பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 10 மே, 2020

ஒரே சொல்! - ஒரே பொருள்!!

ரெண்டு ரெண்டா தெரியுது…

நண்பர்களே,

ஒரே சொல்லாக இருந்தாலும்  அவை இடம் பொருள் ஏவல் என்பதற்கேற்ப பல பொருட்களை- (அர்த்தங்களை)  கொடுக்கும் பல வார்த்தைகள் தமிழில் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

உதாரணத்திற்கு :


கோ - பசு , அரசன் 
பொருள் - செல்வம் , அர்த்தம் , "வஸ்த்து" 
மா - பெரியது, மாங்காய் (பழம், மரம்..)
அகம் - வீடு ,உள்ளம் 
கதை - பேசு, கதை 
கத்தி - கத்தி(ஆயுதம்) ,உரக்க
மனை  - நிலம், வீடு
காயம் - உடம்பு , காயம் (படுதல்), மருந்து
மெய் - உண்மை , உடம்பு
பூ  - மலர், உலகம்
கரி - கருப்பு, யானை
அடி - கீழ் , பாதம் ,அளவு
தையல்  - தைப்பது, பெண்
குடி -  அருந்து ,மக்கள்


இவற்றில் வல்லின மெல்லின எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளும் அவ்வாறே வெவ்வேறு  பொருட்களை குறிக்கும்படியாகவும் உள்ளன.


உதாரணத்திற்கு:


புலி  , புளி 
வலி, வளி 
வலம் ,வளம் 
வெல்லம் ,வெள்ளம் 
இலகு ,இளகு 
கலம் ,களம்
கல் ,கள்

இப்படி ஒவ்வொரு  வார்த்தையும் ஒவ்வொரு பொருளை தரக்கூடிய தமிழ் வார்த்தைகள் ஏராளம்.


சில தமிழ் வார்த்தைகளை உச்சரிப்பு பிழையாக சிலர் சொல்லும் போது முற்றிலுமாக பொருள் மாறுபடுவதும் நம் கவனத்திற்கு வராமல் இல்லை.

உதாரணமாக  பழம் என்பதை  பலம் என்று சொல்வது.


காலம் காலமாக உலகம் முழுவதும் பறந்து விரிந்து வியாபித்து, பரம்பரையாக வாழ்ந்து வரும் நம் தமிழ் குடிகளின் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் நம் தமிழ் சந்ததியினர் அவரவர் வாழும் நிலங்களின் அடிப்படை மொழியோடு இணைந்து வாழ்க்கை நடுத்தப்படும் காலத்தின் கட்டாயத்தால் தங்களின் அடிப்படை மொழியின் திரிபு காரணமாக சில வார்த்தைகள், அவை தமிழ் வார்த்தைகளாகவே  இருந்தாலும் மற்ற நிலப்பரப்பில் வாழும் தமிழருக்கு அவை  புரிவதில்லை.


உதாரணத்திற்கு:


"சத்தி"(சக்தி) என்பதற்கு பலம்  என்று ஒரு பொருள் நம் எல்லோருக்கும்  தெரியும் ஆனால்  இதற்கு வாந்தி என்பது  ஒரு பொருளாக வேறு "பிராந்தி"யத்து மக்கள் புழங்குகின்றனர்.


எது எப்படி இருந்தாலும் குழந்தைகள் , ஆண்கள் ,பெண்கள், இளையவர், முதியவர், படித்தவர், பாமரர், நகரத்தார், கிராமத்தார்  என்று  உலகிலுள்ள அத்தனை தமிழர்களின் மத்தியில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே எப்போதும்  ஒரே பொருளை  - ஒரே  அர்த்தத்தை கொடுக்கக்கூடியதாக இந்த சமகால தமிழ் கூறும் நல்லுலகில் ஆழமாக காலூன்றி  நின்று நிதானமாக நிலை நிற்கும் வார்த்தை ஒன்றே ஒன்று தான் உண்டு.


அப்படி ஒரே சொல் ஒரேபொருளை குறிக்கு வார்த்தை  என்ன வார்த்தை?


இந்த வார்த்தை சொல்லும் "பொருள் "  நம் வாழ்வில் புகுந்தால் நம் வாழ்க்கைக்கும் நம் குடும்பத்தின் வாழ்கைக்கும் பெரும் சறுக்கலை  ஏற்படுத்தும் அந்த வார்த்தை …..
 

 "சரக்கு"


பி.கு : இதற்கு தோது  முறுக்கு  - இதற்கும் இரண்டு பொருள்கள் - ஒன்று சாப்பிடும் பலகாரம் - முறுக்கு இன்னொன்று சரக்கு அடிப்பவன்  கையை காதை பிடித்து முறுக்கு.(மகேஸ்வரி மேடம் சரிதானே?)


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ.

6 கருத்துகள்:

  1. ஆஹா ரசனையான வார்த்தைகளை தந்தமைக்கு நன்றி நண்பரே...

    படிக்கும்போது "சரக்கு" அடித்த உணர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      எந்த நாட்டு சரக்கு சாரி… எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் இப்போது?

      மீண்டும் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது.

      நீக்கு
  2. அரியனவற்றை, அறியவேண்டியதை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களுக்கு,

      அநேக நமஸ்காரங்கள்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      அரியனவற்றை அறியவேண்டியதை அறிந்துகொண்டதாக கூறி என்னை அரியணையில் ஏற்றி பார்க்க நினைக்கும் தங்களின் பெருந்தன்மைக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்

      நீக்கு
  3. நல்ல பதிவு கோ.

    துளசிதரன், கீதா

    ஹலோ எல்லாம் சரி அப்ப எங்க நட்பு கோ அப்படின்றதுக்கு நீங்க சொல்லிருக்கறதுல எந்த அர்த்தத்தை எடுத்துக்கணும்!!! ஹிஹிஹிஹிஹி

    சத்தி"(சக்தி) என்பதற்கு பலம் என்று ஒரு பொருள் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இதற்கு வாந்தி என்பது ஒரு பொருளாக வேறு "பிராந்தி"யத்து மக்கள் புழங்குகின்றனர்.//

    அந்த பிராந்திக்காரங்க நாங்கதேன்!!!!!!!

    நல்லாத்தானே போயிட்டுருக்குனு பார்த்தா சரக்கு வந்ததும் தள்ளாடி சரக்குக்கு முறுக்கு நு பிகு எல்லாம் கொடுக்கும் அளவுக்கு ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தள்ளாட்டமில்லா தங்களின் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. அப்போ அந்த "பிராந்தி"யத்துக்காரர்கள் நீங்கதானா?

      கோ.

      நீக்கு