சுதந்தர தின வாழ்த்துக்கள்!!
பார்புகழும் பாரத நாடு
யார் விதைத்தார் அதற்க்குக் கேடு
எங்கும் எதுவும் லஞ்சத்தோடு ; அதை
எடுத்துப்போட்டால் நமக்கேது ஈடு?
அரசியல் எனும் சந்தன குளத்தை
நரகல் சாக்கடை ஆக்கியது யார்
அரைவேக்காட்டு அரசியல் தரகர்
அவரே காரணம் அவனியில் கடையர்.
வளங்களை சரியாய் பகிர்தல் வேண்டும்
நிலங்களை நித்தம் பயிரிடல் வேண்டும்
தரிசு நிலங்களை வீடாக்கலாம் - பயிர்
விளையும் நிலங்களை வீணாக்கலாமா?
அந்நியன் நம்மை ஆட்டிப்படைத்தது
அன்றைக்கே முடிந்தது நாற்பத்தேழோடு
இன்னும் எவரேனும் வாலாட்ட முனைந்தால்
அன்றைக்குத் தெரியும் இந்தியர் யாரென்று.
இரவில் வாங்கினோம் சுதந்தரம்
இல்லை என்று மறுக்க வில்லை - ஆனால்
இரவல் வாங்கவில்லையே
எவர்க்கும் திருப்பிக் கொடுக்க?
காஷ்மீர் என்ன பஞ்சு மிட்டாயா
கோஷமிடுவோர்க்கு எல்லாம் கிள்ளி கொடுக்க?
ரோஷமுள்ள இந்தியர் எவரும் ரொம்பப்
பாசமுடனதை பராமரிக்க வேண்டும்.
பட்டொளி வீசி பறந்திடும் கொடியை
பார்க்கையிலே நெஞ்சில் பரவசம் -அதில்
சட்டென வந்து மலர் முகம் காட்டி
சரித்திரம் சொல்லும் பலர்முகம்
குருதியும் வேதனை சொல்லொன்னா துயரும்
கொட்டி கொடுத்தே எல்லையில்
உறுதியும் வலிமையையும் உரமென இட்டு
காத்து நிற்கும் வீரனே- உனக்கின்று
வீர வணக்கம் மட்டும் சொன்னால்
விடியுமா நாளை எம் பொழுது- இனி
வாரம் ஒருமுறை உமக்காய் நாங்கள்
வேண்டுவோம் இறையடி தொழுது.
எண்ணம் உதிர்த்தவை நிஜம்தானே - அதை
எழுத்தில் வடித்ததுவும் முறைதானே
என்ன யாம் உரைப்பது சரி தானே? - நமை
எதிர்ப்"போர்" முகத்தில் கரிதானே?
வாழ்க பாரதம்!
ஜெய் ஹிந்த்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நன்னாளில் பிறந்த நாள் காணும் என் இதயத்திற்கும் என் வாழ்க்கைக்கும் மிகமும் நெருக்கமான என் அன்பிற்குரிய என் பெரிய அக்கா அவர்களுக்கும் ஏனைய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
வணக்கம் நண்பரே கவிதை அருமை
பதிலளிநீக்குஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
தங்களின் சகோதரிக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
நீக்குகோ
வணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் படைப்பு அருமை, வாழ்த்துக்கள். நன்றி.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
நீக்குகோ
ko sir? nalama ningal?
பதிலளிநீக்குmika ninda naatkalaaka ungal pathivukal kaanavillai.
150 pathivukal thoda nerungum samaiyathil thidir ungalin amaithi
ethirpaaraathathu.
sikkiram elutha vaarungal sir.
naangal kaathirikkirom.
மகேஷ், எப்படி இருக்கின்றீர்கள். நான் நலம். வருகைக்கும் பாராட்டுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி
நீக்குகோ