பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

"ராஜ யோகம்"


"கோ" கோ தான் கொஞ்ச(ர) நேரத்துக்கு!"!

நண்பர்களே,

பழங்கால ராஜா ராணி கதைகளை கேட்க இன்னமும் நம்மில் பலரும் சிறு பிள்ளைகள்போல ஆர்வம் காட்டுவது  அசைக்க முடியாத உண்மை.

அப்படி பழைய காலத்தில் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளையும் அவற்றின், அழகு, கம்பீரம், சிறப்பு, மேன்மைகளை படிக்கவும் படங்களில் -ஓவியங்களில் பார்க்கவும் மனதில் எத்தனை மகிழ்ச்சி வெள்ளம்?

சரி இது போன்ற அரண்மனைகளை தூரத்தில் இருந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்?

கொஞ்சம் இருங்கள் அவசரப்படவேண்டாம்.

கொஞ்சம் கிட்டத்தில் போய், சரி அதன் வளாகத்தின் உள்ளே போய்,  இல்லை அதன் உள்ளேயே போய்,பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படி மனம் குதூகலிக்கும்?

இவற்றை எல்லாம் தாண்டி அந்த அரண்மனையிலுள்ள ஒரு படுக்கை அறையில் ஒரு நான்கு மணி நேரம் பஞ்சு மெத்தையும் பட்டு விரிப்பு, இருக்கிறதா இல்லையா என வியக்கும் மலரினும் மெல்லிய போர்வையும் வெல்வெட் உறை அணிந்த ரோஜா இதழனைய பொதி அடைத்த தலை அணைகளையும் அணைத்துக்கொண்டு,

இடையிடையே (எழுப்பி) உலகின் முதல் தரத்தில் பதபடுத்தபட்ட ஆவின் பாலில் , உலகின் முன்னணி தேயிலை  நிறுவனத்தினரால் அரண்மனைக்கென்றே  பிரத்தியேகமாக தயாரித்து வழங்கும் தேயிலை கொண்டு தயாரித்த தேநீரும், அது பிஸ்கட்டா அல்லது இனிப்பு சுவை ஏற்றப்பட்ட  மிருதுவான தங்க பஸ்பமா என பகுத்தறியவொண்ணா உசித மாவினால் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளும், பலவகை உணவு பொருட்களும், சிற்றுண்டி, பழங்கள் கொடுத்து உபசரிக்கப்படும் வாய்ப்பும் இருந்தும்,

"பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது.. பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது" எனும் பாடலுக்கேற்ப தூக்கம் தழுவாத கண்களை அந்த அறை முழுவதும் அலங்கரிக்கும் விலை உயர்ந்த கலை பொருட்கள் வசீகரிக்க, பேருக்கு கொஞ்சம் கண்மூடி அந்த அரண்மனை பஞ்சனை சுகத்தை அனுபவித்தால் எப்படி இருக்கும்?

அதுவும் எந்த நேரத்திலும் நம் ஏவலுக்காக வாசலில் காத்திருக்கும் அரண்மனை காவலாளியின் பாதுகாப்பும் நிறைந்த ஒரு உல்லாச அரண்மையில் சுமார் நான்கு மணி நேரம் தங்கி மேற்சொன்ன அனைத்தையும் அனுபவிக்கும் ஒரு வாய்ப்பு இந்த "கோ"மகனுக்குக் கிட்டியது என்று சொன்னால், நீங்கள், "இதுவே இவருக்கு (பொழப்பா) வழக்கமா போச்சி, இப்படியே சொல்லிக்கினே கடைசில கனவுன்னு முடிப்பாரு பின்ன நாமதான் மொக்க வாங்கனும்"னு நினைத்தீர்களானால் அந்த நினைப்புதான் உங்களுக்கு மொக்கை வாங்கித்தரும், மற்றபடி நடந்ததென்னவோ உண்மை.

Image result for pictures of buckingham palace

மேலே படியுங்கள்.  சாரி... கீழே படியுங்கள்

உலகில் உள்ள பல அரண்மனைகளுள்  இன்னமும் மெருகு குறையாமல், அதே கம்பீரத்தோடும் பொலிவோடும் இன்னும் சொல்லபோனால், ராஜ பரம்பரையினரால் மட்டுமல்லாது இன்னமும் ராஜ பதவியில் இருக்கும் ஆட்ச்சியாளர்கள் அங்கேயே தங்கி வாசம் செய்து நாட்டை ஆட்சி செய்யும் உலகின் முதல் ஐந்து பெரிய / பிரபல/ அழகிய அரண்மனைகளுள் ஒன்றாகவும் வரலாற்று ஏடுகளில் தனக்கென்று பல பக்கங்களை தக்கவைத்து, உலகின் எந்த மூலையில் இருப்போரும் எளிதில் உச்சரிக்கும் பெயர்கொண்ட அந்த அரண்மனையில் தான் இந்த "அரசனுக்கு" அந்த பாக்கியம் கிட்டியது.

பிறந்தபோதே "கோ" எனும் தலை (தலையாய) எழுத்துக்கொண்ட  பெயர் சூட்டப்பட்டு விட்டதாலோ   என்னமோ அல்லது அந்த அரண்மனையில் வாசம் செய்து கொண்டு நாட்டை ஆளும் அந்த ஆட்ச்சியாளரின் பிறந்ததேதியும் என் பிறந்த தேதியும் அடுத்தடுத்த நாட்களாக அமைந்ததாலோ என்னமோ அல்லது என் வீட்டார் என்னை எப்போதும் "கோ" எனும் பொருள்படும் வேறொரு வார்த்தை(??) கொண்டு அழைத்து வந்ததின் அதிர்வலைகளின் அதிர்ஷ்ட்ட காற்றின் விளைவோ என்னமோ தெரியவில்லை அப்படி ஒரு வாய்ப்பு இந்த எளியவனுக்கு.

கொஞ்சம் இருங்க.., சேனாதி பதியிடமிருந்து ஒரு ஓலை வந்திருக்கு ... படித்து விட்டு பிறகு தொடர்கிறேன்.....

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்


கோ



10 கருத்துகள்:

  1. நன்றி தனப்பால்,

    உங்களுக்கு மிகவும் பிடிக்குமே என்றுதான் தொடரும் என்று முடித்திருக்கின்றேன்.

    உலகின் ஒரு கோடியில் வாழ்த்துவரும் எனக்கு மறு கோடியில் வாழ்த்துவரும் உங்களின் அன்பான "கோடி" வாழ்த்துக்களுக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  2. அரசருக்கு அநேக கோடி வணக்கங்கள்,
    அருமையான காட்சிப்படுத்ததல்,
    வாழ்த்துக்கள்,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில மணி நேரங்களில் "கோ" வாக இருக்க "கோ" விற்குக் கிடைத்த அனுபவ விவரணம் அருமை..எப்படி இருந்தது ஆட்சி...ரொம்ப க் அஷ்டம்தான் இல்லையா? ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி,

      ரொம்ப அதிஷ்டம் தான்.

      கோ

      நீக்கு
  4. ஹஹஹா###மைண்ட் வாய்ஸ்
    எப்படியோ தங்களுக்கு தெரிந்துவிட்டது:-)
    ***
    அதிகமாக மொக்கை வாங்கிய லிஸ்ட்ல மீதான் ஃபஸ்டு..
    ***

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள மொக்கை மகேஷுக்கு.... சாரி அடிக்கடி மொக்கை வாங்கும் மகேஷுக்கு, பின்னூட்டம் மகிழ்ச்சி எனக்கு உங்களுக்கு மொக்கையாகி இருந்தால் மன்னிக்கவும்.

      நலமா?

      இப்படிக்கு மொக்கைபோடும்

      கோ

      நீக்கு
  5. வருகைக்கும் Go Go என விரட்டுவதற்கும் தான்.

    கோ

    பதிலளிநீக்கு