பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 ஜூலை, 2020

பே(போ)ச்சு வார்த்தை!!!???

குப்பைக்கா ?
நண்பர்களே,
எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தகராறில் /வன்முறையில்/போராட்டத்தில்  ஈடு படக்கூடாது என்று பொதுவாக சிலர் சொல்லுவது நமக்கு தெரிந்திருக்கும்.

அப்படி பேசுவது என்பது முதற்கட்ட செயல் தானே தவிர அது முற்றுப்பெற்ற செயாலாக / தீர்வாக ஆவதில்லை பெரும்பான்மையான விஷயங்களில்.

உரிமை என்பது கொடுக்கப்படவேண்டியதோ பெறப்படவேண்டியதோ இல்லை. அது எடுத்துக்கொள்ளப்படவேண்டியது என்று எங்கேயோ கேட்ட குரலாக என் காதுகளில் ஒலித்துகொண்டு இருக்கிறது.

தினந்தோறும் செய்தித்தாள்களில், செய்தி ஊடகங்களில், சமூக ஊடகங்களில் மக்கள் போராட்டம், கடையடைப்பு,உண்ணாவிரதம்,ரயில் மறியல், சாலை மறியல் , சாலையில் தேங்கி இருக்கும் குட்டைபோன்ற தண்ணீரில் நாற்று நடும் போராட்டம், வாயில் துணியை கட்டி போராட்டம், கருப்பு கொடி  போராட்டம்….கண்ணை கட்டி போராட்டம்.. மொட்டை அடித்து போராட்டம்….. அரை நிர்வாண போராட்டம், எலிக்கறி தின்று போராட்டம்,  மொட்டை அடித்துகொண்டு போராட்டம் …..

இப்படி, விவசாய பெருமக்கள், மாணவர், ஆசிரியர்   அரசு ஊழியர், மருத்துவர், செவிலியர், கட்டிட தொழிலாளர்,பழங்குடியினர், தூய்மை பணியாளர்,வாகன ஓட்டுநர், வாகன உரிமையாளர், நடை பாதை கடை நடத்துபவர்கள், பால் உற்பத்தியாளர், கைத்தறி தொழிலாளர் , தொலைபேசி ஊழியர் , அரசு ஊழியர், வங்கிஊழியர் …. என சமூகத்தின் பல பிரிவினர் போராட்டம் நடத்துகின்றனர் தங்களது ஞாயமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக.

இத்தகு போராட்டக்காரர்கள், திடீரென ஒரே நாளில் முடிவெடுத்து போராட்டங்களில் குதிப்பதில்லை, இந்த பிரச்சனைகள் தொடர்பான அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் அளித்தும் கோரிக்கை மனுக்களை செலுத்தியும், பலன் ஒன்றும் கிடைக்காத  நிலையில் அரசின் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாகத்தான் இந்த போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் பொதுமக்களுக்கு , போக்கு வரத்து , அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற நடைமுறை அசவுகரியங்கள் இல்லாமல் இல்லை.

என்ன செய்வது?

 நமது உரிமையைக்கூட இங்கே போராடித்தான் பெறவேண்டியுள்ளது, அதுவு ம் பெரும்பாலும் காலம் கட ந்தோ அல்லது கேட்ப்பதில் ஒரு சிறு துளியோ  மட்டுமே பெறமுடிகிறது அதிகாரிகளின் இரக்கத்தால்???(at their mercy) 

இந்த பதிவின் முக்கிய கவனகுவிப்பு(focus) யாதெனில், போராட்டங்கள் நடக்கின்றன. நிலைமை மோசமாகும் தருவாயில்  அரசு அதிகாரிகள், அல்லது அந்ததந்த துறை சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள், வட்டாட்சியர், காவல்துறை உயரதிகாரி , தாசில்தார், கலெக்டர் போன்றோர் வந்து போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி , அவர்களிடத்திலிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு  அவர்களின் கோரிக்கையை  "விரைவில்" பரிசீலிப்பதாக/ நிறைவேற்றுவதாக  வாக்களித்தவுடன் போராட்டம் கைவிடப்பட்டதாக செய்திகள் மூலம் அறிகிறோம்.

அப்படி வாக்களிக்கப்பட்ட எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?  அதன் தொடர்ச்சி செய்திகள்(follow-up) என்ன என்பது எந்த ஊடகத்திலும் காணப்படுவதில்லை. அப்படி செய்திகள் வந்தாலும் அது அத்திப்பூத்தாற்போல் ஆயிரத்தில் ஒன்றுதான்.
இப்படி அதிகாரிகளின் பேச்சுக்கு மரியாதை தந்து கலைந்து சென்ற மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் அந்த அதிகாரிகள் எந்தளவிற்கு மரியாதை தந்தார்கள்?

கோரிக்கை நிறைவேறியதா? அல்லது , இயக்குனர் கே பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்" என நினைக்கின்றேன், அதில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு " போய்  சேரவேண்டிய இடத்திற்கு போய்   சேர்ந்துவிட்டது" என அதிகாரி சொல்லும்போது அருகிலிருக்கும் குப்பைத்தொட்டியை காட்டுவார்கள், அதுபோல் ஆனதா?

ஒவ்வொரு நாளும் போராடும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக அதிகாரிகளால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் உண்மையிலேயே நிறைவேற்றபடுகின்றனவா என்பதை ஒருகணம் சிந்தித்துப்பார்க்கும் சந்தர்ப்பமே   இந்த பதிவு.

அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அது உங்களுக்கும் தெரிந்திருந்தால் தயவாக எனக்கும் சொல்லுங்கள்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம். )   
கோ.

16 கருத்துகள்:

 1. கோ..

  என்னைக்கு நம்ம வாக்குரிமையை ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் வித்துட்டோமோ, அன்னைக்கே நமக்கு போராடும் உரிமை போயாச்சு.

  பதிலளிநீக்கு
 2. போக வேண்டிய இடத்திற்கு! :) பொதுவாக இப்படிச் சொல்வது தானே வழக்கம். இங்கே நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாண்மையான போகுமிடம் எதுவென்று உங்களுக்கு தெரியும். வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.

   நீக்கு
 3. //நமது உரிமையைக்கூட இங்கே போராடித்தான் பெற வேண்டியுள்ளது//

  நிதர்சனமான சுடும் உண்மை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 4. அந்தப் படம் தண்ணீர் தண்ணீர்தான்.
  வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை.
  அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் நகைச்சுவை நினைவிற்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   கவுண்ட மணி ஒரு தீர்க்கதரிசி.

   நீக்கு
 5. ப்ராக்டிகலாகப் (இதற்கென்ன தமிழ்?) பார்த்தால் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பது இயலாத காரியம்.  சாத்தியமாக்கக்கூடியதை செய்து முடிக்க முயற்சியாவது செய்கிறார்களா என்றுதான் பார்க்க முடியும்.  இந்த அரசியலில் அதுவே கடினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. practical - நடைமுறையில் என பொருள்கொள்ளலாமோ?

   எல்லாவற்றையும் நிறைவேற்றுவது ஆகாத ஒன்றுதான் எனினும் ஓரளவிற்காவது செய்யலாமே.

   வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அதன் தொடர்ச்சி செய்திகள்(follow-up) என்ன என்பது எந்த ஊடகத்திலும் காணப்படுவதில்லை.//

  நிச்சயமாக இல்லை. 99%

  //அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அது உங்களுக்கும் தெரிந்திருந்தால் தயவாக எனக்கும் சொல்லுங்கள்.//

  யோசிக்கிறேன் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

  அதனால்தான் பல ஊர்களிலும் கிராமங்களிலும் மக்களே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   கடைசியில் மக்களே தங்கள் தேவையை பூர்த்தி செய்வதென்றால் அரசும் கஜானாவும் வரியும் பட்ஜெட்டும் எதற்கு.

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 7. என்னதான் போராடினாலும் கோரிக்கைகள் நிரைவேற்றப்படுவதில்லை. நானும் 3 நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். அப்போதே எங்கள் குழுவிலிருந்தவர்கள் சாலை மறியலும் செய்தனர். ஆனால் கடும் தோல்வி. நிதர்சனத்தை எடுத்துரைக்கும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 8. உண்ணாவிரதம் இருந்தீர்களா? போராட்டக்குணம் பாராட்ட தக்கது.

  எந்த போராட்டம் அது?..

  பதிலளிநீக்கு
 9. உண்மைதான். கடமைகளும் உரிமைகளும் காணாமல் போய்த்தான் விட்டன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்

   நீக்கு