பின்பற்றுபவர்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

"மொய் விலக்கபடவில்லை"



பரிசுப்பொருள்- என்ன பொருள்?

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன் ஒரு விழா அழைப்பிதழ் கிடைக்க பெற்றேன்.


அந்த அழைப்பிதழில், ஒரு குழந்தையின் "பெயர் சூட்டும்" வைபவம் குறித்த தகவல்கள்களை அக்குழந்தையின் பெற்றோர் குறிப்பிட்டு நம் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் கட்டாயம் விழாவில் பங்குகொண்டு, குழந்தையை ஆசீர் வதிகிக்கும்படியும் குறிப்பிடிருந்தனர்.

மேலும் அந்த அழைப்பிதழில் இருந்த இரண்டு பின் குறிப்புகளுள் ஒன்று நான் ஏற்கனவே எமது "பார்ட்டி உஷார்" பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோலான  "RSVP" இருந்தது.

அதை தொடர்ந்து, நம்ம ஊரில் சில திருமண அழைப்பிதழில் "மொய் விலக்கப்பட்டது" என்று குறித்திருக்குமே அதுபோல மொய் முற்றிலுமாக விலக்கபடவில்லை என்றாலும்.,

"PLEASE AVOID BOXED PRESENTS AND GARMENTS" என்று குறிப்பிடபட்டிருந்தது.

Image result for pictures of boxed gifts

அதாவது பெரும்பாலும் குழந்தைகள் தொடர்பான எந்த விழாவாக இருந்தாலும் அக்குழந்தைகளின் வயதிற்கும் ஆணா பெண்ணா என்பதற்கு ஏற்ப  அவர்களுக்கு பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் அல்லது துணி மணிகள், நகைகள்  வாங்கி பரிசளிப்பது வழக்கம்.

ஆனால் அதே சமயத்தில் வாங்கப்படும் விளையாட்டு பொருள் அவர்களிடம் ஏற்கனவே இருக்குமாயின் அந்த விளையாட்டு பொருளின்  தேவையும் பயன்பாடும் அந்த பரிசுபொருளின் முக்கியத்துவமும்  பெரிதாக மதிப்பிட முடியாததாக ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது.

இதில் ஏற்கனவே அவர்கள் வீட்டில் வேறு ஒரு குழந்தை இருந்து கடந்த முறை அந்த குழந்தைக்கு இதுபோன்று பிறந்தநாளுக்கு பரிசுகள் வந்து அதையே இன்னும் பிரிக்காமல் வைத்திருக்கும் சூழ்நிலையில் அதே போன்று இன்னும் வந்தால் அவர்கள் அவற்றை எங்கு வைப்பார்கள்?

அதேபோல அவர்களுக்காக வாங்கப்படும் துணி மணிகளும் ஏறக்குறைய ஒரே அளவாக இருக்கும் பட்சத்தில் ஒரே நேரத்தில் அந்த அனைத்து துணி மணிகளையும் அணிந்துகொள்ளும் சீதோஷன நிலையோ, வாய்ப்போ இல்லாத சமயத்தில் அந்த துணிமணிகள் அணிந்துகொள்ள ஏற்றதாகவோ அல்லது அளவு சரியானதாகவோ இல்லாமல் போகும் வாய்ப்பும் அதிகம் என்பதால், அப்படி வாங்கி பரிசளிக்கப்படும் பரிசுபொருட்கள் அர்த்தமற்றதாகவும் பண விரயமாகவும் போவதோடு, தாம் வாங்கி கொடுத்த அந்த பரிசுபொருட்கள் பயன்படுத்தபடாமல் வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள் அல்லது வீணாகி போய்விட்டது என்பதை கொடுத்தவர்கள் அறிய நேர்ந்தால் அவர்களின் மன கஷ்ட்டம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சில வேளைகளில் அளவு சரியில்லாதபோது அவற்றை மாற்றிக்கொள்ள வசதியாக வாங்கிய ரசீது இருந்தாலும்  அவற்றை எடுத்துகொண்டு அந்த கடைக்கு சென்று மாற்றுவதும் ரசீது இல்லாமல் போகுமானால் இன்னும் சிரமமே. .

அப்படியானால் அவர்களுக்கு என்ன வாங்குவது?

ஒரு சிலர் அந்த குழந்தையின் பெற்றோர்களை தொடர்புகொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து அதன்படி பரிசு வாங்கி செல்வோரும் உண்டு.

அதைவிட மேன்மையானது, பணமாக பரிசளிப்பது.

அதே சமயத்தில் இதில் ஒரு சங்கடமும் உள்ளது.

பரிசு என்றால் உடனே அதை மதிப்பிட முடியாது, அதே பணம் என்றால், " இவ்வளவுதானா" என சொல்லிவிடுவார்களோ என்று எண்ணி சிலர் பல வேளைகளில் சம்பந்தமில்லா பரிசுபொருட்களை வாங்கி வயதிற்கு ஏற்றாற்போல் அல்லாமல் எதோ ஒன்றை "பரிசு" என்ற பெயரில் கொடுத்து வருவதும் நடக்கத்தான் செய்கின்றது.

மேலும் சிலர் சில அங்காடிகளில் GIFT கார்டுகளை வாங்கி கொடுக்கின்றனர். 

இதுவும் என்னை பொறுத்தவரயில் ஏற்புடையதாக இல்லை. ஏன் என்றால், அப்படி  ஒரு குறிப்பிட்ட கடையின் Gift கார்டை  கொடுத்தால் அந்த Gift கார்டை அந்த கடைதவிர வேறு கடையில் பயன்படுத்த முடியாது, அதே சமயத்தில் அந்த கடையில் இவர்களுக்கு தேவையான பொருள் இல்லை என்றாலோ அல்லது Gift கார்டைவிட  பொருளின் விலை அதிகமாக இருந்தாலோ அது பெற்றோருக்கு மேலும் சிரமத்தைதான் ஏற்படுத்தும், அதுவுமில்லாமல், இவர்களை இந்த Gift வாங்கி கொடுக்கசொல்லி யார் கேட்டார்கள்? என்று  முனுமுனுக்க செய்யும். 

என்னை பொருத்தவரையில் நம்மால் எவ்வளவு பணம் பரிசாக கொடுக்க முடியுமோ அந்த பணத்தை ஒரு வாழ்த்து அட்டையோடு இணைத்து அதை குழந்தைகளின் பெற்றோரிடம் சொல்லி கொடுத்துவிடுவது அந்த பெற்றோர்களுக்கு பல வகையில் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கூடவே குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஒரு சிறிய இனிப்பு அல்லது விலை குறைவான கலர் பென்சில்கள், மெழுகி பேனாக்கள் பெற்றோர் வாசித்து கதை சொல்லும் புத்தகங்களையும் பரிசளிக்கலாம். 

இது போன்று பலர் கொடுக்கும் அந்த பணத்தை ஒன்று சேர்த்து வேண்டுமானால் பெற்றோரும் கொஞ்சம் அதனோடு சேர்த்து, குழந்தைக்கு தேவையான, பெரிதும் பயன்படத்தக்க சிறந்த பொருளை அவர்களே தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ள வசதியாக இருக்கும்.

எனவே எனக்கு கொடுக்கப்பட்ட அந்த அழைபிதழை அனுப்பிய அந்த பெற்றோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பெயர் சூட்டபடவுள்ள   அந்த குழந்தைக்கு ஆசியும் வழங்கி இத்தோடு என் அன்பளிப்பையும் (விரலுக்கு ஏற்ற வீக்கம்) சேர்த்து கொடுக்க திட்டமிட்டு இருக்கின்றேன்.

மேலும் சில வெள்ளையர் குடும்பத்து அழைப்பிதழில் அவர்களின் தேவைகளையும் கூட பட்டியல் போட்டு கொடுத்துவிட்டு, வாங்குவதற்கு முன் தொடர்பு கொள்ளவும் என்றும் இருப்பதை பார்த்து வந்த புதிதில் விந்தையாக உணர்ந்தாலும்  நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற முன் அறிவிப்புகள் கட்டாயம் அவசியம்தான் என்று தோன்றுகின்றது.

பெரியவர்களுக்கான பரிசுபொருட்கள் வாங்கும்போது அவர்களிடம் முன் கூட்டியே கேட்டு அதன்படி வாங்குவது மிக சிறந்தது. இல்லையேல் ஒரே பொருளை பலரும் வாங்கி கொடுத்து சங்கட படுத்துவது சரி அல்ல.

சமீபத்தில் ஒரு பிறந்த நாள் பரிசு வாங்க கடையில் சென்று குறிப்பாக ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அதற்கான பணத்தை கட்ட காத்திருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது வேறு ஒரு நண்பரிடமிருந்து, நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு என்றால் ஆனந்தம் தானே? அவர் ஏறக்குறைய 400 மையில் தூரத்தில் இருந்து அழைத்தார்.

பேசிகொண்டிருக்கையில், அவரும்அந்த பிறந்த நாள் விழாவிற்கு வருவதாக சொல்லி  பரிசுப்பொருள் வாங்க கடையில் இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருப்பதாகவும் சொன்னார்.

அரிடம் ஆர்வ கோளாறில் எனன பரிசு வாங்க போகின்றீர்கள் என கேட்டதற்கு, வாங்கிவிட்டேன் என சொல்லி ஒரு பொருளின்  பெயரை சொன்னதும் எனக்கு SHOCK அடித்ததுபோல் இருந்தது, ஏனென்றால் அவர் வாங்கிய பொருளும் நான் தேர்ந்தெடுத்து பணம் கட்ட காத்திருந்த பொருளும் ஒன்றுதான்.

நல்ல வேளை, உங்களிடம் கேட்டேன் நானும் அதேதான் வாங்க பார்த்தேன், என கூறி உடனடியாக அந்த பொருளை திருப்பி கொடுத்துவிட்டு, நேரம் இல்லாததாலும் வேறு என்ன வாங்குவது என்று தீர்மானிக்க முடியாததினாலும், எல்லோருக்கு எல்லா நேரத்திலும் எங்கும் உபயோகமாக இருக்ககூடிய ஒன்றை பரிசளிக்க முடிவு செய்து அந்த கடையை விட்டு நடையை கட்டி பின்னர் விழா நடைபெறும் ஊர்நோக்கி "போவோமா..... ஊர்கோலம்...". எனும் பாட்டை முனுமுனுத்துக்கொண்டே பயணமானேன்.

நண்பர்களே, 

விழா நடத்துபவர்களும் சரி விழாவிற்கு செல்பவர்களும் சரி, பரிசு பொருள் விஷயத்தில் கொஞ்சம் தெளிவாக பேசி தீர்மானித்துக்கொண்டு அதன்படி செய்வது, நம் கலாச்சாரத்திற்கு கொஞ்சம் அன்னியமாக இருப்பதாக தோன்றினாலும், நடைமுறை அசௌகரியங்களை மனதில்கொண்டு , ஒருவரோடு ஒருவர் கலந்தாலோசித்து வாங்கி பரிசளிப்பது சிறந்ததாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

என் பிறந்த நாள் விழாவிற்கு நேரில் வந்துதான் வாழ்த்த வேண்டும் என்று இல்லை வங்கி கணக்கு எண்ணை தருகிறேன், பணமாகவோ, அல்லது வரை ஓலையாகவோ அனுப்பி வைத்தீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும்.(காசோலை தவிர்க்கவும்)

உங்கள் தங்க மனம் எனக்கு தெரியும்!! கேட்க்காமலேயே தங்கமான பரிசுகள்தான் கொடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்!!!

 நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

10 கருத்துகள்:

  1. அரசருக்கு வணக்கம்,
    நல்ல பாலிசி,,,,,,,
    ஆனாலும் தேவையானது தான்,,,,,,,,,
    அப்புறம் அது என்ன கடைசியில் ,
    நாங்கள் விழாவுக்கு போனால் சாப்பிட மட்டும் தான்,
    வாழ்த்துக்கள்,
    நன்றி,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா,

      ரொம்ப நாளாச்சி உங்ககிட்ட இருந்து தகவல்கள் வந்து. நலமாக இருக்கின்றீர்களா?

      பதிவினை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      மொய் பணம் இல்லாதவங்கள உள்ளேயே சேர்க்க மாட்டோம் , அப்படியே வெறுங் கையேடு வரவங்களுக்கு, நாங்களும் வெறுங் கைய கொடுத்து அனுப்பிடுவோம்.

      ச்சே ச்சே... அப்படி எல்லாம் செய்ய மாட்டோம், நமக்கு பொருளா முக்கியம்? உங்களைபோன்ற பெரியவங்களோட அருள் தானே முக்கியம்அதனால தகவல் கிடைத்ததும் ஒரு நாலு நாளுக்கு முன்னமே குடும்பத்தோட வந்து விழாவை முன்னின்று நடத்தி வைத்து விட்டு செல்லவும்.

      கோ

      நீக்கு
  2. அய்யய்யோ, என் பிறந்த நாள் வந்துட்டுப் போய்ட்டுதே, இந்த டெக்னிக் எல்லாம் முன்பே தெரியாமல் போயிற்றே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பிறந்தநாளுக்காவது இந்த டெக்கினிக்கை பயன்படுத்துங்கள் ஐயா. வருகைக்கு மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
  3. சார்,
    எப்போதுமே ஒரு விழாவுக்கு போகும்போது என்ன பரிசு கொடுக்கலாம் என்பதில் எனக்கும் சந்தேகம் இருக்கு.

    கிட்டதட்ட பரிசு பொருள் பற்றிய அபிப்ப்ராயம் என் மனதில் உள்ளதை அப்படியே நீங்க
    எழுதி வெச்சிட்டீங்க:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ், வருகைக்கு மிக்க நன்றி.

      எனக்கு பரிசு வாங்கும் முன் என்னோடு கலந்து ஆலோசிப்பது நல்லது.

      கோ

      நீக்கு
  4. நல்ல யோசனைகள்...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனப்பால்,

      யாருக்கு வாழ்த்து இப்போது?

      அதற்க்கு இன்னும் பல மதங்கள் ....உள்ளனவே.

      நன்றி

      கோ

      நீக்கு
  5. ஆம் நண்பரே! வெள்ளையர்களின் இந்தத் திட்டம் மிகவும் நல்லதொரு விடயம். ஏனென்றால் இங்கெல்லாம் பரிசுகள் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அதைத் தவறாகச் சொல்லவில்லை. ஏனென்றால் அன்புடன் தரப்படுவது எதையும் நாம் குறை சொல்லக் கூடாது ஆனால் பல சமயங்களில் அந்த அன்பினால் வரும் பொருட்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

    நாங்கள் மொய் பணம்தான் பெரும்பாலும் குழந்தைகள் என்றால் புத்தகங்கள் நல்ல நீதிக்கதைகள் புத்தகங்கள், எழுதுகோல்கள், வரைதலுக்கு உதவும் பொருட்கள் என்று இருக்கும். பெரியவர்கள் என்றால் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் என்றால் புத்தகங்கள் (அவர்கள் வாசிக்காத புத்தகம் அதை அறிய சில டெக்னிக்குகள் உண்டு ...) மிகவும் வயதானவர்கல் என்றால் பெரும்பாலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்குச் தேவையான பொருட்கள்...இப்படித்தான்

    நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான உங்களின் அணுகுமுறையை பின் பற்றினால், அனைவருக்கும் நன்மை பயக்கும் .

      வருகைக்கு மிக்க நன்றி.

      நலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

      கோ

      நீக்கு