பின்பற்றுபவர்கள்

புதன், 2 டிசம்பர், 2015

மழைக்குள் குடை -1

மாறியது நடை.

மழை தொடர்கிறது...

முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை ...சொடுக்கவும்

அடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் என்னுடைய குடை மடங்கி மடங்கி போனதால், ஒரேயடியாக குடையை மடக்கி கையில் பிடித்துகொண்டு,
புத்தக பையை முடிந்த  அளவிற்கு சட்டைக்குள் திணித்துக்கொண்டு வேகமாக நடந்து , நான் ஏற்கனவே சொன்னேனே அந்த குடிசைகள் இருந்த சாலைக்கு வந்துவிட்டேன்.

என்னை போலவே வேறு சில மாணவர்களும் நடந்து கொண்டு இருந்தனர்.

காலையில் போகும்போது யாரையும் நான் பார்க்கவில்லை, ஆனால் இப்போது அங்கிருந்த ஒரு குடிசை வீட்டின் முன் ஒரு வயதான ஆயா தலையில் ஒரு தினுசாக மடிக்கப்பட்ட  ஒரு கோணிப்பையை அணிந்தவராக அந்த வீட்டின் கதவை திறந்துகொண்டிருந்தார்.

இதற்கு முன் நான் அவரை பார்த்ததில்லை. சுமார் ஒரு 60 வயதாவது இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் ஒரு ஆறு அடி உயரமாக இருந்தார். அந்த வயதில் ஆறு அடி என்பது எனக்கு எப்படி தெரியும்?  எங்கள் அப்பாவின் உயரம் ஆறு அடி என்று சொல்லி கேட்டதினால் அதை வைத்து கணிக்க முடிந்தது.

கீழே ஒரு கூடையும் இருந்தது.

மழையில் நனைந்தபடி நடந்து வந்துகொண்டிருக்கும் எங்களை பார்த்ததும், ஏன் மழையில் நனைகிறீர்கள்  , ஒதுங்கி இருந்துவிட்டு மழை நின்ற பிறகு போகலாமே? என்றார்.

முன் பின் தெரியாத யாரோ ஒரு ஆயா இப்படி அழைப்பதை எதிர்பாராத நாங்கள் அச்சத்துடன் அவரது வீட்டை கடந்து சென்றுவிட்டோம்.

வீட்டிற்கு சென்று , ஏற்கனவே வேறு யார் மூலமோ விஷயத்தை அறிந்து வாசலில் காத்திருந்த  அம்மாவிடம் , பள்ளியிலிருந்து கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுக்க  , நனைந்த சீருடையை கழற்றி விட்டு,(close your eyes please!!) வேறு உடை அணிவித்து தலையை துடைத்து விட்டார்கள். 

அப்போது வரும் வழியில் சந்தித்த அந்த ஆயாவை பற்றி அம்மாவிடம் சொன்னேன்.

அவர்களும் , நீ  செய்தது சரிதான் , முன் பின் தெரியாதவர்கள்  கூப்பிட்டால் போககூடாது, அவர்களிடம் பேசவும் கூடாது  என சொன்னார்கள்.

அதை தொடர்ந்து இரண்டு நாட்கள் சந்தோஷமான நாட்களாக கழிந்தன, ஆனால் மழை மட்டும் அன்றைய தேதியின் "ரமணன்" சொல்லையும் மீறி வானத்தில் பெரிய ஓட்டை விழுந்ததுபோல் ஓயாமல் பெய்துகொண்டிருந்தது.

மழை நாட்களன்று விடுமுறை என்பதால் மட்டும்தான் எனக்கு மகிழ்ச்சியே தவிர மழை என்பது எனக்கு அந்த வயதில் கொஞ்சம் கூட பிடிக்காது, என்ன காரணம் என்பதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

மூன்றாம் நாளும் வானிலை சரியாகாதால், ஆசிரியரான என் தந்தையின் அறிவுரைப்படி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டேன், அதற்கேற்றார்போல பள்ளியை தொடர்பு கொண்டதில் அன்றும் விடுமுறைதான் என செய்தி உறுதி செய்யப்பட்டது.

இப்படியாக திங்கள் முதல் புதன் வரை விடுமுறையில் இருந்துவிட்டு வியாழன் காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்லும்போது அந்த குடிசைகள் இருந்த பகுதியை கண்ட எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  சரியாக காலை எட்டரை மணிக்கு வீட்டை விட்டால், ஒன்பதுக்கு முன் பள்ளியை அடைந்து விடுவேன்.

அன்றும் அப்படி சரியான நேரத்தில் புறப்பட்டதால் அந்த குடிசை பகுதியில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவத்தின் நீள அகல ஆழத்தை அவதானிக்கவோ அறிந்துகொள்ளவோ எனக்கு அவகாசம் கிடைக்காததால் அந்த குடிசை பகுதியை வேகமாக கடந்து பள்ளிக்கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்..

கால்கள் முன்னோக்கி நடந்தாலும் என் மனம் முழுவதும் பின்னோக்கி அந்த குடிசைகளை நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

பள்ளிக்கு சென்றபின்னும் பாடங்களில் மனம் பதிந்ததைவிட, காலையில் என் மனதில் பதிந்திருந்த அந்த காட்ச்சிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது,

அப்படி என்ன காட்சி அது?

நாளை சொல்கிறேனே.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தனப்பால்,

   வருகைக்கு மிக்க நன்றி.

   சொல்லுவோம்ல...

   கோ

   நீக்கு
 2. வணக்கம் அரசே,

  .......... பள்ளிக்கு சென்றபின்னும் பாடங்களில் மனம் பதிந்ததைவிட, காலையில் என் மனதில் பதிந்திருந்த அந்த காட்ச்சிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது,..........

  ஆம் நம் மனதைப் பாதிக்கும் போது, அது தான் மனதில் தொடர்ந்து நிற்கும்,

  நாங்களும் காத்திருக்கிறோம், அந்தக் காட்சி என்ன என்று தாங்கள் சொல்வதைக் கேகககககககட்க.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பேராசிரியரே,

  வருகைக்கு மிக்க நன்றி.


  கோ

  பதிலளிநீக்கு