பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2020

மை நேம் இஸ் பில்லா!!


வினோத விலாசங்கள்.
நண்பர்களே,

மனிதனாய் பிறந்த நம் ஒவ்வொருவரையும் அடையாள படுத்துவதற்கென்று அங்க அடையாளங்கள், மச்சங்கள்,தழும்புகள் , கண்களின்  நிறம், உருவ அமைப்பு போன்று  பல்வேறு  விடயங்கள்  உள்ளன.    அவற்றுள் பிரதானமாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது அவரவர்களின் பெயர்களே.

நம் வீட்டிலும் சில வன விலங்கு சரணாலயங்களிலும்,விலங்கியல் பூங்காக்களிலும் வைத்து பராமரிக்கப்படும் விலங்குகளுக்கே பெயர்வைத்திருக்கும்போது மனிதர்களுக்கு இந்த பெயர்கள் மிகவும் இன்றியமையாததாக ஆகின்றது,.

 பிறக்கபோவது ஆணா  இல்லை பெண்ணா  என்பது  பிறக்கப்போகும் குழந்தையின் முடிவல்ல அதுபோல தனக்கு என்ன பெயர் வைக்கப்பட வேண்டும் என்பது அந்த குழந்தையின் முடிவோ விருப்பமோ அல்ல.
 
பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு, தங்களின் பெற்றோர், மூதாதையர், தங்களின் குல தெய்வங்கள், தங்களின் விருப்ப கடவுள்கள், தேச தலைவர்கள்,கட்சி தலைவர்கள் போன்றோரின் பெயர்களையும் சூட்டி மகிழ்வர்.

இன்னும் சிலர், தமக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரைக்கூட வைத்ததாக கேள்வி படுகிறோம். இன்னும் சிலர் ஜாதக , ஜோஷிய,எண்  கணித அடிப்படையிலும், நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாமல் பெற்றேடுத்த குழந்தை என்பதால் எந்த தெய்வ வழிபாட்டால் இந்த குழந்தை  பிறந்தது என்ற நம்பிக்கையில் அந்த தெய்வத்தின் கோவில் அமைந்திருக்கும் ஊரின் பெயரைக்கூட வைப்பது சகஜமே. அதேபோல, இலக்கிய,இதிகாச, புராண,மத மறை நூல்களின் அடிப்படையிலும் பெயர்கள் சூட்டப்படுவது உண்டு.

இப்படி பெற்றோரின் விருப்பப்படி வைக்கப்பட்ட பெயர்களை சுமந்துகொள்ளும் குழந்தைகள், நாளடைவில் வளர்ந்து பெரியவரான பிறகு, பெயர்களிலுள்ள  பல சங்கடங்களை உணர்ந்து தங்கள் பெயர்களை மாற்றி அமைத்துக்கொள்வதும் அங்கங்கே நிகழ்வதுவும் உண்டு.

நம் நாடு மட்டுமல்லாது அயல் நாடுகளிலும் தங்களின் பெயருடன் தங்கள் குடும்ப பெயரையும் சேர்த்துக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமே. இதில் சாதி பெயர்களை சேர்த்துவைத்துக்கொள்வதும் அடங்கும்.

பெரும்பாலும் நம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இதுபோன்ற குடும்பப்பெயர்கள் வைப்பது வழக்கம் இல்லை , ஆனால் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இந்த குடும்ப பெயர் அல்லது குழும பெயரை(SURNAME ) தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்வது இன்றியமையாதது.  

குறிப்பாக ஆண்  பிள்ளைகள் தாம்  வளர்ந்த பின்னர் பெற்றோர் இட்ட தங்களின் பெயர் தமக்கு பிடிக்கவில்லை, அல்லது சொல்வதற்கு சங்கோஜமாக இருக்கின்றது, உச்சரிக்கும்போது பலர் கேலி செகின்றனர், அது நாகரீகமாக இல்லை , ஸ்டயிலாக   இல்லை போன்ற காரணங்களுக்காக மாற்றிக்கொண்டாலும் அவர்களது குடும்ப பெயரை கண்டிப்பாக மாற்ற முடியாது. பெண்கள் தங்களின் திருமணத்திற்குப்பின்னர் தனது கணவரின் குடும்ப பெயருக்கு  மாற்றிக்கொள்வது சகஜம்.

நம்ம ஊரில் நமது பிராந்தியத்தில் அப்பாவின் பெயரை நமது பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்வதும் திருமணத்திற்கு பிறகு மனைவிகள் தங்கள் கணவரின் பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொள்வதும் நடைமுறை;ஆனால் இங்கே சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும்  தங்களின் இயற்பெயர் மற்றும் குடும்ப பெயர்களை  அப்படியே வைத்துக்கொண்டாலும் , பெரும்பான்மையானவர்கள் தங்கள் கணவரின் குடும்ப பெயருக்கு மாறிவிடுவதுதான் நடை முறை.

 குடும்ப பெயர் எப்படி இருந்தாலும் அதைத்தான் இவர்கள் வைத்துக்கொள்ளவேண்டும் தங்களின் பெற்றோர் வைத்த பெயர்களை மாற்றிக்கொள்வதுபோல இந்த குடும்ப பெயர்களை மாற்றிக்கொள்ளும் அதிகாரம் / உரிமை ஆணுக்கோ  அல்லது  திருமணமானபின் கணவரின் குடும்ப பெயரை  சேர்த்துக்கொள்ளும் பெண்ணுக்கோ கிடையாது.

இந்த குடும்ப பெயர்கள் பல நேரங்களில் நமக்கு நகைப்பை கொடுத்தாலும் அவர்களுக்கே சங்கோஜ நிலையை உண்டுபண்ணினாலும் வேறு வழி இல்லை. பச்சை குத்தினாலும் அதை அழித்துவிட்டு வேறு குத்திக்கொள்ளலாம் ஆனால் இந்த குடும்ப பெயர் என்பது மண்ணுக்குள் மறைந்தாலும் விண்ணுக்குள் விரைந்தாலும் மாறவே மாறாது.

ஆணாக இருந்தால் அவர்களின் முதற் பெயரை நேரடியாகவே அழைக்கலாம், அவரது குடும்ப பெயரை மட்டும் அழைப்பதாக இருந்தால் மிஸ்டர்,  என்று சொல்லி அந்த குடும்ப பெயர்களை சொல்லவேண்டும், பெண்களை மிஸர்ஸ்  அல்லது மிஸ் என்று சொல்லித்தான் அழைக்கவேண்டும்.

இதில் என்ன சங்கோஜம் இருக்கமுடியும்? பெயர்கள் பெயர்கள்தானே ?

சில பெயர்களை பலர் முன்னிலையில் சொல்ல நேரும்போது முதன் முதலில் அதை கேட்க நேருபவர்கள்  ஒரு வியப்பையும், ஏளன புன்  சிரிப்பையும் வெளிப்படுத்துவது இயல்பே. 

பதினோராம் வகுப்பு முடித்தபிறகு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய போனபோது, என்னை போன்ற குறைந்தது நூறு மாணவர்களை ஓரிடத்தில அமர செய்து,அலுவலர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சத்தமாக சொல்ல சொன்னார். 

எல்லோரும் சொல்லிக்கொண்டு வந்தோம் இடையில் பலர் சிரித்தனர், பலர் திரும்பி பார்த்தனர், சிலர் பேரை சொல்லவே சில நொடிகளை எடுத்துக்கொண்டனர் தங்கள் பேரை சொல்ல வெட்கப்பட்டு.

இதில் உச்சகட்ட வியப்பு என்னவென்றால்,ஒரு மாணவன் தன்  பெயர் "சக்கர பாணி" என்று சொன்னதும் அந்த அலுவலர், அந்த மாணவனிடம் அப்படியென்றால் உன்னை தொட்டுப்பார்த்தல் இனிக்குமா? என கேட்டார்.
அதற்கு வேறொரு மாணவன் , தொட்டுப்பார்த்தால் எப்படி சார் இனிக்கும் நீங்கள் கிட்டே வந்து நக்கி பார்க்கவேண்டும் என சொல்ல இப்போது அந்த அலுவலருக்கு தாம் அப்படி சொல்லி இருக்க கூடாது என்று தோன்றி இருக்க வேண்டும்.

நானுமிந்த நாட்டிற்கு வந்த புதிதில் பல குடும்ப பெயர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து உள்ளத்தில் புன்னகித்துள்ளேன், என் பெயரை கேட்டும் அப்படி புன்னகித்தவர்கள் இருந்திருக்கக்கூடும், இங்கே எந்த இந்திய பெயரானாலும் இவர்களின் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பகத்தான் இருக்கின்றது.

இங்குள்ள சில குடும்ப பெயர்கள் கொஞ்சம்  அதிர்ச்சியாகவும்,  வித்தியாசமாகவும்  சில பெயர்கள் வியப்பாகவும் இருக்கும்.

அவற்றுள் சில:

Penny,Pound ,Dollar,Spinster,Death,Bread,BirdsWhistle,Mirracle,Smellie ,Glass, White ,Brown,Green ,Grey ,Gold ,Garland,Price, Stone,Summer,Winter, Price, People , Swan ,Peacock ,Blacksmith ,Goldsmith , Wood ,Webb போன்றவை.

வியப்பில் ஆழ்த்திய அதே சமயத்தில் கொஞ்சம் சங்கோஜப்படுத்திய ஒரு பெண்ணின் sur name : Bracier.

இப்படி வினோதமான பெயர்களை  Strange பெயர்கள் என்று சொல்லலாம்.

ஆனால்  ஒரு பெண்மணியின் குடும்பத்தின்  பெயரே "Strange " என்று சில நாட்களுக்கு முன் அறிந்தபோது இப்படியும் ஒரு கும்ப பெயரா என எனது வியப்பை மேலோங்க செய்தது.

நண்பர்களே, இந்த பதிவு யார் மனதையும் புண் படுத்த அல்ல என்பதை முழு மனதுடன் பிரகடனப்படுத்தி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.,

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ 

 



24 கருத்துகள்:

  1. இங்க இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு அமெரிக்கா, ஐரோப்பா வர இருப்பவர்களுக்கான இடுகை இதுன்னு நினைக்கிறேன்.

    சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க விசிட் விசாவுக்காக அப்ளை செய்வதற்கு முன்பு என் பாஸ்போர்ட்டை ரின்யூ செய்தேன். அப்போது அங்கிருந்தவர், முதன்மை பெயர், குடும்பப் பெயர் என்று பிரித்து அப்ளை பண்ணுங்க, அமெரிக்க விசாவுக்கு எளிதாக இருக்கும் என்று சொல்லி, அப்படிப் பிரித்து புது பாஸ்போர்ட் வாங்கினேன். அதை நினைவுபடுத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் வருகைக்கு மிக்க நன்றி, அமெரிக்காவில் தங்களை எப்படி அழைத்தார்கள்?.

      நீக்கு
  2. வினோதமான பெயர்களை கேட்டு நானும் வியந்துள்ளேன். என் அலுவலகத்தில் Coffin, Deadman, Cook, Foreman உள்ளனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இங்கே பல வினோத பெயர்களும் உள்ளன, "பதிவு நாகரீகம்" கருதி அவற்றை தவிர்த்தேன். வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

      நீக்கு

  3. பெயர்களை பற்றி நீங்கள் சொன்ன போது எனக்கு என் கூட படித்தவரின் பெயர் ஞாபகம் வந்தது அதில் நகைக்க இடமில்லை ஆனால் அவன் அமெரிக்கா வந்திருந்தால் அவன் பெயர் என்ன பாடுப்பட்டு இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. அவன் பெயர் என்னவாக இருக்கும் என்று யோய்க்கிறீர்களா? அவன் பெயர் கணபதி ஹரிகர சங்கர சுப்புர மணியன்... இது அவனுடைய முதல் பெயர் மட்டுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு தங்கள் நண்பரை நினைவுப்படுத்தியது குறித்து மகிழ்சி. நண்பர் GHSSM அமெரிக்க வந்திருந்தால் ….. ….. முதல் பெயரை சொல்லிமுடிக்கவே மூச்சு வாங்கிகிறதே.

      நீக்கு
  4. ஆம் ஐய்யா. பெயர் மிக முக்கியமான அம்சம்.
    இடையில் பெயர் மாற்றுவது குறித்து "எதிர் நீச்சல்" என்ற படத்தில் சிறப்பாக பேசப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வைக்கும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பிற்கால சூழல்களையும் கொஞ்சம் முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டால் நல்லது. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. வித்தியாசமான பெயர்களை வைத்து நான் எழுதிய பதிவும் நினைவுக்கு வருகிறது!  எனக்குத் தெரிந்த சில வித்தியாசமான பெயர்கள் போதும் பொண்ணு, வேண்டா, கோமேதக வேலும், பதினெட்டு, பச்சை,....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதும் பொண்ணு என்ற பெயரை ஒரு திரைப்படத்தில் கேட்டிருக்கிறேன். கோமேதகவேலு போன்று எனக்கு தெரிந்த ஒருவரின் பெயர்"பொன்னாபரணம்". வருகைக்கும் தங்கள் அனுபவ பகிர்விற்கும் மிக்க நன்றிங்க. திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எனக்குத் தெரிந்த ஒருவர் எம் கே தியாகராஜ பாகவதர் என்றே பெயர் வைத்துக்ஜ கொண்டிருக்கிறார்.  அபிமானம் இருக்க வேண்டியதுதான்...  அதற்காக இன்ஷியலுடனா?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. M K T பாகவதர் is tooooo much. பாரதி தாசன்,பெரியார் தாசன் சுப்புரத்தினதாசன் போன்று வைத்திருந்திருக்கலாம்.

      வருகைக்கும் கருத்து பகிர்விற்கு மிக்க நன்று திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. இந்த "மேலாடை??!!" பெயருக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி, உள்ளுறுப்புகளை குறிக்கும் பெயர்களும் உள்ளனவே. வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.

      நீக்கு
  8. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சக்கரபாணிக்கு வேலை கிடைத்ததா ?

    தங்களது பெயர் இதுவரை கோயில்பிள்ளை என்று நினைத்திருந்தேன் இன்றுதான் பில்லா எல்பது தெரிந்தது நண்பரே...

    நல்லவேளை எங்க ஐயா எனக்கு கொலைதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் வைத்து அந்தப் பெயரையே வைத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்கரபாணி என்ற பெயரை அன்று கேட்டதோடு சரி அவர் யார் என்ற விவரம் எதுவும் தெரியாது, வேலை கிடைத்திருக்கும் என நபுகிறேன் தனியார் துறையில்.

      எனக்கு இன்னும் வேறு சில பெயர்களும் உள்ளன.

      தங்களின் பெயர்க்காரணம் அறிய தந்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  9. சார்,

    ஆச்சர்யமா இருக்கு இந்த குடும்ப பெயர் கலாச்சாரம் ஐரோப்பாவிலும் இருக்கிரதை நினைக்கும்போது!

    ***

    தொட்டுப்பார்த்தால் எப்படி சார் இனிக்கும் நீங்கள் கிட்டே வந்து நக்கி பார்க்கவேண்டும்/// ஹாஹாஹா.

    ***

    தமிழகத்தை பொருத்த வரையில் குடும்ப பெயர் என்கிர கான்செப்ட் நடைமுரையில் தர்ப்போது இல்லைனு நினைக்கிரேன்.

    அப்பா பெயரின் முதல் எழுத்து குழந்தையின் இனிஷியலாகவும்;
    passport போன்ற இடங்களில் surname இடத்தில் அப்பா பெயரையே last name ஆக கொடுக்கும்
    வழக்கம் உண்டு.

