பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

மறக்கமுடியுமா?

"உன்னோடு வாழ்தல் அரிது"


நண்பர்களே,

உணவு மனிதருக்கு மட்டுமல்லாமல் உயிர்வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்று என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.


அவ்வை பாட்டியின் பாட்டிற்கேற்ப ,ஒருவேளைக்கு உணவில்லை என்றல் தவிக்கும் வயிறு இரு வேளைக்கான உணவை ஒரே நேரத்தில் ஏற்காது   என்பதும் நமக்கு தெரியும்.

நாம் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி நம்  உணவிற்காகவே செலவிடபடுவதையும் நாம் அறிந்திருக்கின்றோம். 

மருத்துவ மனையில் இருக்கும் சில நோயாளிகள், மரண படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்குகூட,திட உணவாக இல்லாவிட்டாலும் திரவ உணவையேனும் குழாய் மூலமோ ஊசியின் மூலமோ செலுத்துவதை பார்த்திருக்கின்றோம்.

இப்படி பிறந்த குழந்தைமுதல் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்வரை, ஆண்டி முதல் அரசன் வரை, எல்லோருக்கும் மிக மிக அத்தியாவசியமாக தேவைபடுவது உணவும் தண்ணீரும்.

நிழலின் அருமை வெய்யிலில்தான் தெரியும் என்பார்கள், அதே போல யானையின் பலத்தை அதன் மிதிபட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை.

எத்தனை பணம் படைத்தவர்களானாலும் பிச்சை காரரானாலும்  உணவு என்பதும் பசி என்பதும் தவிர்க்கமுடியாத ஒன்றுதான்.

சமீபத்தில் தமிழகத்தை புரட்டிபோட்ட கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கோடானு கோடி மக்கள் உணவின்றி தவித்ததை நம்மால் மறந்திருக்க முடியாது.

புகைப்படங்கள், ஆவன படங்கள், காணொளி மூலம், மக்கள் மேலிருந்து விமானம் மூலம் போடப்பட்ட உணவு பொட்டலங்களுக்காக அண்ணாந்து பார்த்து கையேந்தி  நின்ற காட்ச்சியை பார்த்தபோதும், மார்பளவு தண்ணீரில் நின்றவண்ணம் மேலாடைகூட இல்லாமல், கொடுக்கப்பட்ட உணவிற்காக தட்டேந்தி நின்ற எத்தனையோ சிறுவர்களையும் பெரியவர்களையும் பார்க்கும்போது கண்கள் வடித்த கண்நீரைவிட உள்ளம் வடித்த உதிரம் அதிகம்.

இன்னும் கூட ஆங்காங்கே மக்கள் உணவிற்காக காத்திருக்கும் நிலைமையும் இருப்பதை நாம் அறிவோம்.

இப்படி மனிதனின் வாழ்விற்கு  இன்றியமையாத உணவு உடை இருப்பிடத்தில் முதன்மையாக விளம்கும் இந்த உணவை நாம் எத்தனையோ முறை வீணாக்கி இருப்போம், ஊதாசீன படுத்தி இருப்போம்.அளவிற்கு அதிகமாக சமைத்துவிட்டு பின்னர் அவற்றை குப்பையில் எறிந்திருப்போம்.

கூடுமானவரை தேவையான அளவிற்கு மட்டுமே சமைத்து உண்பதும் அப்படி ஒருவேளை உணவு மீதமிருப்பின் அவற்றை பாதுகாப்போடு வைத்திருந்து அடுத்து வரும் வேளைகளில் அவற்றை பயன்படுத்தி விரயமாகாமல் தடுப்பதும் இன்றைய காலகட்டத்தில்  நாம் எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய ஒரு கண்டிப்பான கடமையாகும்.

பலமுறை கடைகளில் வாங்கும் துரித உணவினை கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிந்த அந்த எஞ்சிய உணவை நினைத்து உணவின்றி தவித்த நாட்களில் வேதனைபட்டதாக தெரிந்தவர்கள் கூறும்போது வேதனையாகத்தான் இருந்தது.

பல வருடங்களுக்கு முன் எனக்கு தெரிந்த ஒருவர் சொன்ன ஒரு அறிவுரையை இன்னமும் வேத வாக்காக நினைத்து நான் கடிபிடிக்கும் ஒரு குணம்: சாப்பிட்டு முடித்தபின்னர் மீதி இருக்கும் உணவு எத்தனை சிறிதாயினும் குறைவாயினும் அவற்றை குப்பையில் எரியாமல், சிறிய பாத்திரத்தில் சேகரித்து பத்திரபடுத்தி, அடுத்து வரும் வேளைகளில் அவற்றை பயன் படுத்தவேண்டும் என்பதே.

நண்பர்களே, உணவை இதுவரை நாம் வீனடித்திருந்தாலும் , இனி வரும் காலங்களில் ஒரே ஒரு பருக்கை சோறானாலும், ஒரே ஒரு துண்டு ரொட்டி யானாலும் வீணாக்காமல் அவற்றை நல்லபடியாக பயன்படுத்துவதை வரும் நாட்களில்  கடைபிடிப்பது நம் மனிதகுலத்திற்கு நாம்  செய்யும் சேவையாக நினைத்து கடைபிடிக்க  வேண்டும்.

பெருவெள்ளத்தால், பூகம்பத்தால், பேரிடர் துயர நேரங்களில் உணவிற்காக கஷ்டப்படும் மனிதர்களை கண்டும் அவர்களின் துயரங்களை கேட்டும் அறிந்திருக்கும் நாம் இனியும் உணவுபொருட்களை வீணாக்கினால்  அது மனிதகுலத்திற்கு நாம் செய்யும் பரிகாரம் இல்லாத பாவம், மன்னிக்க முடியாத துரோகம் என்பதை உணர்ந்தவர்களாக வாழவேண்டும் என்பதை நினைவு படுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்

என் நோவு அறியாய் இடும்பை கூர்னன் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது."

நன்றி.

வாழ்க வளமுடன்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

14 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே நல்லதொரு கருத்து மிக்க விடயத்தை பகிர்ந்தீர்கள் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
  2. பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. கடைபிடிக்க கொஞ்சம் கஷ்டம்தான். பஃப்பேயில மனதில் உள்ள ஆசை, சிலவற்றைத் தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வைக்கிறது. சில, பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். சாப்பிடும்போது கொடுமையாக இருக்கும். மாறுவது கொஞ்சம் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை தமிழரே,

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. பெரும்பாலான buffet விருந்துகளின்போது வயிற்றில் உள்ள பசியைவிட கண்களில் உள்ள பசியே அதிகம் அதன் விளைவே உணவு விரயம்.

      வருகைக்கும் பதிவை பாராட்டியதற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. மிக அருமையாக சொன்னீர்கள்! உணவை வீணடிக்க வேண்டாம்! நல்லதொரு கருத்து! நல்லதொரு பதிவு! அவசியமானது! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளிர்,

      வருகைக்கு மிக்க நன்றியம் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  5. The food that is put on our tables day in and day out is not just the result of our labour. There is the hidden entity called the divine grace, which we often take for granted.

    பதிலளிநீக்கு
  6. Prabhu,

    Yes it is true, with out the divine grace none of any living creatures in the world would get fed, It is my belief too that only if the almighty grants, any of us would get fed.

    At the same time we should not misuse or waste the blessings.

    Thanks for your comments and visit.

    ko

    பதிலளிநீக்கு
  7. நல்ல கருத்து கோ. பதிவு அருமை.

    கீதா: எனது பாட்டி எனக்குக் கதை சொல்லி அந்தக் கதையை நான் என் மகனுக்கும் சொல்லியிருக்கின்றேன். பாட்டி சொன்ன கதையும் சாராம்சம் இதுதான். நாம் ஒரு பருக்கையை வீணாக்கினாலும், அந்தப் பருக்கை சாக்கடை, வாய்க்கால், நதி என்று கடலில் கலக்குமாம். சமுத்திர ராஜன் கேட்பானாம்..இந்தப் பருக்கை எங்கிருந்து யாரிடமிருந்து வந்தது? என்னிடம் இது போன்று எதுவும் கலக்கக் கூடாது என்று ஆணை இட்டிருக்கின்றேனே. எனது நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, மக்கள் உணவுகள் இங்கு வந்து கலக்கக் கூடாது. அப்படி ஒரு பருக்கை வந்தாலும் அதை வீணாக்கியவருக்கு இனி உணவில்லாமல் செய்துவிடுவேன் இந்தப் பருக்கைக்குச் சொந்தக்காரர் யார் என்று கண்டு பிடித்து அவருக்குச் சோறு இல்லாமல் செய்ய வேண்டும்" என்று ராஜா தண்டனை கொடுப்பார் என்று சொல்லியது உண்டு. இது மிகைப்படுத்தப்பட்டது என்று பின்னாளில் யோசித்தாலும், அதன் கருவை மட்டும் உள்வாங்கிக் கொண்டு மகனுக்கு அதை சற்று வேறு விதத்தில் சொல்லியது உண்டு. நம்மைச் சுற்றி எந்த ஒரு சின்ன துண்டு கூடக் கிடைக்காமல் பட்டினியால் வேதனைப்படுபவர் எத்தனை பேர் இருக்கின்றார்கள். இப்படி வீணாக்கினால் இறைவன் கோபித்துக் கொள்வார். எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்து சாப்பிட வேண்டும் ஒவ்வொரு பருக்கையும் இறைவன் நமக்கு படி அளக்கின்றார் அதற்கு நன்றி சொல்லி வீணாக்காமல் உண்ண வேண்டும் என்று அந்தக் கதையையும் சொல்லி முடித்தது இதைச் சொல்லி.

    அருமையான ப்திவு கோ...எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். இன்று பல விழாக்களிலும், வீடுகளிலும், எவ்வளவு உணவு வீணாக்கப்படுகின்றன நினைக்கும் போது மனம் வேதனைப்படும்...நாங்கள் இதனைக் கடைப்பிடித்து வருகின்றோம். திருமணங்களுக்குச் செல்லும் போது இலையில் முதலிலேயே உணவு வைக்கப்பட்டிருந்தால் அதைத் தவிர்த்து புதியதாக இலை போடும் போது சென்று அமர்வது வழக்கம். சில உணவுகளை உடல் நலத்திற்காகத் தவிர்க்கும் நிலையும் இருப்பதால் வேண்டுவதை மட்டும் போடச் சொல்லி உண்டு வீணாக்குவதைத் தவிர்க்கலாமே என்பதால்...

    நல்ல பதிவு கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பின்னூட்டம் சொல்லும் பாட்டியின் கதை மிக மிக அருமை புதுமை.
      ஒவ்வொரு பருக்கையும் உருவாகும் வரலாறும் அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பும் வியர்வையும் ஒவ்வொரு பருக்கையையும் வாயில் போடும்போதெல்லாம் நம் நினைவிற்கு வருமாயின் வீணாவதையும் வீணாக்குவதையும் தவிர்க்க முடியும்.

      உங்கள் பாட்டி உங்களுக்கு சொன்ன இதுபோன்ற நீதி கதைகள் வேறு ஏதேனும் இருந்தால் பாட்டியின் நினைவாக எங்களோடு பகிர்ந்துகொள்ளலாமே..

      வருக்கைக்கும் பாராட்டுக்கும் மீண்டும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  8. ஆம் அரசே,

    நான் இப்பவே குழந்தைகளுக்கு உணவினை வீணாக்கூடாது என்பதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவர்களும் ஓரளவு கடைபிடிக்கிறார்கள். நல்ல பகிர்வு.
    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  9. பேராசிரியரே,

    நல்ல பழக்கம் பிள்ளைகளுக்கு கற்றுத்தரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், கடைபிடிக்கும் உங்கள் குழந்தைகளுக்கு பாராட்டுக்களும்.

    கோ

    பதிலளிநீக்கு