ஜீவன் இல்லா ஜீவன்கள்!!!
உலகில் வாழும் எத்தனையோ கோடி மக்களுள் கணிசமான ஒரு தொகை மக்கள் மிகவும் வெகுளியாக , உலகின் போக்கும், அதன் சூதும் வாதும் தெரியாதவர்களாகவும், வெளுத்ததெல்லாம் பால் எனவும் மின்னுவதெல்லாம் பொன் எனவும் நினைத்துகொண்டு இருப்பதை பார்க்கும்போதும் , அவர்களை பற்றி கேட்க்கும்போதும் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.
இவர்கள், எல்லோரையும் ரொம்ப.... நல்லவன்னு..... நினைத்துகொண்டு பின்னர் அவர்களால் பெரும் மோசடிக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளாவதை நாம் அவ்வப்போது கேட்டும், பார்த்தும் படித்தும் வருகின்றோம்.
இதில் , நெருங்கினால் சுட்டுவிடும் என தெரிந்தும் எரியும் விளக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளைப்போல அதிக லாபம்- அதிக வட்டி எனும் மாய விளக்கொளியாம் நிதி நிறுவனகளின் வஞ்சக வலையில் சிக்கி ஏமாறும் எத்தனையோ அப்பாவிகளின் கதைகளும் அவ்வப்போது நம் செவிகளில் இருந்து தப்புவதில்லை.

சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறையினரால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நபரின் பெட்டியில் சட்டத்திற்கு புறம்பான ஒரு பொருள் இருப்பதை கண்டு விசாரிக்கையில் அந்த பொருள் தமக்கு தெரிந்தவர் ஒருவர் அவரிடம் கொடுத்து இவர் வந்திறங்கிய வெளி நாட்டில் இருக்கும் யாரோ ஒருவர் வாங்கிசெல்லவருவார் அவரிடம் கொடுத்துவிடும்படி கொடுத்தனுப்பப்பட்ட பொருளாம்.
ஆனால் அதில் என்ன இருக்கின்றது என்ற விவரம் தெரிவிக்கையில் சாதாரணமான ஒரு கலைப்பொருள் என்று சொல்லப்பட்டதாம், ஆனால் உண்மையில் அது தடைசெய்யப்பட்ட பொருட்களின் அட்டவணையில் முதல்வரிசையில் இருக்கும் ஒன்றாம்.
கொடுத்தனுப்பியவரின் பெயர் முகவரி , தொலைபேசி எண் போன்ற எந்த விவரமும் சரியாக இல்லாததால் கொண்டு வந்தவர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்.
அவரை பார்க்கும்போதும், அவர் அதிகாரிகளிடத்தில், நடுக்கம் பயம், ஏதுமின்றி, வெளிப்படையாக நடந்துகொண்ட விதம் , உடல் மொழி மற்றும் அவரது, தஸ்த்தாவேஜிகளை பார்த்த அதிகாரிகள் இவர் உண்மையிலேயே கள்ளம் கபடு இல்லாதவர்தான் என்று உறுதியாக நம்பினாலும் தண்டனை சட்டம் சொல்லும் விதிகளுக்கு கட்டுப்பட்டு இந்த அப்பாவி மனிதருக்கு தண்டனை கொடுக்கும்படி ஆனது.
அந்த மனிதரும் யாரோ செய்த தவறுக்காக அபாராதம் செலுத்தி பின்னர் வெளியில் வந்திருக்கின்றார்.
இதேபோல , முப்பது வயதை தாண்டிய ஒரு பெண் நன்றாக படித்திருந்தும் வரன் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஆனதாலும் அப்பா இல்லாத அந்தபெண்ணின் தாய் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல்களின் காரணமாகவும் தன்னை விட குறைவாகவே படித்திருந்தாலும் தன்னை நன்றாக பார்த்துகொள்வார் என்ற நம்பிக்கையில் வீட்டில் போட்ட 110 சவரன் நகைகள் அணிந்த தன் கழுத்தை நீட்டினாள் பத்தாண்டுகளுக்கு முன்.
ஆரம்பத்தில் வழக்கம்போல் நன்றாகவே நகர்ந்த குடும்ப வாழ்க்கையில் கணவனின் சுய ரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றது.
இந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையில் கிடைக்கும் வருவாயை கொண்டு காலம் தள்ள வேண்டும் என்றும் போதாதற்கு அவள் தாய் வீட்டு சீதனமாக கொண்டுவந்த நகைகளை விற்றும் அடகு வைத்தும் வாழ்ந்துகொள்ளலாம் என்ற கணவனின் நோக்கமும் தெரிய வந்த அந்த வெகுளிப்பெண் இப்போது நான்கு குழந்தைகளுக்கு தாயாக மட்டு மல்லாமல் குடும்பத்தில் இருக்கும் 6 பேரையும் தன் உழைப்பில் காப்பற்ற வேண்டிய பொறுப்பையும் குடும்ப பாரத்தையும் சுமந்தவளாக வாழ்ந்து வருகிறாள் பொன்னகைகளோடு தன் புன்னகையையும் அடகு வைத்துவிட்டு.
வெளியில் வேலைக்கு போய்விட்டு அதிக களைப்புடன் வீட்டுக்கு வரும் அவளுக்கு ஓய்வெடுக்ககூட நேரமில்லை.
விடியற்காலை எழுந்து, காலை, மத்திய உணவு தயாரித்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதிலிருந்து அவர்களை அழைத்து வருவதிலிருந்து, அவர்களுக்கும் கணவனுக்கும் இரவு உணவு சமைப்பது, துணி துவைப்பது,கடைக்கு செல்வது பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லி கொடுப்பதுவரை கணவனின் பங்களிப்பு - ஒத்தாசை இல்லாமலேயே "தனி ஒருவளாக" செய்துகொண்டிருந்தாலும் அவள் மீது அவளை சார்ந்த எவருக்கும் எந்த கரிசனையும் பரிதாபமும் இல்லை என்பதுதான் அவளுக்கு இன்னமும் வேதனை தருவதாக இருக்கின்றதாம்.
எனினும் அவள் தன் கணவன் மீதோ ,கணவனின் உறவினர்கள் மீதோ எந்த ஒரு வெறுப்பும் காட்டாமல் எல்லோரையும் கூடுமானவரை அன்பு செய்து அரவணைத்து தன் குடும்ப வாழ்வை நகர்த்திகொண்டிருக்கும் இவளை போன்று இன்னும் எத்தனையோ அப்பாவி பெண்கள்-மனிதர்கள் இந்த நாட்டில் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
உங்களுக்கும் இதுபோன்று எத்தனையோ அப்பாவிகளின் பரிதாபங்கள் தெரிந்திருக்குமே.
கடந்த முறை நான் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த நேரம் என் செவி சேர்ந்த இந்த 40+ வயது பெண்ணின் கதை கேட்டு உள்ளம் கலங்கினேன்.
அதேபோல தம்பி செய்த கொலை பழியை , தம்பியின் மிரட்டலுக்கு பயந்து தான் ஏற்று கொண்டு கடந்த 15 வருடங்களாக ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஒரு அப்பாவி அண்ணன்,கடந்த சில நாட்களுக்கு முன்தான் விடுதலை ஆகி இருக்கின்றார்.
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட அந்த தம்பி எழுதி வைத்துவிட்டு போன தமது வாக்கு மூலத்தில், தன் அண்ணன் நிரபராதி என்றும் தான் அவரை மிரட்டி நிர்பந்தித்து பழியை ஏற்க வைத்ததையும் தாம் தான் அந்த கொலையை செய்தேன் என்பதற்கான ஆதாரங்களையும் போலீசாரின் பார்வைக்கு வைத்துவிட்டு சென்றதால் இந்த அப்பாவி அண்ணன் பதினைந்து ஆண்டுகள் கழித்து வெளியில் வந்திருக்கின்றார்.
இதில் தெரிந்தவருக்காக கடன் பத்திரத்தில் சாட்சி கையொப்பம் இட்டு கடைசியில் நீதி மன்றம் - வழக்கு - கடனை திருப்பி செலுத்துதுதல் என்ற பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அமெரிக்க வாழ் நம்ம ஊர் ஆளும் ஒருவர் அடக்கம்.
இதுபோன்ற அப்பாவி மனிதர்களை நினைக்கும்போது அவர்களை பகடை காய்களாக பயன்படுத்தி சுகம் காணும் இந்த சமூகத்தை நினைக்கும்போது , வள்ளுவன் சொன்ன,
" இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர்நாண
நன்னயம் செய்து விடில்"
எனும் குறள் ஒருவேளை இப்படி இருந்திருக்கனுமோ என தோன்றுகின்றது.

" innocentடானோரை மதித்தல் -அவர் வாழ
இன்னா செய்யாது விடில் "
உலகில் எங்கேயோ ஏதோ ஒரு வகையில் இதுபோன்று ஏமாற்றங்களுக்கு ஆளாகும் அத்தனை அப்பாவிகளுக்கும் (என்னையும் சேர்த்து??? -அந்த கதை வேறொரு நாளில்...) இந்த பதிவு ஆழ்ந்த அனுதாபங்களுடன் சமர்ப்பணம்.
நன்றி.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
வணக்கம் நண்பரே விமான நிலையங்களில் இப்பொழுது இந்த வகை தில்லுமுல்லுகள் நிறைய நடக்கின்றது இதனால் உண்மையிலேயே நல்ல மனிதருக்கு, நல்ல பொருளை கொண்டு செல்ல முடியாத சூழலும் வந்து விடுகிறது.
பதிலளிநீக்குதற்கொலை செய்து கொண்ட அந்த நன்றியுள்ள தம்பிக்கு நான் நன்றிதான் சொல்வேன் காரணம் அவன் கடிதமாவது எழுதி வைத்தானே ஆகவே அப்பாவி அண்ணன் காப்பாற்றப்பட்டான் பகுதி வாழ்விலாவது இறைவனுக்கு(ம்) நன்றி
நண்பரே,
நீக்குஅதி விரைவான உங்கள் பின்னூட்டம் கண்டு மதி மகிழ்ந்தேன்.
நீங்கள் சொல்லுவது மிகச்சரியே, உண்மையான மனிதர்களுக்கும் உதவ முடியாத நிலைமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
மரிக்கும் முன் தம் தவறை உணர்ந்த தம்பி ஒரு விதத்தில் தங்க கம்பிதான்.
வருகைக்கு மிக்க நன்றி.
கோ
கடைசி பகுதி படிக்கும் பொழுது தொண்டையில் கிச்சு கிச்சு (அப்பாவி என்னையும் சேர்த்து ?)
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குஉங்கள் ஊரில் கிச்சி கிச்சுக்கு, ஒட்டக பாலில் ஊறவைத்த பேரீச்சை பழங்களில் தயாரிக்கப்படும் கிச்சு கிச்சு போக்கும் மருந்துகள் கிடையாதா?
அடப்பாவி உன்னையும் சேர்த்தா?
உண்மைய சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க, என் குறைய யார்கிட்ட சொல்லுவேன்.
மீள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா.
கோ
அடுத்து உங்கள் கதையை கேட்கும் ஆவலில்..
பதிலளிநீக்குத ம 1
செந்தில் குமார்,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி,
என் சோக கதைய கேட்கக் ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கு., ம்ம்ம், ....
வருகிறேன் விரைவில்.
கோ
இதுபோன்ற அப்பாவிகள் பாவம் தான். ஆனால் சில சமயம் தோன்றுவது என்னவென்றால், அப்பாவிகள் என்று சொல்லுவதை விட ஒரு முறை பட்ட பிறகும் உணராமல் மீண்டும்மீண்டும் சிக்கலுக்குள் இருப்பதுதான் உதாரணம் அந்தப் பெண்.
பதிலளிநீக்குகீதா: விமான நிலையம் இப்படி ஒரு சிலர் சிக்குவதால் பெரும்பாலான பயணிகளுக்கும் நேர்மையான பொருளைக் கொண்டு செல்வது கூட பிரச்சனையாகிவிடுகின்றது.
அது என்ன கடைசியில் அப்பாவி என்னையும் சேர்த்து....ஹஹஹஹ்...அது சரி அப்படி என்றால் எங்களையும் அந்த லிஸ்டில் போட்டுக் கொள்ளுங்கள்...சரி சரி அப்பாவியின் கதையைக் கேட்க ஆர்வமுடன்...(அதானே மத்தவங்க அப்பாவியா இருக்கறதக் கேட்டு...பரவால்ல நாம அப்ப கொஞ்சம் தான் ஏமாந்துருக்கோம்னு நினைக்கற அல்ப புத்தி!!!ஹிஹி )
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குமீள் வருகைக்கு மிக்க நன்றி.
மாட்டுக்கு தான் ஒரு சூடு மனிதனுக்கு எத்தனையானாலும் உரைக்காது என்பதால்தான் இது போன்று மீண்டும் மீண்டும் ....
நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுதானே, ஏமாறுவதில் என்று சொல்கின்றீர்களா?
நன்றி
கோ
கொஞ்சம்தான் ஏமாந்துருக்கோம்ன்ற அற்ப புத்தி ஒரு புறம் அதன் அடுத்தப் பக்கம்.அது மற்றொரு அல்ப புத்திதான்....ஹும் இவர் என்ன இம்புட்டுத்தான் அப்பாவி நாம் அதை விட டபுள்/பன்மடங்கு அப்பாவி இன்னொசென்டா இருக்கறவங்களுக்கு இந்த உலகம் எப்படி எல்லாம் ஏமாத்தத்தை தருது..என்று நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவைங்க நு சொல்லிக்கற பெருமை....ஹிஹிஹி
பதிலளிநீக்குஅன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
ஏமாற்றத்தில் கூட தரம் பிரித்து சுகம் காணும் உங்கள் நல்ல........ மனசுக்கு பாராட்டுக்கள்.
நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்........ப நல்லவங்க என்பது உலகறிந்த உண்மைதான், இல்லனா , என்னோடு சேர்ந்து இருப்பீர்களா?
நன்றி
கோ
பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ (சமயத்தில் விமானத்திலோ), யாரேனும், அந்த பெட்டியை எடுத்துத் தாருங்கள் அல்லது இதை அங்கே வையுங்கள் என்று கேட்டாலும் செய்யாமல் இருப்பதுதான் உத்தமம். உதவி செய்கிறோம் என்று புறப்பட்டால் உபத்திரவத்தைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லையப்பரே,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
மனமிருந்தாலும் எதார்த்த நடைமுறை அனுபவத்தால் நல்லவர்களையும்(??) சந்தேகிக்கும் மன நிலைமைக்கு நாம் தள்ளபடுவது உண்மைதான்.
ரொம்ப நாளா இந்தபக்கம் ஆள காணோமே, சவுக்கியமா?
நன்றி
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குஇன்னும் அப்பாவிகள் ,,,,,,,,,,
ஆம் இருக்கிறார்கள்.
அது என்ன நீங்களுமா? சரி சரி உங்கள் கதையையும் சொல்லுங்கள்,, ஆமா அடுத்த வீட்டு கதைன்னா காது நீளுமே,, புரிகிறது,
நன்றி.
பேராசிரியர் அவர்களுக்கு,
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
அப்பாவிகள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.
உங்களுக்கு அப்படி யாரேனும் தெரியுமா?
ஆமாம், எனக்கும் புரிகிறது, அடுத்தவர் வீட்டு கதையை கேட்க்க, உங்களை போன்றே(!!), காது நீள்கிறது என்று.
நன்றி
கோ
நல்ல குற(ர)ல்...
பதிலளிநீக்குநண்பரே,
பதிலளிநீக்குவருகைக்கும் குற(லை)ளை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.
கோ