    ஆனால் ஆந்திராவில்...
    குழந்தைக்கு குடும்ப பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக வைப்பதில் இருந்து எங்கெல்லாம் surname கேட்க்க படுமோ அந்த இடத்தில் எல்லாம் குடும்ப பெயரையே எழுதுகிரார்கள்.

    நான் ஆந்திராவில் பிறந்தாலும்;
    முதலாம் வகுப்பில் இருந்து தமிழ் நாட்டில் படித்ததால்
    இந்த வித்யாசத்தை பார்க்க முடிந்தது.

    நல்லவேல என் அப்பா பெயரின் முதல் எழுத்தும்;
    எங்கள் குடும்ப பெயரின் முதல் எழுத்தும் ஒரே எழுத்து என்பதால்

    பெருசா எந்த குழப்பம்உம் இல்லாம தமிழ்நாட்டில் 12 ஆண்டுகள் படிச்சு முடிச்சு வீடு திரும்பினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்சி மகேஷ். அப்பாவின் இனிஷியலும் குடும்பப்பெயரின் முதல் எழுத்தும் ஒன்றாக இருந்ததினால் சுமுகமாக 12 ஆண்டுகள் தமிழ்நாட்டைல் படிக்க முடிந்தது நல்ல செய்திதான்.

      நீக்கு
  10. ஆம் குடும்பப் பெயர்களும் சரி பெயர்களும் சரி சிலருக்கு சொல்லக் கூச்சமாக இருக்க நேரிடலாம். கேரளத்தில் பொருதுவாகக் குடும்பப்/தரவாட்டின் பெயர் அல்லது, ஊர்ப் பெயரைச் சேர்த்துச் சொல்லுவதே வழக்கம். பண்டைய ராஜாக்களை அவர்களின் பிறந்த நட்சத்திரத்தைச் சேர்த்துச் சொல்வதுண்டு. உத்திராடம் திருநாள்..ஸ்வாதித்திருநாள் இப்படி. சில பெயர்களும் சரி குடும்பப் பெயர்களும் சரி சில சமயத்தில் சொல்வதற்கு கூப்பிடுவதற்குக் கூச்சமாக இருக்கும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே

      எனக்கு தெரிந்த சில மலையாள நண்பர்களின் குடும்ப பெயர்களும் வித்தியாசமாக இருந்ததை அறிவேன் - செங்கனச்சேரி , புலிப்புறா போன்று.

      பழுதொன்றும் இல்லை. வருகைக்கும் கருதிடலுக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  11. கிராமங்களில் குழந்தைகள் தங்காமல் இறந்து பிறந்தால் தொடர்ந்து நடந்தால் பிறக்கும் குழந்தைக்கு, வேம்பு, மூக்காண்டி, இப்படிப் பெயர் வைத்து அழைக்கிறோம் என்று வேன்டிக் கொள்வதுண்டு. அதன்படி இப்பெயரையும் அவர்களுக்கு மற்றபடி ஒரு நல்ல பெயரும் வைப்பார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே

      ஆம் அறிந்திருக்கிறேன்,.வேம்பு, மூக்காண்டி,இப்படி பெயர் வைப்பது எப்படி பரிகாரமாகிறது?அல்லது குழந்தையை தக்க வைக்க உதவுகிறது?

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  12. பெயர் - பல சமயங்களில் புன்னகைக்க வைத்திருக்கின்றன. இந்தியாவிலேயே பல ஊர்களில் வைக்கப்படும் பெயர்கள் அடுத்த மாநிலத்தினைச் சேர்ந்தவர்களுக்கு புன்னகை வரவழைக்கும். தலைநகரில் இருப்பதால் பல மாநில மனிதர்களை அறிந்திருக்கிறேன் - அவர்கள் பெயரை அறிந்து கொள்ளும் போது நம்மை அறியாமல் புன்னகைக்கவும் செய்திருக்கிறேன்!

    ஸ்ட்ரேஞ்ச் எனும் குடும்பப் பெயர்! நிச்சயம் ஸ்ட்ரேஞ்ச் தான்!

    பதிலளிநீக்கு
  13. Venkat,வருகைக்கும் கருதிடலுக்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு