பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

"சொன்னது நீதானா?"

வரேம்மா.....வரமா..?

தொடர்கிறது........

முதலில் இருந்து வாசிக்க அஞ்சல் பெட்டி 520 

எங்கள் பள்ளியில் விடுதியும் உள்ளது, அந்த விடுதியில் படிக்கும் மாணவர்கள் சொல்லும் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டு கேட்டு என்னையும் அந்த விடுதியில் சேர்க்கும்படி என் பெற்றோர்களை நான் அறியா பருவத்தில் அதாவது விடுதி என்றால் என்னவென்றே அறியாத பருவத்தில் வற்புறுத்தி இருக்கின்றேன்.

அன்றும் திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட உரையாடலின்போது மீண்டும் என்னை விடுதியில் சேர்க்கும்படி கூற, என் அம்மாவோ, அதெல்லாம் முடியாது, நீ எனக்கு தவமிருந்து பிறந்த முதல் மகன், உன்னை எங்கேயும் தனியாக அனுப்ப மாட்டேன்,நீ என்னோடுதான் இருக்க வேண்டும் என கூறினார்கள்.

என் வீட்டில் என்னைத்தவிர என் தம்பி உட்பட எல்லோரும் ஏதோ ஒரு கால கட்டத்தில் விடுதியில் தங்கி படித்தவர்கள்தான்.  நான் மட்டும் கல்லூரி முதுகலை பட்ட படிப்பு முடிந்தும் வீட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்டவன்.

(நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள  இப்பவும் அப்படித்தான் )

சரி விஷயத்திற்கு வருவோம்.

அன்று அந்த அஞ்சல் பெட்டி 520 பார்த்துவிட்டு வரும் வழியில் என்னை குறித்து அம்மா சொன்ன வார்த்தைகளை கேட்டு,நான் சொன்னேன்,

"நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் நான் உங்களையெல்லாம் விட்டு வெகுதூரம் போக போகின்றேன், (அப்போது வெகுதூரம் என்றால் என்ன என்பது தெரியாததாலும் வேறு ஊர்களின் பெயர்கள் அவ்வளவாக தெரியாததாலும்), உங்களுக்கு கடிதம் எழுதி அஞ்சல் பெட்டி 520 ல் போட்டால் அந்த கடிதம் உங்களை வந்து சேர குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும் அத்தனை தூரம் நான் போகபோகின்றேன்".

என சொல்ல என்னை கட்டிபிடித்து என் அம்மா அப்படி எல்லாம் சொல்லாதேப்பா, நீ எங்கள விட்டு எங்கேயும் தூரமாக போக விடமாட்டேன் என சொன்னார்கள்.

அதை நான் அப்போதே மறந்து விட்டேன், வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்து அஞ்சல் பெட்டி 520 நினைப்போடு தூங்கிவிட்டேன்.

அதன் பிறகு அடுத்த நாள் முதல் புதிய சிந்தனை, விளையாட்டு, படிப்பு என தொடர்ந்தது.

கல்லூரி படிப்பு முடிந்து இந்தியாவில் ஓரிரு இடங்களில் வேலை செய்துகொண்டே, வெளி நாட்டு வேலை வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து பல நேர்முக தேர்வுகளை கடந்து, சில நல்ல உள்ளங்களின் உதவியால், வெற்றி கரமாக வளைகுடா நாட்டிற்கு அம்மாவின் "அரை" மனது சம்பந்தத்துடன் சென்றேன்.

போய் சேர்ந்ததும் முதல் வேலையாக அம்மாவிற்கு தொலைபேசிமூலம் தழுதழுத்த குரலில் தகவல் சொல்லி  விட்டு பின்னர் விலாவரியாக கடிதம்  எழுத நினைத்து,  அதில் பாதி வரிகள்  என் கண்ணீராலும், பாதி வரிகள் முதன் முதலாக அம்மாவிற்கு கடிதம்  எப்படி எழுதுவது என்னும்  குழப்பத்தாலும் அறியாமையினாலும் நானே அடித்து அடித்து எழுதியதாலும் , கடிதம் முழுமையாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்து கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பார்களே என்பதால் அதை அஞ்சல் பெட்டியில் (520 இல்லை) சேர்த்தேன்.

Image result for pictures of postal letters




என்ன ஒரு கோ இன்சிடெண்ட், நான் பல வருடங்களுக்கு முன் அறியா பருவத்தில் ஆறாம் வகுப்பு வயதில் வாயில் வந்த வார்த்தைகளான "உங்களுக்கு நான் எழுதும் கடிதம் உங்களை வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும், அவ்வளவு தூரம் இருக்கும் ஊருக்கு செல்லபோகிறேன்" என சொன்னது பல வருடங்கள் கழித்து அப்படியே பலித்ததுபோல் நான் அம்மாவிற்கு அரபு  நாட்டில் இருந்து  எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்த அந்த அழுகையின் கண்ணீரை தாங்கிய என் முதல் கடிதம் அம்மாவை வந்து சேர்ந்த போது, அதை அஞ்சல் செய்து சரியாக இரண்டு வாரங்கள் ஆகி இருந்தன. 

பாதி ,என் கண்ணீரால் காயப்பட்டு கொஞ்சம்  காய்ந்திருந்த ,கடிதத்தை ஆவலுடன் பிரித்து என் சகோதரிகளும் என் சகோதரனும் சுற்றி இருக்க அம்மா வாசிக்க மீண்டும் அம்மாவின் கண்ணீரால் மீண்டும் காயம்பட்டது அந்த கடிதம்.

உடனே அம்மா மற்றவர்களோடு சொன்னார்களாம் , "அவன் அப்பவே சொன்னான் ரொம்பதூரம் போவேன் கடிதம் எழுதினால் அது உங்களை சேர இரண்டு வாரங்கள் ஆகும் படியான தூர தேசம் போவேன் என்று என் மகன் அப்பவே சொன்னது அப்படியே பலிச்சிடுச்சே" என்று.

இப்படி சொந்தங்களை பந்தங்களை , உறவுகளை, நட்புகளை விட்டு பல ஆயிரம் மைல்களுக்கப்பால் , வாழும் வாழ்க்கை  "வரமா" அல்லது "சாபமா" என்பதை பிறகு சிந்திப்போம்.

சில வேளைகளில் நாம் யோசிக்காமலும், திட்டமிடாமலும் சொல்லும் சொற்கள் ஒரு காலத்தில் அப்படியே நிறைவேறும் என்பது என்னை பொருத்தவரை உண்மையாகிபோனதை  என்னவென்பது?

(உடனே "கரி நாக்கு" என்று சொல்லாதீங்க "கரினாக்"கபூர் கோவிச்சுக்கபோறாங்க  அவங்கள்தான் ஏதோ சொல்றீங்கனு நினைத்து)  

அப்படியே நாம் நினைக்கும் காரியங்கள்கூட நமக்கு கைகூடும்  வாய்ப்புகள் அதிகம் என்பதால் நல்லதையே நினைப்போம்.

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

16 கருத்துகள்:

  1. manithan eppadi sinthikkiraano avvare marukiran enpatharkku
    ninga oru eduthu kaattaka irukkalame sir.

    பதிலளிநீக்கு
  2. //நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள இப்பவும் அப்படித்தான்//

    ஆமாம் ... அப்படித்தான் ... பேப்பரில் கூட போட்டிருந்தது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,

      தயவு செய்து அந்த பேப்பர் கட்டிங்க கொஞ்சம் நம்ம பதிவுலக அன்பர்கள் பார்க்கும் படி உங்கள் பதிவின் மூலம் வெளியிட்டால் என்னை நம்பாதவர்கள் நீங்கள் சொல்வதை கட்டாயம் நம்புவார்கள்.

      ப்ளீஸ் கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்.

      கோ

      நீக்கு
    2. கட்டிங் எல்லாம் எதற்கு? போட்டோ ஒண்ணே ஒண்ணு போட்டீங்கன்னா.... மூஞ்சை பாத்துட்டு , அட எம்புட்டு பச்ச புள்ளையா இருக்குன்னு சொல்லிர மாட்டோமா ...!

      நீக்கு
    3. பேராசிரியரே,
      என்ன சொன்னீர்கள்?(அரசர் போய் ஐயா வந்ததின் காரணமென்ன?)
      கோ

      நீக்கு
  3. வணக்கம் அரசே,
    பாசம் சொல்லும் பதிவு,
    தவம் இருந்து பெற்ற பிள்ளை இப்படி செய்யலாமா?
    பச்சப்புள்ள ,,,,,,,
    ம்ம்
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      யாரும் நம்பலனாலும் பரவாயில்லை நான் எப்போதும் "கிரீன்" புள்ளதான்.

      என்ன பண்றதுங்க, பெத்தமனம் பித்து பிள்ளை மனம் லொல்லு சாரி கல்லு.

      கோ

      நீக்கு
  4. மனதில் உள்ள வலி நன்றாகவே புரிகிறது சகோதரரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் உள்ளே இருக்கும் நெருப்பினை கண்டறிந்து பகிர்ந்த உங்களின் பரிவிற்காய் எமது நன்றிகள் தனப்பால்.

      உள்ளபடியே.....

      கோ

      நீக்கு
  5. மகேஷ்,


    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  6. ஐயா, வணக்கம்.

    நலமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

    செவி வழி கேட்டறிந்த உங்கள் அன்பின் குரல் இப்போது எழுத்து வழி வழிந்து வந்ததை எண்ணி மனம் மகிழ்கின்றது.

    நீங்களே சாட்சி சொன்னதுக்கப்புறம் வேற யாரும் அதை மறுக்க முடியுமா?

    வருகைக்கு நன்றி ஐயா.

    கோ

    பதிலளிநீக்கு
  7. கோ வின் கோயின்சிடென்ட் ம்ம்ம் கோ மட்டுமல்ல....முக்காலம் உணர்ந்த "கோ"சாமி என்றும் புரிந்து கொள்ள முடிந்தது...

    நமக்கு விவரம் பத்தாது, பச்சப்புள்ள இப்பவும் அப்படித்தான்// அப்படியா? சரிதான் இப்ப எல்லாரும் "கோ" க்ரீன் என்பதன் அர்த்தம் இதுதான் போலும்.....ஆனா இந்தப் பச்ச புள்ளதான் கறுப்பு கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு பீச்சுல தவழ்ந்துச்சாமே....ரொம்ப தைரியமான புள்ளனு ஃபோட்டோ போட்டு செய்தி எல்லாம் வந்துச்சு..

    ஜோக் அபார்ட்...

    அம்மாவை நினைத்து மனம் கலங்கியது உண்மை. மனம் அப்படியே நெகிழ்ந்துவிட்டது..அந்த தாயின் உலகம் அன்று கோ வைச் சுற்றி வந்தது...கோவும் பிள்ளையார் மாதிரி அம்மாவைச் சுற்றி வந்தவர் இன்று உலகையே சுற்றும் கோ வாகி உள்ளார்...,,ஆனால் இன்னும் அம்மா கோ வைச் சுற்றித்தான் இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. அன்பிற்கினிய நண்பர்களே,

    உங்களின் பின்னூட்டத்தின் பின்பகுதி வாக்கியங்கள் என் கண்களை குளங்கள் ஆக்கிவிட்டன.

    ஆம் இன்றும் என் அம்மாவின் நினைவெல்லாம் என்னை சுற்றித்தான்.

    வருகைக்கு மிக்க மிக்க மிக்க நன்றிகள்.

    கோ


    பதிலளிநீக்கு
  9. அப்படியே நாம் நினைக்கும் காரியங்கள்கூட நமக்கு கைகூடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் நல்லதையே நினைப்போம்.

    பதிலளிநீக்கு