நாகரீக வெளிப்பாடு!!
நண்பர்களே,
முக கவசம் என்பது இன்று நேற்று அல்ல, காலாகாலமாக மக்களுள் சிலர் அணிந்துக்கொண்டுதான் இருக்கின்றனர், எனினும் அதன் அவசியம், முக்கியத்துவம் இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக நிலைபெற்று விட்டது.
முன்பெல்லாம் இதுபோன்ற முக கவசத்தை, தொற்று நோயாளிகள்,இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஒரு சில மருத்துவ பணியாளர்கள் , அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ குழுவை சார்ந்தவர்கள் சுரங்க தொழிலாளிகள் துப்புரவு தொழிலாளிகள் என ஒருசிலரே, அணிந்திருப்பது வழக்கம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து திணறடித்துக்கொண்டிருக்கும் உயிர்கொல்லி நோயின் தாக்கத்தில் இருந்து (ஓரளவிற்கு) காத்துக்கொள்வதில் இந்த முகக்கவசம் உதவுவதாக மருத்துவ உலகம் அறிவுறுத்திவருகிறது. அதன் பேரில் , உலக நாடுகளின் அரசுகள் தமது குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு அறிவுரையாக மட்டுமே சொல்லி வந்த அரசுகள், படிப்படியாக, இந்த நோயின் உக்கிரத்தை கருத்தில்கொண்டு , முகக்கவசம் அணியவேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்து இப்போது பெரும்பான்மையான நாடுகள் இதனை கட்டாயப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன.
அவ்வகையில் இங்கிலாந்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைமுதல் கடைகளுக்கும் பல்பொருள் அங்காடிகளுக்கும், மக்கள் கூடும் இடங்களுக்கும் ( மருத்துவர் அலுவலகம்,முடி திருத்தகம்…) செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும் அப்படி அணியாதவர்கள் நம் இந்திய நாணய மதிப்பின்படி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
வேறொரு செய்தியில் இப்படி முகக்கவசம் அணியாதவர்கள் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லும் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு நிகரான குற்றமாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்காக காரிலோ, பேருந்திலோ, விமானத்திலோ பயணிக்கும்போது சீட் பெல்டின் அவசியம் எப்படி இன்றியமையாததோ அதே அளவிற்கான பாதுகாப்பும் அவசியமும் இந்த முக கவசம் அணிவதில் இருக்கின்றது என்பதை இன்னும் ஏன் சிலர் ஏற்பதில்லை என்று தெரியவில்லை.
நாகரீகம், முன்னேற்றம் கடந்து பாகுபாடு இல்லாமல் உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இப்படி சுய கட்டுப்பாடு இல்லாமலும் அரசின் ஆலோசனைகளுக்கோ, அறிவுரைக்கோ செவிகொடுக்காமல் வரப்போவதை உணராமல் நடந்துகொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர.
அப்படிப்பட்டவர்கள் அபராதத்திற்கோ அல்லது தண்டனைக்கோ பயப்படமாட்டார்கள் , தங்களுக்கோ அல்லது தங்களை சார்தவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்வரை.
சுய சுகாதாரத்தையும் மற்றவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையும் இல்லாதவர்களை நினைக்கும்போது படித்தவர்களும் படிப்பறிவில்லாத பாமரரும் ஒன்றுதான் என தோன்றுகின்றது.
வரும்முன் காத்துக்கொள்வதுதானே வளர்ந்துவரும் மனித நாகரீகத்தின் வெளிப்பாடாக இருக்கமுடியும்?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
வரும் முன் காப்போம்.
பதிலளிநீக்குஐயாவிற்கு அநேக நமஸ்காரங்களும் நன்றியும்.
நீக்குவரும் முன் காப்போம்
சார்,
பதிலளிநீக்குஅதாவது இத்தனை நாட்களாக இந்த பூமியில் மனிதன் பாதுகாப்பாக வாழ இயற்கை ஒத்துழைத்தது.
தர்ப்போது புதிதாக இயற்கையில் பரிணமித்த புதிய வைரசுக்கு நாம் vaccine கண்டு பிடிக்கும் வரைக்கும்
பத்திரமாக இருக்க முக கவசம் அனிவது நமது நல்லதுக்குதான்.
ஆமாம் 100 பவுண்ட் அபராதம் இங்கிலாந்தில் மட்டுமா இல்ல ஸ்காட்லாண்ட், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து
பகுதிகளிலும் அமலுக்கு வந்ததா?
மகேஷ்,
நீக்குஸ்காட்லாந்தில் கடந்த 11ஆம் தேதியிலிருந்தே முக கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வேல்ஸிலும் வட அயர்லாந்திலும் தற்போதைக்கு இந்த கெடுபிடி இல்லை. இந்த கெடுபிடிகள் மக்கள் நலனுக்கே என்று உணர்ந்தால் யாருக்கும் சிரமம் இல்லை.
ஒரு மாற்றத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக கடினமே.
பதிலளிநீக்குஇது போன்ற பதிவுகளை பலர் பல இடங்களில் அரசோடு சேர்ந்து போட்டால்தான் மக்கள் மனதில் பதியும்.
அரவிந்த்,
நீக்குஉண்மைதான் , மக்கள் உணர்ந்தால்தான் எந்த மாற்றமும் பலன் தரும்.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
வருமுன் காப்போம். பத்தாயிரம் ரூபாய் தண்டனை - சரியே!
பதிலளிநீக்குநலமே விளையட்டும். மக்களும் இதன் அவசியம் புரிந்து கொண்டால் நல்லது.
வெங்கட்,
நீக்குமக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள சொல்லப்படும் அறிவுரைகளை பின்பற்ற தவறுபவர்களை அபராதம் விதித்துதான் திருத்தும் அவலநிலையை எண்ணி வருந்துகிறேன்.
உண்மை
பதிலளிநீக்குவரும்முன் காத்துக் கொள்வதே நல்லது
வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.
நீக்குஇங்கிலாந்தில் இத்தனை நாட்கள் கழித்த்துதான் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவது ஆச்சர்யம்.
பதிலளிநீக்குபலரது விமர்சனங்களுக்கு உள்ளானது இந்த நடவடிக்கை. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு