பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 ஜூலை, 2015

" நல் வாழ்த்துக்கள்"

நண்பர் விசுவின் 50 ஆவது பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

Image result for pictures of 50th birthday cakes

ஆண்டவனின் பேரருளால் 
ஆண்டுகள் பல கடந்து -நமை
ஆண்டவனின் தேசமதில் -ஐம்பதாம்
ஆண்டு விழா!

 பெற்றோர்,உற்றோர்
உறவினர் நண்பர் சூழ

கனிதரும் திராட்ச்சை செடி
கட்டிய மனைவி நல்லாள்
களங்கமில்லா ஒலிவ
 கன்றனைய
கண்மணி ராசாத்திகள் 
கட்டி அனைத்து  
கன்னத்தில்
முத்தம் பதித்து - 
பன்னீராய் ஆனந்த
கண்ணீர் தூவ 

விழா  நாயகன்-இளமை
விழா(த) நாயகன்
விசு எனும் 
விந்தை 
மந்திர பெயர் கொண்டு

அமெரிக்க வாசம் 
சுவாசமாய் ஆனபின்னும்
இமைபொழுதும் தமிழ் மறவா
இதயத்தின் சொந்தம் உம்மை
அம்மாவின் ஆசியோடும் 
அப்பாவின் ஆசியோடும்
அக்காக்கள்
அண்ணன்கள்
அத்துணையோர் ஆசியோடும்
அனைவரையும் 
வாழ வைக்கும் 
அருளாளன் ஆசியோடும்
இன்னும் இரண்டு 
இதுபோன்ற
நாட்கள் காண 
இன்றும்மை
வாழ்த்துகின்றேன் -
இளமையுடன்
நீர் வாழ்கவென்றே.

HAPPY BIRTHDAY VISU!

நன்றி!!
கோ

10 கருத்துகள்:

 1. அருமையான வரிகள்! நண்பர் விசு அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! அவர் மேன் மேலும் பல வருடங்கள் - இதற்கு எண்ணிக்கை இல்லை - தனது நண்பர்கள் - குறிப்பாக தண்டபாணியுடன் - சேர்ந்து லூட்டி அடித்து அதை நம் எல்லோருடனும் பகிர்ந்து எப்போதும் மகிழ்வாக இருக்க எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகள் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் கிடைக்க மனதாரப் பிரார்த்திக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 2. அட அவரோட பிறந்த நாள் ஒரு வாரம் முன்னாடிதான் facebook ல் notification பார்த்து வாழ்த்து தெரிவித்திருந்தேன்.
  ***
  அது உண்மையா இதுதான் உண்மையா:-)
  ***
  அருமையான வாழ்த்து சார்.

  பதிலளிநீக்கு
 3. இனிய நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தனப்பால்.

   கோ

   நீக்கு
 4. வணக்கம் அரசே,
  எங்களின் இதயம் நிறை வாழ்த்துக்களும் தங்கள் நண்பருக்கு உரித்தாக்கட்டும்,
  என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கிறோம்,
  தங்களுக்கும்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரின் வாழ்த்துக்கள் நண்பரை சென்று சேரட்டும்..
   கோ

   நீக்கு
 5. நண்பர் விசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள்அ வாழ்த்து அவரை சென்று சேரட்டும்.

   கோ


   நீக்கு
 6. உங்கள் பதிவுகள் என் டேஷ் போர்டில் சில மாதங்களாக வரவில்லை! அதனால் வாசிக்க முடியாமல் போய்விட்டது. வலைச்சரத்திலும் தங்களை அறிமுகம் செய்ய நினைத்தும் விடுபட்டுவிட்டது. வருந்துகின்றேன்!

  பதிலளிநீக்கு
 7. சுரேஷ்,

  நன்றாக தேடிப்பாருங்கள் எங்கேனும் தென்படுவேன்.

  வலைச்சர அறிமுக முயற்சிக்கும் நன்றிகள்.

  சந்திப்போம்..

  கோ

  பதிலளிநீக்கு