பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 ஜூலை, 2015

"அஞ்சல் பெட்டி 520"

படமா... பாடமா?

நண்பர்களே,

ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்ததை ஏற்கனவே என்னுடைய சில பதிவுகளின் ஊடாய் அறிந்திருப்பீர்கள், இது நம்மில் பெரும்பான்மையானோருக்கு நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.

வீட்டுபக்கத்திலேயே, சன்னல் வழியாக எட்டிப்பார்த்து, கை அசைத்து , அல்லது ஓங்கி குரலெடுத்து கூப்பிட்டாலே   கேட்க்கும் தூரத்திலேயே ஒன்றாம் வகுப்புமுதல், ஐந்தாம் வகுப்புவரை படித்த பள்ளியை விட்டு சுமார் இரண்டு  அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள உயர் நிலை பள்ளியில் பயில வேண்டிய கட்டாயம். என் ஆரம்ப பள்ளிக்கூட வளாகத்தை கிளிமாஞ்சோறோவில் பார்க்கவும்.

அதுவும் பாதிரிமார்கள் நடத்தும் கண்டிப்பு நிறைந்த பள்ளிக்கூடம், அங்கே சேர வேண்டுமாயின் நுழைவு தேர்வு எழுதி  வெற்றிபெற்றால் தான் இடம், இதையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றேன், தமிழ் வந்த கதையில் பார்க்கவும்.

அந்த பள்ளியில் மற்ற பள்ளிகளைபோலவே(??) கல்வியும் ஒழுக்கமும் இரண்டு கண்கள்.

பண்பில் "ஒழுக்க" சீலனாக இருந்து படிப்பில் ஜான் ஏறினால் முழம் "வழுக்கும்" சீலனாக இருந்தாலோ, ஒழுக்கத்தில் தன்னை மிஞ்சும் அல்லது விஞ்சும் நபர் இந்த உலகத்திலேயே இல்லாத அளவிற்கு, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனாக  இருந்து படிப்பில் சுமார்  மூஞ்சி  குமாராக இருப்பதுவும்     ஏற்புடையதல்ல.  

கெடுபிடிகள் அதிகம், இதை என் பதிவு ஒன்றில் மேலோட்டமாக குறிப்பிட்டிருக்கின்றேன், அதை பார்க்க கல்லூரி கலைக்கூடம்  செல்லவும்.

சீருடைஇன்மை, தாமத வருகை, தூய்மைகேடு, விரல் நகம், தலைமுடி நீளமாக வளர்த்தல் பள்ளி வளாகத்தில் உணவு , இடைவேளை தவிர மற்ற நேரங்களில் அசைபோடுதல்(!!), சத்தமாக பேசுதல், சண்டை, வாக்குவாதம் போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடுதல், மேலும் சினிமா பாடல்கள், சினிமா கதைகள் பேசுதல் போன்ற எந்த சமூக விரோத(அப்படித்தான்) காரியங்களிலும் ஈடுபடுதல் எல்லாமே அங்கே மா பெரும் குற்றம், தண்டனை உறுதி. அது மட்டுமல்லாது, அடுத்த நாள் பெற்றோருடன் சென்று தலைமை ஆசிரியரை பார்த்து விளக்க - மன்னிப்பு கடிதம் கொடுத்தபின்னரே வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கபடுவர்.

இத்தகைய கெடுபிடிகள் சட்ட திட்டங்கள் நிறைந்த கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் மாதம் ஒருமுறை, பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் சமூக கூடம் - ஆடிடோரியத்தில்  பள்ளி மாணவர்களுக்கென்று பிரத்தியமாக திரைப்படங்கள் திரை இட்டு காட்டுவார்கள். 

எல்லா மாணவர்களுக்கும் அனுமதி இலவசம், கூடவே பெற்றோர்கள் அவர்களது சகோதர சகோதரிகளும் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம், மாணவர்கள் அவர்களின் குடும்பங்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது.

மாதம் முழுவதும் மிக மிக கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகும் மாணவர்கள், பள்ளிப்பாடங்கள், வீட்டு பாடங்கள் போன்று கடின உழைப்பிற்குள் தங்களை பூட்டி, மன உளைச்சலுக்கு ஆளாகி படிப்பில் ஆர்வம் குறைந்து விடாமலும் அதே சமயத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  நிர்வாகம், எப்போதும் கடுகடுப்பானவர்கள் அல்ல என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்கவும் ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் ஒரு சமூக உறவு நிலவுவதற்காகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இது போன்ற நாட்களில் அந்த கால கட்டத்தில் பல பழைய மாயா ஜால கதைகள், ராஜா ராணி கதைகள், ஆங்கில சிரிப்பு படங்கள், போன்றவை திரை இட்டு காண்பிப்பார்கள்.

அப்படி திரை இடப்பட்ட ஒரு படம் தான் "அஞ்சல் பெட்டி 520"

Image result for pictures of anjalpetti 520

மிகவும் திகிலுடனும்  விறு விருப்புடனும் அந்த கதை செல்லும்.

படம் முடிந்து வீட்டிற்கு  அழைத்து செல்ல வந்த அப்பாவும் அம்மாவும் என்னை பார்த்து  கேட்டார்கள், என்ன படம் என்று.

"அஞ்சல் பெட்டி 520"

அவர்களுக்கு அந்த படத்தின் கதை என்னவென்று தெரியாததால், அது  என்ன தபால் பெட்டியை குறித்த கதையா? ஹாஸ்டலில் இருக்கும் மாணவன் தமது பெற்றோருக்கு கடிதம் எழுதி அதை தபால் பெட்டியில் போடுவதுபோன்ற கதையா என்று கேட்க,

எனக்கே சரியாக கதை புரியாத அந்த ஆறாம் வகுப்பு பருவத்தில் ஆமாம் என்று சொல்லிவிட்டு  கூடவே சம்பந்தமில்லாமல் சொன்ன ஒரு வாக்கு என் வாழ்நாளில் அப்படியே பலித்தது.

அது என்ன வாக்கு?

(திகிலுடன்) காத்திருங்கள்.

முறுக்கு, பாப்கார்ன் இடைவேளை  முடிந்ததும் மீண்டும் தொடர்கின்றேன்.

சீக்கிரம் வந்து "சீட்டு" புடிங்க, இதோ நானும் வந்துடறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.



6 கருத்துகள்:

  1. என்ன நண்பரே இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கின்றீர்கள் முறுக்கு? பாப்கார்ன்...ம்ம்பாப்கார்ன் இன்றும் உண்டு, மற்றும் "கோ.....கோ....கோ ....லா ....இதுதான்....

    சரி இன்டெர்வெல் முடிஞ்சு, விளம்பரம் ஸ்லைடு போட ஆரம்பிச்சுட்டாங்க இன்னும் படம் போடற "கோ" ஆப்பரேட்டரக் காணும்? சீட்டு எதுக்குப் புடிக்கணும் அதான் முதல்லேயே புடிச்சாச்சு...சட்டு புட்டுனு சீக்கிரம் படத்தப் போடுங்கப்பா...."உய்...உய்...உய்..." வேற ஒண்ணும் இல்லை விசில் சத்தம் தான்...

    பதிலளிநீக்கு
  2. முறுக்கு? பாப்கார்ன்...ம்ம்பாப்கார்ன் இன்றும் உண்டு, மற்றும் "கோ.....கோ....கோ ....லா ....இதுதான்.... என்று நீங்கள் "நச்"சென்று சொன்ன அந்த பானத்தை "நச்சு" என்று விட்டுவிட்டேன்.

    அருமையான பின்னூட்டம், மிகவும் ரசித்து சிரித்தேன்.

    விசில் சத்தம் கொஞ்சம் அடங்கியபின் படம் தொடரும். யாருங்க அது, கொஞ்சம் தள்ளி உட்க்காருங்க தலை மறைக்குது.....

    இதோ "கோ"-ஆப்பரேட்டர் டீ குடிச்சினு இருக்காரு இதோ வந்துடுவார் கொஞ்சம் சத்தம் போடாம இருங்கோ.

    கோ

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் பேசமா இருங்க... படத்தைப் பார்க்கனும்...!

    பதிலளிநீக்கு
  4. அரசருக்கு வணக்கம்,
    படம் நல்லா இருக்கு,
    இடைவேளைக்கு ஐஸ் கிரீம் வேனுமே,,,,,,,,,,
    அய்யோடா இது என்ன,,,,,,,
    இந்த படத்தைப் பார்த்து தான் என்னை பாட்டி என்று சொல்கிறீர்களா என் பெரிய தாத்தாவே,,,,,,,,,,
    தாத்தா உங்கள் படம் தொடர்ந்து பார்க்கனும் என்றால் அவசியம் ஐஸ் கிரீம் வேனும்,,,,,,,,,
    ச்சே படமே போட்டுட்டாங்களே,,,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா, ஐஸ் க்ரீம் வாங்கலாம்னு எழுந்தா... அதுக்குள்ள படம் ஆரம்பமாயிடுச்சே.... சரி அடுத்த படம் பார்க்க வரும்போது... வாங்கிக்கலாம்.

      கோ

      நீக்கு