பின்பற்றுபவர்கள்

சனி, 11 ஜூலை, 2020

கொங்குதேற் வாழ்க்கை...

கண்டது மொழிமோ! 
நண்பர்களே,

"கோ"மானின் மனதில் ஒரு திடீர் குழப்பம்.

அந்த குழப்பத்தை தீர்த்துவைக்கும் எவருக்கும் ஆயிரம் பொற்காசுகள் பரிசு.

குழப்பம் என்னவென்று  யாருக்கும் சொல்லாமல் தன்  குழப்பத்தை தீர்ப்பவருக்கு பரிசு என்றால் யார் அந்த குழப்பத்தை எப்படி தீர்ப்பார்?

அப்படியும் ஒருவர் அந்த கோமானின் குழப்பத்தை தீர்த்துவைத்ததாகவும் அதில் அந்த கோமான் மனநிறைவு கொண்டு வாக்களித்த பரிசு தொகையை கொடுக்க இசைந்ததையும் "திருவிளையாடல் புராணம்"மூலம் நாம் அறிந்திருகின்றோம். 

அதேபோலத்தான் இந்த "கோ" அடுத்ததாக, இன்னும் சில நாட்களில், ஒரு பதிவு எழுத இருக்கின்றேன் அது என்ன? எதைப்பற்றி  பதிவு? என்று அந்த கோமானைப்போல் எந்த   ஒரு clueவும் கொடுக்காமல்  கேட்டது போல் அல்லாமல் பதிவிற்கான தலைப்பையும் சொல்லிவிடுகிறேன்.

அதை வைத்து அந்த பதிவு எதைப்பற்றியதாக இருக்கும் என்று சரியாக சொல்பவருக்கு  ஆயிரம்???!!! ……. பரிசாக வழங்கப்படும். 

சரியாக சொல்லும் முதல் பத்து  பேர்களுக்கு பரிசு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்..

நிபந்தனைகள் :

ஒருவர் ஒரு பதிலுக்குமேல் சொல்லக்கூடாது.

இந்த பதிவு கண்ட மூன்று தினங்களுக்குள் பதில் சொல்லவேண்டும்.

தாமதமாக வரும் சரியான  பதில்கள் பரிசுக்கு பரீசலனை செய்யப்படமாட்டாது.

எழுத்தாளர், இயக்குனர், நடிகர் , இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் என்று எவரின்  ஆலோசனைகளையும்  பெறக்கூடாது. 

பரிசு பெறாதவர் வழக்கு மன்றம் செல்ல அனுமதி இல்லை.

பரிசு சூழ்நிலைக்கேற்ப மாற்றத்திற்குரியது.

சரி, பதிவின் தலைப்பு: "பாகுபலி" - பிரமாண்ட தயாரிப்பு.

COME ON FRIENDS!!!! ….. ….

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
 
கோ.

13 கருத்துகள்:

 1. ஆயிரம்...என்னவோ? COME ON FRIENDS என்பதானது COMEON FRENDS என்றுள்ளதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

   ஆம் ஐயா அது come on தான், இடைவெளி பிழை . வருகைக்கும் பிழை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.

   நீக்கு
 2. பாகுபலி போல பலமான புதிராக இருக்கிறதே... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்,
   வருகைக்கு மிக்க நன்றிகள், புதிருக்கு எதிர்வரும் நாட்களில் விடை கிடைக்கும்..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அப்படியும் இருக்கலாம்; வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

   நீக்கு
 4. பதிவு பரிசு கொடுப்பதற்கான பொருள் பற்றி எழுத வருகிறீர்கள்.  அதாவது பரிசு கொடுப்பதற்காக ஒரு பதிவு எழுதி வருகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
   தங்களின் யூகம் சரியா? விடை விரைவில்.

   நீக்கு
 5. கெழந்தை பிறப்பு வளர்ப்பு பற்றி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி அரவிந்த், யூகம் சரியா?.

   நீக்கு
 6. வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.

  பதிலளிநீக்கு