பின்பற்றுபவர்கள்

புதன், 1 ஜூலை, 2020

மிருதம்!.

மனிதம்?
நண்பர்களே,
மனுஷனா பொறந்தா வெட்கம் மானம் சூடு சுரணை இருக்கணும்னு சொல்லுங்க.
அப்படினா அவை மிருகத்திற்கு இல்லை என்றுதானே பொருள்.

மிருகத்திடம், கோபம் இருக்கும் , கொடூரம் இருக்கும் மூர்க்கம் இருக்கும் அவை மனிதனிடம் இருக்கக்கூடாது என்றும் பொருள்படுகிறது.


ஆனால் மனிதனிடம்  அநீதிகண்டு  வெகுண்டெழும் கோபம் இருக்க வேண்டும் , கொடுமைகண்டு பொங்கி எழும் கோபம் இருக்கவேண்டும், பகைவரிடம் மோதும்போது மூர்க்கம் இருக்கவேண்டும்.


வெட்கம் என்பது ஒரு இழி செயலை செய்தபின் மற்றவர்களை ஏறெடுத்து பார்க்க முடியாமல்  , கூனி குறுகி தன்  முகத்தை மறைத்துக்கொள்வதையே இங்கே வெட்கம் என்று பொருள்படுத்திக்கொள்ளவேண்டும்.
 உடுக்கை இழந்தவன் சபை  முன்னால்  நிற்க கூச்சப்படும்  வெட்கம் வேறு. பெண்களுக்கென சொல்லப்படும் இலக்கண கூறுகளில் வரும் வெட்கம் வேறு.


சட்டத்திற்கு புறம்பாக , தன்  பொறுப்பை மறந்து, தன்  கடமையை மறந்து தனது அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்து அதனால் பிறரின் உடமைக்கோ, உரிமைக்கோ, உடலுக்கோ,  தன்மானத்திற்கோ, உயிருக்கோ,  சேதம் விளைவித்தவர்கள் உண்மையிலேயே வெட்கி தலைகுனியவேண்டு, இது அவமானத்தின் வெளிப்பாடான வெட்கம்.


அதை  விடுத்து இழி செயலை செய்த  பின் அதை தட்டி கேட்போர்மீதோ அல்லது அதை சுட்டிக்காட்டுவோர் மீதோ கோபப்படுபவர்கள் உணரவேண்டியது, நமக்கு கோபப்பட தகுதி கிடையாது. இந்த செயல் அருவருக்கத்தக்க செயல், இழி செயல்,பழி செயல் ஈன செயல், பாதக செயல் இதை செய்த நாம் கோபப்படும் தகுதியை இழந்துவிட்டோம்  என்று. 


அப்படி தாம் செய்த இழிசெயலுக்கு தானாக வெட்கப்படாமலும் , அதை தட்டிகேட்போர் மீது கோபத்தை காட்டுபவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க தகுதி இழந்தவர்களாகி, தாங்கள் மிருகங்கள் என தங்களையே தகுதி மாற்றம் செய்துகொள்பவராகவே கருதப்படுவர்.

மிருகம் , மனிதம், தெய்வம் இந்த மூன்று நிலைகளில் மேற்சொன்ன படுபாதக செயலை செய்ததுமில்லாமல் அதற்கு வெட்கி தலைகுனியாமல்  வீராப்புடன்  கோபப்படுபவர் மீண்டும் மிருக நிலைக்கு தள்ளப்பட்டு அவ்வாறே மதிக்கப்படுவார்கள்.


அப்படி இருக்க மனிதம் தாண்டி கடவுள் நிலைக்கு எப்படி மாற முடியும்.


கடவுள் நிலைக்கு போகாவிட்டாலும்    குறைந்த பட்சம் மனித நிலையையேனும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கு, தன்னைப்போல அடுத்தவனையும் நேசிக்கவேண்டும் .


 தான் எப்படி நடத்தப்படவேண்டும் என்று நினைக்கிறானோ அப்படியே அடுத்தவரையும் நடத்த குறைந்த பட்ச முயற்சியாவது செய்திடல்  வேண்டும். 


