பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 3 ஜூலை, 2015

உன்"ஐ"கண் தேடுதே.

ஐ""யோ!! "ஐ"யோ!!

முதலில் இருந்து கண்களை பார்க்க  முதற்கண் ஐரோப்பாவில் மெட்ராஸ் ஐ படிக்கவும். 

கருப்பு கண்ணாடியை  கழற்றுங்கள் என்று சொன்ன  அந்த அலுவலர் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டுதான் இருந்தார்.
அவரோடு இணைந்து பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டுபேரும் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டுதான் இருந்தனர் , மேலும் என் கண்களை நன்றாக கொஞ்சம் தூரத்திலிருந்து உற்று பார்த்துவிட்டு ,

Image result for pictures of security policies in airports

"உங்கள் கண்களில் ஏதோ நோய்க்கான அறிகுறிபோல சிவந்து காணப்படுகின்றது, மற்ற பயணிகளோடு அதுவும் பல மணி நேரம் பயணிக்க வேண்டி இருக்கும்  உங்களை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது, அது மற்ற பயணிகளையும் பாதிக்கும், அதுவும் காற்று வெளியேறும் வசதியும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்படியான விமான பயணத்தில் உங்களை போன்ற கண் தொற்று இருக்கும் பயணிகளை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது."

"இல்லை நான் இன்று போகவேண்டும்" 

 "வேண்டும் என்றால் நீங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு குணமான பிறகு அதுவும் நன்றாக குணமானதற்கான   மருத்துவரின் ஊர்ஜிதமான அறிக்கை சமர்பித்தபிறகு தான் நீங்கள்  பயணிக்க முடியும் அதுவரை அமெரிக்காவின் எந்த விமான நிலையத்திலிருந்தும் நீங்கள் பயணிக்க முடியாது.

"நான் உடனே போகவேண்டும் எனக்கு விடுப்பு முடிந்துவிட்டது"

"அப்படி பயணத்தை தள்ளி போட முடியாவிட்டால் நியுயார்க்கில் இருந்து லண்டன் அருகிலுள்ள சௌத்தாம்ப்டன் துறைமுகம் செல்லும் பயணிகள் கப்பலில் வேண்டுமானால் முயற்சித்து பாருங்கள் ஒருவேளை அவர்கள் உங்களை அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளன."

 (1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிப்போன டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் உள்ள  சௌத்தாம்ப்டன் துறைமுகத்தில் இருந்துதான் தன் முதலும் கடைசியுமான பயணத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது)

என்பன போன்ற பல கற்பனை சம்பாஷணைகளை மனதில்  திகைப்புடன் சிந்தித்துகொண்டிருந்த என்னைப்பார்த்து அந்த அலுவலர், " சார், குட் யு  ப்ளீஸ் டேக்   தி ஷேட்ஸ்ஆப் அண்ட்  மேக் யுவர் வே த்ரூ " என சொல்லி  நான் கடந்து போகவேண்டிய செக்யூரிட்டி வளைவை காண்பிக்க கற்பனையிலிருந்து விடுபட்டு சுதாரித்துக்கொண்டு நானும் கருப்பு கண்ணாடியை "ஸ்டைலாக" கழற்றி விட்டு அவர்களை ஏறெடுத்து பார்க்காமல் அந்த செக்யூரிட்டி வளைவை கடந்து அந்த பக்கம் சென்று விட்டு மீண்டும் அதே ஸ்டைலில் கண்ணாடியை அணிந்துகொண்டு , பக்கத்தில் இருந்தவரிடம், ஏன் கண்ணாடியை கழற்ற சொன்னார்கள் என கேட்டேன்.

Image result for pictures of security policies in airports

அவர் சொன்னார், "அந்த செக்யூரிட்டி வளைவில்  கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன  அதனுள் கடந்து செல்பவர்கள் கருப்பு கண்ணாடியோ அல்லது தொப்பியோ அணிந்திருந்தால் புகைப்படத்தில் , வீடியோ பதிவில் சரியான அடையாளங்கள் பதிவு செய்ய முடியாது எனவேதான் இந்த கெடுபிடிகள்" என சொன்ன அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு , விமானம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் என் அருகில் வந்தமர்ந்த ஒரு பெண்மணியும் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார், ஒருவேளை இவருக்கும் கண் நோயோ என நினைத்து அவருக்கு ஒரு ஏளன புன்னகையை தாராள மனசுடன் அன்பளிப்பாக்கி, வணக்கம் சொல்ல அவரும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு தன் கருப்பு கண்ணாடியை கழற்றி தன் கைபையில் வைத்து அதை தலைக்கு மேலே உள்ள கேபினில் வைத்து மூடிவிட்டு இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டே கொண்டுவந்திருந்த நாவலில் ஆவலுடன் தன் பளிச்சிடும் கண்களை உலவவிட்டார். 

யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடக்கூடாது என்ற மதிப்புமிக்க பாடத்தை புகட்டிய அந்த பெண்மணிக்கு மனதில் நன்றி சொல்லிவிட்டு கருப்பு கண்ணாடியுடன் கண்களை மூடினேன்.

விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது பானங்கள் பரிமாறும் பணிப்பெண் வந்து உங்களுக்கு ஏதேனும் குடிக்க வேண்டுமா என கேட்க , "ஆரஞ்சு ஜூஸ்" என கேட்க  அவரும் ஒரு அட்டை டம்ளரில் ஊற்றி கொடுத்தார், பார்த்தால்  அது ஆரஞ்சு ஜூஸ் போல அல்லாமல் ஏதே கருப்பு நிறத்தில் இருந்தது.

ஒருவேளை நாம் ஆரஞ்சு ஜூஸ் கேட்டதை மறந்து கொக்கோ கோலா கொடுத்துவிட்டார்கள் போலும் என்று நினைத்து அந்த பணிப்பெண்ணை அழைத்து, நான் கேட்டது ஆரஞ்சு ஜூஸ்" என்றேன் அதற்க்கு அந்த பெண், "நான் கொடுத்ததும் ஆரஞ்சு ஜூஸ் தான்" என சொல்ல குழம்பிபோன நான் சரி மேற்கொண்டு வாக்கு வாதம் வேண்டாம் என்று நினைத்து கொக்கோ கோலாவை பருக ஆரம்பித்தேன். 

ஆனால் அது கொக்கோ கோலாவின் சுவைபோல் இல்லை மாறாக ஆரஞ்சு ஜூஸ் சுவையாக இருந்தது, பின்னர்தான் உணர்ந்து அசடு வழிந்தேன், அணிந்திருந்த கருப்பு  கண்ணாடி ஆரஞ்சு ஜூஸை  கருப்பு நிறமாக  காட்டியதை எண்ணி.

பயணம் முடிந்து லண்டன் வருவதற்குள் மூன்று அல்லது நான்குமுறை சொட்டு மருந்தை பக்கத்து சீட்டில் உள்ள பெண்மணிக்கு தெரியாமல் போட்டுக்கொண்டே இருந்தேன்.


லண்டனிலும் கண்ணாடியை கழற்றிவிட்டு செக்யூரிட்டி வளைவை கடந்ததும் அணிந்துகொண்டு  வீடு வந்து சேர்ந்தேன்.

 அடுத்தநாள் மருத்துவரை அணுகி அவரிடம் கண்களை காட்டி அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒளிவு மறைவு இன்றி பதிலளித்தேன். 

டாக்டரிடமும் வக்கீலிடமும் உண்மையைத்தான் சொல்லணும் என்று எங்க தாத்தா அடிக்கடி சொல்வது நினைவில் வர இவரிடம் எல்லா வற்றையும் சொல்லிவிட்டேன் ஏனென்றால் அந்த மருத்துவர் டாக்டர் மட்டுமல்ல சட்டம் பயின்று பட்டம் பெற்ற வக்கிலும்தான்  (ஆமாம் நண்பர்களே இவர் இரண்டு கல்வித்தகுதி கொண்டவர்).

மருத்துவர் சோதித்துவிட்டு சொன்னார் நீங்கள் கடலில் குளிக்கும்போது அந்த சிறு மணலில் இருந்த உப்புகளந்த சிலிக்கான் துகள்கள் உங்கள் கண்களின் மெல்லிய தோலை  கீறி இருக்கும்  நீங்களும் கைகளால் கண்களை தேய்த்து இருப்பீர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புதானே தவிர இது கண்நோய் அல்ல , தொற்று நோயும் அல்ல.  

