பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

"யாரங்கே...?"


ராஜ ரகசியம்!!


தொடர்கிறது....


முதலில் இருந்து வசிக்க ராஜ யோகம் விஜயம் செய்க.

இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய  அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம்  கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள  தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர்   கொண்டது.

இங்கே மொத்தம் 800 பணியாளர்கள் பணி புரிகின்றனர்.

வருடத்திற்கு சுமார் 50,000 அரசு முறை பிரதானிகள் வந்துபோகும் பிரமாண்டமான அரண்மனை அது, அங்கே ஒரே நேரத்தில் சுமார் 600 பேருக்கு உட்கார வைத்து உணவு பரிமாறக்கூடிய பிரமாண்டமான விருந்து மண்டப (அறை) வசதி கொண்டது.

இப்போது ஓரளவிற்கு யூகித்திருப்பீர்கள் எந்த அரண்மனை பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று.

ஆமாம் நீங்கள் யூகித்தது சரிதான், லண்டனில் உள்ள  "பக்கிங்ஹாம் அரண்மனை"தான் அது.

Buckingham Palace

Buckingham Palace – The Most Beautiful Royal Palace - England No.4

சரி அங்கே எப்படி நீங்கள், என்னதான் "கோ" என்று பேர் இருந்தாலும் கிட்டபோனதும் காவலர்கள் உங்களை "GO" என்று விரட்டி இருப்பார்களே பின்னே எப்படி மேலே சொன்ன உபசரிப்பு எல்லாம்?

இவ்வளவு சொன்ன நான் மீதியையும் ராஜ ரகசியம் என்று சொல்லாமல் விட்டுவிடுவேனா என்ன?

கொஞ்சம் பொறுமையா படிங்க.

1993 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அரண்மனையின்  ராஜீய பிரதானிகள் வந்து தங்கும் 19 அறைகளும் மற்ற அறைகள், விருந்துண்ணும் மண்டபங்களை பொது மக்கள் பார்வைக்காக திறந்து அனுமதிப்பதுண்டு.

நானும் ஒரு ஆகஸ்ட்டு மாதம் அதற்கான அனுமதி பெற்று அரண்மனைக்கு உள்ளே போடப்பட்டுள்ள விலை மதிப்பு மிக்க தரை விரிப்பை பார்த்து கண்கள் விரிந்த நிலையில் அடி எடுத்து எங்கே வைப்பது என தெரியாமல் தட்டுத்தடுமாறி ஒவ்வவொரு அடியாக எடுத்து முன்னேறி கொண்டிருக்கையில்,(முந்தின நாள்   இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லாததாலும், விடியற் காலையில் இருந்து சுமார் 3 மணி நேரம் பசியோடு வாகனம் ஒட்டி வந்ததாலும், அரண்மனைக்குள் போவதற்குமுன் அனுமதி சீட்டு வாங்க வரிசையில் கால் கடுக்க நின்றிருந்ததாலும்) கொஞ்சம் தலை சுற்றலும்,  குமட்டலுமாக இருக்க அருகில் இருந்த அலுவலரிடம் விஷயத்தை சொன்னேன்.

உடனடியாக என்னை அருகிலிருந்த அறையில் அமர செய்து, குமட்டலில் இருந்து குபீரென குதிக்க பார்த்த எச்சிலை துப்ப அரண்மனை பெயர் பொறிக்கப்பட்ட சிக் பேகை (sick bag) கொண்டுவந்து கொடுத்து, பின்னர் வாக்கி டாக்கி மூலம் உள்ளே இருந்த அரண்மனை வைத்தியர்(!!) குழுவிற்கு தகவல் சொல்ல அங்கிருந்து ஒரு டாக்டர், இரண்டு, தாதியர், ஒரு உதவியாளர் புடை  சூழ்ந்தது என்னை .

சீருடையும் சிறப்பு தோற்றமும் சிரித்த முகமும் கொண்ட அவர்கள் "ராஜ மரியாதை" (என்று சொல்ல கேட்டிருப்போம், அன்று அதை  அனுபவித்தேன் என்று சொல்லலாம்) யுடன் பதுசாக அழைத்து சென்று குளு குளு அலங்கார அறையில்   பஞ்சணையில் படுக்க வைக்கப்பட்டு மேற் சொன்ன அனைத்து உபசரிப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டதோடு தேவையான முதல் உதவியும் அளிக்கப்பட்டு , சுமார் நான்கு மணி நேர ஓய்விற்கு பிறகு, மருத்துவர் குழுவின் முழு மறு பரிசோதனைகள் அளித்த திருப்த்திகரமான உடல் ஆரோக்கியத்தின்  அடிப்படையில்  அரண்மனை அறையை விட்டு வெளியில் வந்து ஏனைய இடங்களையும் காட்சி பொருட்களையும் கண்டு மனம் நிறைந்த மகிழ்வுடன் வீடு திரும்பினாலும் என் நினைவுகள் மீண்டும் மீண்டும் அந்த அரண்மனை வாசத்தை அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டு இருக்கின்றது.

உலகின் டாப் 10 அழகிய அரண்மனைகளுள் கீழ்காணும் 4 அரண்மனைகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு பெற்றமை குறித்தும் உள்ளம் அவ்வப்போது மகிழ் கொள்ளும்.

அவற்றின் அனுபவங்களை குறித்து வாய்ப்புகள் வாய்க்குமானால்  பிறிதொரு நாளில் பகிர்கின்றேன்.

Forbidden City

Most Beautiful Royal Palaces – Forbidden City- China - No.1


Palace of Versailles


The Most Beautiful Royal Palaces – Versailles Palace - France - No.6

Mysore Palace


Mysore Palace – The Most Beautiful Royal Palaces - India No.9


நம்ம ஊர் அரண்மனைகள் எந்த விதத்திலும் சளைத்ததல்ல(உலகின் ஒன்பதாவது அழகிய  அரண்மனை நமது மைசூர் அரண்மனை என்பது நமக்கு பெருமைதரும் விஷயம்). என்றாலும் அங்கே தங்கி துயிலும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை, ம்ம்ம்... என்னுடைய அருமை வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சி இருக்கு....


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

வாய்ப்பு கிடைத்தால்.

கோ

8 கருத்துகள்:

 1. ஹாஹ்ஹ் நிச்சயமாக உங்கள் முதல் வர்ணணையில் அது கனவு அல்ல என்று தெரிந்திருந்தாலும், ஆனால் ஏதோ ஒரு பொடி உள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தது....

  ஆனால் அது உங்கள் தலை சுற்றல் மயக்கம் என்றதும் உண்மையிலேயே ஐயையோ இந்தச் சின்ன வயதிலேயேவா என்ற சிறிய வருத்தமும் வந்தது....ம்ம்ம் அப்புறம் ஒன்ரும் இல்லை ஆரோக்கியம் என்று தெரிந்து கொண்டோம்...

  ஆனால் நல்ல பல தவல்கள் தெரிந்து கொண்டோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் எழுத்திலும் அக்கறை கொண்டு என் தலை எழுத்தும் , உடல் ஆரோக்கியமும் நலமுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் வெளிபடுத்தும் உங்கள் அன்பிற்கு நான் அடிமை.

   கோ

   நீக்கு
 2. தங்களின் ராஜ ரகசியம் எதிர்பார்க்காதது.
  குமட்டல் வந்ததும் நல்லதுக்கோ:-)
  ***
  விவரித்தவிதம் சூப்பர் சார்.


  Mysore Palace ஒரு தடவை சென்ற ஞாபகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மகேஷ்,

   பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.

   கோ

   நீக்கு
 3. பதில்கள்
  1. உங்களின் பிரமாண்டமான வாழ்த்துக்கு மிக்க நன்றி தனப்பால்.

   கோ

   நீக்கு
 4. வணக்கம் அரசே,
  நல்ல ராஜ மரியாதை என்பது இது தானோ,
  ஆம் அரசருக்கு இது தேவைதான்,
  உம்ம மனசு வெள்ளைக்காரனுக்கு தான் தெரியும் போல,
  தொடரட்டும்,,,,,,,,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாங்கம்மா!!!!!

  நலமா?

  வருகைக்கு மிக்க நன்றி.

  வெள்ளைகாரனுக்கு தெரிஞ்ச அளவிற்கு வேற யாருக்காவது தெரியுமா என் மனது என்பது சந்தேகமே.

  கோ

  பதிலளிநீக்கு