாவிக்கும் இப்படி ஏதேனும் வழி இருந்தால் நல்லது!! உலகமே மகிழ்வொளியில் வெளிச்சமாகிவிடும்! என்ன சொல்றீங்க கோ சரிதானே!!??

    ஊங்க ஊர் அமௌன்ட் எல்லாம் ஷாக் இல்லை. தெரிந்ததுதான். அதுவும் இந்திய ரூபாயில் கன்வெர்ட் செஞ்சா ஷாக் அடிக்கறாப்லதான் இருக்கும்! ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது, புலிவாலை விடமுடியாதே.

      கண்ணுக்குத்தெரியாத கொரோனாவையும் எங்கள் வீட்டு ஜங்க்ஷன் பாக்ஸின் லூஸ் connectionaiyum ஒப்புமைப்படுத்தி கருத்திட்டமை சுவாரசியம். அதற்கும் ஒரு தீர்வு கிடைக்காமலா போகும் ? என்ன இருந்தாலும் நானும் இந்தியன்தானே எனக்கும் ஷாக் அடித்ததே.?

      வருகைக்கு தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் என் அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு