பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 ஜூலை, 2015

கை நிறைய காசு.

நல்ல நோட்டு

நண்பர்களே,

சீக்கிரம் பணக்காரர்களாக ஆகவேண்டுமாயின்,நேர்மையான கடின உழைப்பும், கடவுளின் ஆசியும் ஒருங்கே அமைய பெற்றால் நிச்சயம் சாத்தியம் என்று அறுதி இட்டு உறுதியாக  சொல்லமுடியாது.


கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. 

எனினும் உழைக்க ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளே வீடு வாசல், தோட்டம் துரவு, கார், பங்களா என்று அனைத்து வசதிகளையும் பெற்று ஊரிலேயே எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கும்படியான வாழ்க்கை, நம் தமிழ் திரைப்பட கதா நாயகர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகும் அதுவும்  அந்த கதையில் மட்டும்.

இன்னும் ஒரு சிலர் உண்மையிலேயே அதே திரை துறையில் நுழைந்த கொஞ்ச வருடங்களிலே தயாரிப்பாளர்களாகவும் உயர்ந்து "கோடி" கட்டி வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர், நேரம் நல்லா இருக்கும்போது.

இருந்தாலும், நமக்கு தெரிந்தவரை, ஓவர் நைட்ல  பணக்காரர்களாகிவிடும் கதையையும் கேட்டு இருக்கின்றோம்.  இவர்கள் கண்டிப்பாக கடின உழைப்போ, நேர்மையான தொழிலோ ஞாயமான வாழ்க்கை முறையிலோ இப்படி ஆகா வாய்ப்பே கிடையாது.

ஒருவேளை லாட்டரி போன்ற சமாச்சாரங்கள், பங்கு சந்தை போன்ற சூதாட்ட விளையாட்டின் மூலம் வேண்டுமானால் இப்படி ஆக வாய்ப்பிருக்கின்றது.

அப்படியானால் நாம் கேள்விப்பட்ட வகையில் உலகில் , சாலை ஓரத்தில் படுத்துறங்கி, சாப்பிட பிறரிடம்   கைகளை ஏந்தி நின்று பின்னர் உலகமே வியக்கும் பணக்காரர்களாக குறுகிய காலத்தில் தங்களை முன்னிறுத்தி காட்டிக்கொள்ளும் இவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன்மூலமே இத்தகைய நிலைமைக்கு வந்திருப்பது பின்னர் வெட்ட வெளிச்ச மாகின்றது.

இத்தகைய சமூக விரோத செயல்களில் விபச்சாரம், கள்ளக்கடத்தல்,கலப்படம் செய்தல்,போலி மருந்து வியாபாரம், போலி மருத்துவர் தொழில்,போதை மருந்து கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்,சந்தன மரம், செம்மரம், கோவில் சிலை கடத்தல், கொலை கொள்ளை , கருப்பு பணம், வரி ஏய்ப்பு போன்ற செயல்கள் முன்னிலை வகித்தாலும், இவை அத்தனையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, குறைந்த முதலீட்டில் மிக குறுகிய காலகட்டத்தில் நிறைந்த செல்வங்களுக்கு சொந்தக்காரர்களாக வழி வகுக்கும் ஒரு சமூக விரோத, தேச துரோக தொழில் ஒன்று உண்டென்றால் அது  ,"கள்ள நோட்டு|" தொழில்.

சாதாரண மக்கள் புழங்கும் சிறிய பெட்டி கடையில் இருந்து மிகபெரிய  நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட வணிக வளாகங்கள் , ஓட்டல்கள் வரை  இந்த தொழில் தனது ஆதிக்கத்தை செய்கின்றது.

இதற்க்கு கார் பங்களா போன்ற மூலதனம் தேவை இல்லை, மூளை பலமும் நெஞ்சுரமும் மட்டும் இருந்தால் போதும் என்கின்றனர் சமீபத்தில் இதுபோன்ற தொழிலில் ஈடுபட்டு ரகசிய வீடியோ பேட்டிக்கு  சம்மதித்து "அருளுரை"ஆற்றியவர்கள்.

கேட்க்க கொஞ்சம் ஆர்வமாகவே இருந்தது.

அதாவது,  நல்ல பணம் ஒன்று என்றால் கள்ளப்பணம் இரண்டு அல்லது ஐந்து அல்லது பத்து, நேரத்திற்கு ஏற்றார்போல கை மாறுமாம்.

உங்களிடம் ஆயிரம் ரூபாய் நல்ல பணம் இருந்தால் அதை அவர்கள் பெற்றுக்கொண்டு, ஏறக்குறைய எந்த  வகையிலும் அது கள்ளப்பணம் என்று கண்டுபிடிக்க முடியாத  அளவிற்கு நல்ல பணம் போலவே தோற்றம் அளிக்கும் கள்ளப்பணத்தை இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து மடங்காக கொடுப்பார்களாம்.

மேற் சொன்ன அனைத்தும் நண்பர் ஒருவரோடு பேசி கொண்டிருந்தேன் , பிறகு பேச்சு வேறு விஷயங்களை நோக்கி பயணித்தது, அது எதை பற்றி என்று பிறகு சொல்கிறேன். 

அப்படி பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் சொன்னார், இப்போது சில இடங்களில் ஒன்றுக்கு பத்துவரை கொடுக்கின்றனராமே உங்களுக்கு தெரியாதா என்று கேட்டார்.

என்ன ஒன்றுக்கு பத்தா?

எங்கே ?  யார் தருகின்றனர்?

அவர் சொன்னார் நிறைய பேர் செய்கின்றனர், எனினும் நம்ம கூட்டுறவு பண்டக சாலையின் உள்ளே அமைந்திருக்கும் ஒரு அலுவலகத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே தருவதாக கேள்விபட்டேன் என்றார்.

எனக்கும் ஆவல் அதிகரிக்க  வெளியில் காட்டிக்கொள்ளாமல், அவர் போகும் வரை காத்திருந்துவிட்டு , வேகமாக அவர் சொன்ன அலுவலகம் சென்றேன், எல்லா இடங்களிலும் கண் காணிப்பு கேமராக்கள் வேறு பொருத்தபட்டிருந்தன.

பலதரப்பட்ட "சேவை" , வியாபாரம் செய்துகொண்டிருந்த அவர்களை கொஞ்சம் தயக்கத்துடன் அணுகி , விசாரித்தேன்.அவர்களும் என்னுடைய ஐ டி யை கேட்டார்கள், இதற்க்கெல்லாம் ஐடி எதற்கு?

எங்களுக்கென்று ஒரு முறைமை உண்டு அதன்படிதான் செய்ய முடியும், உங்களுக்கு எவ்வளவு பணத்திற்கு மாற்ற வேண்டும்.

ஒரு பவுண்டுக்கு எத்தனை தருவீர்கள்?

ஒன்றுக்கு நாங்கள் 390 தருவோம்.

என்ன ஒன்றுக்கு பதில் முன்னூற்று தொண்ணூறா? நம்ப முடிய வில்லையே.

ஆமாம், இங்கிலாந்திலேயே நாங்கள்தான் இத்தகைய மதிப்பீட்டில் தருகிறோம், எனவே தான் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்றனர்.

சரி எனக்கு முதலில் 100 பவுண்டுக்கு மட்டும் மாற்று பணம் தாருங்கள் பிறகு தேவைபட்டால் வருகிறேன் என சொல்ல, என்னிடமிருந்து 100பவுண்டுகளை பெற்றுக்கொண்டு,அது நல்ல பணம் தானா என்பதை அங்குள்ள ஒரு எலக்ட்ரானிக் கருவி மூலமும் தான் வைத்திருந்த பிரத்தியேகமான பேனாவினால் கிறுக்கியும் சரி பார்த்து விட்டு(அது சரி).

(இன்றைய கால கட்டத்தில் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கின்றன, இங்கிலாந்து மட்டும் விதி விலக்கா என்ன?)

உள்ளே பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த அறையிலிருந்து   கொண்டுவந்து, கண்ணாடி தடுப்பிற்கு அந்த புறத்தில் அமர்ந்து ஒவ்வொன்றாக எண்ணி ஒரு பாலிதீன் பையில் போட்டு என்னிடம் கொடுத்து பத்திரமாக கொண்டு செல்லுங்கள் என எச்சரித்து அனுப்பினார்கள்.

அப்படி அவர்கள் என்னிடம் கொடுத்த தொகை மொத்தம் 39,000.00

நானும் சந்தோஷமாக பெற்று வந்தேன், மீண்டும் தேவைபட்டால் இதே நிறுவனத்தில்தான் மாற்றவேண்டும் என தீர்மானித்து கொண்டேன்.

சரி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது எங்கள் பேச்சு வேறு விஷயங்களை நோக்கி பயணித்தது, அதை பற்றி பிறகு சொல்கிறேன் என சொல்லி இருந்ததை, இப்போதே உங்களிடம் சொல்லி விடுகின்றேன்.

"அதாவது அடுத்த வாரம் கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரி செல்லவேண்டி இருக்கின்றது, அங்கே இன்னும் ஈரோ எனும் நாணயம் புழக்கத்திற்கு வரவில்லை எனவே அங்கு செலவழிக்க அந்த ஊர் நாணயம் தேவைபடுகின்றது, எங்கே நல்ல மாற்று செலவாணி கிடைக்கும்?"

அவர் சொன்னார், "நம்ம கூட்டுறவு பண்டக சாலையின் உள்ளேயே அமைந்திருக்கும் தபால் நிலையத்தில் (அரசு துறை)உள்ள அந்நிய செலவாணி மாற்றும் அலுவலகத்தில் நல்ல  மதிப்பீட்டில் (EXCHANGE RATE )பெற்றுக்கொள்ளலாம்"

"அப்படியா சரி நான் அங்கேயே என் பவுண்டுகளை ஹங்கேரியன் நாணயமான போரின்ட் (FORINT) ஆகா மாற்றி கொள்கிறேன்"

Image result for PICTURE OF HUNGARIAN FORINT

இதுதான் நாங்க பேசினது. மற்றபடி நானாவது ......

என்னங்க உங்களுக்கும் 1க்கு 390 வேணுமா?

மற்றவை Hungary யிலிருந்து வந்தவுடன், இப்போ எனக்கு ரொம்ப Hungry இருக்கு சாப்டபோகனும்.

உங்களுக்கு என் மேல் angry ஒன்னும் இல்லையே?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ




8 கருத்துகள்:

  1. உண்மையா...? இல்லை தொடரும் என்பதை போட மறந்து விட்டீர்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடரும் போட வேற இருக்கு.. தனப்பால், இது உண்மைதான்.

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. காரிகன்,

    வருகைக்கு மிக்க நன்றி,

    பத்திரமாக இருக்க முயற்சிக்கின்றேன்.

    பதிவு பிடித்திருந்ததா?

    கோ

    பதிலளிநீக்கு
  3. கோ அரசரே அது கள்ள நோட்டல்ல என்று எங்களுக்குத் தெரியாதா என்ன...

    இத்தகைய சமூக விரோத செயல்களில் விபச்சாரம், கள்ளக்கடத்தல்,கலப்படம் செய்தல்,போலி மருந்து வியாபாரம், போலி மருத்துவர் தொழில்,போதை மருந்து கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்,சந்தன மரம், செம்மரம், கோவில் சிலை கடத்தல், கொலை கொள்ளை , கருப்பு பணம், வரி ஏய்ப்பு போன்ற செயல்கள் முன்னிலை வகித்தாலும், இவை அத்தனையையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, குறைந்த முதலீட்டில் மிக குறுகிய காலகட்டத்தில் நிறைந்த செல்வங்களுக்கு சொந்தக்காரர்களாக வழி வகுக்கும் ஒரு சமூக விரோத, தேச துரோக தொழில் ஒன்று உண்டென்றால் அது ,"கள்ள நோட்டு|" தொழில்.// கோ அவர்களே நீங்க "கோ" பிள்ளை "இல்(லை)" "சின்ன" பிள்ளையாவே இருக்கீங்க. பின்னே என்னங்க, இத்தனை சொல்லிருக்கீங்க இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடற அளவுக்கு ரெண்டு வேலை இருக்குதே இந்தியாவுல..."அரசியல்வாதி" இன்னுண்ணு "சாமிஜி" போட்டா போச்சு நிமிடத்தி பணக்காரார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் விவரமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே,
    நல்லா சொல்லிக்டுத்தீங்க,
    பார்த்து பத்திரமா போங்க,
    அங்க யாராவது ஏதாவது சொல்லி,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      அறிவுரைக்கு மிக்க நன்றி. கவனமாக இருக்க முயற்சிக்கின்றேன்.

      கோ

      நீக்கு