மேலும் நீங்கள் கடையில் இருந்த பல கண்ணாடிகளை போட்டு பார்த்ததும் ஒரு காரணம் ஏனென்றால் அதே கண்ணாடிகளை பலரும் போட்டுபார்க்கும்போது அவர்களின் சில அலர்ஜி  மற்றும்    சருமம் சம்பந்தப்பட்ட பல  நோய்களும் வர வாய்ப்புள்ளது எனவே இதுபோன்று கடைகளில் வைக்கபட்டிருக்கும் கண்ணாடிகளை அணிந்து பார்பதற்கு முன் நன்றாக துடைத்துவிட்டு அணிந்து பார்ப்பது நல்லது அல்லது கடைகாரர்களிடமே சொல்லி ஸ்பிரே போன்ற கிருமி நாசினி கொண்டு நன்றாக துடைத்து கொடுக்கசொல்லி அணிந்து பார்ப்பது மிக  நல்லது என்றும் கூடுமானவரை பிரிக்கபடாமல் பேக்குகளில் இருக்கும் கண்ணாடிகளை வாங்கி அணிவதும் மிக மிக நல்லது என்றும் அறிவுரை  வழங்கி  இன்னும் மிச்சமுள்ள அந்த அமெரிக்க சொட்டு மருந்தையே இன்னும் இரண்டு நாட்களுக்கு போட சொன்னார்.

நல்லவேள அந்த பீச்சில நாம் பார்த்த அந்த ஜெகஜோதி கண்கொள்ளா காட்ச்சியாலன்னு சொல்லல.

அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, தொற்றும் விதமாக சிலருக்கு கண்நோய் வருகின்றதே அதற்க்கு என்ன பெயர் என்று கேட்க  , அவர் சொன்னார் "conjunctivitis " இந்த பெயர் எனக்கு தெரிந்திருந்தாலும் ஒருவேளை அவரும் இதை  "மெட்ராஸ் ஐ" என்று சொல்லுவாரோ  என்ற ஆவலில் கேட்டு வைத்தேன்.

இப்போது எங்குபார்த்தாலும் யாரை பார்த்தாலும் கருப்பு கண்ணாடிகள் அணிந்துகொண்டு நடமாடுவதை பார்க்கும்போது ஐரோப்பா முழுவதும் மெட்ராஸ் ஐயோ என நினைக்க தோன்றுகின்றது. 

 ஐயோ ஐயோ.. 

யாரு கண்ணு வச்சாங்களோ தெரில ஒரு ரெண்டு நாள் என் "கண்ணு அதுல கொஞ்சம்  மண்ணு"

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

14 கருத்துகள்:

 1. தமிழ் நாட்டில் பழங்காலமாக மக்களுக்கு வரும் கண் நோய்தான் இது. Eye Infection என பொதுவாக அழைக்கப்படும் இதை (70கள் என்று நினைக்கிறேன் ) மெட்ராஸில் பலர் கறுப்புக் கண்ணாடி அணிந்ததால் (பிற இடங்களில் அப்படி மக்கள் கறுப்புக் கண்ணாடி அணிவதில்லை அப்போது) இது எதோ மெட்ராஸுக்கு மட்டும் கிடைத்த தகுதி போல நினைத்துக்கொண்டு மெட்ராஸ் ஐ என பெருமையாக அழைக்க அதுவே பெயராகிவிட்டது.

  வேடிக்கை என்னவென்றால் இன்றும் கூட சில மருத்துவர்கள் ஐ இன்பெக்ஷன் என்று சொல்லாமல் மெட்ராஸ் ஐ என்றே சொல்கிறார்கள். "உங்களுக்கு மெட்ராஸ் ஐ வந்துருக்கு". என்று ஒருமுறை என்னிடம் ஒரு கண் மருத்துவர் சொல்ல, அதன் பின் நான் அங்கே செல்லவில்லை. He just can't be professional.

  நன்றாக எழுதுகிறீர்கள் கோ.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் வழக்கம்மான உங்கள் புதியதகவல்களுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

   உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கின்றன.

   கோ

   நீக்கு
 2. நல்லவேளை தப்பித்தீர்கள்...

