மலருமா விடை?
மழை தொடர்கிறது...
முதலில் இருந்து வாசிக்க...மழைக்குள் குடை 1...சொடுக்கவும்
அப்படி என்ன காட்ச்சியை பார்த்தேன்.
காலையில் அந்த குடிசைகள் இருந்த பகுதியை நெருங்கிய எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி:
அங்கிருந்த பெரும்பாலான குடிசைகளின் மேல் கூரைகள் சேதமடைந்தும் , காணாமலும் போய் இருந்ததை பலரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும் , விசாரித்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அந்த பாட்டியும் இருந்தார்.
அங்கிருந்த பெரும்பாலான குடிசைகளின் மேல் கூரைகள் சேதமடைந்தும் , காணாமலும் போய் இருந்ததை பலரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும் , விசாரித்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அந்த பாட்டியும் இருந்தார்.
மற்ற வீட்டினர் குடும்பம் குடும்பமாக இருக்க இந்த பாட்டி மட்டும் தனியாக சீர் குலைந்திருந்த தன் குடிசை அருகே காலில் பெரிய கட்டுடன் அதே கோணிப்பையை தலையில் கவிழ்த்துக்கொண்டு ஒரு பலகையின் மீது அழுகையும் சோகமுமாக அமர்ந்திருந்த காட்ச்சிதான் அது.
இரண்டு மூன்று தினங்களுக்கு முன் மழையில் நனைந்து போய் கொண்டிருந்த என்னை தன் குடிசையில் வந்து ஒதுங்கி இருந்துவிட்டு மழை நின்றபின் போகலாமே என நல்லுள்ளம் கொண்டு அழைத்த அந்த பாட்டிக்கு இப்போது ஒதுங்குவதற்கு ஒரு இடமில்லாமல் வெளியில் அதுவும் மழையில் இப்படி அமர்ந்திருக்கின்றாரே என்ற எண்ணம்தான் என் மனம் முழுதும் ஆட்கொண்டிருந்தது.
மத்திய உணவு வேளையில்கூட எனக்கு அந்த பாட்டியின் நினைவுதான்.
மாலை பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டமும் நடையுமாக வீடு நோக்கி நடக்கையில் மீண்டும் அந்த பாட்டியின் குடிசையை கடக்கும் வேளையில் கொஞ்சம் நேரம் அங்கேயே நின்று அந்த பட்டி எங்கே என தேடினேன்.
அவர் பக்கத்தில் கொஞ்சமாக பழுதடைந்திருந்த குடிசைவீடு ஒன்றின் கதவருகே இருக்க கண்டு நேராக அவரை நோக்கி சென்று, " பாட்டி உங்களுக்கு என்ன ஆச்சி, காலில் என்ன கட்டு?"
இப்படி நான் கேட்டதும் , முன் பின் தெரியாத ஒரு சிறுவன் இப்படி தம்மிடம் வந்து கரிசனையுடன் விசாரிக்கின்றானே என்ற வியப்பு ஒருபுறமிருக்க அவரது துயரில் பங்கெடுக்க இந்த உலகத்தில் யாரோ ஒருவர் இருக்கின்றாரே என எண்ணினாரோ என்னமோ, என்னை அப்படியே கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்.
எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, அதிலும் நமக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒரு பாட்டி இப்படி நம்மை கட்டிபிடித்து அழுகிறாரே எனும் ஒரு அச்சமும் இருந்தது.
பிறகு அவர் சொன்னதிலிருந்து நான் விளங்கிகொன்டது: அவரின் குடிசையின் பின்புறம் இருந்த ஒரு சிறு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் ஓதத்தால் அவரது குடிசையின் பின்புற சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்துகொண்டிருந்த அந்த பாட்டியின் கால்கள் இடிபாடில் சிக்கி பின்னர் அவர் மீட்க்கபட்டு அருகிலிருந்த ஐந்து பைசா ஆஸ்பத்திரியில் கட்டுபோட்டு அனுப்பினார்களாம்.
" சரி உங்களுக்கு வேறு இடம் எதுவும் இல்லையா?"
இல்லை அப்பா, இருந்த அந்த ஒரு குடிசையும் இப்போது .......,,இனி அதை சரி செய்யும் வரை இதுபோல் அக்கம்பக்கத்து வீடுகளில் தான் தங்கவேண்டும்"
ஆமாம் நீ யார்? என்னை உனக்கு தெரியுமா?
