பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூலை, 2015

"நரிமுகம் மறைமுகம்!"

நாணயம் - நாணயம் !!!


தொடர்கிறது.....

முதலில் இருந்து வாசிக்க "மறுமுகம் அறிமுகம் "

இவர்கள் ஆர்டர் செய்த பொட்டலங்களை விட எண்ணிக்கையில் ஒரு பொட்டலம் கூடுதலாக இருந்தது.

அது எப்படி, நாம் இத்தனை வாங்க வில்லையே, என நினைத்து சரி எதற்கும் இருக்கட்டும் என சொல்லிக்கொண்டே ஆளுக்கொரு பிரியாணி பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டும் அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு எஞ்சி இருந்த அந்த கூடுதல் பொட்டலத்தையும் பிரித்து பங்கிட்டு உண்பதென தீர்மானித்து பொட்டலத்தை பிரிக்க ..... அதில் பிரியாணிக்கு பதில் கட்டுக்கட்டாக ரப்பர் பேண்டால் கட்டப்பட்ட ஒரு பெருந்தொகையும் அதை வங்கியில் செலுத்த பூர்த்தி செய்து வைத்திருந்த சலானும் இருக்ககண்டு பெரும் அதிர்ச்சியில் அவர்களின் கண்களும் வாயும் விரிந்தன.

என்ன செய்வது?

இது அந்த உணவு விடுதியிலிருந்து வங்கியில் செலுத்த வைத்திருந்த பணம் தவறுதலாக நமது உணவு பொட்டலங்களை வைத்து கொடுத்த பையிலுள்  வைத்து கொடுத்து விட்டு இருக்கின்றனர்.

இதை முதலில் அவர்களிடம் சேர்க்க வேண்டும், இத்தனை பெரிய தொகையை நம்மோடு இரவு முழுதும் இந்த புதிய இடத்தில் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல என்று தீர்மானித்து, தங்கி இருந்த அறையை காலி செய்து விட்டு அன்று மத்தியானமே ஊருக்கு திரும்பி விட்டனர்.

வருகின்ற வழியில் அந்த உணவு விடுதியில் வாகனத்தை நிறுத்தி , மீண்டும் மனைவி காரில் இருக்க கணவன் மட்டும் இறங்கி, உள்ளே பதட்டத்துடன் கல்லாவில்  இருந்த, அந்த உணவு  விடுதி முதலாளியிடம் நடந்தவற்றை கூறி பணத்தை திருப்பி கொடுக்க, தமது நெற்றியில் பூசபட்டிருந்த திருநீறோடு போட்டி போட்டுக்கொண்டு அவர் வாயிலிருந்த அத்தனை பற்களும் ஜொலிக்க,

பணம் கொண்டு வந்து கொடுத்த நேர்மையான கணவரை கை எடுத்து கும்பிட்டு, " இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையான மனிதனை காண்பது மிகவும் அபூர்வம், உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யபோகிறேன்" என சந்தோஷத்தில் அவர் திக்குமுக்காட, அப்போது அங்கே சாப்பிட்டுகொண்டிருந்தவர்களிடத்தில் இந்த மனிதரின் நேர்மையை புகழ்ந்து சொல்லிக்கொண்டே, தமது போனை எடுத்து  காலையில் பணம் காணவில்லை என புகார் கொடுத்திருந்த அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் சொல்ல, இப்போது காவலர்களும், செய்தியாளர்களும் , உணவு விடுதியில் கூடி விட்டனர்.

அந்த உணவு விடுதி உரிமையாளர் அந்த நேர்மையான மனிதரோடு நின்று ஒரு புகைப்படமெடுத்து அதை உணவு விடுதியில் அவரது கல்லா மேசைக்கு பின் இருக்கும் சாமிபடங்கள் வரிசையில் மாட்டி வைத்து வருவோர் போவோருக்கெல்லாம் இந்த மனிதனின் நாணயத்தையும் நேர்மையையும் பறை சற்றும் வகயில் இவருக்கு தாம் நன்றி சொல்ல போவதாக கூறி வந்திருந்த பத்திரிக்கையாளரிடம் சொல்லி ஒரு புகைப்படம் எடுக்கபோகும் நேரத்தில்,அங்கே வந்திருந்தவர்களில் ஒருவர், " ஐயா, இவரின் மனைவியும் இங்கே தான் இருக்கின்றார் அவர்களையும் சேர்த்து புகைபடமெடுத்தால் நன்றாக இருக்குமே" என சொல்ல, அதுவரை இவர் மனிவியுடன் இருப்பதை அறியாத , அந்த முதலாளி, மீண்டும் வாயெல்லாம் பல்லாக " அம்மாவையும் கூப்பிடுங்கள்" என சொல்ல..........

அந்த கணவன், " வேண்டாம் ஐய்யா எதற்கு புகைபடமெல்லாம், எங்களுக்கு இந்த மாதிரியான புகழ் எல்லாம் தேவை இல்லை, வேண்டாம் வேண்டாம்" என எவ்வளவோ சொல்லியும்,

"என்னங்க இது, இத்தனை பெரிய தொகையை நேர்மையுடன் திருப்பி கொண்டுவந்து கொடுத்த உங்களுக்கு இதைவிட ஒரு சிறந்த முறையில் என்னால் நன்றி சொல்ல முடியுமா, இந்த சந்தர்பத்தை நான் இழக்க முடியாது" என அன்பொழுக நன்றி பெருக்கோடு சொல்ல, இப்போது அந்த கணவன் , அந்த முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி அவரை தனியாக உள்ளே அழைத்து சென்று, அவரின் காலில் விழுந்து மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார்.

பெரும்பாலும் இந்த உலகத்தில், சம்பந்தமே இல்லாவிட்டாலும் புகைப்படத்தில் தம் தலைகாட்டுவோர் மத்தியில் இத்தனை கௌரவமான ஒரு அங்கீகாரத்தை வேண்டாம் என தவிற்கும் இந்த மனிதனை என்ன சொல்வது?

யோசித்து வையுங்கள் நாளை பார்க்கலாம்.

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ10 கருத்துகள்:

 1. வணக்கம் அரசே,
  அதானே, எவ்வளவு பெரிய செயல், ஏன் வேண்டாம் என்கீறார்,
  யோசிக்கிறோம்,
  நாளைவரை,
  நன்றி அரசே,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி.

   என்னங்க அது நான் இல்லங்க.

   நீக்கு
 2. மகேஷ்,

  நல்ல யோசியுங்க இந்த முறை மொக்க வாங்ககூடாது... என்ன

  கோ

  பதிலளிநீக்கு
 3. oru vela antha kanavan-manaivi poliyaana thampathiyarkalo?

  rendu peraiyum serthu vechu edukka padda photos veliya vantha problem akum enpathala photo eduthukka vendam kettukittangalO:-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ் ரொம்ப அவசர படாதீங்க , நிறைய தெலுகு படம் பார்ப்பீர்களா/
   கோ

   நீக்கு
 4. ஹஹாஹ்ஹ்ஹ ஏன் வேண்டாம் என்று சொல்லுகின்றார் ...ஏதோ மண்டையில் எரிகின்றது பளிச் என்று ஆனாலும் காத்திருக்கின்றோம்...நல்ல முகமூடியா கெட்ட முகமூடியா என்று தெரிந்துவிடும்...

  பதிலளிநீக்கு
 5. இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்கள் கதவு திறக்கட்டும்..

  வருகைக்கு மிக்க நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு