தாலிக்கு தங்கம் !விரலுக்கு மோதிரம்!!
நண்பர்களே,
உலகின் பல நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட பணியாளர்களை தற்போதுள்ள சூழலில் பாராட்டியம் கவரவித்தும் வருவது நாம் அறிந்ததே.
இந்தியா மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் மருத்துவ சேவை புரிவபர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறை , தீ அணைப்புத்துறை போன்ற துறைகளை சார்ந்தவர்களை கவுரவ படுத்தும் வகையில் அவர்களுக்கு சில உணவு பொருட்கள், பரிசு பொருட்கள் கொடுத்ததையும் , கொடுத்து வருவதையும் நாம் அவ்வப்போது செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
அவ்வகையில், இங்கிலாந்தில் பல விற்பனை நிலையங்கள், உணவு விடுதிகள், பல் பொருள் அங்காடிகள் போன்றவை மருத்துவ துறை பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் 10% -70% வரை பொருட்கள் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது.
சில நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பு பொருட்களை இலவசமாக கொண்டுவந்து மருத்துவ மனை வளாகத்தில் வைத்தும் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பியும் சிறப்பு செய்து வருகின்றனர்.
அத்தகு பொருட்களுள் சமைத்த விதவிதமான உணவுகள்(நாள்தோறும்) , சாக்லேட்டுகள், வகை வகையான sandwichகள், குளிர், மற்றும் சூடான பானங்கள், காபி , தேநீர் பொட்டலங்கள், பழங்கள்,வாசனை திரவியங்கள், முக கவசங்கள், முக சவரம் செய்ய கிரீம்கள், razors போன்றவற்றோடு, வட்டியில்லா கடன்கள், கார் மற்றும் மிதிவண்டி இலவச பழுது பார்த்தல், இலவச பார்க்கிங் வசதி, இலவச தங்கும் விடுதிகள் 85000 இலவச ஆன் லைன் விளையாட்டுக்கள், unlimited mobile Data , வாடகை இல்லா இலவச கார்கள், இன்னும் எத்தனை எத்தனையோ இலவசங்களை மருத்துவ பணியாளர்களுக்கு பல நிறுவனங்கள் வழங்கி கொண்டு வருகின்றன.
அவற்றோடு சேர்த்து மருத்துவர்கள், தாதியர், மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்கான இலவச குடியிருப்புகளை சில நிறுவனங்கள் செய்து கொடுத்து வீட்டிற்கு செல்லமுடியாமல் தொடர்ந்து பணிபுரியும் அவர்களின் சேவையில் தங்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யும் இந்த உதவி அளப்பரியது.
மேலும் பல் பொருள் அங்காடிகளில் வாங்கப்படும் பொருட்களுக்கு பெருந்தொகை தள்ளுபடி செய்வதோடு , மருத்துவ பணியாளர் அனைவருக்கும் 500 ருபாய் மதிப்பிலான இலவச பூங்கொத்துக்கள் போன்றவையும் கொடுக்கப்படுகின்றது.
இவை எல்லாவற்றையும் தாண்டி, மருத்துவ பணியாளர்களுள் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரின் "கனவு "திருமணதிற்கான எல்லா ஏற்பாடுகளையும் ரூபாய் 26 லட்சம்(£26,000) வரை இலவசமாக செய்து கொடுப்பதாகவும் அந்த திருமணத்தை வருகிற 2021 மார்ச் மாதம் நடத்தி தருவதாகவும் வாக்களித்திருக்கின்றது ஒரு பிரபல திருமண ஒழுங்கு செய்யும் நிறுவனம். யார் அந்த அதிர்ஷ்ட சாலி???
இப்படி தேசிய மக்கள் நல்வாழ்வு துறை (National Health Service )ஊழியர்களின் சேவையை பாராட்டி நாட்டின் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு உதவிகளை செய்துவருவது பாராட்டிற்குரியது.
மருத்துவமனை தவிர்த்து வெளியில் இதுபோன்ற சலுகைகளை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இதுபோன்று வேறெங்கேனும் நடக்கும்/ நடந்த செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
சிறந்த சேவை...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குஊழியர்களின் சேவையை பாராட்டி நாட்டின் பெரும்பான்மையான நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு உதவிகளை செய்துவருவது பாராட்டிற்குரியது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
நீக்குசிறப்பான தகவல். பாராட்டுக்குரியதும் கூட!
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
பதிலளிநீக்குசிறப்பான சேவை. அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்
பதிலளிநீக்கு