பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 மே, 2020

என்று பணியும் இந்த….

புரளியின் மோகம்?
நண்பர்களே,


வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த காலங்களில்கூட இத்தகு ஊரடங்கும் வீட்டுக்குள் முடக்கமும் இருந்ததில்லை என அந்த காலத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கீ(த்)தா க்களும்  பல தாத்தாக்களும் சொல்ல கேட்டிருப்போம்.

உலகையே தன்  வசப்படுத்தியிருந்த ரோமப்பேரரசையும்   அதற்கடுத்து சூரியன் மறையாத சமஸ்தானமாக ஆட்சி செய்த ஆங்கிலேயரின் பேரரசையும்   தற்போது வல்லரசு என்று வாகை சூடி வலம்  வந்துகொண்டிருக்கும் வளமிக்க அமெரிக்காவையும் அச்சத்துடன் ஆட்டம் கொள்ள செய்திருக்கின்றது, இந்த கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் கொரோனா.

அத்துடன்  உலக நாடுகள் அனைத்திலும் தனக்குண்டான வரி, திரை வட்டி , அசல்  என உயிர்களை பலிகொண்டு பவனி வரும் இந்த கொரானாவின் கொட்டம் என்று தான் பணியுமோ?

மில்லியன்  டாலர் கேள்வியாக பில்லியன் மக்களால்  கேட்கப்படும் இந்த கேள்விக்கான பதில் எந்த வல்லரசிடமும் இல்லை என்பது வாழ்வின் மீதான நமிக்கையை வலுவிழக்க செய்வதாகவும்  இருக்கின்றது.

மேலும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் உண்டாக்கும் இந்த கொரோனாவைவிற்கு மாற்று மருந்தாக பலர் பலவிதமான மருந்துகளை, சிகிச்சை முறைகளை  நாள்தோறும் இலவசமாக வாரி வாரி வழங்கி வருகின்றனர் சமூக ஊடகங்களில்.

இத்தகு அறிவுரை வழங்கும் பெரும்பான்மையினர் , தங்களின் கல்வித்தகுதி, அனுபவம்,தொழில் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல், எதையும்  சொல்லலாம் என்ற எண்ணத்தில் மக்களின் எண்ணங்களில் மருந்தென்ற பெயரில் சில மூலிகைகளை விதைக்கின்றனர்.

மூலிகை மருந்துகள் மகத்துவமிக்கவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதே சமயத்தில் அளவிற்கு மிஞ்சுனால் அமுதமும் நஞ்சு என்பதை உணர்ந்தவர்களாக பொறுப்புடன் இத்தகு ஆலோசகர்களும் பொது மக்களும் செயல் பட வேண்டும்.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் -அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பதறிவு".

ஒருவர் சொல்கிறார் இதற்கு இதுதான் தீர்வு என்று, மற்றோருவர் அதை மறுத்து , அவர் சொல்வதை கேட்க்காதீர்கள், தீர்வு என்னிடம் இருக்கின்றது என்று.

இந்த நிலைமையில், என்று பணியும் இந்த கொரோனா வைரஸ் என்று ஏங்குவதைவிட என்று மடியும் இந்த புரளியின் மோகம் என்றுதான் நினைக்க தோன்றுகின்றது.

மக்களை காப்பாற்ற அரசை தவிர அக்கறை யாரால் எடுக்க கூடும்.

எனவே கூடுமான வரையில் அரசின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு அங்கீகரித்து  முன் மொழியும் மருந்து மற்றும் சிகிச்சைகளை பின்பற்றுவதே சால  சிறந்தது.

அதுவரை ஊர் பேர் தெரியாத ,படிப்பறிவோ, பட்டறிவோ இல்லாத எவர் சொல்லை கேட்டாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து அரசின் ஆலோசனைகளையும் கவனத்தில்கொண்டு செயல் பட்டால் தாக்கத்தின் வீரியம் தணியும் கொடுங்கோல் கொரோனா விரைவில் பணியும்.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம் 
கோ.

8 கருத்துகள்:

 1. இந்த சோதனை நாட்களில் அனைவருமே மருத்துவ நிபுணர்கள் ஆகிவிட்டனர். விரைவில் இதற்கு ஒரு தீர்வு வந்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் ,

   தீர்வுகள் விரைவில் வரும் என நம்புவோம்..
   .

   நீக்கு
 2. கோ ...

  அரசு ஒழுங்காக தன பணியை செய்தால் இந்த மாதிரி தற்குறி மருத்துவர்கள் வர மாட்டார்களே!

  என்னமோ போங்க, இந்த கொரோனாவின் தாக்கம் எங்கே போய் முடிய போதோ? முடியமோன்னு நினைத்தாலே நடுங்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த அரசை சொல்கின்றீர்கள், வல்லரசுகளே வாய் பிளந்து நிற்கையில் எந்த நல்லரசும் "நொள்" லரசும் என்ன செய்ய முடியும்?

   இது விண்ணரசின் அஜெண்டா இதனை வெல்ல இங்கே எவண்டா?

   நீக்கு
  2. விசு உங்க ஊர் தலைவரே ஏதேதோ மருந்து சொல்லுறார். அப்புறம் தொற்றா அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லுறார். ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. எல்லா நாடுகளுமே என்ன செய்ய என்று தெரியாமல் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற ரீதியில்தான் இருக்கின்றன. இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளுமே.

   கீதா

   நீக்கு
 3. இது விரைவில் தன் கொட்டத்தை அடக்கி இவ்வுலகம் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும். வேறு என்ன சொல்ல முடியும்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 4. இதற்கு போட்ட கமென்ட் எங்கே போச்சு?!! ஆ ஆ ஆ கருத்து பதியாமல் போய்விட்டதே!

  விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம் கோ. வேறு என்ன செய்ய. டென்ஷனாமும் மக்களுக்கும் எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்றிருக்கும் போது பல மருத்துவங்களும் பேசப்படும்தான். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு