எல்லோருக்கும் ரொம்ப பிடிக்குது.
நண்பர்களே,
சமீபகாலமாக ஊடகங்களையும் சமூக வலை தளங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு அவற்றில் நித்தம் பவனி வரும் ஒரு விடயம் உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அது சம்பந்தமாக பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லிவருகின்றனர்.
பெரும்பான்மையான சமூக ஆர்வலர்களின் கவலை எல்லாம் எதிர்கால சந்ததியினரின் ரசனையும் சிந்தனை திறனும் மிக மிக கீழ்த்தரமாக ஆகிவிடக்கூடாது அதற்காக இதுபோன்ற விஷயத்தை சும்மா விடக்கூடாது என்பதுதான்.
பல அறிவு ஜீவிகளும் இந்த விவகாரத்தை காதும் காதும் வைத்தாற்போல் அமுக்கமாக கையாளாமல், அதனை தெரியாதவர்களுக்கு கூட,(நான்கூட அதுபோன்று ஒரு பாடல் உருவாகி இருந்ததையும் அதன் விளக்கத்தை நண்பர்கள் மூலமே அறிந்தேன்) வெளிச்சம்போட்டு காட்டியதுதான் பெரும் வேதனைக்குள்ளான விஷயம்.
சம்பந்தப்பட்டவர் தரப்பு வாதத்தை கேட்க்கும்போது , அதை தாம் வெளி இடவில்லை, பதிவிறக்கம் செய்யவில்லை, யாரோ வேண்டாதவர் செய்த வேலை இது, நான் என்ன மேடையில் பாடினேனா? வானொலியில் பாடினேனா? தொலைகாட்சி நிகழ்ச்சியில் பாடினேனா?அல்லது திரைப்படத்தில் பாடினேனா?
அப்படி இதனை நான் எந்த ஊடகத்திலும் வெளியிடாத , தேவை இல்லை என்று தள்ளி வைக்கப்பட்ட ஒரு டம்மி பாடலை மையமாக கொண்டு தன்னை ஒரு தீவிரவாதிபோல் சித்தரிப்பது எந்த விதத்தில் ஞாயம் என்று கேட்பதிலும் கொஞ்சம் ஞாயம் இருக்கின்றதா என்பதை தீர்மானிக்கும் முன் ஒருவேளை மேல் சொன்ன ஊடகங்களில் ஏதேனும் ஒன்றில் வேண்டுமென்றே, வெளி இட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும்.
வேண்டுமென்றே வெளி இடாததற்கே இப்படி என்றால் இங்கிலாந்தில் பீப் பாடலை பகிரங்கமாக எல்லோர் செவிகளிலும் ஊடுருவி பாயும் படியாகவும் கண்களில் அது தொடர்பான படங்களையும் வண்ண காட்சிகளையும் சிறுவர் முதல் பெரியவர்வரை , ஆன் - பெண் பேதமோ வயது வித்தியாசமோ இன்றி அனைவரும் பார்த்து அது என்னவென்று , இலை மறைவு காய்மறைவாககூட இல்லாமல் வெட்ட வெளிச்சமாக தடையேதுமின்றி ஒலிபரப்பு செய்ய பட்டுவிட்டது.
இதற்குமுன்னால் இதேபோன்ற தவறை எப்போதோ பார்த்த ஒரு திரைப்படத்தில், குடும்பப்படம் எடுப்பதில் தன் பெயர் கொடிகட்டி பரந்த ஒரு இயக்குனர் , கதை திரைக்கதை, எழுதி, இயக்கி நடித்த ஒரு படத்தில், ஒரு காட்சியில், தன் மனைவிக்கு கடிதம் எழுவார், அதில் தன் மனைவியின் பெயரை தவறாக எழுதியதை பக்கத்தில் இருந்து எட்டிபார்க்கும் ஒருவர் சுட்டிக்காட்டும்போது என்னங்க "கமலா" என்பதற்குபதில் "காமல" என்று காலை இடம் மாற்றி போட்டிருக்கின்றீர்களே என்பார்.
அதற்கு கடிதம் எழுதிகொண்டிருப்பவர் , "கமலா என் மனைவி நான் என் காலை எங்குவேண்டுமானாலும் போடுவேன்" என்பார், இதுவும் ஒருவகையில் ஒரு வக்கிரமான சிந்தனை என்பது அப்போதிருந்த எந்த ஜீவராசிகளுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் புரியாமல் அந்த வசனம் எழுதி பேசி நடித்தவருக்கு தேசீய விருதுவரை வாங்கிகொடுத்து கவுரவித்தது இந்த உலகம்.
அதபோல " ஒரு அங்கம் கைகள் அறியாதது அழகே.. அழகு" என்று பாடல் எழுதிய கவிஞர்களை பாராட்டியது இந்த உலகம்தான். எந்த அங்கம்? இது ஆபாசம் இல்லையா? வக்கிரம் இல்லையா? என்று கேட்டுகொண்டே போகலாம்.
"நேத்து ராத்திரி"....,"டாடி மம்மி."..பாடலில் இல்லாத விரசமா? , "அழகா பொறந்து புட்டேன் ஆறடி சந்தனக்கட்டை" , "சின்ன வீடா வரட்டுமா.".., "என் செல்லப்பேரு ஆப்பிள் என்ன சைசா கடிச்சிக்கோ"....இதெல்லாம் என்னங்க திருவாசகத்தின் கோனார் பொழிப்புரையா?"
அதுவும் இது போன்ற பாடல்களை குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பாடக்கேட்டு மதிப்பெண்களை அளிக்கும் அறிவு ஜீவி மேதாவிகளையும் அல்லவா கண்டித்திருக்கவேண்டும்.
காமடி எனும் பெயரில் காம நெடி வீசும் வசனங்களை பேசி நடிக்கும் நடிகர்களையோ அவற்றை எழுதி இயக்கும் இயக்குனர்களையோகூட எதுவும் யாரும் கேட்டதாக தெரியவில்லை.
இதற்குமுன்னால் இதேபோன்ற தவறை செய்தவர்களை கண்டித்திருந்தால் இப்படி ஒரு விபரீதம் விளைந்திருக்குமா?
எது எப்படி இருந்தாலும் சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை பீப் போட்டு மறைத்திருந்ததைவிட முழு பாடலையும் அழித்து மறைத்திருக்கவேண்டும், பாடல் எழுதி பாடியதாக கருதப்படும் இளைஞர் தன் தவறை உணர்ந்து திருந்தவேண்டும் என்பதே எனது ஆசை.
இதற்கிடையில் உலகமெங்கிலும் பரவிவிட்ட பீப் பாடல், பகிரங்கமாக இங்கிலாந்தில் அனைவரும் கேட்கும் வண்ணம் வெளி இடப்பட்டிருக்கும் இந்த பீப் பாடலை கேளுங்கள், கேட்க்க "விரசமாக" இருந்தால் கேட்க்காமல் மூடிகொள்ளுங்கள் உங்கள் காதுகளையும் கண்களையும்.
என்ன நண்பர்களே "Bee(f)p" சாங் எப்படி இருக்குது?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ
நண்பரே...
பதிலளிநீக்குநீங்கள் எழுதிய அனைத்தையும் ஒப்பு கொள்கிறேன். அந்த காலத்தில் வாலி மற்றும் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் இல்லாதா கொச்சமா? இருந்தாலும் அந்த காலத்தில் என்றாவது ஒரு நாள் சினிமாவிற்கு போவோம், என்றாவது ஒரு நாள் ரடிவில் இந்த பாடல்கள் வரும். தற்போதைய நிலைமை அப்படி இல்லை. இந்த மாதிரியான விஷயங்கள் நொடிக்கு நொடி வந்து கொண்டே இருக்கும். அதனால் பாதிப்பு மிக்க அதிகம்.
மற்றும்.. நீங்கள் சொன்ன மற்ற சமீபத்திய பாடல்கள் அனைத்துமே கண்டிக்க தக்கவை. அதை கண்டிக்காதது நம் தவறு. "வொய் திஸ் கொலைவெறி" பாடலை சரியாக கண்டித்து இருந்தால் இன்று இந்த பாடல் வெளி வந்து இருக்காது.
ஆனாலும், அன்று கண்டிக்க தவறிய ஒரே காரணத்தினால் இன்றும் கண்டிக்காமல் இருக்க முடியுமா?
நண்பா.. முதுகலை நாட்களில் நீயும் நானும் எழுதாத பாட்டா ?
உன் அன்னையை நான் அறிவேன், என் அன்னையை நீ அறிவாய். நாம் இருவரும் சேர்ந்து இப்படி ஒரு பாடல் எழுதி அது நம் அன்னைகளுக்கு தெரிய வந்து இருந்தால், நமக்கு என்ன நேர்ந்து இருக்கும் என்று நான் கூற தேவையில்லை.
ஆனால் இவரின் அம்மாவோ.. என்ன செய்துவிட்டான் ...? இதில் என்ன தப்பு.. ?
ஒரு கொச்சையான வார்த்தையை அலங்கரிப்பதும் அங்கீகரிப்பதும் தவறு. தவறு.. தவறு..
தம்பி விசுவிற்கு ஒரு செய்தி,
நீக்குவருகைக்கும் தங்களின் வளமான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
கல்லூரி நாட்களில் எழுதி பாடிய பாடல்களை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். அதிலும் நாம் இயற்றிய ,மகா கணபதி எனும் தெய்வீக பாடலும் அதன் பொருள்பொதிந்த வார்த்தைகளும் இன்றைக்கும் நம் மனதில் நிலைத்திருக்க கரணம் நாம் அதில் பயன்படுத்திய கண்ணியமான - சமூக பொறுப்பும் மிளிரும் வார்த்தைகள் என்றால் அது மிகை ஆகாது.
தன் மகன் செய்தது ஞாயம் என்று சொல்லவில்லை, இதற்கு தூக்குதண்டனை கோருவதுதான் தாங்கமுடியவில்லை என்கிறார் அவரது அன்னை.
காக்கைக்கு தன் குஞ்சி பொன் குஞ்சி தானே?
தவறு தவறுதான் என்பதில் எனக்கு மட்டும் என்ன கருத்து பேதைமை இருக்கபோகிறது.
கோ
உங்கள் கருத்தே எங்களதும்.....
பதிலளிநீக்குபாடல் கேட்க வில்லை இணையம் ரொம்பவே சுத்துது...அதனால...
அன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குவருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
கோ
வணக்கம் அரசே,
பதிலளிநீக்குநல்ல அலசல், அவர் தரப்பு ஞாயமும் கேட்கப்பட வேண்டும் தான்.
நீங்கள் சிலபாடல் வரிகளைக் காட்டி இதில் விரசம் இல்லையா என்று கேட்கிறீர்கள், இருக்கலாம்,, அப்ப இருந்த தலைமுறையினர் அதன் தவறை சுட்டிக் காட்டவில்லை, எனவே தான் இது தொடர்கிறது. அவர் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை.
அவர் செய்ய வில்லையா? இவர் செய்ய வில்லையா என்று, நம் தவறுகளை ஞாயப்படுத்தலமா?
பேராசிரியரே,
நீக்குதவறுகளை ஞாயபடுத்தவில்லை. ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
உடனுக்குடன், மன்னிப்புக்கேட்கும் அளவிற்கு நாகரீகம் இன்னும் வளரவேண்டுமோ?
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
கோ
Nice arguments Ko. Wondering if art reflects life or life reflects art.
பதிலளிநீக்குOnce again it proves how unbelievable the lifestyle of most of the individuals in the entertainment industry is.
I think this is fantastic story or even a case study for the following reasons from a religious perspective:
1. Secularization leads to No Shame -
I don't think he has apologized for the crassness of this song, not even regretted doing it rather speaks highly of his creative mind and his creation - the beep song.
2. Pluralization leads to No Reasoning -
Talking about his song and the fear of God in the same context do not beg any explanation how reasonable that is. If he indeed has the fear of God, he wouldn't be in such situation.
3. Privatization leads to No Meaning -
He keeps his God in a box so as not to interfere with the daily business which makes him say fear of God and his work are mutually exclusive which of course will show the duplicity of life hence meaningless.
Thanks for your time taken to read and comment.
பதிலளிநீக்குSome celebrities feel that , once they have been spot lighted and accumulated a considerable amount of wealth, they can make any comments and create and present any rubbish in the name of art and culture, which needs to be addressed by the public seriously without sparing any one, how much ever popular they are, or compromising anything.
well said.
Ko