பின்பற்றுபவர்கள்

சனி, 26 டிசம்பர், 2015

பாடப்பா பழனியப்பா...

இப்போ நீ எங்கேப்பா?

நண்பர்களே,,

எனது முந்தைய  பதிவான, "குடைக்குள் மழயில்" எங்களுடன் எங்கள் வீட்டருகே இருந்த ஒரு ரிக்க்ஷா காரர் வந்தார் என குறிப்பிட்டிருந்தது, உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.

அவர் அப்போது சுமார் 30 -35 வயதுடையவராக இருந்தார். 

கடின உழிப்பாளி.

யாரிடமும் கறாராக கூலி பேசாமல், ஞாயமாக கேட்பார்.

எத்தனை தூரமானாலும். எத்தனை மேடான சாலை என்றாலும் , பயணிகளை ஒருபோதும் இறங்க சொல்லாமல், தான் இறங்கி கஷ்ட்டப்பட்டு தள்ளிகொண்டாவது உரிய இடத்தில் சேர்த்துவிடுபவர்.

இதுபோன்ற நல்ல குணங்களுக்குகாகவே , எங்கள் வட்டாரத்தில் இவருக்கு கொஞ்சம் நல்ல பேரும்  செல்வாக்கும் இருந்தது.

யார் வீட்டுக்கும் வருவார், அவர்களோடு சாதாரணமாக பேசிவிட்டு, தன்னுடைய இன்ப -துன்பங்களை பகிர்ந்துகொள்வார்.

சில மாலை நேரங்களில்  தன் சவாரிகளை முடித்துவிட்டு உணவிற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி அவரின் மனைவிடம் கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் பேசிகொண்டிருப்பர்.

அவர் பேச்சில் ஒரு வெகுளித்தனம் இருப்பதாலும் வெள்ளந்தியான மனிதர் என்பதாலும் அவர் அப்பாவிடம் பேசும்போது நாங்களும் அவரை சுற்றி அமர்ந்து அவர் பேச்சை கேட்பது வழக்கம்.

அன்றும் அதுபோல எங்கள் வீட்டிற்கு வந்தார், அன்று எங்கள் அப்பாவின் அப்பாவினுடைய(தாத்தாவின்) நினைவுநாள்.

வந்திருந்த ரிக்க்ஷா காரரை , உள்ளே வந்து சாப்பிடும்படி அப்பா சொல்ல அவரும் இன்று என்ன விசேஷம் என்பதை புரிந்துகொண்டு பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு முடித்தார்.

போகும்போது வீட்டிற்கு எடுத்து செல்லுமாறு அம்மா ஒரு பாத்திரத்தில் அவரின் மனைவிக்கும் உணவு எடுத்து வைத்திருந்தார்.

சாப்பிட்டவுடனே எப்படி போவது என கொஞ்சம் நேரம் அப்பாவிடம் பேசிகொண்டிருந்தவர் திடீரென ஒரு பாடல் பட ஆரம்பித்தார்.

சத்தம் கேட்டு நங்கள் அனைவரும் அவருகில் கூட, எந்த சலனமும் இன்றி சீரான ஓசையுடன் தெளிவான வார்த்தைகளால் உரிய ஏற்ற இறக்கங்களோடும் அந்த பாடலின் கருத்துக்களுக்கேற்ற உச்சரிப்போடு உருக்கமாக அவர் பாட, என் அப்பா உட்பட நாங்கள் அனைவரும்  சற்று நேரம் மெய்மறந்து போனோம் என்றுதான் சொல்லவேண்டும்.

அதற்குமுன் இதுபோன்றதொரு பாடல் இருப்பதுகூட எங்களுக்கு தெரியாது. 

ஒருவேளை என்னுடைய அப்பா அம்மாவிற்கு தெரிந்திருந்திருக்கலாம், நான் அதற்கு முன் கேட்டதே இல்லை.

அதுவும் அவர் பாடும்போது எங்கள் எல்லோரின் கண்களிலும் கண்ணீர் முட்டி இருந்ததையும் உணர முடிந்தது.

அவர் அன்று பாடிய அந்த பாடலை அதற்கு பின் எங்கும் நான் கேட்க்கும் வாய்ப்பு இன்றுவரை  கிடைக்கவில்லை என்றாலும் எப்போதெல்லாம் நான் அந்த ரிக்க்ஷாகாரரை நினைக்கின்றேனோ அப்போதெல்லாம் எனக்கு, அவர் பாடிய அந்த பாடல்தான் நினைவிற்கு வரும்.

இப்போதுகூட அந்த மழைபதிவின்போது அவரை நினைக்கையில் எனக்கு அந்த பாடல் நினைவிற்கு வந்ததன் வெளிபாடே இந்த பதிவு.,

அந்த ரிக்க்ஷா காரரின் பெயர் பழனி.

அந்த பாடல்:

"பிள்ளைக்கு தந்தை ஒருவன்...
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.
நீ ஒருவனை நம்பி வந்தாயோ? 
இல்லை  இறைவனை நம்பி வந்தாயோ? 

தாயாரை தந்தை மறந்தாலும் -தந்தை 
தானென்று சொல்லாதபோதும்
ஏனென்று கேட்க்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்.

உள்ளோர்க்கு இல்லங்கள் சொந்தம் - அது
இல்லாரக்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம்தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன்  - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் 
நீ ஒருவனை நம்பி வந்தாயோ - இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ?"

அதை தொடர்ந்து அவ்வப்போது அவரை பாடசொல்லி நாங்கள் கேட்டபது வழக்கமானது.

தந்தையை இழந்த (என்போன்ற) பலருக்கு இந்த பாடல் பல வேளைகளில் ஒரு ஆறுதலாகவும் அமையும் என நம்புகிறேன்.

இப்போது பழனி எங்கே இருக்கின்றார் என்பதுதெரியாத இந்த தருணத்தில், எனை கருவாக்கி, உருவாக்கி, உயர்வாக்கி, உயர்வானம் சென்று வாழும் என் தந்தையாரின் பிறந்த நாளாம் இன்று, இந்த பதிவை  பழனிக்கே அர்பணித்து மகிழ்கின்றேன்.

நன்றி, யூ ட்யூப்

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
10 கருத்துகள்:

 1. உருக்கம்....அப்பா இல்லாத எனக்கும் நெருக்கமாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே,

   பதிவு எழுதும்போது உங்களையும் நினைத்துதான் எழுதினேன்.

   வருகைக்கு மிக்க நன்றிகள்

   கோ

   நீக்கு
 2. Kindling a lot of memories brother. Super reminiscence. The song is from the movie "Paarthaal Pasitheerum."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Prabu,

   Thanks for the comments which make me understand that you got reminded of something memorable in your life.

   ko

   நீக்கு
 3. Kindled a lot of memories brother. A wonderful reminiscence. It is from the movie "Paarthaal Pasitheerum." Sung my the great TMS.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Prabhu,

   yes, some times a few bogs go closer to our hearts and kindle our memories connected to the subject matter and events narrated.

   Thanks for your visit again.

   ko

   நீக்கு
 4. அருமையான பாடல்..மனதை உருக்கும் பாடல். கேட்டதுண்டு ஆனால் எந்தப் படம் என்று நினைவில் இல்லை...உங்கள் பதிவைப் படித்த போது ..நல்ல பதிவு கோ..

  பிரபு அவர்கள் சொல்லியதிலிருந்து அறிய முடிந்தது..மிக்க நன்றி பிரபு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பிற்கினிய நண்பர்களே,

   வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

   மிக்க நன்றி பிரபு.

   கோ

   நீக்கு
 5. வணக்கம் அரசே,

  பதிவுக்கு நன்றி, தந்தைக்கு அர்பணித்ததற்கு,தங்கள் தந்தையின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தது,,
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு