பின்பற்றுபவர்கள்

திங்கள், 18 மே, 2020

பூவாகி... காயாகி - 4

என் வீட்டுத்தோட்டத்தில்….

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க..பூவாகி... காயாகி - 3

அடுத்த நாள் காலை   தொலைபேசி மனிஷா கொய்ராலா குரலில் சிரித்துகொண்டே  மணி அடித்தது. (ஏன் .. .. இப்படி இருக்கக்கூடாதா?)

குட் மார்னிங் மிஸ்டர் கோ.

குட் மார்னிங் ஸ்டீவ் .

சாரி ஐ மிஸ்ட் யுவர் கால் லாஸ்ட் நைட், டிட்  யு ஸீ யுவர் கார்டன் ?

நாட் எட்.

(பீட்டர் தவிர்- வெல்க தமிழ்…)

அவர் சொன்ன விஷயம்  என்னால் நம்பமுடியவில்லை ?

ஓடி சென்று தோட்டத்தை பார்த்தேன்.

மரம் இருந்த இடத்து குழி பனியால்  நிரம்பி இருக்கும் என எதிர்பார்த்த என் விழிகள் கண்ட காட்சியால் கண்ணீரால் குளங்களாகின. 

அப்படி என்ன  என் கண்களை குளங்களாக்கிய காட்சி?

அது காட்சி  மட்டுமல்ல, என் தோட்டத்தின் மாட்சி.

மரத்தை வெட்டி வேரோடு பிடுங்கி நெருப்புக்கு இரையாக்குவதற்கு பதில், எல்லா கிளைகளையும் நேர்த்தியாக ட்ரிம் செய்து இலைகள் தேவையில்லாத கிளைகள் இல்லாமல், அத்துணை பெரிய மரத்தையம் ப்ரூனிங் செய்து இருந்தார்.

மேலும்  அடி மரத்தை சுற்றி வட்ட வடிவில் ஓரடி ஆழத்திற்கு பள்ளம் பறித்து அதில் புதிய உரங்கள் இட்டு , அந்த உரமிடப்பட்ட இடம் சுற்றி சிறிய கூழாங்கற்கள் கொண்டு நிரப்பி (ஈரத்தன்மை காய்ந்து ஆவியாகாமல் இருக்க), நீரூற்றி , மரத்தில் அட்டை பூச்சுக்கள் போன்றவை ஏறாமல் இருக்க அடி  மரம் சுற்றி ஒருவகை  பேன்டேஜ் சுற்றி வைத்திருந்தார்.

அந்த மரத்திற்கு சுமார் இரண்டடி தூரத்தில் சில பூ செடிகளையும் நட்டு வைத்திருந்தார்.

இவை எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தாலும் ஒன்பதாண்டுகால பந்தமுள்ள ஆப்பிள் மரம் வெட்டப்படாமல் இருந்தது எனக்கு மிக மிக மகிழ்சியாய் இருந்தது.

அவ்வப்போது ப்ரூனிங் செய்வது புதிய கிளைகள் உருவாகவும்  அருகிலேயே வேறு சில பூச்செடிகள் வைப்பதால் மகரந்த சேர்க்கை வலுப்பெறவும் செய்வதால் பூக்கின்ற எல்லா பூக்களுமே வீரியம் உள்ளவைகளாகவும் அதிக மகசூல் கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என்று ஒரு  கண்திறப்பு பாடம் சொல்லி கொடுத்தார்.

அவர் சென்ற பிறகு அந்த ஆப்பிள் மரத்தை கட்டி பிடித்துக்கொண்டு மான சீகமாக அதனிடம் மன்னிப்பு கேட்கும்போதே என் கண்ணீர் அதன் வேரை  முத்தமிட்டது.

மரமும் என்னை மன்னித்துவிடுங்கள்,  இனி பாருங்கள் நான் எப்படி என்று தன் மொட்டை தலையை ஆட்டாமல்  இனி நான் விடும் ஒவ்வொரு மொட்டையும்  கனியாக்கித்தருவேன்  என்று என்னிடம் உறுதி அளித்ததாக உணர்ந்தேன்.

வாய்ப்புக்கள் கொடுக்கலாம் திருந்த நினைப்பவர்களுக்கு.

மன்னிக்கலாம் ஏழு எழுபதுமுறை மனம் திருந்த மனம் இருப்பவர்களை..

தொடரின் முற்பகுதியில் வந்த அத்தி மரத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும் - யூகிக்க முடிகிறதா ?

பி கு: இப்போது இலைகளுடன் பூக்களுடன் காட்சி  அளிக்கின்றது என் வீட்டு தோட்டத்தில்  புதிய பொலிவுடனும் நம்பிக்கை ஒளியுடனும்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் .

கோ.

10 கருத்துகள்:

 1. நல்ல வேளை மரம் வெட்டப்படவில்லை! மனம் மகிழ்ச்சியடைந்தது. என்னதான் கன்றுகளை நட்டு அவற்றை வளர்த்ததில் நமது பங்கும் உண்டு என்றாலும் அதனை வெட்டும் உரிமை நமக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் ,

   வருகைக்கு , மிக்க நன்றிகள்; ஆம் வெட்டும் உரிமை இல்லைதான் எனினும் வெட்டியாய் இருப்பதைக்கண்டு கொஞ்சம் கோபமும் எரிச்சலும் எட்டிப்பார்க்கும்போது சிந்தனை சிதறுகிறதே.

   நீக்கு
 2. நான் நினைத்ததுதான். இப்படி கிளைகள் வெட்டி விட்டு உரமும் இட்டால் மீண்டும் நல்ல பயன் தரும் மரமாகலாம். எங்கள் வீட்டு அனுபவம் தான். எப்படியோ மரம் வெட்டப்படவில்லை. மகிழ்ச்சி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ, தங்கள் மனதில் மகிழ்சியை பூக்க வைத்த அந்த மரத்தின் சார்பில் உங்களுக்கு என் நன்றிகள்.

   நீக்கு
 3. கோ இப்போதுதான் மனம் குதூகலம். மரம் வெட்டப்படவில்லை. இதை ஊகிக்க முடிந்தது என்றாலும் இப்போது உறுதியாக்கப்பட்டதில் மேலும் மகிழ்ச்சி.

  உங்கள் தோட்டப்பராமரிப்பாளர்கள் மிக நன்றாகச் செய்கிறார்களே அவர்களாகவே யோசித்தும் பூச்செடிகள் நட்டு என்று மிக அழகாக ஈடுபாடுடன் செய்கிறார்களே! வியப்பு இங்கு உள்ள நிலையை நினைத்தால்.

  கேள்விப்பட்டதுண்டுதான் சில நேரிலும் கண்டதுண்டு அவர்களது ஈடுபாட்டை.

  அவருக்கும் பாராட்டுகள் மரத்தை மிக நன்றாகப் பராமரித்து மீட்டெடுத்து உங்களிடம் கொடுத்துச் சென்றதற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு தெரியும் நீங்கள் யூகித்துவிடுவீர்கள் என்று.

   இங்குள்ள தோட்ட பணியாளர்களுள் பெரும்பான்மையானவர்கள் தொழில் ரீதியான அனுபவம் மிக்கவர்கள்., உங்களின் வாழ்த்துக்களை அவரிடம் சேர்த்துவிடுகிறேன். தங்கள் மனம் குதூகல துளிர்விட்டது கண்டு என் மனமும் இதழ்விரித்து
   மகிழ்கிறது.

   நீக்கு
 4. //மனிஷா கொய்ராலா குரலில் சிரித்துகொண்டே மணி அடித்தது. (ஏன் .. .. இப்படி இருக்கக்கூடாதா?)//

  இன்னும் அந்த குசும்பு கொஞ்சமும் போகலை கோ...!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் பின்னூட்டத்தில் இரண்டாம் வரியில் வரும் முதல் வார்த்தை"இன்னும்" என்பதன் அர்த்தம் "இன்னும்" எனக்கு விளங்கவில்லை.
  பதிவை குறித்து "இன்னும்" கொஞ்சம் சொல்லி சொல்லி இருந்தால் "இன்னும்" சிறப்பாக இருந்திருக்கும்
  வருகைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. hi sir,

  வீட்டு பாடம்/வீட்டு வேலை எப்படி போகிறது?
  கடைசியாக நான் மார்ச்  21 - சனிக்கிழமை அலுவலகத்திற்கு சென்றது.
  ஏதோ கிடைத்த  இந்த இடைப்பட்ட சமயத்தில் ஒன்னு ரெண்டு பதிவுகள் எழுதியிருக்கேன்
  அதோடு  இதுவரைக்கும் ஒரு ஆறு நாவல்களை வாசித்திருக்கிறேன்.
  எனக்கு நல்லாவே-பொழுது போகுது.
  கடந்த வருடம்  வட இந்திய சுற்றுலாவின்போது ஷிம்லாவுக்கு  சென்றபோது  ஆப்பில் தோட்டம் சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
  தோட்டம் செல்வதற்கு முன்பு ஆப்பில் தோட்டம் குறித்து நிறைய கற்பனை செய்து வைத்திருந்தேன்.
  ஆனால் தோட்டத்தில் சென்று பார்த்தால் ஒரே  ஏமாற்றம்.
  முதலாவது அந்த தோட்டத்தில் ஆப்பில் மரங்கள்  நிறைய இல்லை;
  இருக்குற ஒன்னு ரெண்டு மரங்களை தொட்டு பார்க்க நினைத்தாலும் தோட்ட காவலாளி
  கத்திட்டே இருந்தார். அதனால்   ஆப்பில்  பழத்தை மட்டும் தொடுற மாதிரி  ஃபோட்டோவிற்கு ஃபோஸ் கொடுத்துவிட்டு
  தோட்டத்தை விட்டு கிழம்பினோம்.
  உங்கள் வீட்லயே ஆப்பில் மரம் இருப்பதை  வாசித்து
  அது வெட்ட படாமல்
  தப்பி பிழைத்தது மகிழ்ச்சியே:)))
  ****
  அப்பறம் என்னோட ஃப்ரெண்ட் 
  ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கான்.
  சமயம் இருக்கும்போது எட்டிப் பாருங்கள்
  நகைச்சுவைக்கு  பஞ்சம் இருக்காது.
  www.naveencbe.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. மகேஷ்,

  சௌக்கியமா?

  பொழுது நன்றாக போவதை குறித்து மகிழ்ச்சி.

  நண்பரின் பதிவை பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு