பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாட்டு பாட - "வா"

பாட(ம்) சொல்லவா?

நண்பர்களே,

வருடா வருடம் கிறிஸ்த்து பிறப்பின் நன்னாளை கொண்டாடும் நம் கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகள்  , இந்த பண்டிகையை முன்னிட்டு செய்யும் பலவிதமான தயாரிப்புகள்,மற்றும் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கிறிஸ்மஸ் "கேரல்ஸ்"   என சொல்லப்படும்  "இன்னிசை கீத இசை நிகழ்ச்சிகள்".

ஒவ்வொரு  தேவாலயங்களின் அங்கத்தினர்கள் தங்களுக்குள்ளாக பாடகர் குழுக்களை அமைத்து, பாரம்பரிய பாடல்கள் அல்லது புதிதாக இயற்றப்பட்ட பாடல்களை அவர்களுக்குள்ளாகவே இருக்கும் , இசை கருவிகளை மீட்டும் அங்கத்தினர்களின் துணைகொண்டு, பாடி மகிழ்வர் , மகிழ்வூட்டுவர்.

கிறிஸ்மஸ் மாதத்திற்கு சில மாதங்களுக்கு முன் இருந்தே பயிற்சி செய்து அதை ஒரு விசேஷித்த நாளில், அவர்களின் ஆலயத்தின் பிற அங்கத்தினர்கள் விருந்தினர்கள், மற்றும் சுற்றியுள்ள வேறு ஆலய அங்கத்தினர்களின்,மற்ற மதங்களை சார்ந்த நண்பர்கள், அவர்களின் குடும்பங்கள்  முன்னிலையில் பாடியும் இசைத்தும் காட்டி மகிழ்வதோடு கேட்போருக்கும் மகிழ்ச்சியையும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் கூறி மகிழ்வர்.

அப்படி பாடப்படும் பாடல்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே விஷயமான, கிறிஸ்த்து  பாலகனாக, மாட்டு தொழுவத்தில் பிறந்தார், கந்தை துணிகளில் சுற்றப்பட்டு முன்னணையில் கிடத்தி வைக்கப்பட்டார், அவரின் பிறப்பின் நற்செய்தியை தேவதூதர்கள், இரவு நேரத்தில் ஆடுகளை பாதுகாத்துகொண்டிருந்த இடையர்களுக்கு அறிவித்தனர், அதை தொடர்ந்து அந்த இடையர்கள் வந்து அந்த தெய்வ குழந்தையை வணங்கினர் என்றும், தூர தேசங்களில் இருந்து வான சாஸ்த்திரிகள் வந்து பணிந்தனர்  என்னும் அந்த "நேட்டிவிட்டி" காட்ச்சியை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கும்.

கருத்தும், கருபொருளும் ஒன்றுதான் என்றாலும் கடந்த 2000 ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் பாடப்பட்டு வரும் இந்த "கேரல்ஸ்"  எனப்படும் "இன்னிசை கீதங்கள்"  ஆண்டுக்கு ஆண்டு ஒரு புதிய பரிமாணம் கொண்டவையாகவும், புதிய இசை கோர்வைகள் கோர்க்கபட்டவைகளாகவும், கேட்போரின் செவிகளையும் கடந்து உள்ளத்தில் ஒரு புதிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்படியாக அமைவதே இதன் சிறப்பு.

இதுபோன்றதொரு "கிறிஸ்மஸ் இன்னிசை கீத" நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களின் அழைப்பின் பேரில் (முடிந்தபிறகு கிறிஸ்மஸ் விருந்து உண்டு என்று சொன்னதாலும்) கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, தமிழின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதால், அவர்கள் பாடிய ஆங்கில பாடல்களில் மனம் ஒன்றியதைவிட, இடையிடையே பாடிய தமிழ் பாடல்களால் , காந்தம் இழுக்கும் இரும்பெனவே என் இதயம் ஈர்க்கப்பட்டது.

பள்ளி (பாதிரிமார் பள்ளி வேதம் என் பாதை எல்லாம் பாரிஜாதம்) பருவம் முதல் இதுபோன்று பல இசை நிகழ்ச்சிகளை பார்த்தும் கேட்டும் இருந்தாலும், அன்று அவர்கள் பாடிய சில பாடல்களின் வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் என்னை வெகுவாக கவர்ந்தன.

அதில் ஒரு படலை இப்போது உங்களுக்காக:

பல்லவி

யாரது பிறந்தது இத்தனை அழகுடன்?
பாரது வியந்தது பரவச மகிழ்வுடன்.

அனுபல்லவி

இவர்தான் இறைவனோ- இல்லை
இறைவனின் தூதனோ?- இல்லை
தந்தை மைந்தன் தூயரெனும் 
திரித்துவ முழுமையோ?

சரணம்  - 1:

ஆகம வேதங்கள் முன்னுரைத்த தேவன்!
அன்னையர் மாமரி மடித்தவழ் சேயன்!
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடுதே!
வழிந்திடும் புன்னகை - மகிழ் வெள்ளம்  கூடுதே!.

இவர்தான் இறைவனோ- இல்லை
இறைவனின் தூதனோ?- இல்லை
தந்தை மைந்தன் தூயரெனும் 
திரித்துவ முழுமையோ?

சரணம்  -2:

பாவத்தின் காரிருள் பாய்ந்து மறைந்ததே!
தேவனின் பேரொளி திசையெங்கும் நிறைந்ததே!
புன்னகை அன்பு புவியெல்லாம் மலர்ந்ததே!
மன்னவன் வருகையால் உன்னதம் புலர்ந்ததே!  

இவர்தான் இறைவனோ- இல்லை
இறைவனின் தூதனோ?- இல்லை
தந்தை மைந்தன் தூயரெனும் 
திரித்துவ முழுமையோ?

 முடிப்பு : (பதில்)

யாரது பிறந்தது இத்தனை அழகுடன்?
பாரது வியந்தது பரவச மகிழ்வுடன்.

இவர்தான் இறைவனோ- இல்லை
இறைவனின் தூதனோ?- இல்லை
தந்தை மைந்தன் தூயரெனும் 
திரித்துவ முழுமையோ?

தந்தை மைந்தன் தூயரெனும்
திரித்துவ முழுமையே!!

புதிய கோணத்தில் கிறிஸ்மஸ் பாடல் இயற்றிய (யாரோ) அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

என்ன நண்பர்களே பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கின்றேன், அடுத்து நான் ரசித்த இன்னொருபாடல் எது என்று நாளை சொல்கிறேன்

அதுவரை வாழ்த்துக்களுடன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

11 கருத்துகள்:

 1. ஆஹா அருமையான பாடல்,

  வாழ்த்துக்கள் அரசே,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசிரியரே,

   வருகைக்கும் பதிவினை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.

   கோ

   நீக்கு
 2. தளிர்,

  வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
  கோ

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரிகள் பாடலில் ஆமாம் கோ நீங்கள் சொல்லுவது போல் புதியமாதிரியாக எழுதப்பட்டக் கிறித்தவ பாடல்...

  உங்கள் இந்த இணைப்பு இதற்கு அடுத்த பதிவில் வேலைசெய்யவில்லை கோ. நாங்கள் எப்போதும் வருவது போல் வந்துவிட்டோம்..ஹாஹ்

  பதிலளிநீக்கு