பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 மே, 2020

வீட்டுவேலை

பத்து  - பாத்திரம் 

நண்பர்களே,

ஆரம்ப பாட சாலையில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே,ஆசிரியரான என் தந்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததிந்த வீட்டுவேலை எனப்படும் ஹோம்  ஒர்க்.

என் வீட்டிற்கு வரும் என் தந்தையின் மாணவர்கள் மாலை ஆறிலிருந்து இரவு எட்டு மணிவரை வீட்டு பாடங்கள் செய்வதும் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்வதும் வரவிருக்கும் தேர்விற்கான தயாரிப்பு வேலைகளை செய்வதுமாக இருப்பார்கள்.


அவர்களுடன் என்னையும் ஒரு மூலையில் உட்கார வைத்து , என் மூளைக்கு எட்டும் சில வேலைகளை செய்ய சொல்லுவார்.


அன்றிலிருந்து பள்ளி படிப்பு முடியும் வரை மாலை ஆறு முதல் இரவு எட்டுவரை வீட்டு  வேலை செய்யும் பழக்கம் என்னை ஆட்கொண்டது.


கல்லூரி காம்பௌண்டை தொட்டதும் வீட்டுப்பாடம் செய்யும்  பழக்கும் வீடுவரை தொடராமல் அவ்வப்போது  கல்லூரி நூல் நிலையத்திலேயே  செய்து முடிக்கும்வண்ணம் மாலை ஐந்துக்குள்ளேயே அவகாசம் கிடைத்துவிடும்.


பிறகு வீட்டுக்கு வந்ததும் , அன்றைய கல்லூரி நாளின் நடப்புகளை சென்சார் செய்து அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசிவிட்டு, ஆல்  இந்தியா ரேடியோவில், வயலும் வாழ்வும், சரோஜ் நாராயண சாமியின் டெல்லி செய்தியையும் கேட்டுவிட்டு  இரவு படுக்கப்போவது வழக்கமாகிப்போனது.



வீட்டுப்பாடம் - வீட்டுவேலை என்பதெல்லாம் எப்போதாவது முக்கிய தேர்வுகள் சமயத்தில் மட்டுமே  அவ்வப்போது எட்டி பார்க்கும்.



இப்படியாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என் பயணம் தொடர, பட்டப்படிப்பும் , அதற்குமேலுள்ள பட்ட மேற்படிப்பு  அதற்கு தோதாக தொழில் ரீதியான மேலும் ஒரு பட்டபடிப்பையும் படித்து முடித்தாயிற்று.




அடுத்ததென்ன? வேலைதான்.


என்ன வேலை? அதில் என் பாத்திரம் என்ன?


சொல்லுவேன் நாளை.


அதுவரை …


நன்றி.


மீண்டும் ச(சி)ந்திப்போம்.


கோ








 
 

5 கருத்துகள்:

  1. பாத்திரம் என்ன...

    அட... இங்கேயும் தொடரும் போட்டு இருக்கா? சரி காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      நம்பிக்கையோடு தொடரவேண்டியதுதானே வாழ்க்கை.

      வருகைக்கும் வசிப்பிற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. வீட்டுலதான் சென்சார் செய்து கல்லூரி நடப்புகள் சொல்லி இருந்தாலும் பதிவில் கல்லூரி கதைகள் சொல்லி இருந்திருக்கலாமே?
    அப்படி இப்படி ஏதாவது கேல்ஃப்ரென்ஸ் நம்ம கோ சாருக்கு இருந்தாங்கலானு தெரிஞ்சிருக்குலாம்னுதான் ஒரு ஆற்வம்:)))



    ம்ம்ம்ம் நாலை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      சென்சார் என்பது வீட்டாருக்கு மட்டுமல்ல, உன்னைப்போல சின்னப்பிள்ளைகளுக்கும் தான்.

      அப்படி என்னய்யா உமக்கு அத்தனை curious என்னுடைய biography , autography அறிந்துகொள்ள?

      உனக்கு கலியாணம் ஆனா பிறகு சொல்கிறேன், விலாவரியாக ஒரு வரியும் விடாமல் அப்படி இப்படி ஏதெனும் இருந்ததா என்று.

      நீக்கு
  3. sorry... மகேஷ், spelling mistake , கலியாணம் "ஆனா" அல்ல கல்யாணம் "ஆன" பிறகு.

    பதிலளிநீக்கு