மரத்த வச்சவன்…..!!
நண்பர்களே ,
ஒரு திராட்ச்சை தோட்டத்தின் மத்தியில் சில கனி மரங்கள் இருந்தன.
அவற்றுள் சில அத்திமரங்களும் இருந்தன ;அவற்றை பராமரிக்க நம்பிக்கையும் நேர்மையான ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.
தோட்டத்து உரிமையாளர் அவ்வப்போது தோட்டத்திற்கு வந்து திராட்சை கொடிகள் கிளைத்து செழித்து பூக்களும் காய்களும் கனிகளுமாக காட்சி தருவதை பார்த்தும் மற்ற மரங்களின் பலன்களையும் கண்டு பெரிதும் மகிழ்வார்.
அதே சமயத்தில் தோட்டத்து மத்தியில் இருக்கும் ஒரு அத்திமரம் மட்டும் எந்த பலனும் கொடுக்காமல் நின்றுகொண்டிருப்பதை கண்டு சற்று சோகமாவார், எனினும் இந்த ஆண்டு கண்டிப்பாக காய்க்கும் என்ற நம்பிக்கையோடும் இருந்தார்.
இப்படியாக மூன்றாண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
இப்போது மீண்டும் தனது தோட்டம் வந்து பார்த்தவருக்கு மிகுந்த மனவேதனையும் சோகத்தையும் கொடுத்தது, காய்க்காகவும் கனிக்காகவும் வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும், அந்த காய்க்காத மரம்.
கோபமுற்றவர் அந்த தோட்டக்காரரிடம், " எந்த பலனையும் கொடுக்காத இந்த மரத்தை வைத்திருப்பதால் எந்த பலனும் இல்லை இதை வெட்டி அக்கினியிலே போடு" என்றார்.
சின்ன கன்றிலிருந்து குழந்தையை போல பராமரித்து வளர்த்து வந்த தோட்டக்காரருக்கு , உரிமையாளரின் கட்டளை பெரும் வேதனையையும் கவலையையும் அளித்தது.
எனினும் தயக்கத்துடன் , " ஐயா, இன்னும் ஓராண்டு பார்க்கலாம் அதற்குள் இந்த மரத்தை இன்னும் கூடுதல் கவனத்துடனும் சத்தான உரங்களையும் இட்டு நன்றாக நீர் பாய்ச்சி பராமரிக்கின்றேன், அப்படியும் அடுத்த வருடமும் இதே போல பலன் இன்றி இருந்தால் நீங்கள் சொல்வதுபோல் வெட்டிவிடுகிறேன் கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என கெஞ்சி கேட்டுகொண்டார்.
தோட்டத்து உரிமையாளரும் தோட்டக்காரரின் பரிந்துரைக்கு, மனமில்லாமல், செவி சாய்த்தார்.
மகிழ்ச்சியுடன் தோட்டத்து உரிமையாளரை வழி அனுப்பிவிட்டு , அந்த சிறப்பு மரத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி , நீர் பாய்ச்சி, புதிய , திடமான உரங்கள் இட்டு , பூச்சி பொட்டு அணுகாமல் இரவும் பகலும் காவல் புரிந்து நன்றாக பராமரித்து வந்தார்.
ஓராண்டாக தோட்டத்து பக்கமே வராமல் வெளிநாடு சென்றிருந்த உரிமையாளர் இன்னும் ஓரிரு நாட்களில் , "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு " என்ற பாணியில் வரப்போகிறார் என்ற செய்தி கிடைத்தது தோட்டக்காரருக்கு.
இந்த ஓராண்டாக என்னென்ன மாற்றங்கள் உண்டாகின , பலன் கொடுத்திருக்குமா அல்லது இருவரின் நம்பிக்கைகளையும் பலமாக கெடுத்திருக்குமா? அல்லது சபாஷ் என தட்டிக்கொடுக்கப்படுமா அல்லது வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுமா?
பொறுத்திருந்து பாப்போம்.
அதுவரை,
நன்றி ,
மீண்டும் ச(சி)ந்திப்போம் .
கோ.
நாலை வந்துதான் என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்கனுமா.
பதிலளிநீக்கும்ம்ம் சரி சரி.
வாங்க மகேஷ், வருகைக்கு நன்றி.
நீக்குபலன் கிடைக்குமா? தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதெரியலையே, பார்க்கலாம் .
நீக்குகண்டிப்பாகப் பலன் கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம்...
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
மரத்தோடு பேசியிருப்பார் அந்தத் தோட்டக்காரர். எந்தச் செடி மரத்திற்கும் நம் அன்பான தடவல்கள், பேச்சுகள் அதனை உயிர்ப்பிக்கும். அந்த நம்பிக்கை
தொடர்கிறோம்
கீதா
தங்களின் நம்பிக்கை பலன் தந்திருக்குமா? பார்க்கலாம் பொறுத்திருந்து.
நீக்கு