  ஜெகஜோதி மறுபடியும்....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனப்பால்,

   ஆமாம், நல்லவேளை கண் நோயிலிருந்தும் தப்பினேன்.

   "ஜெகஜோதினா" நீங்க எதை நினைக்கின்றீர்கள்?

   கோ

   நீக்கு
 3. அடடா கடைசி நிமிடத்தில் பயணம் தடுத்து நிறுத்தம் செய்தால்
  ச்ஆர் எங்க போவானு தொடர்ந்து
  வாசிக்க...

  கற்பனை தெரிந்ததும்
  !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   என்மீதுள்ள கரிசனை உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது. பதிவினை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

   கோ

   நீக்கு
 4. காரிகன்,

  வருகைக்கும் வழக்கமான உங்கள் புதியதகவல்களுக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

  உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உத்வேகம் அளிக்கின்றன.

  நன்றி

  பதிலளிநீக்கு
 5. "இல்ல இன்னிக்கே வீட்டுக்கு போகணும் எங்க ஆத்தா வையும்" என்பதையும் அந்த கற்பனையோடு சேர்த்து படித்தேன்.

  ஆமா அந்த "ஜெகஜோதி கண்கொள்ளா காட்சி" என்னனு கடைசிவரை சொல்லவே இல்லையே. Lighthouse-அ இருக்குமோ?!

  அரும்(ஐ) !

  பதிலளிநீக்கு
 6. தப்பிச்சீங்க போங்க! ம்ம்ம் எதுக்கு கறுப்புக் கண்ணாடி வாங்கினீங்கனு புரிந்து போனது எல்லாம் அந்தக் கடற்கரை //நல்லவேள அந்த பீச்சில நாம் பார்த்த அந்த ஜெகஜோதி கண்கொள்ளா காட்ச்சியாலன்னு சொல்லல.//

  கறுப்புக் கண்ணாடி அணிவதிலும் இது போன்ற சௌகர்யங்கள் உண்டோ நண்பரே!

  (துளசி, கீதா இருவரில் கீதா அணிவதுண்டு!! அப்ப இதுக்குத்தானோனு யாரோ குரல் கொடுப்பது கேட்கிறது...)

  பதிலளிநீக்கு
 7. உங்கள் இரகசியங்கள வெளியில சொல்லாதீங்க. ஆனால் நான் அணிவது ஜெகஜோதியான, (அதாவது ஓவர் வெளிச்சமுள்ள இடங்களில்), இடங்களில் கண்கள் கூசாமல் இருக்கத்தான்.

  கோ

  பதிலளிநீக்கு
 8. ஹலோ ஓவர் வெளிச்சத்துக்குத்தான் நாங்களும் அணிவது...நீங்க அந்த சௌகரியத்துக்கு வேறு ஏதோ அர்த்தம் கொண்டால் அதுக்கு யாரப்பா பொறுப்பு..ஹஹஹ்----thulasi Geetha

  ஹலோ ஓவர் வெளிச்சத்துக்குத்தான் நாங்களும் அணிவது...நீங்க அந்த சௌகரியத்துக்கு வேறு ஏதோ அர்த்தம் கொண்டால் அதுக்கு யாரப்பா பொறுப்பு..ஹஹஹ்- Thulasi & Geetha

  இது ரொம்ப ஓவர்தான். எதோ அறியாபுள்ள கொஞ்சம் ஆசைப்பட்டு ஒரு கருப்பு கண்ணாடிய வாங்கினா அதுக்குப்போய், ஒரு பச்சப்புள்ளைய இந்த மாதிரி எல்லாம் தப்பா பேசக்கூடாது. அந்த பீச்சிலே சிலர் சொன்னாங்க இந்த குழந்தைக்கு வாயில வெரல வச்சாக்கூட கடிக்க தெரியலையேன்னு,

  அப்படிப்பட்ட என்னப்போய்....

  கோ

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் அரசே,
  என் பின்னூட்டம் காணவில்லை,,
  எங்கே போயிற்று,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,
   என்ன சொன்னீர்கள்?
   கோ

   நீக்கு
  2. மன்னிக்கணும், எப்படி எங்கே போயிற்று, என்று எனக்கு தெரியவில்லை.

   வேறொன்று அனுப்புங்கள், இந்தமுறை வெளி இடுகிறேன் தவறாமல்.

   கோ

   நீக்கு