சமீபத்தில் செய்தி ஊடகத்தில் வெளியான ஒரு காட்சி: முக கவசம் அணியவில்லையா என தன்  மேலதிகாரியை பார்த்து கேட்ட ஒரு மாற்று திறனாளி பெண்ணை முடியை பிடித்து அடித்ததோடு இரும்பு கம்பி கொண்டும் நைய புடைத்த அந்த காட்சியை  கண்டு வருத்தப்பட்டேன், யார் இதுபோன்ற நபர்களை  கேள்விகேட்பது. மேலதிகாரி என்ற அதிகார ஆணவம், வெட்கப்படவேண்டிய அதிகாரி. 
மிருகங்களுள்   சில  இரக்க  குணம் கொண்டவையாக இருக்கும்போது இந்த மனிதன் மட்டுமேன் இன்னும் மேலோங்கிய  மிருகத்தனத்துடனே உலா வருகிறான்? மனித நேயம் இல்லாதவர் மிருகத்திற்கு ஒப்பானவர் அல்லது அதற்கும் கீழானவர்.  ஒருவேளை பேய் பிசாசு சாத்தான் நிலைக்கு வேண்டுமானால் ஒப்பாவர்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ 

12 கருத்துகள்:

 1. இன்னாது . மாற்று திறனாளி பெண்ணை ஒரு மேலதிகாரி இரும்பு கம்பியானல் தாக்கினாரா? அதுவும் முக கவசம் போடவில்லையே என்று சொன்னதர்க்கா ? இதுக்கு வெட்கம் கோவம் போடணுமா?

  எங்கே இருக்கீங்க?

  நாளைக்கு ..

  காமவெறியால் மேலதிகாரியை வன்புணர்வு செய்த பெண்ணிடம் இருந்து மயிரிழையில் தப்பிய மேலதிகாரின்னு விவாதம் வைப்பாங்க. அத பார்த்தா கூட எங்களுக்கு வெட்கம் வராது நாங்க கோவை பட மாட்டோம்.

  ஏன் சொல்லுங்க.

  எங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீடியாக்காரர்கள் உங்கள் பதிலை பார்க்காமல் இருக்கணும்னு வேண்டிக்கொள்வோம்.எதுவும் நடக்கும் இந்த காலங்களில் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. மிருதம் - சரியாகச் சொன்னீர்கள். இப்படி நிறைய மிருகங்கள் நம்மிடையே... நாம் தான் பார்த்து சூதானமாக இருக்க வேண்டியிருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,

   நாம் பார்த்து நடந்தாலும் இதுபோன்ற நாட்டு மிருகங்கள் நம்மை தேடிப்பிடித்து கடித்து குதறுகின்றனவே?.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. மனிதம் நாளுக்குநாள் அழிந்து கொண்டுதான் தேய்கிறது நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனைதான். வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 4. கடவுள் நிலைக்கு போகாவிட்டாலும் குறைந்த பட்சம் மனித நிலையையேனும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கு, தன்னைப்போல அடுத்தவனையும் நேசிக்கவேண்டும் .


  தான் எப்படி நடத்தப்படவேண்டும் என்று நினைக்கிறானோ அப்படியே அடுத்தவரையும் நடத்த குறைந்த பட்ச முயற்சியாவது செய்திடல் வேண்டும். //

  நான் இதை வாசித்ததுமே உடனே இப்போதைய சூழலில் பலரும் மற்றவர் மீது அக்கறை இல்லாமல் சமூகப் பொறுப்பு இல்லாமல் தொற்றைப் பரப்பி வருகின்றனரே என்று சொல்ல வந்தேன்.

  நீங்கள் ஒரு நிகழ்வையும் சொல்லியிருக்கிறீர்கள். வேதனையான கொடுமையான நிகழ்வு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   தங்கள் சொல்லும் இந்த தொற்றுப்பரவ காரணமாகும் பொறுப்பற்ற நபர்களையும் சேர்த்து சொல்லலாம்.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. //கடவுள் நிலைக்கு போகாவிட்டாலும் குறைந்த பட்சம் மனித நிலையையேனும் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் அதற்கு, தன்னைப்போல அடுத்தவனையும் நேசிக்கவேண்டும் .


  தான் எப்படி நடத்தப்படவேண்டும் என்று நினைக்கிறானோ அப்படியே அடுத்தவரையும் நடத்த குறைந்த பட்ச முயற்சியாவது செய்திடல் வேண்டும். //

  ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கொடும்பாவிகள் சார் இவர்களெல்லாம். உயிர் பிரியும் கடைசிநொடியில கூட அடுத்தவங்க நிம்மதியை கெடுத்துட்டுப்போற பாதகர்கள். இவர்களை அழிக்கவும் முடியாது. குறைக்கவும் முடியாது. அழிக்க அழிக்க வளரும் விஷச்செடிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப கோபமா இருக்கீங்கனு புரியுது.

   என்ன செய்வது?

   நீக்கு