பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 ஜூலை, 2020

"ஹனியும் சனியும்!!"

டார்லிங்! டார்லிங்!!டார்லிங்!!!
நண்பர்களே,

ஒவ்வொரு ஆண்டு அல்லது ஒவ்வொரு இரண்டாண்டுகள் அல்லது ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கொருமுறை  சில  குறிப்பிட்ட விஷயத்தின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை(updated version ) கற்று அதன் மீதான நமது அறிவை கட்டாயம் (mandatory)  பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எமது வேலை நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டம்.

இப்படி அவ்வப்போது  எதிர் கொள்ளவேண்டிய இதுபோன்ற புதிய விவரங்களை கற்பதோடு(Learning), அதன்மீதான நமது புரிதல் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பதை ஒரு சிறு தேர்வுமூலம்(Assessment) நிரூபிக்க வேண்டும். இதில் பாஸ் , ஃ பெயில் உண்டு.


அதனடிப்படையில் வைக்கப்பட்ட  தேர்வில் குறைந்தது 80% மதிப்பெண்கள்  எடுக்கவேண்டும் இல்லையேல் , மீண்டும் எழுதவேண்டும், மூன்றுமுறை தவறினால்  தேர்வு எழுத அனுமதி கிடைக்காது.



எனவே மறுபடியும்  அந்த பாடங்களை படித்துவிட்டு(learning session) மீண்டும் தேர்வெழுதவேண்டும். இவை எல்லாமே ஆன் லைனில்தான்.


நாம் எந்த நிலையில் படித்திருக்கின்றோம் எத்தனை முறை தேர்வெழுதி இருக்கின்றோம் ஒவ்வொரு முறையும் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றோம்  போன்ற விவரங்கள்  மனித வள மேம்பாட்டுத்துறைக்கு தகவல்களாக  சென்றுக்கொன்டே இருக்கும்.


இந்த தேர்வை எழுதி முடிக்க கால அவகாசம் உண்டு. அந்த காலத்திற்குள் தேர்ச்சிபெறவில்லை என்றால், ஏதேனும் ஒரு மையத்தில் இதற்கென வகுப்புகள் நடக்கும்போது அதில் நேரடியாக சென்று கற்று தேறவேண்டும்.

இந்த நேரில் சென்று வகுப்பில் கலந்துகொள்ளும் அன்று நமக்கு பயிற்சி நாள் எனும் கணக்கில் சம்பளத்தோடு விடுப்பும்  கிடைக்கும், காலை உணவு, இடைவேளை தேநீர் மத்திய உணவு, மாலை தேநீரும் கம்பெனி கணக்கில் வழங்கப்படும்.


இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இதுபோன்ற தகவல்களின் முக்கியத்துவத்தை.


அப்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை   படித்து தேறிய  ஒரு பாடம் மீண்டும் இந்த ஆண்டு புதுப்பொலிவுடன் சில மாற்றங்களோடு கற்றுத்தேர்ந்து நமது அறிவை புதுப்பித்துக்கொள்ளவேண்டி இருந்தது.


அந்த கல்விக்குப்பெயர் "Equalily  , Diversity  and Human  Rights"   (சமத்துவம், பன்முக தன்மை அல்லது மாறுபாடுகள், மற்றும் மனித உரிமை).


சக ஊழியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்- எப்படி நடத்தப்பட வேண்டும்  , நாம் யாருக்கு சேவை  செய்கின்றோமோ  அவர்கள் எப்படி நடத்தப்படவேண்டும்,  அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் சமமாகவும் எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கவேண்டும்.


அவர்களின் வயது(Age),  உடல்ஊனம்(Disability),  பாலினம்(Sex ), பாலின மாற்றம்(Gender Reassignment), பாலின உறவுமுறை(Sexual orientation), திருமணம்(Marriage and  Civil Partnership)  , கர்ப்பிணிகள்(Pregnancy) அல்லது புதிதாக குழந்தைபெற்றவர்கள்(Maternity) ,இனம் (RACE ), மத நம்பிக்கைகள்(Religion or  Belief)  என்பன போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுத்தப்படாமலும் , அவர்கள் யாராக இருப்பினும் உரிய மரியாதையுடனும் கவுரவத்துடனும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டும் அங்கீகரிக்க படவேண்டும்.


அதே சமயம் அந்த மாறுபாடுகளின்  அடிப்படையில்    யாரையும் விலக்கி வைக்காமலும் , புண்படும்படி நடந்துகொள்ளாமலும்  இருக்கவேண்டும்  என்பதையும்  , எல்லோருக்கும் கிடைக்கும் அதே வாய்ப்பு வசதிகள் அவர்களுக்கும் கிடைக்கும்படியும் செய்திடல் வேண்டும் என்பதையும் , அவர்களது தனிப்பட்ட   உரிமைகள் என்ன என்பது போன்றவற்றையும் குறித்த அறிவை பெற செய்வதே இதுபோன்ற பாடங்களும் அதற்கான தேர்வுகளின் நோக்கமும்.


இந்த மொத்த பாடத்திட்டத்திலிருந்து ஒரு  சில விஷயங்கள்  மட்டும் உங்கள் கவனத்திற்கு:

சக ஊழியர் யாராவது அலுவலகத்தில் அல்லது வேலை நேரத்தில் நம்மிடம் பேச வந்தாலோ அல்லது நாம் அவர்கள் இருக்கு இடம் சென்று    பேச நேர்ந்தாலும் அவர்கள் மீது நாமோ அல்லது நம்மீது அவர்களோ தோள்மீது கூட  கை போட்டு பேசுவது மிக  பெரிய குற்றம்,(ஆணோ பெண்ணோ) அது சம்பந்தப்பட்டவர்களின் தகுதிக்கும்  கௌரவத்திற்கும் (dignity) எதிரானது என்பது இந்த பாடத்தில்  வரும் ஒரு முக்கிய  விஷயம்.


அதேபோல மன  சோர்வாக அல்லது சோகமாக இருக்கும் மற்றோரு ஊழியருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கட்டிப்பிடி(Hug)  வைத்தியம் செய்வதுவும் பெருங்குற்றம்.


எல்லாவற்றிற்கும் மேலாக , இங்குள்ளவர்கள்  யாரை பார்த்தாலும் "அன்பே" ( my love) என்று சொல்வது சர்வ சாதாரணம்.


ஆனால் இந்த கல்வியில் சொல்லப்படும்  வரைமுறை சட்டப்படி வேலை நேரத்தில் , வேலை சம்பந்தமானவர்களிடத்தில், பயனாளிகளிடத்தில்  யாரும் யாரையும் "என் அன்பே" என்று சொல்வது பெரும் குற்றமாக கருதப்படும்.

யாரும் யாரையும் என் அன்பே என்று சொல்ல முயுமா? அது ஏற்புடையதா?


அப்படியானால்  "அன்பி"ற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது நம்ம ஊருக்கு மட்டும் தானா? இங்கே அதையெல்லாம் தாழிட்டு அடக்கி வாசிக்கத்தான் வேண்டும்.


 இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்திலுமாக சேர்த்து  மொத்தம் சுமார்  1.5 மில்லியன் ஊழியர்களைக்கொண்ட இந்த நிறுவனத்தில் யாராவது இங்கே இதுபோன்ற வார்த்தைகளை(at work )  பயன்படுத்தி அப்படி தம்மை அழைத்தது தமக்கு பிடிக்கவில்லை என்று   சம்பந்தப்பட்டவர் முறை இட்டாலோ, அல்லது அதை கேட்டவர்கள் அல்லது பார்த்தவர்கள்  முறை இட்டாலோ சொன்னவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கதை கந்தலாகிப்போகும்.


அதாவது ஒவ்வொருவரையும் மரியாதையுடனும் , நிறுவன ஒழுங்கு முறையின்(code of conduct) அடிப்படையிலும்,   நடத்தவேண்டும் - நடத்தப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.

அன்பிற்கும் அடைக்கும்  தாழ்  இந்த கல்விமூலம் உண்டு என்பது கண்டு வியப்பாக இருக்கின்றது.


இனி யாரையாவது பார்த்து, hello my love , darling ,"honey" என்று சொன்னால் சொல்பவரின் நாக்கில் "சனி"  என்பதை இன்னும் மூன்றாண்டுகளுக்கு நான் நினைவில் வைத்திருக்கவேண்டு.


பி.கு: இதுவரை அப்படி யாரிடமும் நான் சொன்னது இல்லை என்னிடமும் இன்னும்(!!?) யாரும் சொன்னதுமில்லை.



நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம் (அன்பின் உறவுகளே).

கோ.
      
 

14 கருத்துகள்:

  1. ஓஹோ... இப்படியெல்லாம் இருக்கா...?

    அன்புடைமை பற்றி எழுத வேண்டும்... சந்திப்போம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாங்க தனபால் ,

      இத… இத… இதைத்தானே எதிர்பார்த்தேன்.

      அன்புடைமை பற்றிய தங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன், அதற்கு ஏறாற்போல் அமைந்துள்ள திரைப்பாடல்களுடன். கண்ணை க்ளிக்கினால் பாடல் வந்ததுபோல் , இதயத்தை க்ளிக்கினால் பாடல் வரும் என்று நினைக்கின்றேன்.

      வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

      நீக்கு
  2. பிரமிப்பாக இருக்கிறது நண்பரே பதிவின் சாராம்சம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  3. அணுபவ பாடங்களே விதிகளாக வகுக்கப்படுகின்றன ஐய்யா.
    முன்பு இப்படி ஆரம்பித்து பெரும் பிரச்சனைகள் வந்திருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அரவிந்த்,

      முன்பு ஏற்பட்ட விபரீத விளைவுகளின் பின்னணியாகத்தான் இந்த சட்டங்கள் வந்திருக்கவேண்டும்.

      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்

      நீக்கு
  4. ஹனியும் சனியும். ஹா ஹா அருமை சார். நான் கூட தலைப்பைப் பார்த்ததும் தேனைவைத்து சனிக்கிழமையில் பாகுபலிபோல எதையாவது செய்திருப்பீர்கள் நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபி,

      சனிக்கிழமை, தேன் கலந்து பாகுபலிபோல வேற எதாச்சும்….. உங்கள் கற்பனை அபாரம். தலைப்பிலேயே தகவல் சொல்லும் அளவிற்ககு அதாவது உங்கள் (வேற) லெவெலுக்கு இன்னும் நான் வருவதற்கு நீண்ட காலமாகும் எனவேதான் இதுபோன்று….

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. வியப்பான விதிமுறைகள் அங்கு என்று தெரிகிறது. ஆங்கில லிட்ரேச்சரில் அவர்களது மரியாதை குறித்த சில விஷயங்கள் அறிய நேரிட்டாலும் இந்த விஷயங்கள் புதியவை.

    துளசிதரன்

    கோ, நல்லதொரு விஷயம். கண்டிப்பாக எல்லா அலுவலங்களிலும் இது இருந்தால் நன்றாக இருக்கும். இங்கு சில அலுவலகங்களில் மேற்கத்திய திட்டல் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தன் கீழ் பணிபுரியும் நபர்களிடம் பேசுவதுண்டாம்.

    மை ஹனி, லவ் என்று பரஸ்பரம் சொல்லும் வழக்கம் இருந்தாலும், அலுவலத்தில் எல்லாம் சொல்லும் பழக்கம் பொதுவாகவே இருக்காதுதானே கோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்புதான் நம்ம ஊரை நினைக்கையில்.நம்ம ஊரில் வெளி நாட்டவரின் வசை சொற்களை பேசுவது நாகரீகம் என கருதும் இளைஞர்களை யார் திருத்துவது?

      வருகைக்கு நன்றி அன்பிற்கினியவர்களே.

      நீக்கு
  6. பதில்கள்
    1. இன்னும் எவ்வளவோ இருக்கு இது ஒரு சின்ன sample தான்.

      வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  7. ஹனியும் சனியும்! :) நல்ல தலைப்பு. வார்த்தைகள் பயன்படுத்துவதில் மிகவும் கவனிப்பாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் பதிவு - நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      ஆம், வார்த்தை பிரயோகம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றுதான். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு