பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 ஜூலை, 2015

"ஐந்து பைசா ஆஸ்பத்திரி"

"Money"த நேயம்!!

நண்பர்களே,

உலகத்தில் எங்கு பார்த்தாலும் புது புது வியாதிகள் தினந்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.


அவற்றை சமாளிக்கவும் நோயாளிகளை காப்பாற்றவும் நவீன மருத்துவமும் அரசாங்கங்களும் கூடுமானவரை முனைந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேலை நாடுகளில் இருக்கும் மருத்துவ வசதியும் வாய்ப்போ
உலகின்  பெரும்பான்மையான வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளில் அவ்வளவாக இல்லை.

Image result for pictures of voluntary hospitals

அப்படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ மனைகளின் எண்ணிக்கையோ, மருத்துவர்களின் எண்ணிக்கையோ, மருந்து மாத்திரைகளின் எண்ணிக்கையோ கூட ஏற்ற விகிதத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

அப்படியே ஓரளவிற்கு, மருத்துவமனைகளும் மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் இருந்தாலும் அவை தரமானவைகளாக இருக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.

ஒருவேளை தேவையான மருத்துவம் செய்யபட்டாலும் அதற்ககு நோயாளிகள் செலவிடும் பணத்தின் அளவு வானளாவி இருப்பதும் கண்கூடு.

சில தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகளின் நோய்களுக்கு மட்டுமல்லாமல் தேவையற்ற பல பரிசோதனைகளையும் செய்துகொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தபடுகின்றனர் என்ற செய்தியையும் கேட்டு மனம் ஏனோ வேதனைபடுகின்றது.

இதில் வெளி ஊர்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளும் பாஷை தெரியாத நோயாளிகளும் அவர்களின் உறவினரும் படும் வேதனை சொல்லி மாளாது. 

இவர்கள் தங்கள் உடமைகளையும் சொத்துக்களையும் விற்றோ அல்லது அடகு வைத்தோதான் இதுபோன்ற சிகிச்சைகளுக்கான செலவுகளை சமாளிக்க வேண்டி இருக்கின்றது.

இத்தகைய செய்திகளை கேட்கும்போது, பல வருடங்களுக்கு முன் - பல வருடங்களாக, எங்கள் ஊரில் இயங்கிகொண்டிருந்த ஒரு சிறிய மருத்துவமனையும் அதன் மகத்தான சேவையும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

அந்த மருத்துவமனை மாலை 3.00 மணிக்கு திறக்கப்படும், உள் தங்கி சிகிச்சை எடுத்துகொள்ளும் வசதி இல்லை என்றாலும், அங்கே வருகின்ற அனைத்து நோயாளிகளையும் மிகுந்த அன்போடும் , கரிசனையோடும், எல்லாவற்றுக்கும் மேலாக "கௌரவத்தோடும்" நடத்தி அவர்களின் வியாதி களை கண்டறிந்து அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் முற்றிலும் இலவசமாக கொடுத்துகொண்டுவந்த ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரால் நடத்த பட்ட ஒரு இலவச ஆஸ்பத்திரி அது.

அங்கே வந்து சேவை புரிந்த அனைத்து மருத்துவர்களும் , "உண்மையான" கல்வித்தகுதியும் உண்மையான மனித நேயமும் தொண்டுள்ளமும் கொண்ட, வேறு மருத்துவ மனையில் பணியில் இருந்தவர்களும் சமீபத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர்களும் தாதிமார்களும், சேவை மனம் படைத்த ஏனைய உதவியாளர்களும்.

அங்கே மாலை மூன்று மணி ஆனவுடன், மக்கள் கூட்டம் அலை மோதும். 

அவர்களை வரிசையாக  நிற்க/ அமர வைத்து அவர்களின் விவரங்களை பதிவு செய்து ஒரு அட்டை கொடுப்பார்கள். அந்த அட்டைக்கு அவர்கள் வசூலித்த தொகை ஒரு நோயாளிக்கு வெறும் ஐந்து பைசா மட்டுமே, அதுவும் கட்டாயமல்ல.

பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை  அங்கே சிகிச்சைக்காக அழைத்து வரபட்டதுண்டு. 

இதனாலேயே அந்த ஆஸ்பத்திரி  "ஐந்து பைசா ஆஸ்பத்திரி" என்ற பெயரில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.

நோய் தீரும் வரை அங்கேயே தினமும் வந்து அவர்கள் சிகிச்சை பெற்று கொள்ளலாம், அல்லது தேவைப்படும் நோயாளிகளை வேறு மருத்துவ மனைகளிலோ, அரசு மருத்துவ மனைகளிலோ அனுமதிக்க சிபாரிசு செய்வதோடல்லாமல், இந்த மருத்துவ மனை மருத்துவர்களே அவர்களை கூட்டி சென்று அட்மிட் செய்து அங்குள்ள மருத்துவர்களுக்கு ஆலோசனை செய்வதோடல்லாமல், அவ்வப்போது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னடைவுகளையும் கண்காணித்து தேவையான மாற்று சிகிச்சைகளுக்கு துணை புரிவார்கள்.

என்னுடைய "கிளிமாஞ்ஜோரா" பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த வளாகத்தில் சைக்கிள் ஓட்ட பழகிய நாட்களில் ஏற்பட்ட பல காயங்கள் அந்த மருத்துவமனையின் சிகிச்சையினாலேயே குணமானது என்பதையும் இங்கே நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

இன்னும் அந்த ஆஸ்பத்திரி அங்கேயே இருக்கின்றதா என தெரியவில்லை.

இதுபோன்ற தொண்டுள்ளம் இன்றைக்கு நாட்டில் எத்தனை மருத்துவ மனைகளில் தென் படுகின்றது?

இன்றைக்கு இருக்கும் பல பிரபல தனியார் மருத்துவ மனைகள் இலவசமாக சிகிச்சை செய்ய வில்லை என்றாலும் வாங்கும் பணத்திற்கு கொஞ்சமேனும் ஞாயம் செய்யும் விதத்திலும், நோயாளிகளையும் அவர்களின் உறவினர்களையும் குறைந்தபட்சம் "மனிதர்களாக" மதித்து "கண்ணியத்துடன்" சிகிச்சை அளித்தாலே போதும் என்று நினைக்கின்றேன்.

Money தான் பிரதானம் என்று இயங்கிகொண்டிருக்கும் (மருத்துவ) உலகில் மனிதநேயமும் கொஞ்சம் இழையோடி  இருக்கும் பட்ச்சத்தில் மனிதம் வாழும் கூடவே மனிதனும் வாழ்வான்.

இந்த பதிவு அந்த ஐந்து பைசா ஆஸ்பத்திரியில் தொண்டாற்றிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றியுடன் அர்ப்பணம்.

Image result for symbol of thanks

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.
10 கருத்துகள்:

 1. அந்த மருத்துவமனை மேலும் சிறக்கட்டும்... சிறப்புகள் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனப்பால்.

   உங்கள் வாழ்த்துக்கள் உரியவர்களிடம் சென்று சேரட்டும்..

   நன்றி

   கோ

   நீக்கு
 2. சார்,
  இப்போ எல்லாம் students கோடிக்கனக்கில் செலவு செய்து மருத்துவம் படித்து முடித்ததும்,
  அதர்க்கு கூடுதலாக்அ இன்னும் சில கோடிகலை ஆஸ்பத்திரி கட்ட செலவு செய்து சிகிச்சை பார்க்க ஆரம்பிக்கும் அவர்களிடம்
  மனித நேயம் நாம துலிகூட எதிர்பார்க்க முடியாது சார்.
  மொதல்ல investment செய்து படிச்சிட்டா அப்பரம் money சம்பாரிப்பதுதான் அவர்கள் தொழில்.
  ---
  எல்லாரும் அப்படிதான் சொல்ல முடியாது பட் கண்டிப்பாக 95% அப்படிதான் இருக்கும்.
  ---

  "ஐந்து பைசா ஆஸ்பத்திரி"
  நல்ல ஆஸ்பத்திரி"
  அங்கு செய்வை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இப்போதெல்லாம்தான் படிக்கவும் வேலைக்குப் போகவும் பெருமளவு லஞ்சப்பணம் கொடுக்க வேண்டியிருக்கே..அப்புறம் எப்படி அஞ்சு பைசாவுக்கு மருத்துவம் பாப்பான். எல்லாமே வியா(பம்)பாரமாகிப் போச்சு சார்.

  God bless You

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வருக.

   தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதி பணத்தையும் தங்கள் 24 நேரத்தில் ஒரு சிறு பகுதி நேரத்தையும் பல செல்வந்தர்களின் உதாரத்துவமான நன்கொடைகளாளும் இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் இயங்கலாமே. தர்மமாகுமே.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 4. மகேஷ்,

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. இப்போதெல்லாம் மருத்துவம் சேவையல்ல,லாப நோக்கம் கொண்ட தொழில்தான் என்ன செய்வது.

  இதில் போலிகள்வேறு....

  வருகைக்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் அரசே,
  அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்,
  பணிச்சிரக்கட்டும்,
  ஆனால் இன்று இவை மிக அறிது,,,,,

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு மிக்க நன்றி

  கோ

  பதிலளிநீக்கு
 7. இப்போதெல்லாம் எந்த வியாதியும் வந்து விடக்கூடாது என்று இறைவனுக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ம்ம்ம் மருத்துவமனை என்றாலே பயம் வந்துவிடுவதால் தான்....என்ன செய்ய மருத்துவப் படிப்பே குதிரைக் கொம்பாக இருக்கிறது...பாரதிதாசன் அன்றே பாடிவிட்டார் "விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி" எனப்தெல்லாம் போய் விலை போட்டு வாங்கிடுவோம் கல்வி என்றாகிவிட்டது......இந்தியாவில் நல்ல கல்விக்குக் காலம் இல்லை இப்போது. நல்ல மருத்துவரை அடையாளம் கண்டு கொள்ள மிகவும் ப்ரயத்தனம். மட்டுமல்ல மாத்திரைகள் விலை அதிகம் என்றால் காலாவதியான மாத்திரைகள் மீண்டும் மார்க்கெட்டிற்கு புதிய முகம் போட்டு வருவது அதை எப்படி அடையாளம் காண என்று பயமாகத்தான் இருக்கின்றது..

  நல்ல பதிவு...இப்படி ஒரு சேவை செய்யும் அந்த மருத்துவமனைக்கு..."எங்கள் ப்ளாகில் " நண்பர் ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்திகளில், குற்றாலத்தில் 10 ரூபாய் மருத்துவரைப் பற்றிச் சொல்லி இருந்தார். நல்ல மருத்துவர்...

  பதிவு அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு மிக்க நன்றி என் அன்பிற்கினிய நண்பர்களே.

   உங்கள் பின்னூட்டத்தில் குறித்திருக்கும் போலி மருந்துகளை நினைக்கும்போது நெஞ்சம் "பகீர்" என்கிறது.

   இந்த தருணத்தில் , எங்கேயோ கேட்ட ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

   "சின்ன வயசில் உனக்கு வந்த போலியோ !
   இன்னும் அது உன்னை விட்டு போலியோ? -கொடுத்த
   சொட்டு மருந்து தொண்டைக்குள்ளே போலியோ? -இல்லை
   விட்ட மருந்தும் ஒருவேளை "போலியோ?"

   நெஞ்சம் உருக்கும் ஒரு கவிஞனின் குரல்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு