பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

"மறுமுகம் அறிமுகம்"

போவோமா  ஊர்கோலம்....

நண்பர்களே,

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பல்வேறு வேறுபாடுகளில் "முகங்கள்" என உருவகபடுத்தபடும் "தன்மைகள்" ஆங்கிலத்தில் "Characters " என்பதும் அடங்கும்.

ஒரு சிங்கத்தின் தன்மை  - குணாதிசயம் எந்த சூழ் நிலையிலும்ஒன்றுதான், அதேபோல்,புலி, கரடி, யானை, சிறுத்தை இவைகளின் தன்மைகளும் - முகங்களும்- குணாதிசயங்களும் எப்போதும் எல்லா சூழ் நிலைகளிலும் ஒன்றுதான் (சர்க்கஸ் கூடாரம் தவிர்த்து).

இவற்றை பார்த்தாலோ, நெருங்கினாலோ அவற்றின் தன்மை இன்னது என்று தெரிந்திருப்பதால், அவற்றோடு எப்படி நடந்துகொள்வது என்பதும் நமக்கு தெரியும்.

ஆனால், மனிதத்தன்மை அல்லது மனித கேரக்டர் அவனது "முகம்" மட்டும் யாராலும் எப்போதும் சரியாக கணிக்க முடியாததாய் -  " பண்முகம்" கொண்டதாக அமைந்துவிடுவதால்  , யார் யார் எப்படி என்பதை எளிதில் புரிந்து கொள்ள  முடியாததால், நாம் யாரிடம் எப்படி எந்த அளவில், பழகவேண்டும் , பேசவேண்டும்,என்று அறியாமல் சில வேளைகளில் சிக்கல்களுக்கு ஆளாக நேர்வதுண்டு.

பார்பதற்கு நல்லவர்கள்போல் தோற்றமளிப்பவர் உண்மையிலேயே நல்லவர்தானா, அல்லது பார்ப்பதற்கு கொடூரமாக தோற்றமளிப்பவர் உண்மையிலேயே கொடூரமானவர்தானா என்று தீர்மானிப்பதும் கூடாததாகி விடுகிறது.

இப்படி கண்களால் காணும் இதுபோன்ற மனிதர்களையே சரியாக புரிந்து கொள்ள முடியாதபோது, கண்ணுக்கெட்டாத தூரத்தில், இதுவரை ஒருமுறை கூட பார்க்காத , கடிதங்கள் மூலமோ அல்லது நவீன தொழில் நுட்ப தகவல் தொடர்பு வசிதிகள் மூலமோ அறிந்துகொண்ட சிலரின் நிஜ முகத்தை எப்படி அளவிடமுடியும்.

இப்படி கற்பனையில் நல்லவர் என்று நினைத்து கழுத்தை நீட்டும் அளவிற்கு போய், பின்னர் நிஜமுகம்  தெரியவந்து நிம்மதி இழந்தோரும் நம்மிடையே நிறையப்பேர்.

(இங்கே சொல்லபோகும் விஷயமும் சற்றேறகுறைய இதுபோன்றதொன்றுதான்)

சில விஷயங்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் எல்லா விஷயங்களிலும் அப்படியே இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? 

இப்படித்தான்,

ஒரு நாள் , கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து ஒரு சனிக்கிழமை காலை தூரத்தில் இருக்கு ஒரு எழில் சூழ்ந்த மலைகளும் அதன் மேலுள்ள கானக சுற்றுலா தளத்தையும் கண்டு களித்து பின்னர் அங்கேயே இரவு  தங்கி இருந்துவிட்டு மறு நாள் வீடு திரும்புவதாக திட்ட மிட்டு தங்களின் பயணத்தை காரில் துவங்கினர்.

போகும் வழியில் தங்களுக்கு தேவையான காலை மற்றும் மத்திய  உணவுகளையும் நொறுக்கு தீனிகளையும் (அது எப்படி  மனிதன் சாப்பிடும் உணவை தீனி என்று அழைப்பது?)  வாங்கும் பொருட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு , கணவன் மட்டும் இறங்கி அங்கிருந்த ஒரு பிரபல உணவு விடுதியில்  தங்களுக்கு காலைக்கு தேவையான பூரி கிழங்கு, மசால் தோசைகளும், மத்திய வேளைக்கு  மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், தண்ணீர் ,மற்றும் தேவையான்  குருமா வகைகளையும் வாங்கி கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.

கொஞ்ச தூரம் பயண பட்ட பிறகு காலை உணவிற்காக சாலையின் ஓரத்தில் மரங்கள் ( அசோகர்  நட்டவையா என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை- தகவல் கிடைத்தால் பிறகு சொல்கிறேன்) நிறைந்திருந்த ஒரு அழகிய புல் தரையில் அமர்ந்து காலை உணவினை உண்டு விட்டு, மீண்டும் பயணம் துவங்கினர்.

பயணம் இன்னும் மகிழ்வானதாக அமைந்தது. மத்தியம் உணவு வேளைக்கு முன் சுற்றுலா தளத்தை அடைந்தவர்கள், அங்கிருந்த நீர் வீழ்ச்சியில் குளித்து முடித்துவிட்டு அருகிலிருந்த முன் பதிவு செய்திருந்த அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு மத்திய உணவு அருந்த அமர்ந்து பிரியாணி வைக்கபட்டிருந்த பிளாஸ்டிக் பையிலிருந்த பொட்டலங்களை வெளியில் எடுத்தனர்......

நண்பர்களே,

மண்ணை தின்றாலும் மறைவாய் தின்ன வேண்டுமே, அப்படி இருக்க பிரியாணி சாப்பிடும் அவர்கள் யாரும் பார்க்காமல் சாப்பிட்டு முடிக்கவே விரும்புவார்கள்,  எனவே நாம கொஞ்ச நேரம் அவர்களை தனியாக விட்டு ,விட்டு  சாப்பிட்ட பிறகு மீண்டும் சந்திப்போம்.

நன்றி.

கோ8 கருத்துகள்:

 1. பகிர்ந்து தின்ன வேண்டும்... மண்ணை தின்றாலும் மறைந்தா...? O.K.

  அடுத்து என்ன ஆச்சி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   பகிர்ந்தளிக்கப்பட்ட மண்ணானாலும் மறைத்து சாப்பிட்டால்தான் மண்ணால் ஏற்படும் வயிற்று வலியோடு போய்விடும் இல்லையேல், அடுத்தவர் பார்ப்பதால் வரும் வயிற்று வலியும் சேர்ந்து படுத்துமே.

   அடுத்து என்ன...?

   வருகைக்கு நன்றி.

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,
  இன்றைக்கு உளவியலா,

  பார்பதற்கு நல்லவர்கள்போல் தோற்றமளிப்பவர் உண்மையிலேயே நல்லவர்தானா, அல்லது பார்ப்பதற்கு கொடூரமாக தோற்றமளிப்பவர் உண்மையிலேயே கொடூரமானவர்தானா என்று தீர்மானிப்பதும் கூடாததாகி விடுகிறது.

  ஆம் தாங்கள் சொல்வது உண்மையே,,,,,,


  சரி சரி தாங்கள் பிரியாணி சாப்பிட்டே தொடருங்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி.

   பிரியாணி உங்களுக்கும் வேண்டுமா?

   கோ

   நீக்கு
 3. மகேஷ்


  வருகைக்கு மிக்க நன்றி.

  காத்திருங்கள் விரைவில் சந்திக்கின்றேன்.

  கோ

  பதிலளிநீக்கு
 4. நண்பரே ஹஹ் சென்ற இடுகையில் பரிசு வாங்கச் சென்ற போது முணுமுணுத்த பாட்டு இந்த இடுகையில் உப தலைப்பாக மாறியுள்ளது!!!

  ஆம் விலங்குகளுக்கு முகமூடி அணியத் தெரியாதுதான் அவர்களுக்குத்தான் அந்த 6 வது அறிவு இல்லை என்று சொல்லப்படுகின்றதே. மனிதன்? இந்த ஆறாவது அறிவை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம்...அதில் ஒன்றுதான் இந்த முக மூடி...

  சரி என்ன ஆயிற்று அறிய அதைத் தொடர இதோ அடுத்தப் பதிவிற்குச் செல்கின்றோம்....ம்ம் பிரியாணிக்கு எல்லாம் இப்படி பில்டப்பா..ஹஹ்

  பதிலளிநீக்கு
 5. என்ன நடந்திருக்கும் , நீங்கள் தான் 007 ஆச்சே.

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு