பின்பற்றுபவர்கள்

சனி, 4 ஜூலை, 2015

"தேள் வந்து பாயுது காதினிலே.....!."

"சீர்" கேடு!

நண்பர்களே,

இன்றைய திரைப்பட பாடல்கள் பெரும்பாலும் கருத்துமிக்க பாடல்களா என்று கேட்டால் அதற்க்கான விடை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.


இசையின் ஆதிக்கத்தையோ, பாடல் வரிகளின் ஆளுமை இன்மையினையும் இங்கே குறிப்பிடவில்லை,

மாறாக எழுதப்படும் பாடல் வரிகளின் தரம் பற்றியே சிறிது ஆதங்கத்துடன் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்,

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இங்கே ஓரிரு பாடல்களை  மட்டும் குறிப்பிட விரும்புகின்றே,

இன்றைய கால சூழலில் திரைப்படங்கள் வெளி வருவதற்கு முன்னரே அப்படத்தின் பாடல்கள் பிரத்தியேகமான பிரமாண்டமான விழா கோலத்துடன் வெளி இடபடுகின்றன.

அவ்வாறு வெளி இடப்படும் பாடல்கள் அந்த திரைப்படத்தின் கதை என்ன கருத்து என்ன நீள  அகல உயரமென்ன என்று அறிந்துகொள்வதற்கு முன்னரே பட்டி தொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்க்கபடுகின்றன குறிப்பாக (பதின் பருவ) குழந்தைகள் மத்தியில்.

அதன் பின்னர் திரைப்படம் திரை இடப்பட்டு அவை மாநிலமெங்கிலும் பல திரை அரங்குகளில் சில வாரங்கள் ஓடும் வரை மீண்டும் அந்த பாடல்கள் நினைவு கூறப்படுகின்றன.

 மேலும் அவை நல்ல இசையோடும் எளிதான ராகங்களோடும் எளிதான நடை முறை வார்த்தைகளோடும் இருக்குமாயின் படம் வெளி வந்து பல ஆண்டுகள் ஆனாலும் மக்களின் மத்தியில் அவர்களின் மனங்களில் இதுபோன்ற பாடல்கள் நிலைத்து நிற்கும் 

அப்படிப்பட்ட பாடல்கள் எவை என்றும் நமக்கு தெரியும்.

இப்படி பலமுறை மக்களால் கேட்க்கபடவேண்டும் அவை மக்கள் மத்தியில் பல காலம் நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அனைத்து சினிமா கவிஞர்களும்  பாடல்களை எழுதுகின்றனர்.

அப்படி அவர்கள் என்னதான் கதைக்கு ஏற்றாற்போல் பாடல்களை எழுதினாலும், தங்களுக்கு சொல்லப்பட்ட சூழலுக்கேற்ற பாடல்கள் எழுதினாலும், கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வோடு பாடல்கள் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் இங்கே நான் குரிப்பிடபோகும் பாடல் ஆசிரியர்கள் யார் என்பது உலகறிந்த ஒன்றுதான்.

சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடி அதில் நடித்த நடிகர்களுக்கும் பெயர் வாங்கிகொடுத்த ஒரு திரைப்படத்தில், கதா நாயகன் கதா நாயகியை பார்த்து பாடுவதாக அமைந்த ஒரு பாடலில் , கதைப்படி, அந்த பெண் யார் அவளின் தகப்பன் யார் அவர் எப்படிபட்டவர் போன்ற விவரங்கள் அறிந்த கதா நாயகன், ஊதா நிற ரிப்பன் அணிந்து சாலையில் செல்லும் கதா நாயகியை பார்த்து, யார் உனக்கு அப்பன் என கேட்டு பாடுகின்றார் , அவருக்கு அதற்க்கு முன்  தெரியாதவர்போல.

இது ஒருபக்கம் இருக்க , உன் அப்பன் யார் என்று சொன்னால் "அவனுக்கு" தான் சலாம் போட வேண்டும் என்று பாடுவதாக அந்த பாடலின் வரிகள் அமைந்திருக்கின்றன்.

தன் அப்பாவை "அவன்" என்று ஒருவன் சொல்கின்றானே என்ற ஒரு கோபமோ, எரிச்சலோ இல்லாமல் அந்த பெண் செல்வதாகவும் அந்த பாடல் காட்சி அமைந்திருக்கின்றது.

ஒருவேளை அந்த பெண்ணையே இந்த கதா நாயகன் மணமுடிக்க போகின்றார் என்று முன்னரே அறிந்திருந்தால்  தன் வருங்கால மனைவியின் தகப்பனாரும் தன் வருங்கால மாமனாருமாகிய ஒருவரை எப்படி மரியாதையாக அழைக்க வேண்டும் என்ற இங்கிதம் பெருந்தன்மை, முதிர்ச்சி ஒரு கதா நாயகனுக்கு இருக்க வேண்டுமல்லவா?

தன் அப்பாவை யாரோ ஒருவன் "அவன்" என்று சொல்வதை கதா நாயகி வேண்டுமானால் காதல் மயக்கத்தில் பொறுத்துகொள்ளகூடும் என்று வைத்துக்கொண்டாலும் அந்த கதா நாயகியின் தம்பியோ அல்லது அண்ணனோ எப்படி எற்பார்கள்.  

சினிமாவை தாண்டி வெளியில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் அந்த பாடல் எழுதியவரின் சகோதரியின் காதலன் தனது தகப்பனாரை  "அவன்" என்று சொல்லுவதை பொறுத்துகொள்வாரா?  

இப்படி தாம் பொறுத்துக்கொள்ள முடியாத , ஏற்றுக்கொள்ள முடியாத எந்த வார்த்தையையும் ஒரு கவிஞன் எந்த சூழ் நிலையிலும் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

எதுகை மோனைக்காக வார்த்தைகள் கோர்க்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் சமூக பொறுப்புடன் வார்த்தைகளை தேர்வு செய்ய வேண்டும்.

அதேபோல அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லை , தடை போட யாரும் இல்லை எனவே நாம் இருவரும் இணைந்து  வீட்டில் நடுவர் தேவைப்படாத, எந்த விதிமுறையும் இல்லாத  இந்த விளையாட்டை விளையாட வீட்டிற்கு உள்ளே போகலாம் வா என்று ஒரு பெண் தனது காதலனை அழைப்பதாக எழுதப்பட்ட பாடலை எழுதியவருக்கு திருமணம் ஆகாத தங்கையோ அல்லது பருவமடைந்த பெண்ணோ இருக்கும் பட்சத்தில் இப்படி ஒரு பாடலை எழுத எப்படி மனம் வரும். 

அப்படியானால் சமூகம் எப்படி வேண்டுமானால் போகட்டும் என்னுடைய பாட்டெழுதும் புலமையை நான் காட்டி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய பார்வையில் இப்படிப்பட்ட சமூக அக்கறை அற்ற திரைப்பட பாடல் ஆசிரியர்கள் இனியேனும் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

பாடல் ஆசிரியர்களுக்கு ஒரு  செய்தி:

அப்படி நீங்கள் நிற்பந்திக்கப்டும் வேளையில் இந்த சமூக நன்மைக்காக "அப்படிப்பட்ட" பாட்டெழுதும் வாய்ப்பை இழக்க நேரிட்டாலும் அதனால் நீங்களோ உங்கள் ஒட்டுமொத்த குடும்பமோ பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் நீங்கள் படித்த தமிழுக்கு நீங்கள் வாழும் சமூதாயத்திற்கு, உங்களுக்கு பின் வரும் வளரும் சமூதாயத்திற்கு நன்மை செய்கின்றீர்கள் தொண்டாற்றுகின்றீர்கள் என்ற உயரிய தியாக உள்ளத்தோடு அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள்,கொண்டாடபடுவீர்கள்.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழியை மீண்டும் புதிப்பியுங்கள், உங்கள் பாடல்கள் காலத்தால் அழியாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைவிட உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றெண்ணி சமூக பொறுப்புடனும் அக்கறையுடனும் உங்களுக்கு இருக்கின்ற அறிவை திறமையை புலமையை வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

ஏதோ இந்த இரண்டு பாடல்கள் மட்டும்தான் அல்லது இந்த இரண்டு பாடல் ஆசிரியர்கள் மட்டும்தான் என்று நினைக்கவேண்டாம் இன்னும் எவரெல்லாம் தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு இதுபோன்று பாடல்களையோ வசனங்களையோ ஆபாச காட்சிகளையோ  திரைப்படம் வாயிலாக மக்கள் மத்தியில் விஷ விதைகள்போல் தெளிக்க முற்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை தங்கள் எண்ண அலைகளை -  சிந்தனை ஓட்டத்தை திறனாய்வு செய்து பதிவாக்குங்கள்.

"உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ,
 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
 நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல 
நீ இல்லாமல் நானும் நானல்ல...... "

போன்ற பாடல்களை, தாத்தா பாட்டி ,தாய்  தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்களும், அண்ணன் தம்பி , அக்கா தங்கை வயதில் உள்ளவர்களும், அத்தை மாமன் , மைத்துனன்,பெரியப்பா , சித்தப்பா ,சித்தி பெரியம்மா யாராக இருந்தாலும்  கதா நாயகன் கதா நாயகியை பார்த்து பாடுவதாக அமைந்திருக்கும் இதுபோன்ற கண்ணியமான வார்த்தைகள் கொண்டு நாகரீகமாக தமது அன்பை நட்பின்  புனிதத்தை வெளிபடுத்தும்  பாடல்களை கண்டிப்பாக வரவேற்ப்பார்கள்,பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள்.

Image result for PICTURES OF WRITERS, IMAGES

அதே சமயத்தில் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு  பாடல்கள் போன்ற பாட்டுக்களில் கையாண்டிருக்கும் கண்ணியமற்ற வார்த்தைகளை எந்த தகப்பனும் தாயும் சகோதரனும் சகோதரியும் தமது குடும்ப உறவுகளோடு சேர்த்து பார்த்து ரசிக்க மாட்டார்கள் மாறாக அருவருப்புடன் அவற்றை ஒதுக்கி தள்ளுவார்கள்  என்பது நிச்சயம்.

செந்தமிழ் நாட்டில் உருவான  இதுபோன்ற பாடல்களை கேட்கும் காதுகளில் தேன் பாயவில்லை மாறாக இதயங்களில் தேள் பாய்ச்சுகிறது கொடிய விஷத்தை.

Image result for PICTURES OF SCORPIONS IN HEARTS

பாடல் ஆசிரியர்களே, எதுகை, மோனை,சந்தம், யாப்பு, சீர், அடி, தொடை , மாத்திரை, நெடில், குறில்.... காப்பியங்கள், நற்றிணை, குறுந்தொகை, அக நானூறு புற நானூறு,பதிற்றுப்பத்து,சங்க இலக்கியங்கள்,கம்பன், வள்ளுவன், இளங்கோ , பாரதி என்று படித்து பெற்ற உங்கள் புலமையின் "சீர்" கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொழுது போக்கு தானே என்று அலட்சியமாய் கருதவேண்டாம் இதுபோன்ற பாடல்களால் - விபரீத காட்ச்சிகளால் சில இளைஞர்களின் பொழுதுகள் விடியாமலே இருட்டடிப்பு  செய்யபடுகிறது.

வார்த்தைகளை கோர்க்கும் முன் உங்கள் வாழ்க்கையை உங்கள் குடும்ப உறவுகளை உங்கள் எண்ணங்களில் கோர்த்துப் பார்த்து பின்னர் உங்கள் புலமையை புடமிட்டு செதுக்கித்தாருங்கள் செவிமடுக்க இந்த சமூகம்  காத்திருக்கிறது.


நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


16 கருத்துகள்:

  1. நண்பரே... நான் தமிழ் சினிமா பார்ப்பதை அறவே விட்டதற்கு இந்த பாடல் ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம். உறவிற்கு ஒரு மரியாதை எல்லாத எழுத்துக்கள், கேட்டாலே வாந்தி வருகின்றது. அந்த கால சந்திரபாபுவின் "பம்பர கண்ணாலே " என்ற பாட்டு.
    "கண்டவுடன் காதலே, கொண்டாய் என் மீதிலே .. பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது "

    இந்த வரிகளில், அந்த பெண் தான் இவர் மேல் காதல் கொண்டுள்ளாள். அதை அறிந்த நாயகன், அவ்வளவு தரமோடு... முதன் முதலாக கேட்பது ... பெண்டாட்டி .. ஆகிடும் நாள் எப்போது .."? என்ன ஒரு மரியாதை..
    இந்த காலத்து பாட்டுகள் வெட்க்க கேடு..

    பதிலளிநீக்கு
  2. பழைய பாடல்கள் : காலத்தால் வெல்ல முடியாத பாடல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனப்பால், பழைய பாடல் ஆசிரியர்களின் அடிச்சுவட்டை பின் பற்ற வில்லை என்றாலும் குறைந்த பட்ச எல்லை கோடுகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்த கால பாடல் ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக தேவை. அதுவும் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் எந்த செய்தியும் அடுத்த வினாடியே உலகம் எங்கிலும் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் பகிரப்படும் செய்திகள் எப்படிப்பட்டவை என்பதை தெளிவு செய்துகொண்டு செயல் பட வேண்டும்.

      கோ

      நீக்கு
  3. கோ,

    வாழ்த்துக்கள். நல்ல பார்வை.சரியான பதிவு.

    இப்போதைய பாடல்களில் கவிதை கெட்டுவிட்டது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் பல நல்ல கவிதைகளும் தலை காட்டுகின்றன. இருந்தும் குத்துப் பாட்டு என்னும் ஒரு திடீர் அம்சம் அதுபோன்ற நல்ல பாடல்களை சற்று ஓரம் கட்டுவது உண்மைதான். கொஞ்சம் ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த விஷ விதை இளையராஜாவின் இசையிலிருந்துதான் ஆரம்பித்தது என்பதை ஏற்றுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இரா வின் இசையில் வைரமுத்து இல்லாதது இதுபோன்ற தரங்கெட்ட பாடல்களுக்கு அடிகோலியது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. வெறும் பத்து வார்த்தைகளை (பூவு, நீவு, ராசா, ரோசா, எசப்பாட்டு, மானே தேனே, நோவுது, ஏறுது, etc ) வைத்துக்கொண்டு அவரால் பல வெற்றிப் பாடல்களை கொடுக்க முடிந்ததே இந்த சீரழிவிற்கு முதல் காரணம். நீங்கள் ஒருவேளை இராவின் ரசிகராக இருந்தால் இதை ஏற்றுக்கொள்ள மனம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகனின் பார்வை உண்மைஎனவே தோன்றுகின்றது, நான் யாருக்கும் ரசிகனல்ல, சிலருடைய படைப்புகள் ரசிக்கும்படியாக இருந்தால் அந்த படைப்புகளுக்காக அதை படைத்தவர்களை பாராட்ட தவறமாட்டேன் அதே சமயத்தில் இ வான்,த வொர்ஷிப் தேம.

      இது போன்ற பாடல்களை அங்கிகரிக்கும் இசை அமைப்பாளர்களும் இந்த சமூக அவலத்திற்கு காரணம் என்று நீங்கள் சொல்வது ஏற்புடையதே.

      ஆக்கபூர்வமான தங்களின் பின்னூட்டம் எமக்கு பெரும் ஊக்கம் தர தவறுவதில்லை.

      தங்களின் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி , உங்களின் பாராட்டு உள்ளத்தை சிலிர்க்க வைக்கின்றது.

      நீக்கு
  5. பதில்கள்
    1. எழுத்துகோர்வை பிடித்தமைக்கு நன்றிகள்.
      பதிவினை குறித்த தங்களின் பார்வையையும் கோர்வையாக்கினால் நலம் பயக்குமே, மனம் மயங்குமே.

      கோ

      நீக்கு
    2. அரசருக்கு வணக்கம்,
      கணிப்பொறி இல்லாததால் கைப்பேசியில் எழுத வேண்டிய காரணத்தால்,
      தங்களின் பதிவு கோர்வையை பகிர முடியவில்லை,
      இனி சரியாக ,,,,,,,,,,
      பொதுவாக நான் அதிகம் படம் பார்த்தது இல்லை, கல்லூரி காலத்திற்கு பின் தான்,
      பாடல்கள் பெரிதாக மனதில் பதிந்தது இல்லை,
      ஆனாலும் இன்றைய பாடல்கள் இன்றைய தலைமுறை வரும்புகிறது,
      மாற வேண்டியது பணம் மட்டும் குறிக்கோள் கொண்டவர்கள்,
      நன்றி, வாழ்த்துக்கள்.

      நீக்கு
    3. வருகைக்கும் கருத்து கோர்வைக்கும் மிக்க நன்றி.

      நீங்கள் சொல்வதுபோல் இளைய சமூதாயம் விரும்புகின்றது என்பது உண்மையே ; எனினும் இளைய சமூதாயம் இவற்றை தாருங்கள் என கேட்பதில்லை மாறாக இதுபோன்ற படையல்கள் வெளியில் வருவதால் அவற்றை ஏற்றுகொள்கின்றனர். மாறாக வேறு படைப்புகளை, ஆக்கபூர்வ அறிவு பூர்வமான செய்திகளை சுவைபட கொடுத்தால் அவற்றை விரும்புவார்கள்.

      மீண்டும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      கோ

      நீக்கு
  6. sir, puthiya pattu/pazaya paatu nalla alasal.


    aam ningal kuripitta antha paadalkal eppadi Censor Board


    kandukkama vittaarkalo.


    mika mika nalla katturai.


    pathivukal ezuthum pothu labels kurippidungal sir.
    intha katturai tiraimanam athil vanthirunthal palar vasikka mudinthirukkum

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ். ஆலோசனைகளை பின் பற்ற முயல்கிறேன். பொதுவாக அதிகம் திரை படங்கள் குறித்து நான் எழுதுவதில்லை இருந்தாலும் லேபில் ஆலோசனையை ஆலோசிக்கின்றேன்.

    கோ

    பதிலளிநீக்கு
  8. அருமையான கட்டுரை. இன்பத் தேன் வந்து பாய்ந்த காதுகளில் இப்போது துன்பத் தேள் வந்து கொட்டுது....வார்த்தைகள் மட்டுமல்ல இசையும் ஹியரிங்க் எய்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவி புரிகின்றனவாம்....எதிர்காலத்தில் இவர்களின் பங்கு பொருளாதாரச் சந்தையில் அதிகமாக இருக்குமாம்...

    மிக மிக அருமையான பதிவு நண்பரே! ஆனால் ஒன்று இது பாய வேண்டிய செவிகளுக்குப் பாய்ந்தால் சரி...

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு மிக்க நன்றி, நீங்கள் சொல்வது போல பாயவேண்டிய காதுகளுக்கு பாய்ந்தால் நலம் பயக்கும், ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் காது கே காது

    கோ

    பதிலளிநீக்கு