பின்பற்றுபவர்கள்

புதன், 23 டிசம்பர், 2015

பாட்டு கேட்க "வா".

பார்த்(து)ததை பேசவா?

நண்பர்களே ,

நேற்றைய எமது   - பாட்டு பாட - "வா" எனும் பதிவில், சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு கிறிஸ்மஸ் கீத இன்னிசை நிகழ்ச்சியில் நான் ரசித்த தமிழ் பாடல்கள்  எனும் வரிசையில்  ஒரு பாடலை குறிப்பிட்டு அடுத்த பாடல் 
எதுவென்று இன்று சொல்வதாக வாக்களித்திருந்தேன் நினைவுண்டா?

இல்லை என்றால் மீண்டும் படித்துவிட்டு தொடரவும். 

அந்த பாடல் நேற்றைய பாடலை கடந்து வேறொரு கோணத்தில் கிறிஸ்த்து பிறப்பினை சொல்வதாக எனக்கு தோன்றியது.

மனிதனின் கற்பனையை என்னவென்பது.  இதுபோன்ற பாடல்கள் காசுக்காகவோ, அல்லது கடமைக்காகவோ அல்லது, ராகத்தின் கட்டுபாட்டிற்கிணங்க ஏதோ வார்த்தைகளை  நிரப்பி இயற்றப்பட்ட பாடல் வரிகளாக எனக்கு தோன்றவில்லை.

உள்ளார்ந்த மகிழ்ச்சியின்  தளும்பல்களின் சிதரல்கலாகவே எனக்கு தோன்றியது.

 உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால் இதுபோன்ற பாடல்கள் உருவாவதோ அவை கேட்போரின் இதயங்களை வருடுவதாகவோ அமையாது என்பதும் என் கருத்து.

சின்ன பிள்ளைகளாக இருந்தபோது(இப்பவும் நான் அப்படித்தான்!!) எங்கள் ஊரில் கிறிஸ்மஸ் என்றால் , தூரத்தில்  இருக்கும் மாதா கோவில்களில் இருந்து இசைத்தட்டு பாடல்களை பெரிய பெரிய குழாய் ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்புவார்கள்.

அப்படி இசைதட்டில் இருந்து ஒலிரும் பாடல்களில் பிரதானமான பாடலாக "தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்... தேடுங்கள் கிடைக்கும் ....." என்பதுபோன்ற பாடல்களை மட்டுமே கேட்டு பழகிய எனக்கு இந்த இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட அனைத்து தமிழ் பாடல்களும் மிகவும் புதிதாக தோன்றின.

வந்திருந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்ட விழா  நிகழ்ச்சி நிரலில் அச்சடிக்கபட்டிருந்த அந்த அடுத்த பாடல் இதோ உங்களுக்காக:


பல்லவி 

மலராடும் பூஞ்சோலை
மகிழ்ந்தாடும் காரணம் என்ன?
வளைந்தோடும் நதி வெள்ளம் 
குதித்தோடும் காரணம் என்ன?

 அனுபல்லவி 

தென்றலும் திசையெங்கும்  இசை பாடுதே
வான் நிலா தேன் சிந்துதே.
விண்ணவர் மண் மீது மனுவானதால்
என் நெஞ்சம் கவிபாடுதே. 

சரணம்  - 1

அடியவர் வயல் வெளி சென்று
ஆயரின் பயமதை வென்று
பாடினர் நற்செய்தி நன்று
ஆடினார் அகமகிழ்ந்தன்று.

தென்றலும் திசையெங்கும்  இசை பாடுதே
வான் நிலா தேன் சிந்துதே.
விண்ணவர் மண் மீது மனுவானதால்
என் நெஞ்சம் கவிபாடுதே. 

சரணம் - 2

வானத்தில் பேரொளி ஒன்று
விவரித்த மா- செய்தி கண்டு
விரைந்தனர் ஞானியர் அன்று
படைத்தனர் பொன்பொருள் கொண்டு.

தென்றலும் திசையெங்கும்  இசை பாடுதே
வான் நிலா தேன் சிந்துதே.
விண்ணவர் மண் மீது மனுவானதால்
என் நெஞ்சம் கவிபாடுதே. 

சரணம் - 3

தாவீதின் ஊர் வந்த தேவன்
தரணியோர் செழித்திட ஜீவன்
தந்திட தரித்திர(ர்) கோலம்(கொண்டதை)
சொல்லுமே சரித்திரம் நாளும்.

முடிப்பு:

மலராடும் பூஞ்சோலை
மகிழ்ந்தாடும் காரணம் என்ன?
வளைந்தோடும் நதி வெள்ளம் 
குதித்தோடும் காரணம் என்ன?

தென்றலும் திசையெங்கும்  இசை பாடுதே
வான் நிலா தேன் சிந்துதே.
விண்ணவர் மண் மீது மனுவானதால்
என் நெஞ்சம் கவிபாடுதே.


மத நம்பிக்கை என்பதும் கருத்தில் உடன்படுவது என்பதும் வேறு விஷயம்என்றாலும், தமிழையும், கற்பனையையும், படைப்பையும் ரசிப்பதில் எனக்கு எந்த உடன்பாட்டு முரண்பாடும் இல்லை என்பதால் நான் ரசித்த இந்த இரண்டாம் பாடலை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கிறிஸ்மஸ் கொண்டாடும்  சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன்.

Wish you all a Very Merry Christmas!!


நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.13 கருத்துகள்:

 1. வணக்கம், அரசே,

  பாடல் வரிகள் அருமையாக உள்ளது,

  துள்ளளோடு, பகிர்வுக்கு நன்றிகள்.

  Wish you all a Very Merry Christmas!!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே முந்தைய பதிவுக்கும் சென்று வந்தேன் ஆனால் போன வழி என் வழி காரணம் தாங்கள் கொடுத்த இணைப்பு வேலை செய்யவில்லை கவனிக்கவும்

  பதிவு நன்று கீழ்காணும் அல்லது மேல்கண்ட வார்த்தைகள் மனதை நம்ப வைக்க மறுக்கின்றது இதோ இதுதான்..

  சின்ன பிள்ளைகளாக இருந்தபோது (இப்பவும் நான் அப்படித்தான்)

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துகள் நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   வருகைக்கு மிக்க நன்றி.

   இணைப்பு நன்றாகத்தான் வேலை செய்கிறது.

   மேலும், என்னை நீங்களே நம்பலனா, யாரு நம்பபோறாங்க.

   வாழ்த்துக்கள்.

   கோ

   நீக்கு
  2. இப்பொழுதும் சொடுக்கினேன் திறக்கவில்லை நண்பரே...

   நீக்கு
  3. நண்பரே,

   அங்கே அபுதாபியில் இருக்கும் எதிர்கட்ச்சிகளின் சதியாக இருக்கும் என நினைக்கின்றேன், இங்கே எனக்கும் மற்றவர்களுக்கும் திறக்கின்றதே.

   பலமாக தட்டுங்கள் திறக்கப்படும்.

   கோ

   நீக்கு
  4. திறக்கவில்லை அப்போ இங்கும் எதிர்க்கட்சிகளின் சதியாக இருக்குமோ...கண்டுபிடிக்க வேண்டும்...ஹிஹி

   நீக்கு
 3. அட! இது கூட அருமையான பாடலாக இருக்கின்றதே. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.

  கீதா: பாடலின் வரிகள் கிடைத்தது போல் மெட்டும் கிடைக்குமா?!!

  பதிலளிநீக்கு
 4. Beautiful song brother...is this a traditional song, like a hymn? Please give us a link, if any, so that all of us can enjoy the song.

  பதிலளிநீக்கு