பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 மே, 2020

பாவம் குருமா!!

சொரணை வருமா ?
நண்பர்களே,
சில வாரங்களுக்கு முன் சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தன்று மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து  கை தட்டினார்கள், மருத்துவ முன்னணி வீரர்களையும்  , துப்புரவு பணியாளர்களையும் மற்றும் காவல் கள அதிகாரிகளையும்   கௌரவிக்கும் பொருட்டு.

அதை தொடர்ந்து வீடுகளில் சில மணி நேரத்திற்கு விளக்குகள் ஏற்றப்படவேண்டும் என்றும் சொல்லி இருந்தனர்.

கை  தட்டல் ஒலி கொடுத்தது;  விளக்கேற்றல் ஒளி கொடுத்தது, வைரஸை ஓட்ட வழி கிடைத்ததா?

இங்கும் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்கு அவரவர் தங்கள் வீட்டு தோட்டத்திலோ, அல்லது முற்றங்களிலோ நின்று கை தட்டுவது கடந்த சுமார் 10 வாரங்களாக நடந்துகொண்டுதான்  இருக்கின்றது, இதில் ட்ரம்ஸ் , வான வெடி-வேடிக்கையும்  அடங்கும். 

இவை எல்லாமே நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம், அரசின் ஆலோசனைகளுக்கு செவி சாய்கின்றோம், தங்கள் உயிரை பணயம் வைத்து மக்கள் சேவை ஆற்றுகிறவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்  என்பதை காட்டவேதவிர இது ஏதோ வைரசுக்கு எச்சரிக்கை தருவதற்காகவோ அல்லது அதனை அச்சுறுத்துவதற்காகவோ அல்ல என்பது இன்னமும் சிலருக்கு புரியவில்லையோ  என தோன்றுகிறது.

வைரசுக்கு உருவம் இருக்கின்றது உயிர் இருக்கின்றது , இயக்கம் இருக்கின்றது ஆனால் இதயம் இருக்கின்றதா என தெரியவில்லை.

அதே சமயத்தில்  கண் வாய்  மூக்கு  கூட இருக்கலாம் , ஆனால் காதுகளும் இருப்பதாக சிலர் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது.

காது  இருப்பதாக  அவர்கள் எதை வைத்து முடிவுசெய்தார்களோ தெரியவில்லை.

இதுவாகிலும் பாரவாயில்லை, சிலர் இந்த வைரசுக்கு இசையோடு மொழிகூட தெரியும் என நம்புவது வேடிக்கையின் உச்சம்.

இல்லையென்றால், கொரோனாவை விரட்ட  அல்லது கொரோனாவை போக சொல்லி பாட்டு பாடுவார்களா?

சமீபத்தில் சில காணொளியில்:
"கொரோனா என்னிடம் நெருங்காதே"என்றும்,
"go கொரோனா , go கொரோனா ..go கொரோனா go"என்றும்
"corona corona, go away;come to us  never again"என்றும்
பாடுவதை  கேட்கமுடிந்தது.

கொரோனாவிற்கு கேட்கும் திறனோ, மொழித்திறனோ இல்லை என்பதை உணர்ந்து , இல்லாத கொரோனாவின் காதுகளுக்கு பாடுவதை விடுத்து , அரசு சொல்லும் அறிவுறைகளுக்கு  காது  கொடுப்பது நல்லது.

 பாட்டுக்கள் அத்தனையும் நாம் கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது பாவம் கொரோனா, பாட்டுக்களை கேட்டு புரிந்துகொள்ள காதும் இல்லை அதற்கொரு மொழியும் இல்லை.

காதுகளும் மொழித்திறனும் இருந்தால் இந்த பாட்டுகளுக்கு செவி சாய்த்து ஓடுவதை காட்டிலும் கொரோனா என்ற "அழகிய!!??" பெயரை "குருமா" என்று சிலர் அழைப்பது கேட்டு இன்னும் அதிக வேகத்துடன் ஓடி இருக்குமே?

பாவம்??!! இந்த  சொரணைகெட்ட குருமா.

நன்றி,
மீண்டும் ச (சி)ந்திப்போம்
கோ.

6 கருத்துகள்:

  1. கொரோனாவுக்கு கண் காது இருக்கோ இல்லையோ. அரசுகளுக்கு ரெண்டுமே இல்லைன்னு தான் நினைக்க தோணுது.

    நல்ல பதிவு. தொடர்ந்து எழுதவும் கோ அவர்களே!

    பதிலளிநீக்கு
  2. சொரணை கேட்ட குருமா! :)

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு