சொந்தகா(ர)ர்கள்
நண்பர்களே,
நம்மில் எத்தனைபேர் , தேச பக்தியை நம் வாழ் நாளில் பிரதி பலிக்கின்றோம்.
நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதும், நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பதும், லஞ்ச லாவண்யங்களை எதிர்ப்பதோடு அவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதும், சக இந்தியனை நம் சகோதர சகோதரி(ஒரு சிலரை தவிர)போல பாவிப்பதும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும், தேசிய பேரிடர், அல்லது போர் போன்ற காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து தேசீய உணர்வுடன் துயர்துடைக்கும் பணியில் நம்மை ஈடு படுத்திக்கொள்வதும் நமது தேச பக்தியின் நேர்முக வெளிப்பாடாக கருதபடுகின்றது.
அதை தவிர்த்து, ஒரு சிலர் அவர்களுக்கு பிடித்த தலைவர்களின் பெயர்களை, அவர்கள் சார்ந்த கட்சிகளின் சின்னங்களை, தமது உடலில் பச்சைகுத்தி தங்களுக்கும் அந்த தலைவர்களுக்கும் , அல்லது கட்சிகளுக்குமுள்ள நடப்பை மரியாதையை, அன்பை உலகறியும் வண்ணம் காட்டிக்கொள்வார்கள்.
ஆனால் ஒரு சிலர், ஆர்பாட்டம் இல்லாமல், அமைதியான வகையில் , தங்களது தேச பக்தியை தங்களுக்குள்ளேயே போற்றுவார்கள்.
எப்படி எனில், தங்களது தார்மீக ஜனநாயக கடமையான வாக்காளர் உரிமையை சரியாக பயன் படுத்துவார்கள், எவரிடத்திலும் காசு பணம் வாங்காமல், பிரியாணி, "சரக்குக்கு" அவற்றை விற்காமல், நேர்மையான வகையில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க தமது வாக்கு உரிமையை செயல் படுத்துவார்கள், அதில் தோல்வி வந்தாலும் துவளாமல், சந்தோஷபடுவார்கள்.
இந்த மாதிரியான செயலே தேசபக்தியின் உச்சகட்ட வெளிப்பாடாக கருதபடுகிறது.
இப்படி எத்தனயோ வகைகளில் தமது தேச பக்தியை ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் போற்றினாலும், நம்மில் யாரேனும் தங்கள் குழந்தைகளுக்கு, தேசிய தலைவர்கள் பெயரை விடுத்து, நமது , நாடு நமது மொழி சம்பந்தமான பெயர்களை சூட்டி அழகு பார்த்திருப்போமா, இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைவே.
எங்கோ ஒருவருக்கு காந்தி, என்றோ, நேரு என்றோ, பாரதி என்றோ, இளங்கோ என்றோ, பாரத் என்றோ வைத்து இருப்பார்கள் இல்லை என்று சொல்ல வில்லை.
ஆனால், நம்மில் எத்தனைபேர் நம் வீட்டு பிள்ளைகளுக்கோ அல்லது அவர்களின் பிள்ளைகளுக்கோ,"இந்தியா" என பெயர் சூட்டி இருப்போம்?
மேலை மற்றும் வேறு நாடுகளில் , எத்தனயோ பேருக்கு, "இங்கிலாந்து" ,"மாஸ்கோ" ,"ஹாலந்த்" ,"இஸ்ரேல்" ,"வாஷிங்டன்" , போன்று தாங்கள் பிறந்த நாட்டின் அல்லது பிறந்த ஊரின் பெயர்களை சூட்டி தமது தேச பற்றை பறை சாற்றி வருகின்றனர்.
இதில் கொஞ்சம் வித்தியாசமான பெயருடன் ஒரு "ஆங்கிலேய" குழந்தையின் பெயரை சமீபத்தில் கேட்டு மிகவும் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தேன்.
அந்த குழந்தையின் தாய் தகப்பன், தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா கொள்ளு பாட்டி இவர்கள் அத்துனைபேரும் அக்மார்க், வெள்ளைக்காரர்களாயிருந்தும் அந்த குழந்தைக்கு அவர்கள் சூட்டி மகிழும் பெயர், அவர்கள் பிறந்த நாட்டின் பெயரை அல்லாமல், வேறு ஒரு நாட்டின் பெயரான , அதாவது நம்ம நாட்டு பெயரான "இந்தியா".
கேட்கவே ஆச்சரியமாக இருந்ததினால் அவர்களிடத்தில் உங்கள் குழந்தைக்கு இந்த பெயர் சூட்ட என்ன காரணம் என்றேன்,
அதற்க்கு அவர்கள் சொன்ன பதில் என்னை உண்மையிலேயே ஆனந்த கண்ணீர் சொரிய வைத்தது,
இந்தியாவின் குடும்ப உறவுகள் கட்டிக்காக்கும் மாண்பும் வேற்றுமையில் ஒற்றுமையாக, மத மொழி பேதமின்றி சகிப்புத்தன்மையுடன், சகோதரத்துவத்துடன் வாழும் முறைமையை என் குழந்தை மட்டுமல்லாது என் குழந்தையின் சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதினால் , இந்திய பெயர்களுள் ஏதேனும் ஒன்றை வைக்க ஆலோசித்து பலபெயர்கள் பரிசீலிக்கப்பட்டு அவை ஒன்றுமே நேரடியாக இந்தியாவை குறிப்பதாக இல்லாததாலும் முழுமையான இந்தியாவை பிரதிபலிக்க வேண்டும் என்பதால் "இந்தியா" என்றே வைத்துவிட்டோம் , இந்த பெயரை சொல்லி அழைக்கும் ஒவ்வொரு முறையும் என் குழந்தையும் இந்தியர்களைபோலவே, அப்பா அம்மா , சகோதர, உறவுகளின் பாசத்தையும், அன்பையும் வளர்த்துகொள்ளவேண்டும் என்று நினைத்தே அழைப்போம் என்றும் அவர் கூற உள்ளம் நிறைந்த மகிழ்வுடன் அவர்களையும் அந்த குழந்தையையும் வாழ்த்திவிட்டு வந்தேன்.
அதே போல நம்ம ஊரில் தயாரித்து வெகுகாலம் புழக்கத்தில் பயன்பாட்டில் இருந்த மகிழ் வாகனம் , அதாங்க காரின் பெயர், "அம்பாசிடர்".
ஏன் அதற்க்கு நம்ம ஊர் பெயர் ஏதேனும் வைக்காமல் எதோ ஆங்கில பெயர் சூட்டி இருந்தனர் எனும் கேள்வியும் என் மனதில் ரொம்ப நாளாக இருந்து வந்தது,
ஆனால் மேலை நாட்டின் தயாரிப்பும் அதிக மதிப்பும் அதற்க்கேற்ற விலையும் கொண்ட உலகின் முன்னணி கார்களின் முன் வரிசயில் இருக்கும் ஒரு காருக்கு நம் இந்திய பெயர் , அதிலும் தமிழ் பெயர் அதுவும், இன்றைய காலகட்டத்தில் தமிழர்களே மறந்துபோன தமிழ் மாதங்களுள் மங்களமில்லாத, சுப காரியங்கள் நிகழ்த்த ஏற்புடையதாக இல்லாத அதே சமயத்தில் தண்ணீர் , மழை வெள்ளம் சம்பதமான ,"மாரி" அம்மன், "முண்டக்கன்னி" அம்மன், போன்ற தெய்வ வழிபாடும் அவர்களின் கோவில்களில் திருவிழாக்கள் பூசைகள் போன்றவற்றை நிகழ்த்த ஏற்ற மாதமாகிய, ஜூலை 17 துவங்கி ஆகஸ்ட் 17 வரையில் நீடிக்கும் தமிழ் மாதங்களுள் நான்காவது மாதத்தின் பெயரை அந்த ஜெர்மனியை சார்ந்த கார் நிறுவனம் அவர்களின் காருக்கு சூட்டி அழகு பார்கிறார்கள்.
அதுவும் அந்த காரை வாங்கி பயணம் செய்யும் ஒவ்வொரு உரிமையாளரும் அந்த பெயருக்காகவே மிகவும் பெருமை படுகின்றனர்.
அதுவும் அந்த காரை வாங்கி பயணம் செய்யும் ஒவ்வொரு உரிமையாளரும் அந்த பெயருக்காகவே மிகவும் பெருமை படுகின்றனர்.
கீழே உள்ளவை உலகின் மிக அதிக விலையும் மிக சொகுசும், கௌரவுமுமாக கருதப்படும் கார்களில் சில.
ALFA ROMEO -இத்தாலி
Aston MARTIN -பிரிட்டிஷ்
Audi -ஜெர்மனி
Bentley -இத்தாலி
BMW -ஜெர்மனி
BugatTI -பிரான்ஸ்
jaguar -பிரிட்டிஷ்
Land Rover - பிரிட்டிஷ்
Lamborghini -இத்தாலி
Lexus -ஜப்பான்
இந்த அகர வரிசயில் இடம் பெற்றிருக்கும் ஒரு காருக்குத்தான் நம்ம தமிழ் மாதத்தின் நான்காவது மாதத்தின் பெயர்.
அது எந்தகார்? அதாங்க மேலுள்ள வரிசையில் மூன்றாவதாக இருக்கின்றதே அந்தக்கார். "ஆடி" (தமிழ்ல அப்படித்தானே சொல்ல - எழுதமுடியும்?)
ரொம்பத்தான் லொள்ளு!!!!!! என்று நீங்கள் சொல்லுவதற்கு முன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்...............
பின்குறிப்பு: மேலுள்ள கார் பட்டியலில் எனது காரும் உண்டு, கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். சரியாக கண்டுபிடிக்கும் முதல் நபருக்கு.... என் கூட ஒரு ஷார்ட் ரவுண்டும் (குச்சி) ஐஸ்க்ரீமும்!!!!.
நன்றி.
வாழ்க தமிழ்!
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
பதிவு சீரியஸ்ஆ தேச பக்தி பற்றி எல்லாம் ஆரம்பித்து,
பதிலளிநீக்குஅதுவும் அந்த இந்தியாவின் பெற்றோரை பெருமையாக நினைத்து தொடர்ந்து ... வா...சி...க்...க...
ஆடி கார்/ஆடி மாதம் செம்ம்ம்ம
மொக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கை வாங்கிட்டேன்:-)
வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.
நீக்குகோ
கண்டுபிடிக்க விட்டாலும் எனக்கு வேண்டும்....!
பதிலளிநீக்குகண்டுபிடித்தால் குச்சி ஐஸ் இல்லை என்றால் வெறும் குச்சிதான்.
நீக்குகோ
இந்தியா" ஆஹா! அவர்களது காரணம் நெகிழ வைக்கின்றது....
பதிலளிநீக்கு"ஆடி" கார்...ஹும் இத்தனை க்ளூக்கள் கொடுத்தால் கண்டுபிடிக்க முடியாமலா இருக்கும்? அரசருக்குக் கொஞ்சம் ஓவராதான் லொள்ளு....!!!
சரி உங்க போட்டிக்கு நண்பர் விசு பதிலளித்துவிடுவார் அதனால் அவர் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது ..அப்புறம் அவருக்கு குச்சி ஐஸ்க்ரீம் போய்டுமே.....அஹஹஹ்ஹ
சரி.. நீங்க எங்களுக்கு டிக்கெட் அனுபினீங்கனா விடை சொல்லுறோம்....அப்பத்தானே ஷாட் ட்ரிப் அடிக்க முடியும்...ஹஹஹ் ..ஹேய் சும்மா ஜோக்ஸ் அபார்ட்...பிஎம்டபிள்யு இல்லைனா லாண்ட் ரோவர்...??? இல்லைனா எல்லாத்தையும் எழுதிப் போட்டுக் குலுக்கி குலுக்கி எடுத்துட்டுச் சொல்லறோம்.....எங்களுக்கு எங்க கிடைக்கப் போகுது....ம்ம் (விசு கொஞ்சம் சொல்லுங்கப்பா எங்க காதோட கோ வின் கார் என்னனு....ரகசியமா...நாங்க, நீங்க மண்டபத்துல வந்து சொன்னதா சொல்ல மாட்டோம்...) யாருக்கு அந்த அதிர்ஷ்டமோ..எங்களுக்கில்லை... எங்களுக்கில்லை...
பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நீக்குஉங்களுக்கு என் காரில் வைத்து ஒரு ஷார்ட் ரவுண்ட் அழைத்து செல்ல விமான டிக்கட் அனுப்ப என் காரை அல்லவா விற்க நேரிடும். சோ நீங்க அங்கேயே இருங்க நான் வரும்போது குச்சி ஐஸ் வாங்கித்தருகிறேன்.
நெசமாலுமே ரொம்ம்ம்ப லொல்லு....
பதிலளிநீக்குசில நேரங்களில் அப்படி இப்படி "லொள்ளு"வதுண்டு.
நீக்குநன்றி
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குநல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
நன்றி.
நன்றி,உங்களுக்கும் இந்தியாதானே தாய் நாடு?
நீக்குகோ
கோ,
நீக்குஇல்லை, நன்றி.
தேச துரோ...... எட்டம்மாள்.
நீக்குஅய்யோ அப்படி ஒரு வார்த்தை மட்டும் சொல்லாதீர்கள்.
நீக்குநான் தாய் நாட்டு பாசம் மிக்கவள்.
தங்கள் கேள்வியை சரியா படிக்காம,
புரிகிறதா?
நான் இப்ப வெளிநாடு என்று சொல்ல வந்தேன்,,,
ச்சே,
மாட்டிக்கிட்டேன்,
நான் இந்தியா இந்தியா இந்தியா
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குகோ