பின்பற்றுபவர்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

காலம் காட்டும் ஜாலம்.


ஞாபகம் வருதே!!

நண்பர்களே,

இரண்டு நாட்களுக்கு முன் பேருந்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன்.


இரண்டு மூன்று நிறுத்தங்களுக்கு பிறகு, 6 வயது மற்றும் 8 வயதுள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் அவரது அப்பாவுடன்(அப்பாவாகத்தான் இருக்கும்) பேருந்தில் ஏறினார்கள்.

இருவரும் ஒரே மாதிரியான ஜீன்ஸ் , சட்டை, மேல் கோட்டு, ஒரே மாதிரியான ஷூஸ் , ஒரே மாதிரியான தொப்பி அணிந்திருந்தனர்.

இது கிறிஸ்மஸ் முடிந்து சில நாட்கள் கழித்து என்பதால்  அவர்களின் ஆடை அலங்காரங்கள் புதிதாக காட்சி அளித்தன.

அந்த இருவரில் சிறுவனாக இருந்தவனின் செயல்கள் என்னை முழுமையாக கவர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பயணத்தில் இருந்த என்னை,  என் சிறு வயது காலங்களை நோக்கி, பின்னோக்கி பயணிக்க செய்தது.

அந்த சிறுவனுக்கு அவனது பெற்றோர் புதிதாக வாங்கிகொடுத்திருக்கவேண்டும் அந்த கை கடிகாரத்தை என்று நினைக்கின்றேன்.

பேருந்து ஏறியதுமுதல் எனக்கு  ஒரு நிறுத்தத்திற்கு முன்னால் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரும் வரையில் , பூரிப்புடன் அவனது வலது கையில் கட்டி இருந்த அந்த கை கடிகாரத்தை ஏறக்குறைய ஒரு 100 முறையேனும் தன் முழு கை சட்டையை விலக்கி நொடிக்கொரு முறை பார்த்து  பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்தான்.

பின்னர் பேருந்தை விட்டு இறங்கி அவனது அப்பாவின் பின்னாக ஓட்டமும் நடையுமாக சென்றுகொண்டிருந்தபோதும் பேருந்து அவர்களை கடந்து போகும்வரை அவன் அந்த கடிகாரத்தை பார்த்து பார்த்து சிலாகித்ததை இன்னமும் என் கண்கள் மறக்கவில்லை.

இதனை காணும்போது சின்ன வயதில் பண்டிகை காலங்களில் எனக்கும் என் தம்பிக்கும் ஒரே ,மாதிரியான சட்டை, கால் சட்டை, காலனி வாங்கி கொடுத்த என் பெற்றோர் எங்கள் இருவருக்கும் பிளாஸ்டிக் கடிகாரங்கள் வாங்கி கொடுத்தார்கள் .

 அதை என் வலது மணிக்கட்டில் ,அந்த சிறுவனைபோலவே,  கட்டிக்கொண்டு அன்று காலை முதல் அதை நான் மூச்சிக்கு முப்பது முறை கழற்றி கழற்றி அணிந்து கொண்டதையும் பிறகு அந்த நாள் முடியும் முன்னே அந்த பிளாஸ்டிக் கடிகாரம் உடைந்துபோனதையும் அதனால் என் மனம் உடைந்துபோனதையும் பிறகு என் அப்பா அதை மீண்டும் சரி செய்து கொடுத்ததையும், நான் நினைத்து ஆனந்த கண்ணீரால் என் பழைய நினைவுகளை கழுவி புதுபித்து மீண்டும் மனத்திரையில் பொதிந்து வைத்தேன்.

என் அடிமனதின் நினைவுகளை வெளி கொணர்ந்த அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி இந்தபதிவை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

நன்றி.

மீண்டும் புத்தாண்டில்  ச(சி)ந்திப்போம்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோ

7 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே தங்களது பதிவு எனக்கும் சிறு வயதில் பஞ்சு மிட்டாயில் விலை உயர்ந்த ராடோ வாட்ச் கட்டிய ஞாபகம் வந்தது.
    பதிவிலிருந்து நான் அறிந்தது அந்த சிறுவன் மட்டுமல்ல தாங்களும் அந்த வாட்சை 100 முறை பார்த்திருக்கின்றீர்கள் என்பது....
    தங்களுக்கு எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  2. ஆமாம் சிறு வயதில் இப்படித்தான் எங்கள் வீட்டிலும். ஒரே போல தான்..துணி எடுத்துத் தைப்பார்கள். நாங்கள் 8 கசின்ஸ். பெண்கள் அனைவருக்கும், அது போல ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரே போல உடை. தைப்பது என்றாலும் பரவாயில்லை. ரெடிமேட் அது டைட்டாக இருந்தாலும் சரி, லூசாக (என்னைப் போல) இருந்தாலும் சரி அதுதான். எங்கள் ஊரில் அப்போது எங்களை ஈஸ்ட்மென் கலர் என்று இளைஞர்கள் கேலி செய்வதும் உண்டு.

    கீதா

    புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர் கோ - துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  3. ஆம் சிறு வயதில் நாம் அதிசயத்து மகிழ்ந்தவை இன்று...

    இன்றும் அப்படியே. என் பையன் அவன் விரும்பிய பொருட்கள் கிடைத்தால் தூங்கும் போதும் கையிலே....

    சரி இப்ப என்ன நீங்களும் வாங்கி கட்டிக்கோங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்துக்களும்.

      கோ

      நீக்கு
  4. sir,

    intha pathivai vasikkumpothu ningal eppotho eluthia oru pathivu ninaivirkku varukirathu.
    athilum 2 siruvarkal thodarpu paduthi eluthunirkal aanaa sariyaaka ippothu ninaivirkku kondu vara mudiyavillai.


    siru vayathil enakkum thampikkum ore maathiriyaana kai kadikaarathai appaa vangki kodutha nikazvu ninaivirkku vanthathu.

    arumai.

    பதிலளிநீக்கு