என்பெயர் கோயில் பிள்ளை, நான் இங்கிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் மெயின் ரோட்டில் வெல்டிங் கடைக்கு எதிரில் இருக்கும் வீட்டில்தான் இருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் நான் பள்ளிகூடத்தில் இருந்து வீட்டுக்கு மழையில் நனைந்துகொண்டு போகும்போது நீங்கள் என்னிடம் பேசினீர்கள், அன்றுதான் உங்களை நான் முதன்முதலில் பார்த்தேன்.
அதற்கு முன் உங்களை பார்த்ததில்லை, இன்று காலை மீண்டும் பள்ளிக்கு செல்லும்போது நீங்கள் காலில் கட்டுடன் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் எனக்கு உங்களிடம் பேச வேண்டும்போல் இருந்தது, ஆனால் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விட்டதால் பேச முடியவில்லை, அதான் இப்போது உங்களை பார்த்ததும் உங்களிடம் பேச வந்தேன் என்றதும், என் கன்னங்களை இரண்டு கைகளாலும் பற்றி தன் தலையில் பத்து விரல்களால் நட்டு முறித்தார்.(சரியா சொல்றது?)
பிறகு நேரமாகிவிடுமே என்று எண்ணி, "சரி பாட்டி போய் வருகிறேன்."
என கூறிவிட்டு லேசாக தூறிகொண்டிருந்த மழையில் கொஞ்சமாக நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
வந்ததும் , நடந்தவற்றை அப்பா விடமும் அம்மாவிடமும் சொல்ல , அப்பா சொன்னார்கள் அம்மாவிடம் , யார் என விசாரித்து அவர்களை நம்மோடு வந்து தங்கிகொள்ளசொல் என்றார்.
எனக்கு மகிழ்ச்சியைவிட ஆச்சரியம் அதிகமாக , "அம்மா, இப்பவே போய் அவர்களை அழைத்து வரலாம் என சொல்ல அம்மாவும் தயாராகி, எங்களுக்கு தெரிந்த ஒரு ரிக்க்ஷா காரரை அழைத்துக்கொண்டு நேராக அந்த பாட்டி இருந்த வீட்டிற்கு சென்றோம்.
சந்தோஷத்தில் ரிக்கஷாவிலிருந்து துள்ளி குதித்து அந்த குடிசைவீட்டு வாசலில் நின்று அங்கிருந்தவர்களிடம் , " அந்த பாட்டியை கூப்பிடுங்க என்று சொன்னதும் அவர்கள் சொன்னார்கள், " அந்த பாட்டி கொஞ்ச நேரத்திற்கு முன் தான்...."
அவர்கள் சொல்லி முடிக்குமுன்னே எனக்கு மனதில் கலக்கம் தோன்ற ஆரம்பிக்க நான் அம்மாவை பார்த்தேன்.
நண்பர்களே, துக்கம் அடைத்துகொண்ட தொண்டையில் இருந்து பேச்சு வரவில்லை , கொஞ்சம் பொறுங்கள் .... பிறகு தொடர்கிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
ஐயோ... என்னாச்சி...?
பதிலளிநீக்குதனப்பால்,
பதிலளிநீக்குஎன்னத்த சொல்வேன்.... அடுத்த பதிவில் தெரியவரும் என்று நினைக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
சரி நானும் பொறகு வாறேன்... நண்பரே...
பதிலளிநீக்குநண்பா,
நீக்குஒன்னும் அவசரமில்ல "பொறகு" தான் வாங்க.
கோ
சின்னப்பிள்ளையின் சொல் என ஒதுக்காமல் உங்களுடன் வந்த தாயார்,,,,,,,,
பதிலளிநீக்குஅவரின் பிள்ளை,,,,,,, நிச்சயம் நல்ல விடயமாகத்தான் இருக்கும்.
நன்றி அரசே,
பேராசிரியருக்கு,
நீக்குஎன்னை சின்ன பிள்ளை என்று சொல்வது புரிகிறது, சரிதானே?
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
பாட்டிக்கு என்னாச்சு என்று ..இந்தக் கோ எழுதுவதிலிருந்து தெரியாதா? பாட்டிக்கு ஒன்றும் ஆயிருக்காது..ஆனால் வேறு ஏதோ என்று..தொடர்கின்றோம் இதோ அடுத்த பதிவுற்கு
பதிலளிநீக்குஅன்பிற்கினிய நண்பர்களே,
நீக்குஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
கோ